www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
📡💥📡💥📡💥📡💥📡💥📡💥
💥💥💥💥💥💥💥💥💥💥💥
💥குற்றாலம் அருகே புலி நடமாட்டம் : கிராம மக்கள் அச்சம்
குற்றாலம்: நெல்லை மாவட்டம் குற்றாலம் அருகே தமிழக - கேரள எல்லையோரம் புலி நடமாட்டம் இருப்பதாக கிராம மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஆரியங்காவு எல்லை பகுதி கிராம வாசிகளே புலி நடமாட்டம் குறித்து புகார் தெரிவித்துள்ளனர். செங்கோட்டையில் இருந்து 25 கி.மீ. தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் இப்பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள கரவன்பாறை என்ற கிராமத்தில் கடந்த சில நாட்களாக புலி ஒன்றின் நடமாட்டம் இருப்பதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஜானி என்பவரின் தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த ஆடுகளை கடித்து குதறிய புலி குட்டி ஒன்றை தூக்கிச் சென்றதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். கடந்த வாரம் பசு மாடு ஒன்றை புலி அடித்து கொன்றதாக தெரிவிக்கும் கரவன்பாறை கிராம மக்கள் இரவு நேரம் மட்டுமல்ல, பகல் வேளைகளிலும் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அச்சம் தெரிவித்துள்ளனர்.
💥70 பேர் பலியான பாக். மருத்துவமனை குண்டுவெடிப்பிற்கு தாலிபான்களுடன் தொடர்புடைய ஜமாத்-அர்-உஹார் அமைப்பு பொறுப்பேற்பு
💥தலித் மீதான தாக்குதல் தவறு: ஆர்.எஸ்.எஸ்., கருத்து
புதுடில்லி: ஐதராபாத்தில் நேற்று நடந்த விழா ஒன்றில் பங்கேற்ற பிரதமர் மோடி, பசுக்களை பாதுகாப்பதாக கூறி கொண்டு வன்முறையில் ஈடுபடும் நபர்களால் நாட்டில் ஒற்றுமை சீர்குலைகிறது. அவர்கள் தண்டிக்கபட வேண்டியர்வகள் எனக்கூறியிருந்தார். பிரதமரின் இந்த கருத்துக்கு ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.மேலும், தலித்கள் மீதான தாக்குதல் தவறானது எனவும், தாக்குதல் நடத்துபவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.
💥விசாரணை கைதி மர்மச்சாவு: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் முற்றுகை
ராமநாதபுரம்: கீழக்கரை அருகே மர்மமாக இறந்த விசாரணை கைதியின் உடலை வாங்க மறுத்து, உறவினர்கள் முற்றுகையில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
💥சில்லறை விற்பனையாளர்கள் தரும் பாலை மட்டுமே வாங்குவதில்லை: அமைச்சர் சண்முகநாதன்
சென்னை: சில்லறை விற்பனையாளர்கள் தரும் பாலை மட்டுமே வாங்குவதில்லை என பேரவையில் அமைச்சர் பதில் அளித்துள்ளார். கூட்டுறவு சங்கத்தில் பதிவு செய்தவர்களிடம் முழுமையாக பால் வாங்கப்படுகிறது என்று சண்முகநாதன் தெரிவித்துள்ளார். மேலும் வரும் 5 ஆண்டுகளுக்குள் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
💥8 நாட்கள் மண்ணில் புதைக்கப்பட்ட 8 வார குழந்தை உயிருடன் மீட்பு
தெற்கு சீனாவில் உள்ள மயானத்தில் பிறந்த 8 வாரம் ஆன ஆண் குழந்தை அடக்கம் செய்யப்பட்டிருந்தது. அடக்கம் செய்யப்பட்ட அந்த குழந்தை 8 நாட்களுக்கு பிறகு மீண்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. மூலிகைகள் சேகரிப்பதற்காக லு பெங்க்சியன் என்ற பெண் மணி மலைப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அங்குள்ள மயானத்திற்கு மூலிகையை தேடி சென்றுள்ளார்.
அப்போது அங்கு குழந்தை ஒன்று புதைக்கப்பட்டுருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து அவர் உள்ளூர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தார். தகவலை அறிந்த அதிகாரிகள் விரைந்து வந்து குழந்தையை பார்த்த போது குழந்தை உயிருடன் இருப்பது தெரியவந்தது. பின்னர் குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
💥உத்திர
பிரதேசத்தில் பார்வையற்ற பெண்ணை பலாத்காரம் செய்த ராணுவ வீரர்
மதுரா: சமீப காலமாக இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் உத்தரபிரதேசத்தில் ராணுவ வீரர் ஒருவர் பார்வையற்ற பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
💥மணிப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் குண்டுவெடிப்பு: 2 பாதுகாப்பு படை வீரர்கள் காயம் .மணிப்பூர் மாநிலம் இம்பால்-திமாப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் குண்டு வெடித்ததில் 2 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
💥ரியோ ஒலிம்பிக்: துப்பாக்கிச்சுடுதல் டிராப் பிரிவில் இந்தியாவின் கியான் செனாய் தோல்வி
ரியோ ஒலிம்பிக் போட்டியின் துப்பாக்கிச்சுடுதல் ஆண்கள் டிராப் பிரிவில் இந்தியாவின் கியான் செனாய் அரையிறுத்திக்கான வாய்ப்பை தவறவிட்டார். கடைசி சுற்றில் 3 புள்ளிகள் பெற்ற செனாய் 114 புள்ளிகளுடன் தோல்வியடைந்தார்.
💥ஜிஎஸ்டி மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு
சேவை மற்றும் வரி மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். ஏற்கனவே மாநிலங்களவையிலும் சேவை மற்றும் வரி மசோதாவை எதிர்த்து அதிமுக வெளிநடப்பு செய்தது.
💥சத்தீஸ்கரில் 10 கிலோ ஐ இடி வெடிகுண்டுகளுடன் 4 நக்சல்கள் கைது
பாஸ்டர்: சத்தீஸ்கர் மாநிலம் பாஸ்டர் மாவட்டத்தில் 4 நக்சல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 10 கிலோ ஐஇடி வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
💥வில்வித்தை: லட்சுமி ராணி தோல்வி
ரியோ டி ஜெனிரோ: ஒலிம்பிக் வில்வித்தை தனிநபர் போட்டியில் இந்தியாவின் லட்சுமிராணி மாஜி தோல்வியடைந்தார்.
ரியோ ஒலிம்பிக் வில்வித்தை அணிகளுக்கான போட்டி காலிறுதியில் இந்திய அணி, ரஷ்யாவிடம் வீழ்ந்தது. தற்போது தனிநபர் போட்டிகள் ('நாக் அவுட்') நடக்கின்றன.
நேற்று இந்திய வீராங்கனை லட்சுமிராணி மாஜி, சுலோவாகியாவின் அலெக்சாண்ட்ரா லொங்கோவாவை சந்தித்தார். முதல் செட்டை 25-27 என, இழந்த லட்சுமிராணி (0-2), அடுத்த செட்டில் 26-28 (0-4) என, தோற்றார். மூன்றாவது செட் 26-26 என சமன் (1-1) ஆனது. 4வது செட்டிலும் ஏமாற்றிய லட்சுமிராணி, 24-27 (0-2) என, இழந்தார். முடிவில் 1-7 என்ற கணக்கில் தோற்ற லட்சுமிராணி, பதக்க வாய்ப்பை இழந்தார்.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
💥35 மாவோயிஸ்ட்களின் புகைப்படங்கள் வெளியீடு!
நீலகிரி வனப்பகுதியில் 35 மாவோயிஸ்ட்கள் பதுங்கியிருப்பதாக கேரளா போலீசார் கூறுகின்றனர்.அப்பகுதியை தங்களின் கேந்திரமாக மாற்ற மாவோயிஸ்ட்கள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறையும் எச்சரித்துள்ளது.மாவோயிஸ்ட்களின் புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளனர்.அவைகள் அனைத்து சோதனை சாவடிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
💥சரக்கு மற்றும் சேவை வரி திருத்த மசோதா: பிரதமர் மோடி பேச்சு
சரக்கு மற்றும் சேவை வரி திருத்த மசோதா மீது மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். வரி தீவிரவாதத்தில் இருந்து விடுதலை பெற முக்கியமான நிலையை எடுத்துள்ளோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சரக்கு மற்றும் சேவை வரி நிறைவேற ஒத்துழைக்கும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். சரக்கு மற்றும் சேவை வரி எந்தவொரு தனிப்பட்ட கட்சிக்கும் கிடைத்த வெற்றியல் என்றும் மோடி தெரிவித்தார்.
💥சசிகலா புஷ்பா மீது மாஜி வேலைக்கார பெண்கள் அதிர வைக்கும் படுபயங்கர புகார்கள்
தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் வேலைக்கார பெண்கள் பானுமதி, ஜான்சிராணி பேட்டி
நாள்தோறும் இரவில் தமது ஆடைகளை களைந்துவிட்டு மஜாஜ் செய்ய வற்புறுத்துவார் சசிகலா புஷ்பா
💥எழும்பூர் நீதிமன்றத்தில் ராம்குமார் 17-ம் தேதி ஆஜராக உத்தரவு
எழும்பூர் நீதிமன்றத்தில் ராம்குமார் 17 ம் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிபதி முன்னிலையில் ராம்குமாரட கையெழுத்திட உத்தரவிடப்பட்டுள்ளது. ராம்குமாரின் கையெழுத்தை ஒப்பிட்டு பார்க்க அனுமதி கோரியிருந்தது போலீஸ். போலீஸ் கோரிக்கையை ஏற்று எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
💥ரூ.570 கோடி சிக்கியது தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு
திருப்பூரில் ரூ.570 கோடி சிக்கியது தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. முதற்கட்ட விசாரணையை முடித்த பிறகு சிபிஐ வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் தெரிவக்கின்றன. பணம் கொண்டு சென்ற 3 கண்டெய்னர் லாரிகளின் எண்கள் போலி என்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது என்று சிபிஐ தெரிவித்துள்ளது.
💥பெதுல்லா தீவிரவாத அமைப்புக்கு இந்தியா உட்பட உலகளவில் தொடர்பு: துருக்கி தூதர் எர்டால் சப்ரி ஏஜென்
பெதுல்லா தீவிரவாத அமைப்புக்கு இந்தியா உட்பட உலகளாவிய தொடர்புள்ளது. ஒட்டுமொத்த அமைப்புக்கும் அவர்கள் பணம் மற்றும் ஆதரவு அளிக்கின்றனர் என்று துருக்கி தூதர் எர்டால்சப்ரி ஏஜென் மும்பையியல் தெரிவித்துள்ளார்.
💥1 கோடியில் நவீன மீன் விற்பனை நிலையங்கள்: அமைச்சர் ஜெயக்குமார்
10 நகரங்களில் நவீன மீன் விற்பனை நிலையங்கள் ரூ. 1கோடியில் அமைக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பேரவையில் மீன்வளத்துறை மானியக் கோரிக்கை விவாதத்திற்கு ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்
💥யுவராஜ்க்கான நிபந்தனைகளை தளர்த்த மறுப்பு:சென்னை உயர்நீதிமன்றம்
கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஜாமீன் பெற்றுள்ள யுவராஜ்க்கான நிபந்தனைகளை தளர்த்த மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஜாமீன் நிபந்தனையை தளர்த்தக் கோரிய யுவராஜ் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஜாமீன் பெற்றுள்ள யுவராஜ் பூக்கடை காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
💥சில்லறை விற்பனையாளர்கள் தரும் பாலை மட்டுமே வாங்குவதில்லை: அமைச்சர் சண்முகநாதன்
சில்லறை விற்பனையாளர்கள் தரும் பாலை மட்டுமே வாங்குவதில்லை என பேரவையில் அமைச்சர் பதில் அளித்துள்ளார். கூட்டுறவு சங்கத்தில் பதிவு செய்தவர்களிடம் முழுமையாக பால் வாங்கப்படுகிறது என்று சண்முகநாதன் தெரிவித்துள்ளார். மேலும் வரும் 5 ஆண்டுகளுக்குள் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
💥பால் விலை ரூ.25க்கு விற்பனை செய்யப்படும் என கூறியது என்ன ஆயிற்று? ஸ்டாலின் கேள்வி
பால் விலை ரூ.25க்கு விற்பனை செய்யப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறியது என்ன ஆயிற்று? என்று மு.க ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தற்போது பால் லிட்டருக்கு ரூ. 40க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் ஆவின் நிறுவனம் பாலை வாங்குவதில்லை என உற்பத்தியாளர்கள் சொல்கிறார்கள் எனவும் ஸ்டாலின் பேரவையில் தகவல் கூறியுள்ளார். உற்பத்தியாளர்களை அழைத்து கட்டுப்படியாகும் விலையில் பால் வாங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
💥கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு தடை
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு அந்நாட்டு வாரியம் தடை விதிப்பட்டுள்ளது. ஜீன் சைம்ஸ், புமிலேலா, மட்ஸ்க்வீ, எத்தி மப்லாட்டி , தமி ஷோலிக்கிளி ஆகிய நான்கு வீரர்களுக்கு 7 முதல் 12 ஆண்டுகள் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
💥நேபாளத்தில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு
நேபாளத்தில் நுவாகோட் என்ற இடத்தில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து ஏற்பட்டது. காத்மாண்டு நோக்கி சென்று கொண்டிருந்த உள்நாட்டு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டரில் பயணம் செய்த பைலட் உள்பட 6 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
💥சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் நுழைய இன்று முதல் தடை
சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் நுழைய இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.சுதந்திர தினத்தையோட்டி பாதுகாப்பு கருதி பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
💥புதுச்சேரி அருகே முன்னாள் எம்.எல்.ஏ கார்த்திகேயனின் கார் மீது மர்மநபர்கள் தாக்குதல்
புதுச்சேரி அருகே கரசூரில் முன்னாள் எம்.எல்.ஏ கார்த்திகேயனின் கார் மீது மர்மநபர்கள் தாக்குதல் நடாத்தியுள்ளனர். கார் மீது தாக்குதல் நடத்திய மர்மநபர்களை தடுத்த ஓட்டுநர் பாபுவுக்கு அடி,உதை விழுந்தது. என்.ஆர். காங்கிரசிலிருந்து விலகி உசுடு தொகுதியில் கார்த்திகேயன் சுயேச்சையாக போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
💥உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி சந்திப்பு
டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி சந்தித்தார். பயங்கரவாதி கொல்லப்பட்டதால் ஒரு மாதமாக நீடிக்கும் ஊரடங்கு உத்தரவு குறித்து ஆலோசனை நடத்தினர்.
💥தஞ்சை அருகே மூடிய மதுக்கடையை மீண்டும் திறந்த டாஸ்மாக் மேலாளர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம்
தஞ்சை அருகே மூடிய மதுக்கடையை மீண்டும் திறந்த டாஸ்மாக் மேலாளர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அரசு உத்தரவின்படி மூடப்பட்ட 500 மதுக்கடைகளில் சாலியமங்கலம் மதுக்கடையும் ஒன்று. பிரதான சாலையில் மூடிய கடையில் வசூல் அதிகம் என்பதால் வேறு கடையை இடமாற்றம் செய்ய முயற்சி செய்துள்ளனர். மூடப்பட்ட இடத்தில மீண்டும் டாஸ்மாக் கடையை திறக்க சாலியமங்கலம் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலாளர் அறிவழகன் உள்பட 4 பேரை டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் சஸ்பெண்ட் செய்தார்.
💥சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 குறைவு
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.2,943-க்கும், ஒரு சவரன் ரூ.23,544-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.50.60-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.47,280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
💥📡💥📡💥📡💥📡💥📡💥
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக