📡🌍இரவு செய்திகள் 🌍📡
📡🌍06\08\16🌍📡
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
📡கோவையில் பயங்கரம்: டாஸ்மாக் கடையில் நின்றிருந்தவர்கள் மீது கார் மோதியதில் 3 பேர் பலி
கோவை : கோவையில், டாஸ்மாக் கடையில் மதுவாங்க நின்றிருந்தவர்கள் மீது, வேகமாக வந்த கார் மோதியதில் 3 பேர் பலியாகினர். 2 பேர் காயமடைந்தனர்.
காங்கேயத்தில் இருந்து 20 கி.மீ. தொலைவில் மேட்டாங்காட்டுவலசு பகுதயில் சாலையோரம் இருந்த டாஸ்மாக் கடையில், சிலர் மதுவாங்க நின்றிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் இருந்து விலகி, மதுவாங்க நின்றிருந்தவர்கள் மீது மோதியது. இதில் 3 பேர் பலியாகினர். இருவர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
📡பெரம்பலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை திருட்டு
பெரம்பலூர் அருகே நமையனூரில் வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகையை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். மேலுமு் வீட்டில் இருந்த ரூ.2 லட்சம் பணத்தையும் திருடிச் சென்ற மர்மநபர்களை மங்கலமேடு போலீசார் தேடி வருகின்றனர்.
📡தடகள போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.1.20 கோடி பரிசு: முதல்வர் ஜெ.,வழங்கினார்
உலக பள்ளிகளில் தடகள வாகையர் போட்டியில் வெற்றி பெற்ற 4 பேருக்கு ரூ.1.20 கோடியை ஊக்கத்தொகையாக முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கியுள்ளார். அஜித்குமார், நவீன், சமய ஸ்ரீ, மற்றும் ப்ரியதர்ஷினிக்கு ரூ.1.20 கோடி ஊக்கத்தொகையை முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கினார். இதேபோல் உலக மாற்று திறனாளிகள் சதுரங்கப் போட்டியில் 4வது இடம் பிடித்த ஜெனிதா ஆண்டோவுக்கு ரூ.25 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
📡விவாகரத்து கோரி நடிகை அமலா பால், விஜய் மனு தாக்கல்
சமரச விவாகரத்து கோரி நடிகை அமலா பால் மற்றும் அவரது கணவர் இயக்குனர் விஜய் ஆகியோர் சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதி தீபிகா முன்னிலையில் மனு தாக்கல் செய்துள்ளனர். திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் விவாகரத்து கோரி இருவரும் மனு தாக்கல் செய்துள்ளார்.
📡விஷ முறிவு மருந்து பிரிவை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்
சென்னை கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் விஷ முறிவு மருந்து பிரிவை முதலமைச்சர் ஜெயலலிதா தொடக்கி வைத்தார். ரூ.16.72 கோடியில் கட்டப்பட்டுள்ள பாண்பு விஷ முறிவு பிரிவை காணொலி கட்சி மூலம் ஜெயலலிதா தொடக்கி வைத்தார். 2000ம் ஆண்டு நிறுத்தப்பட்டுள்ள பாம்பு விஷ முறிவு மருந்து உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
📡ஜிஎஸ்டி மசோதாவால் புதுச்சேரிக்கு பாதிப்பு இல்லை: நாராயணசாமி
சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவால் புதுச்சேரிக்கு எந்த பாதிப்பும் இல்லை என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவால் புதுச்சேரிக்கு பாதிப்பு ஏற்பட்டால் மத்திய அரசு அதனை ஈடுகட்ட வேண்டும் என நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். மேலும் ஆளுநருக்கும் எங்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என நாராயணசாமி கூறினார்.
📡32 தமிழர்களும் திருப்பதி நீதிமன்றத்தில் ஆஜர்
ரேணிகுண்டா காவல் நிலையத்திலிருந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த 32 தமிழர்களையும் போலீசார் அழைத்து செல்கின்றனர். திருப்பதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக 32 தமிழர்களும் 2 வாகனங்களில் அழைத்து செல்லப்படுகின்றனர்.
📡மத்திய பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
நீலக்குடியில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு நீலக்குடி கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்கலைக்கழகம் கட்ட இடம் தந்தவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் வேலை வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
📡காஞ்சிபுரம் - கடந்த மாதம் நேப்பாள் நாட்டிற்க்கு ஆன்மீக சுற்றுலாவிற்க்கு சென்ற காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த 10 பயணிகளை, நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்து பாதுகாப்பாக மத்திய அரசு மற்றும் தமிழக அரசு உதவி மூலம் இறுதியாக சென்னையில் இருந்து ரயில் மூலம் காஞ்சிபுரம் வந்தடைந்தனர்
📡வேலூர் மாவட்டம் அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை தரக்குறைவாக பேசிய பா.ம.க. பாலுவை கண்டித்து மாவட்ட செயலாளர் க.கெளதம் மண்டல செயலாளர் நற்குமரன், மாநில வழக்கறிஞர் அணி துணை செயலாளர் ந.தமிழ்மாறன் தலைமையில் பாலுவின் உருவ பொம்மையை எரித்தனர்.
📡9.8.16 மற்றும் 10.8.16 ஆகிய தேதிகளில் மாவட்ட நீதிமன்றம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்த வேண்டும், 11.8.16 மற்றும் 12.8.16 ஆகிய தேதிகளில் மாவட்ட நீதிமன்றத்தில் மறியல் போராட்டம் நடத்தவும், 15.8.16 ம் தேதி வாயில் கருப்பு துணி கட்டிக் கொண்டு காந்தியடிகள், அம்பேத்கர் படங்களுடன் ஊர்வலம் சென்று காந்தி, அம்பேத்கர் அவர்களிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடத்துவது , வரும் 16.8.16 ம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்றம் முன்பு தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்றும் அதுவரை நீதிமன்ற புறக்கணிப்பு தொடரும் என போராட்ட கூட்டு நடவடிக்கை குழு இன்று முடிவு செய்துள்ளது.
📡தன்னை தமிழக முதல்வர் ஜெயலலிதா அடித்ததாகவும், பதவியை ராஜினாமா செய்யச் சொல்லி ஜெயலலிதாவும், மற்ற எம்.பி.,க்களும் தன்னை மிரட்டுவதாகவும், அதனால் தனக்கு உடனடியாக கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என டில்லி போலீசில் சசிகலா புஷ்பா புகார் அளித்துள்ளார்.
📡போயஸ் கார்டனில் நடப்பவற்றை தெரிந்துகொள்வதற்காக அங்கு வேலை செய்த ஒருவரை சசிகலா புஷ்பா இரண்டாவது திருமனம் செய்துகொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
📡உத்தரப்பிரதேச மாநிலம் மணிப்பூர் மாவட்டத்தில், ரூ.100 லஞ்சம் கொடுக்காத இரண்டு கூலித் தொழிலாளிகளை காவல்துறையினர் அடித்துக் கொன்ற சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
📡மதுரையில் விஷவாயு தாக்கி மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
📡2015 ம் ஆண்டு டிசம்பர் மாதம் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், மகாத்மா காந்தியை கொலை செய்தது ஆர்.எஸ்.எஸ்., தான் என பேசினார். இது தொடர்பாக ராகுல் மீது அசாம் மாநிலம் கவுகாத்தி கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ப்பட்டது.இவ்வழக்கை இன்று விசாரித்த கவுகாத்தி கோர்ட், ராகுலுக்கு சம்மன் அனுப்பி உள்ளது. செப்டம்பர் 29 ம் தேதி ராகுல் ஆஜராக வேண்டும் என சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.
📡இலங்கை சிறைகளில் 107 தமிழர்கள் உயிரிழப்புக்கு நீதி கோரி தந்தை பெரியார் தி.க.வினர் நடத்திய போராட்டத்தில் மைத்ரிபால சிறிசேன கொடும்பாவி எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
📡இந்தியாவுக்கு, இமயமலை வழியாக ரெயில்விட சீனா திட்டம் வகுத்துள்ளது.
📡செக் மோசடி வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட் உத்தரவைத் தில்லி பாட்டியாலா நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
📡ராஜஸ்தான் மாநிலத்தில் 500 மாடுகள் பட்டினியால் பலியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல
📡ராஜஸ்தான் மத்திய சிறைகளில் கைதிகளுக்கு மாதம் இருமுறை புதுப்படங்கள் திரையிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்
📡சுவாதி கொலை வழக்கில் முகமது பிலால் உள்பட 10 பேரிடம் சாட்சியம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. சென்னை சைதாப்பேட்டையில் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் சாட்சியம் பதிவு செய்யப்படுகிறது.
📡ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி முதலைக் கண்ணீர் வடிப்பதாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.
📡டில்லி மகளிர் ஆணைய தலைவி சுவாதி மலிவால் மீது டில்லி முன்னாள் தலைமைச் செயலர் ஓமேஷ் சாய்கால், ஊழல் தடுப்பு பிரிவில் புகார் அளித்துள்ளார்.சுவாதி தனது மகளிர் ஆணைய தலைவி பதவியை தவறாக பயன்படுத்துவதாக சாய்வால் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
📡கர்நாடக மாநிலத்தில் இரு தலித் பெண்கள் கோயில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
📡பாலூரில் மத்திய அரசின் ரயில்நீர் ஆலையை முற்றுகையிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். ரயில்நீர் ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் மக்கள் தேசிய கட்சியினர் கைது செய்யப்பட்டனர். பாலாற்றில் ஆந்திரா தடுப்பணை கட்டுவதை மத்திய அரசு தடுக்கவில்லை என குற்றம் சாட்டி முற்றுகை போராட்டம் நடத்தினர்.
📡பெஷாவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் மும்பையைச் சேர்ந்த 31 வயது ஹமீத் அன்சாரி. அவரை அங்குள்ள சக கைதிகள் கடந்த மாதம் 2 முறை சராமாரியாகத் தாக்கியுள்ளனர்.
📡பிரான்ஸின் ரோவன் நகரில் கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 13 பேர் பலியாகினர். இவ்விபத்தில் படுகாயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
📡ரயில் நிலையங்கள் மற்றும் ரயிலின் முன் செல்ஃபி எடுப்பவர்கள் மீது ரயில்வே பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 142 (தொந்தரவு செய்தல்) 147 ( பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறல்) மற்றும் 153 ( பயணிகளுக்கு அச்சுறுத்தல்) பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க ரயில்வே போலீசார் திட்டமிட்டுள்ளனர்.153 பிரிவின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படுபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
📡மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுகிழமைகளில் மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் ரேடியோ வாயிலாக மக்களுடன் பேசி வரும் பிரதமர் மோடி இன்று முதல் முறையாக பொது மக்களுடன் நேரடியாக கலந்துரையாட உள்ளார். டெல்லியில் உள்ள இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
📡கர்நாடக முதல்வர் சித்தராமையாவை கேலி செய்து அவதூறான வகையில் புகைப்படம் மற்றும் செய்தியை அனுப்பிய இரு இளைஞர்கள் மீது ரெய்ச்சூர் போலீஸ் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் தலைமறைவான இருவரையும் தேடி வருகின்றனர்
📡நீலக்குடியில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு நீலக்குடி கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்கலைக்கழகம் கட்ட இடம் தந்தவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் வேலை வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
📡சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவால் புதுச்சேரிக்கு எந்த பாதிப்பும் இல்லை என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவால் புதுச்சேரிக்கு பாதிப்பு ஏற்பட்டால் மத்திய அரசு அதனை ஈடுகட்ட வேண்டும் என நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். மேலும் ஆளுநருக்கும் எங்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என நாராயணசாமி கூறினார்.
📡சமரச விவாகரத்து கோரி நடிகை அமலா பால் மற்றும் அவரது கணவர் இயக்குனர் விஜய் ஆகியோர் சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதி தீபிகா முன்னிலையில் மனு தாக்கல் செய்துள்ளனர். திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் விவாகரத்து கோரி இருவரும் மனு தாக்கல் செய்துள்ளார்.
📡உலக பள்ளிகளில் தடகள வாகையர் போட்டியில் வெற்றி பெற்ற 4 பேருக்கு ரூ.1.20 கோடியை ஊக்கத்தொகையாக முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கியுள்ளார். அஜித்குமார், நவீன், சமய ஸ்ரீ, மற்றும் ப்ரியதர்ஷினிக்கு ரூ.1.20 கோடி ஊக்கத்தொகையை முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கினார். இதேபோல் உலக மாற்று திறனாளிகள் சதுரங்கப் போட்டியில் 4வது இடம் பிடித்த ஜெனிதா ஆண்டோவுக்கு ரூ.25 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
📡பழங்குடியின பெண்களுக்கு பாலியல் தொல்லை தந்த வனத்துறையினரை கைது செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். மேலும் பழங்குடியின பெண்கள் விவகாரத்தில் காவல்துறை ஒருதலைப்பட்சமாக நடப்பதாக திருமாவளவன் குற்றம்சாட்டினார்.
📡வேறு பிழைப்புக்காக செல்லும் தமிழர்களை செம்மரம் வெட்ட சென்றதாக கைது செய்வதை ஏற்க முடியாது என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி திருப்பதியில் கைது செய்யப்பட்ட தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
📡டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 6 பேர் பொள்ளாச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் 15 பேர் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
📡சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் ஆராய்ச்சி மையத்தில் விஷமுறிவு மருந்து பிரிவை தொடங்கி வைத்தார் முதல்வர் ஜெ.
📡கற்பழித்து கொலை செய்யப்பட்ட கேரளா மாநில சட்டக்கல்லூரி மாணவி ஜிஷாவின் தாயாருக்கு ,. தான் நடிக்கும் ஒரு படத்தின் முழு சம்பளத்தையும் வழங்கினார் நடிகர் ஜெயராம்
📡தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு கடத்தி செல்லப்பட்ட தடை செய்யப்பட்ட 15 லட்சம் மதிப்பிலான பான் மசாலா ,குட்கா பொருட்கள் பறிமுதல் ஒருவர் கைது ஆரியங்காவு மது விலக்கு சோதனை சாவடியில் நடவடிக்கை கைதுசெய்யப்பட்ட ஓட்டுனர் மாடசாமி நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்தவர்
📡டெல்லி விகாஸ் நகரில் உள்ள வீட்டில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. சம்பவம் இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📡குடிபோதை விபத்துகளால் தமிழகத்தில் ஒரு மணி நேரத்துக்கு 16 பேர் உயிரிழப்பதாக, தேசிய குற்ற ஆவண காப்பக மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும், தமிழகத்தில் நடந்த 67 ஆயிரத்து 757 விபத்துகளில், 16 ஆயித்து 715 பேர் உயிரிழந்துள்ளனர்
📡போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக 60 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக, முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் மீது நடவடிக்கைகோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
📡புல்லூரில் ஆந்திர அரசு உயர்த்தி கட்டியுள்ள தடுப்பணையை தமிழக அரசு அகற்ற வேண்டும் வாணியம்பாடி அருகே தடுப்பணையை பார்வையிட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். பாலாறு பற்றி தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கில் உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்ப்பதாக வைகோ தெரிவித்துள்ளார். மேலும் முதல்வர் ஜெயலலிதா அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி பாலாறு விவகாரம் பற்றி விவாதிக்க வேண்டும் என வைகோ வலியுறுத்தினார்.
📡பெரம்பலூர் அருகே நமையனூரில் வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகையை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். மேலுமு் வீட்டில் இருந்த ரூ.2 லட்சம் பணத்தையும் திருடிச் சென்ற மர்மநபர்களை மங்கலமேடு போலீசார் தேடி வருகின்றனர்.
📡புகழ்பெற்ற வைஷ்ணவ தேவி கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள அர்த்குவாரி கோயில் அருகே கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 3 பக்தர்கள் பலியாகி உள்ளனர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மாதா வைஷ்ணவ தேவி நாராயணா பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
📡காஞ்சிபுரம் - கடந்த மாதம் நேப்பாள் நாட்டிற்க்கு ஆன்மீக சுற்றுலா சென்ற காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த 10 நபர்கள், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்து பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டு இன்று காலை 7.30 சென்னை வந்தடைந்தனர்.
📡ஈஷா அறக்கட்டளை மீதும், இங்கு துறவறம் பூண்டுள்ள இரு பெண்களின் மீதும் ஆதாரமில்லாமல் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் வருத்தத்தை தருகிறது. ஆதாரமில்லாத, ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் என்றும் ஈஷா விளக்கம்.
📡ஒலிம்பிக் தீபம் ஏற்றம்
ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது. ஒலிம்பிக் போட்டியின் தொடக்க அடையாளமாக ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது. ரியோ டி ஜெனிரோ நகரில் கோலாகலம். பல்லாயிரக்கணக்கான ரசிர்களின் கரவொலியுன் தீபம் ஏற்றப்பட்டது.
📡நூல் விலை உயர்வை கண்டித்தும் , பருத்தியை பதுக்குவோர் மீது மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்ககோரியும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் சொந்த விசைத்தறியாளர்கள் இரண்டாவது நாளாக இன்றும் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
📡ஆசிரியை சரியாக பாடம் நடத்தவில்லை என்ற புகாருடன் மாணவ மாணவிகள் செங்கோட்டை அருகே கற்குடியில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்
📡சென்னை அண்ணா நகரில் பாலியல் தொழில் நடத்தி வந்த இருவர் கைது. பாண்டியன் என்பவர் தலைமறைவு. 3 பெண்களை மீட்டு அரசு மகளிர் காப்பகத்தில் சேர்த்து விபச்சார தடுப்பு பிரிவு போலிசார் நடவடிக்கை.
📡வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தமிழக - ஆந்திர எல்லைப்பகுதில் உள்ள புல்லூரில் பாலாற்றில் குறுக்கே ஆந்திரா அரசு கட்டி கொண்டு இருக்கும் தடுப்பணையை இன்று வைகோ பார்வையிட்டார்
📡தமிழகத்தில் கடந்த 5 ஆண்டு காலமாக பெண்களுக்கு பாதுகாப்பு அற்ற சூழ்நிலை இருந்து வருவதாகவும்,சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சனை குறித்து பேச விடாமல் தங்களது தலைவிக்கு அர்ச்சனை செய்யும் கோவிலாக தான் நடத்தி வருவதாக நெல்லை மாவட்டம் பரப்பாடியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டியை திறந்து வைத்து கனிமொழி எம்பி செய்தியாளர்களுக்கு பேட்டி
📡கரூரில் இன்று காலை பயிற்சியில் ஈடுபட்ட ஆயுதபடை காவலர் பெருமாள்(28) என்பவர் ஆயுதப்படை மைதானத்திலே நெஞசுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சை க்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பசுபதிபாளையம் போலீசார் விசாரணை. இறந்தபோன பெருமாளுக்கு பிரியா என்கிற மனைவியும், நாகஜோதி, அட்சயா என்கிற இரண்டு மகள்களும் இருக்கிறார்கள். இவர் கரூர் மாவட்டம் தோகைமலையை அடுத்த தொண்டமாங்கினத்தை சேர்ந்தவர் என்று தெரிகிறது.
📡தங்கம், வெள்ளி விலைகள்: மாலை நிலவரம்--
22 கேரட் தங்கம் ஒரு கிராம் - ரூ.2,965
22 கேரட் தங்கம் ஒரு சவரன் - ரூ.23,720
24 கேரட் தங்கம் 10 கிராம் - ரூ.31,710₹வெள்ளி: ஒரு கிராம் - ரூ.50.60
வெள்ளி கட்டி: ஒரு கிலோ - ரூ.47,25. http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக