மாலை செய்திகள் 08/08/2016 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

மாலை செய்திகள் 08/08/2016

💥💥மாலை செய்திகள் 💥💥

     💥💥08\08\16💥💥

💥💥💥💥💥💥💥💥💥💥💥

💥பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: 25 பேர் பலி

கராச்சி: பாகிஸ்தானின் பாலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் நடந்த, குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூட்டில் 25 பேர் கொல்லப்பட்டனர். 35 பேர் காயமடைந்தனர்.பாலுசிஸ்தான் மாகாண வக்கீல் சங்க தலைவர் பிலான் அன்வர் காசி மர்ம நபர்கள் சுட்டதில் பலியானார். அவரது உடலை, வழக்கறிஞர்கள் மருத்துவமனைக்கு கொண்டு வந்த போது குண்டுவெடித்தது. இந்த சம்பவத்தின் போது பத்திரிகையாளர்களும் மருத்துவமனை வளாகத்தில் கூடியிருந்தனர். குண்டுவெடிப்பை தொடர்ந்து மர்ம நபர் ஒருவர், துப்பாக்கியால் சுடத்துவங்கியதாகவும் போலீசார் கூறினர். இதனையடுத்து மருத்துவமனை வளாகத்தில் பீதி நிலவியது. தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அங்கு குவிக்கப்பட்டனர்.


💥சென்னையில் நின்று கொண்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்ததில் பெண் ஒருவர் பலி

சென்னை: நின்று கொண்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்ததில் பெண் ஒருவர் பலியானார். சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்தவர் நாகராஜ். இவர் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். நேற்று தமது உறவினரின் காரை வாங்கிக் கொண்டு குடும்பத்துடன் வெளியே சென்றுள்ளார். நந்தனம் சிக்னல் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது கார் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் காயமடைந்த நாகராஜ் மனைவி பிரேமா மற்றும் அவரது குழந்தைகள் இருவரையும் மீட்டு பொதுமக்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். 

சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரேமா நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குழந்தைகள் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


💥மும்பை-கோவா பாலம் விபத்து எதிரொலி: நாடு முழுவதும் உள்ள பாலங்களை ஆய்வு செய்ய நிபுணர் குழு

டெல்லி: மகாராஷ்டிர மாநிலம் மும்பை-கோவா தேசிய நெடுஞ்சாலையில் சாவித்ரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த மகத் பாலம் சமீபத்தில் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 வாகனங்களிலிருந்த 22 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள பாலங்களை ஆய்வு செய்ய நிபுணர் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது. சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஆகியவை இணைந்து நாடு முழுவதும் உள்ள பாலங்களை ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளனர்.


💥சக மாணவர்களை கிண்டல் செய்த 5 சிறுவர்கள் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சக மாணவர்களை கிண்டல் செய்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 5 சிறுவர்கள் மீது போலீசார் பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. உளிப்படிட்டி கிராமத்தை சேர்ந்த சேர்ந்த தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த 4-ம் வகுப்பு மாணவர்களும், அதே ஊரைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்களும் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து கொண்டனர். 

இந்த பிரச்சினை தொடர்பாக புகார் சொல்லவே என் கல்லலுப்பட்டி போலீசார் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் மீது பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளிக்க பாதிக்கப்பட்டோர் தரப்பினர் முடிவு செய்துள்ளனர்.

9 வயது சிறுவர்கள் மீது பாலியல் வன்கொடுமை, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


💥கோவையில் பரிதாபம்: பாராசெய்லிங்கின் போது 25 மீட்டர் உயரத்தில் இருந்து கீழே விழுந்த தொழிலதிபர் சாவு

கோவை: கோவையில் பாராசெய்லிங்கின்போது பெல்ட் கழன்றதால் 25 மீட்டர் உயரத்தில் இருந்து கீழே விழுந்த தொழிலதிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.


💥ராஜஸ்தானில் 50 குழந்தைகளுடன் ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்ட பள்ளி பேருந்து

ராஜஸ்தான் மாநிலம், பில்வரா மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

இதனால் அங்குள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று பில்வரா மாவட்டத்தில் உள்ள ஆற்றின் மேம்பாலத்தை 50 பள்ளிக் குழந்தைகளுடன் பேருந்து ஒன்று கடக்க முயன்றது. அப்போது அந்தப் பேருந்து திடீரென ஆற்று நீரில் இழுத்துச் செல்லப்பட்டது.

இதையடுத்து அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்து குழந்தைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் அனைத்து குழந்தைகளும் பத்திரமாக மீட்கப்பட்டதாக முதற்கட்ட செய்தி வெளியாகியுள்ளது. இதனால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.


💥மேட்டூர் அருகே பண்ணவாடி கிராமத்தில் பழங்குடியின மக்கள் ஆடிப்பாடி உற்சாகம்

மேட்டூர்: மேட்டூர் அருகே பண்ணவாடி கிராமத்தில் உலக பழங்குடியினர் தினத்தை கொண்டாரெட்டி பழங்குடியின மக்கள் ஆடிப்பாடி உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். உலக பழங்குடியினர் தினம் ஆகஸ்ட் 9-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு மேட்டூர் அருகே பண்ணவாடி கிராமத்தில் பராம்பரிய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கும்மியடித்தல், ஒயிலாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கபடி போன்ற பாரம்பரிய விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டன. 

இதில் சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சிகளை அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கண்டு களித்தனர்.


💥2 ஆய்வு கப்பல்கள் மூலம் மாயமான விமானத்தை தேடும் பணி இன்று துவக்கம்



💥ஜெயலலிதாவுடன் விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பிஆர் பாண்டியன் சந்திப்பு

சென்னை: சென்னை முதல்வர் ஜெயலலிதாவுடன் விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் சந்தித்தார். 13-ம் தேதி நடக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்குமாறு பி.ஆர்.பாண்டியன், ஜெயலலிதாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.


💥சொத்தை எழுதி வாங்க சென்னையில் கடத்தப்பட்ட பெண் ஆம்பூரில் மீட்பு!

வேலூர்: காதல் திருமணம் செய்து கொண்ட பெண்ணின் சொத்தை எழுதி வாங்க, சென்னையில் கடத்தப்பட்ட பெண்ணை போலீசார் ஆம்பூரில் பத்திரமாக மீட்டுள்ளனர்.


💥ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸ்: இந்தியவீராங்கனை தீபா கர்மார்கர் அபாரம்! இறுதிசுற்றுக்கு முன்னேறினார்!!


💥பழுதடைந்த மின்மாற்றிகளை மாற்ற நடவடிக்கை: தங்கமணி

சென்னை: சட்டசபையில் லால்குடி எம்.எல்.ஏ., சவுந்திரபாண்டியன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் தங்கமணி, தமிழகத்தில் பழுதடைந்த 70 சதவீத மின்மாற்றிகளை மாற்றி அமைக்கும் பணிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனக்கூறினார்.


💥துப்பாக்கி சுடுதல் டிராப் பிரிவு: இந்தியாவின் சந்து 17-வது இடம், செனாய் 19-வது இடம் பிடித்து ஏமாற்றம்


💥நகைக்கடையில் வெகு சாவகாசமாக கொள்ளையடிக்கும் திருடர்கள்

உத்திரப்பிரதேச மாநிலம், ஆக்ரா நகரில் உள்ள நகைக்கடை ஒன்றில் திருடர்கள் கொள்ளையடிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. முகமூடி அணிந்திருக்கும் தைரியத்தில் திருடர்கள், மிகவும் சாவகாசமாக நகைகளை அள்ளிச் செல்கின்றனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.


💥சுவாதி கொலை வழக்கு: போலீசாருக்கு அளித்த அனுமதியை எதிர்த்து ராம்குமார் வழக்கறிஞர் மனு

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த ஜூன் மாதம் 24ஆம் தேதி மென்பொருள் பொறியாளர் சுவாதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நெல்லை மாவட்டம், மீனாட்சிப்புரத்தைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ராம்குமாரின் மாதிரி வீடியோவை பதிவு செய்ய போலீசாரக்கு எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. இந்த அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து ராம்குமாரின் வழக்கறிஞர் ராம்ராஜ் சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்துள்ளார். ராம்ராஜின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை ஐகோர்ட் மறுத்துவிட்டது.


💥புதுக்கோட்டையில் ஊரடங்கு உத்தரவு!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள பாண்டிகுடி கிராமத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாண்டிகுடி கிராமத்தில் கோயில் கட்டுவது தொடர்பாக இருதரப்பினரிடையே கருத்து வேறுபாடு நிலவி வந்துள்ளது. தற்போது இந்த கருத்து வேறுபாடு மோதலாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த கிராமத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் பதற்றமான சூழல் தணியும் வரை தடை உத்தரவு நீட்டிக்கும் என கூறப்படுகிறது. பாதுகாப்பு கருதி பாண்டிகுடி கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.




💥தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 குறைவு

சென்னை : வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் சந்தையில் விலை குறைந்து காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ. 24 குறைந்துள்ளது. அதே சமயம் பார்வெள்ளி விலை ரூ. 205 உயர்ந்துள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில் ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2962 ஆகவும், 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.31,680 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.23,696 க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி 20 காசுகள் உயர்ந்து ரூ.50.80 ஆகவும், பார்வெள்ளி விலை ரூ.205 உயர்ந்து ரூ.47,460 ஆகவும் உள்ளது.


💥பாட்னாவில் தலித் மாணவர்கள் தாக்குதல்: ராஜ்நாத் சிங்-ராம் விலாஸ் பஸ்வான் சந்திப்பு

பாட்னா: பாட்னாவில் தலித் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை டெல்லியில் ராம் விலாஸ் பஸ்வான் சந்தித்து பேசவுள்ளார். 



💥சசிகலா புஷ்பாவுக்கு லஞ்சம் கொடுத்தவரை கைது செய்ய கோரிக்கை

நெல்லை: எம்.பி. சசிகலா புஷ்பாவுக்கு லஞ்சம் கொடுத்ததாக ஒப்புக்கொண்ட ராஜேஷை கைது செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சசிகலாபுஷ்பாவுக்கு ரூ. 20 லட்சம் கொடுத்ததாக ராஜேஷ், நெல்லை போலீசில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். ராஜேஷை கைது செய்யுமாறு திருநெல்வேலி லஞ்ச ஒழிப்பு போலீசில் வெங்கடேசன் என்பவர் மனு அளித்துள்ளார். 


💥தக்களி விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

சேலம்: சேலம் மாவட்டத்தில் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளதால் ஒரு கிலோ ஐந்து ரூபாய் வரை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.


💥ஊக்க மருந்து காரணமாக பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை

ரியோ டி ஜெனீரோ: ஊக்க மருந்து காரணமாக மாற்று திறனாளி வீரர்களுக்கான பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை விதிக்கபட்டுள்ளது. தற்போது கோடை காலத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வரும் ரியோ டி ஜெனீரோவில் அடுத்த மாதம் பாராலிம்பிக் போட்டியும் நடைபெற உள்ளது. மாற்று திறனாளி வீரர்களுக்கான போட்டியில் பங்கேற்க ஒட்டு மொத்த ரஷ்ய அணிகளுக்கு சர்வதேச சம்மேளனம் தடை விதித்துள்ளது. ரஷ்யாவில் அதிகரித்து வரும் ஊக்கமருந்து கலாச்சாரம் காரணமாக இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


💥வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 137 புள்ளிகள் உயர்வு

மும்பை: இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 137 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. கடந்த இரண்டு நாள் வர்த்தகத்தில் குறியீடு 380.84 புள்ளிகளாக உயர்ந்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 136.83 புள்ளிகள் உயர்ந்து 28,215.18 புள்ளிகளாக உள்ளது. எண்ணெய் மற்றும் எரிவாயு, உலோகம், ஆட்டோமொபைல், நுகர்வோர் பொருட்கள், வங்கி மற்றும் பொதுத்துறை நிறுவனம் போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை அதிகரித்து காணப்பட்டன. தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 38.05 புள்ளிகள் அதிகரித்து 8,721.20 புள்ளிகளாக உள்ளது.




💥புதிய கல்வி கொள்கையை கண்டித்து சட்டமன்றத்தில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: புதிய கல்வி கொள்கையை கண்டித்து சட்டமன்றத்தில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் அரசு தீர்மானம் நிறைவேற்றாவிட்டால் திமுகவே தனித்தீர்மானம் கொண்டு வரும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார். 1965ல் நடந்தது போல் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக போராட்ட வேண்டிய நிலை உருவாகும் என்று மத்திய அரசுக்கு திமுக பொருளாளர் மு.க ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். 


💥நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மண்பாண்ட தொழிலாளர்கள் போராட்டம்

நெல்லை: நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மண்பானை செய்து மண்பாண்ட தொழிலாளர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மண்பாண்ட தொழிலுக்கு வழங்கப்படும் இலவச மண் அளவை குறைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 




💥ஐதராபாத்: பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஐதராபாத்: போலீசார் நடைபெற்ற மோதலில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் இருந்து, 60 கி.மீ., தூரத்தில் உள்ள ஷாத் நகரில், பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களுக்கும், போலீசாருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். போலீசாருடன் இணைந்து பயங்கரவாதிகளை தேசிய பாதுகாப்பு படையினர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனையடுத்து பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்துள்ளனர். சுதந்திர தினம் நெருங்கும் நிலையில், இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


💥இன்று பார்லி., விவாதத்தில் கலந்து கொள்கிறார் மோடி

திருத்தப்பட்ட ஜிஎஸ்டி மசோதா ராஜ்யசபாவில் கடந்த வாரம் ஒருமனதாக நிறைவேறியது. இதனையடுத்து இந்த மசோதா இன்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

லோக்சபாவில் இன்று நடக்கும் திருத்தப்பட்ட ஜிஎஸ்டி மசோதா மீதான விவாதத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஜ்யசபாவில் ஜிஎஸ்டி மசோதா மீதான விவாதம் நடந்த போது அதில் பிரதமர் மோடி கலந்து கொள்ளவில்லை என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. இதனால் லோக்சபாவில் இன்று நடக்கும் விவாதத்தில் அவர் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.



💥காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து அப்பாவி மக்களை தாக்குவதாக மார்க்சிஸ்ட் குற்றச்சாட்டு

டெல்லி: காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து அப்பாவி மக்களை தாக்குவதாக மார்க்சிஸ்ட் குற்றம் சாட்டியுள்ளது. காஷ்மீரில் 30 நாடுகளுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவால் மக்களின் வாழ்க்கை முற்றிலும் முடக்கப்பட்டது என்றும் ஏன் இந்த அடக்குமுறை என்றும் மார்க்சிஸ்ட் உறுப்பினர் சீதாராம் யெச்சூரி மாநிலங்களவையில் பேசினார். 




💥மீண்டும் ஒரு 1965: ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: நாடு முழுவதும் ஒரே கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது: மோடி தலமையிலான மத்திய அரசு நாடு முழுவதும் ஒரே கல்வி கொள்கையை கொண்டு வருவது முறையல்ல, இது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். காஷ்மீர் முதல் குமரி வரை ஒரே கொள்கை சாத்தியமல்ல. நாடு முழுவதும் ஒரே மாதிரி உடை , உணவு முறை என்று கட்டாயப்படுத்த முடியுமா ? இது போல் இந்த கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும்.தமிழ்மொழியை பின்னுக் தள்ளி சமஸ்கிருதத்திற்கு தாலாட்டு பாட முயற்சி நடக்கிறது. சமத்துவத்திற்காக இந்த போராட்டம், சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர விண்ணப்பித்திருக்கிறோம்.

இது வரை இது குறித்து அரசு எடுத்து கொள்ள விரும்பவில்லை. எல்லா கட்சிகளும் ஒன்று சேர்ந்து எதிர்க்க தயாரக இருக்கின்றோம். தனித்தீர்மானமாக கொண்டு வர வேண்டும் என கடிதம் வழங்கவிருக்கிறேன். மத்திய அரசு கைவிட மறுக்குமானால் மீண்டும் தமிழகத்தில் 1965 போன்ற ஒரு போராட்டம் ஏற்படும் ஒரு நிலை உருவாகும் என மத்திய அரசுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.



💥திருப்புல்லானி அருகே கிணறு தோண்டும் பணியின் போது விபத்து: 2 பேர் மண்ணில் புதைந்தனர்

ராமநாதப்புரம்: நாமநாதப்புரம் மாவட்டம் திருப்புல்லானி அருகே குத்துக்கல்வலசை கிராமத்தில் கிணறு தோண்டும் பணியின் போது விபத்து ஏற்பட்டுள்ளது. கிணறு தோண்டும் பணியின் போது மண் சரிந்ததில் 2 தொழிலாளர்கள் மண்ணில் புதைந்தனர். மீட்பு பணியின் போது பொக்லைன் இயந்திரத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். மேலும் மண்ணில் புதைந்த மற்றொரு தொழிலாளரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


💥காஷ்மீர் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது: டி.ராஜா பேச்சு

டெல்லி: காஷ்மீர் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.ராஜா பேசினார். காஷ்மீர் மக்கள் மீது பெல்லட் குண்டுகளை வீசுவதை நிறுத்தி ராணுவத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி பிரச்சனைக்கு மத்திய அரசு தீர்வு காண வேண்டும் என்றும் டி.ராஜா கோரிக்கை விடுத்துள்ளார். 

💥தமிழக வழக்கறிஞர்களை சந்திக்க இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன்குமார் மிஷா மறுப்பு

டெல்லி: தமிழக வழக்கறிஞர்களை சந்திக்க இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன்குமார் மிஷா மறுப்பு தெரிவித்துள்ளார். வழக்கறிஞர்கள் போராட்டத்தை கைவிடும் வரை பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். டெல்லியில் இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன்குமார் தகவல் தெரிவித்தார்


💥💥💥💥💥💥💥💥💥💥💥

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here