மாலை செய்திகள் 09/08/2016 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

மாலை செய்திகள் 09/08/2016

            

📻மருத்துவ பொது நுழைவுத் தேர்வில் வினாத்தாள்கள் வெளியானதாக வழக்கு: உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: மருத்துவ பொது நுழைவுத் தேர்வில் வினாத்தாள்கள் வெளியானதாக வழக்கு தொடரப்பட்டது. வினாத்தாள் வெளியானதாக தொடர்ந்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. உத்தராகண்ட் ஜூலை 24-ம் தேதி நடந்த தேர்வில் வினாத்தாள் வெளியானதாக மனு வழக்கு தொடரப்பட்டது. 
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
📻நெல்லை: உதவித் தொகையை முறையாக வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் முற்றுகைப் போராட்டம்

திருநெல்வேலி:மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகையினை முறையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை
மாற்றுத்திறனாளிகள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

📻32 தமிழர்களை விடுதலை செய்ய சந்திரபாபு நாயுடு மறுப்பு

சித்தூர்: சித்தூர் சிறையில் உள்ள 32 தமிழர்களை விடுதலை செய்ய முடியாது என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். இன்று குப்பம் வந்த சந்திரபாபு நாயுடுவிடம் கைது செய்யப்பட்ட 32 தமிழர்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: சித்தூர் மாவட்டத்தில் விலை மதிப்புமிக்க செம்மரங்கள் தொடர்ந்து வெட்டி கடத்தப்பட்டு வருகிறது. கடத்தல் நடவடிக்கையை தொடர்ந்து அனுமதிக்க இயலாது. 

மேலும் கைதான 32 தமிழர்களும் அப்பாவிகள் அல்ல. அவர்கள் நல்லவர்கள் என்று நியாயப்படுத்த முடியாது. செம்மரக் கடத்தலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

📻மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் சாமி தரிசனம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் இன்று காலை அம்மனை தரிசனம் செய்தார்.

📻கோயில் விவகாரத்தில் நாகை ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு

நாகை: கள்ளிமேடு கோயில் விவகாரத்தில் நாகை ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. கோயில் திருவிழாவை ரத்து செய்து நாகை ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். இருதரப்பு மக்களிடமும் ஆட்சியர், இந்து சமய அறநிலையத்துறை பேச்சு நடத்த ஆணையிட்டது. மக்களின் கருத்துகளை 31-ம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.

📻மதுரை அருகே கிணற்றில் குளிக்கும் போது மூழ்கி கல்லூரி மாணவர் பலி

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் தனியார் கல்லூரி மாணவர் ஆனந்த் கிணற்றில் குளித்த போது மூழ்கி உயிரிழந்தார். கல்லூரி மாணவர் உயிரிழந்தது தொடர்பாக கிணற்றில் குளித்த மற்ற 3 மாணவர்களிடம் விசாரணை நடைபெற்றது. 

📻ஜம்மு-காஷ்மீர் துப்பாக்கிச்சண்டையில் உயிரிழந்த எல்லை பாதுகாப்புபடை வீரர்களின் உடல்களுக்கு அஞ்சலி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாசில் என்ற இடத்தில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச்சண்டையில் 3 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களின் உடலுக்கு ஸ்ரீநகரில் ராணுவ அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். 

📻சென்னை வானகரத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 30 பேர் காயம்

சென்னை: சென்னை வானகரம் அருகே அரசுப் பேருந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் காயமடைந்தனர்.

விபத்து நிகழ்ந்த பகுதியில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

📻மின்சாரம் தாக்கி காயமடைந்தவர் சிகிச்சை பயனின்றி சாவு

சிவகாசி: விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் மின்சாரம் தாக்கி காயமடைந்தவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.

📻வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 97 புள்ளிகள் சரிவு

மும்பை: வர்த்தக முடிவில் இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 97 புள்ளிகள் சரிந்து 28,085 புள்ளிகளாக உள்ளது. நிப்டி 33 புள்ளிகள் சரிந்து 8,678 புள்ளிகளாக உள்ளது.

📻கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு : நில அளவைக்கு வந்த அதிகாரி சிறைபிடிப்பு

கோவை: கோவையில் விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நில அளவைக்காக வந்த அதிகாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர். கோவை விமான நிலைய ஓடுதள விரிவாக்கத்திற்கு இருகூர், சின்னியம்பாளையம் சுற்றுவட்டாரத்தில் 613 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக நிலஅளவை செய்ய நில எடுப்பு வட்டாட்சியர் சகுந்தலா அதிகாரிகளுடன் விரிவாக்கம் செய்ய உள்ள இடத்திற்கு வந்தார். 

இதனை அறிந்த பொதுமக்கள் அதிகாரிகளை சிறைபிடித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அதிகாரிகளை மீட்டனர்.

📻5ம் வகுப்பு மாணவர்கள் மீது பாலியல் வழக்கு: மதுரை ஆட்சியர் நேரில் விசாரணை

மதுரை: உசிலம்பட்டி அருகே பள்ளிச் சிறுவர்கள் 6 பேர் மீது பாலியல் வழக்கு பதியப்பட்டது குறித்து மதுரை ஆட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். அரசுப் பள்ளியில் 4ம் வகுப்பு பயிலும் மாணவிகளை 5ம் வகுப்பு மாணவர்கள் 2 நாள் முன்பு கேலி செய்துள்ளனர். மேலும் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவிகளை பிளேடால் கிழித்ததால் மாணவிகள் காயமடைந்தனர். இதுகுறித்து எம்.கல்லுப்பட்டி காவல் நிலையத்தில் மாணவிகளின் பெற்றோர்கள் புகார் அளித்தனர். இதனால் 5ம் வகுப்பு படிக்கும் 6 மாணவர்கள் மீது போலீசார் பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்தனர். 

சிறுவர்கள் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிந்தது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து மதுரை ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் உழைப்பட்டி கிராமத்துக்கு சென்று விசாரணை செய்து வருகிறார். விசாரணையின் போது மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி இருதயசாமி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். 

📻தற்கொலை: குற்றம் இல்லை!
சட்டத் திருத்தம் நிறைவேற்றம்!!

தற்கொலை செய்வது குற்றம் அல்ல என்பதற்கான சட்ட திருத்த மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது.

இந்திய தண்டனைச் சட்டப்படி, தற்கொலை முயற்சி செய்வோர் பிரிவு 309ன்கீழ் குற்றவாளிகளாக கருதப்படுவார்கள். அவர்களுக்கு ஓராண்டு வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்க முடியும்.

இதை தவிர்க்கும் பொருட்டு, தற்கொலையை குற்றமாக கருதாமல், மனஅழுத்தம், வாழ்க்கையில் விரக்தி போன்று பார்த்து, அதை தீர்க்கும் வகையில் திருத்தம் கொண்டுவரப்பட்டு அது ராஜ்யசபாவில் நிறைவேறியுள்ளது.

📻கலிகோ புல் தற்கொலை பற்றிய எந்த குறிப்பும் இல்லை: உள்துறை அமைச்சகம் தகவல்

அருணாச்சல பிரதேச முன்னாள் முதலமைச்சர் கலிகோ புல் தற்கொலை பற்றிய எந்த குறிப்பும் இல்லை என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது, மேலும் தற்கொலைக்கு மன அழுத்தம் காரணமாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளது.

📻சட்டப்பேரவை நிகழ்ச்சியை இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்வது குறித்து விளக்கம் அளிக்க உத்தரவு

சட்டப்பேரவை நிகழ்ச்சியை இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்வது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மனுதாரர் ஜெகதீஸ்வரன் என்பவர் தாக்கல் செய்த வழங்கில் தலைமை நீதிபதி அமர்வு ஆணையிட்டுள்ளது. சட்டப்பேரவை நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பக் கோரி விஜயகாந்தும் வழக்கு தொடர்ந்தார்.

📻கோதையாறு புனல் மின் நிலையம் நவீனப்படுத்தப்படும் :ஜெ. அறிவிப்பு

மின்நிலைமையை சீராக்க ரூ. 4126 கோடிக்கான திட்டங்களை சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்தார். கோதையாறு புனல் மின் நிலையம் ரூ.80 கோடியில் நவீனப்படுத்தப்படும் எனவும் ஜெயலலிதா அறிவித்துள்ளார்

📻சத்தீஸ்கரில் கான்கிரீட் கலவை இயந்திரத்தை தீ வைத்து கொளுத்திய நக்சல்கள்

சத்தீஸ்கர் மாநிலம்  தாண்டேவாடாவில் கான்கிரீட் கலவை இயந்திரத்தை நக்சல்கள்  தீ வைத்து கொளுத்தினர். மேலும் சாலைகளை தோண்டி சேதப்படுத்தியுள்ளனர்.

📻பெங்களூரில் நடைபெற்ற சர்ச் குண்டு சம்பவங்கள் தொடர்பாக முக்கிய குற்றவாளி கைது
16 வருடத்திற்கு பிறகு முக்கிய குற்றவாளியான அமிர் அலி கைது
தெலுங்கானா மாநிலத்தில் பதுங்கியிருந்த அமிர் அலி கைது செய்யப்பட்டார்

📻இந்திய அணிக்கு எதிராக டி-20 போட்டி: மேற்கிந்திய தீவுகள் அணி கேப்டனாக பிராத்வெய்ட் நியமனம்

இந்திய அணிக்கு எதிராக 2 டி-20 போட்டிகளில் விளையாடும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு கார்லோஸ் பிராத் வெய்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளளார். கிரிக்கெட் நிர்வாகத்துடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து டேரன் சாமி நீக்கப்பட்டார். புளோரிடாவில் இந்த போட்டிகள் நடைபெறவுள்ளது.

📻திருச்சி - குடிசைகள் எரிந்து நாசம்

திருச்சி காந்தி மார்கெட் பகுதியில் உள்ள பெரிய கடைவீதியில் உள்ள ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமதான குடிசை வீட்டில் இன்று (செவ்வாய்) காலை ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அணைக்க முயற்ச்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் காற்று பலமாக வீசியதில் அருகில் இருந்த சுரேஷ் என்பவரின் குடிசை வீட்டிற்க்கும் தீ பரவியது. தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில் அவர்கள் வருவதற்க்குள் இரண்டு வீடுகளும் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இதில் வீட்டில் வைத்திருந்த 3 சிலண்டர்களும் வெடித்தது. மேலும் பீரோ, கட்டில் உள்ளிட்ட மின்சாத பொருட்களும், எரிந்து சாம்பலானது.

📻தொடரும் பட்டுக்கோட்டையும் பாராங்கல் கொலையும்

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை நகரில் கடந்த சில மாதங்களில் பட்டப்பகலில் பல கொலைகள் நடந்துவிட்டது. கடந்த மாதம் திமுக ந.செ. பொருப்பு மனோகரன் மாலை நேரத்தில் வெட்டி கொலை செய்த நபர்கள் அவர் முகம் தெரியாமல் கல்லால் அடித்து சிதைத்து சென்றனர்.

இந்த பரபரப்பு இன்னும் அடங்காத நிலையில் இன்று செவ்வாய் கிழமை மதியம் 12 மணிக்கு தஞ்சை சாலையில் இருந்து சிவன் கோயிலுக்கு செல்லும சாலையில் ஒரு நபரை சிலர் தலையில் பாராங்கல்லை போட்டு முகத்தை சிதைத்து அடையாளம் தெரியாமல் சிதறடித்து கொலை செய்து தப்பியுள்ளனர்.

பட்டுக்கோட்டையில் தொடரும் கொலைகளால் நகர மக்கள் அச்சத்திலேயே உள்ளனர்.
பட்டப்பகலில் கூட்டம் அதிகமுள்ள தெருவில் நடக்கும் கொலைகளால் அச்சம் வரத்தானே செய்யும்.

📻அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தேர்தல் தொடர்பான வழக்கு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு

அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தேர்தல் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க 6 வார கால அவகாசம் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

📻ராம்குமார் வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை: ராம்குமாரை வீடியோ எடுக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வீடியோ பதிவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ராம்குமார் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

📻மத்தியப் பிரதேசத்தில் சந்திர சேகர் ஆசாத் சிலைக்கு பிரதமர் மோடி அஞ்சலி

அலிராஜ்பூர்: மத்தியப் பிரதேசம் மாநிலம் அலிராஜ்பூரில் உள்ள சந்திர சேகர் ஆசாத் சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். 

📻பஞ்சு அருணாசலம் உடலுக்கு தமிழக திரையுலகினர் அஞ்சலி

சென்னை: சென்னை தி.நகரில் உள்ள இல்லத்தில் அருணாசலம் உடலுக்கு தமிழக திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். சத்யராஜ், வெங்கட்பிரபு மற்றும் கார்த்திக்ராஜா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். 

📻சென்னை தனியார் பள்ளியில் கூடுதல் கட்டணம் செலுத்தாத மாணவர்கள் துன்புறுத்தல்

சென்னை: சென்னையில் தனியார் பள்ளி ஒன்றில் கூடுதல் கட்டணம் செலுத்தாத மாணவர்கள் துன்புறுத்தப்படுவதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆன்டர்சன் சாலையில் இயங்கி வரும் தனியார் சிபிஎஸ்இ பள்ளியே இந்த புகாருக்கு ஆளாகியுள்ளது. தற்போது அரசு நிர்ணயித்த பள்ளி கட்டணத்தை மாணவர்கள் செலுத்தி வருகின்றனர். ஆனால் பள்ளி நிர்வாகம் தாங்கள் நிர்ணயித்துள்ள கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டும் என வற்புறுத்துவதாக புகார் எழுந்துள்ளது. 

📻12 பேருக்கு நிதி உதவி: கருணாநிதி வழங்கினார்

சென்னை: மருத்துவம், கல்வி நிதி உதவியாக 12 பேருக்கு தலா ரூ.25,000 கருணாநிதி வழங்கினார். கருணாநிதி அறக்கட்டளை சார்பில் நலிந்தோருக்கு இதுவரை ரூ.4 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

📻விருதுநகரில் ரூ.2 ஆயிரம் கோடியில் மின் துணை நிலையம்; ஜெ.,

சென்னை: ரூ. 2 ஆயிரம் கோடி செலவில் விருதுநகரில் தொகுப்பு மின் துணை நிலையம் அமைக்கப்படும் என தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெ., கூறினார். 110 விதியின் கீழ் சட்டசபையில் முதல்வர் ஜெ., மின் தொடர்பான பல்வேறு அறிவிப்புகள் வெளியிட்டார்.

📻பெங்களூருவில் அத்துமீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் இடிப்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஹுலிமாவு பகுதியில் அத்துமீறி கட்டப்பட்ட கட்டிடங்களை மாநகராட்சி தொழிலாளர்கள் இடித்தனர். பல்வேறு குடியிருப்புகள், கடைகள் அத்துமீறி கட்டப்பட்டுள்ளதாக வந்த புகாரை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

📻மாணவி வினிதா தற்கொலை:4 பேர் பணியிடை நீக்கம்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே 9ம் வகுப்பு மாணவி வினிதா தற்கொலையை அடுத்து 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அன்னியூர் பிற்படுத்தப்பட்ட மாணவர் விடுதி காப்பாளர் விஜயலட்சுமி, சமையலர் அம்மச்சி, மகாலட்சுமி நீக்கப்பட்டனர்.விடுதியில் பெண் காவலாளி சுமதியும் சஸ்பென்ட் செய்து பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் உத்தடவிட்டார். 

📻ரேணிகுண்டா அருகே செம்மரம் கடத்தியதாக திருவண்ணாமலை செங்கத்தை சேர்ந்த சிறுவன் கைது

ஆந்திரா: ரேணிகுண்டா அருகே செம்மரம் கடத்தியதாக திருவண்ணாமலை செங்கத்தை சேர்ந்த சிறுவன் கைது செய்யப்பட்டார். திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட சிறுவனை சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாமண்டூர் வனப்பகுதியில் லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ,2 கோடி மதிப்புள்ள செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. செம்மரக் கடத்தலில் 19 பேர் தப்பியதாக ஆந்திர போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது.

📻சேலத்தில் இருந்து சென்னை ரிசர்வ் வங்கிக்கு ரயிலில் கொண்டுவரப்பட்ட பணம் கொள்ளை

சேலத்தில் இருந்து சென்னை ரிசர்வ் வங்கிக்கு ரயிலில் கொண்டுவரப்பட்ட பணம் கொள்ளை

சேலத்தில் இருந்து சென்னை ரிசர்வ் வங்கிக்கு ரயிலில் கொண்டுவரப்பட்ட பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில் வந்தவுடன் பார்த்தபோது பணம் இருந்த பெட்டி உடைக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது.

📻கொடைக்கானல் விடுதியில் பரிதாபம்: 2 மகள்களை கொன்று விஷம் குடித்த தம்பதி; மனைவி சாவு, கணவர் சீரியஸ்

கொடைக்கானல்: கொடைக்கானல் தனியார் விடுதியில் 2 மகள்களை கொன்று கணவன், மனைவி விஷம் குடித்தனர். இதில் மனைவி இறந்து விட்டார். கணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். நாமக்கல் அருகே உள்ள வடவத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (35). இவரது மனைவி கவுசல்யா (32). இவர்களது மகள்கள் ஜனனி (14) மற்றும் இனியா (9). கடந்த 7ம் தேதி திண்டுக்கல் மாவட்டம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here