📡சென்னையில் ரூ 7.34 கோடி செலவில் மழைநீர் வடிகால்வாய்கள் அமைக்கும் பணிகள் !
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.7.34 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால்வாய்கள் அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது
📡கைதான 32 தமிழர்களை விடுவிக்க முடியாது: சந்திரபாபுநாயுடு அறிவிப்பு
சித்தூர் சிறையில் உள்ள 32 தமிழர்களை விடுதலை செய்ய இயலாது என்று ஆந்திர முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
📡மதுரை-சென்னை இடையே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
சென்னை: மதுரை-சென்னை எழும்பூருக்கு வரும் 16ம் தேதி இரவு 7.45 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கப்பட உள்ளது. மேலும் பாந்த்ரா-வேளாங்கண்ணி இடையே வரும் 27ம் அததி இரவு 10.50க்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
📡குரூப் 4 தேர்வுகள்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு
தமிழக அரசின் காலிப் பணியிடங்களுக்கான, குரூப் 4 தேர்வுகள் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நிலஅளவர், வரைவாளர் உள்ளிட்ட 5,451 காலிப் பணியிடங்களுக்கான பணியாளர்களை நியமனம் செய்யும் பொருட்டு, நடத்தப்படும் குரூப் 4 தேர்வுகள் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, இளநிலை உதவியாளர் ( பிணையமற்றது) - 2345
**இளநிலை உதவியாளர் ( பிணையமுள்ளது ) - 121
**வரி தண்டலர் - 8
**நில அளவர் - 532
**வரைவாளர் - 327
**தட்டச்சர் - 1714
சுருக்கெழுத்து தட்டச்சர் - 404
ஆகிய பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க கடைசி தேதி வருகிற செப்டம்பர் மாதம் 8-ம் தேதியாகும். தேர்வு கட்டணம் செலுத்த கடைசி தேதி வருகிற செப்டம்பர் மாதம் 11-ம் தேதியாகும். தேர்வு நாள் வருகிற நவம்பர் மாதம் 6-ம் தேதியாகும்.
விருப்பமுள்ளவர்கள் www.tnpscexams.net/www.tnpscexams.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
இதுகுறித்து கூடுதல் விவரங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
📡திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வந்தவர்' : மயங்கி கிடந்த பக்தரை மயானத்தில் வீசிய ஊழியர்கள்
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர் திடீரென மயங்கி விழுந்தார். அவர் இறந்துவிட்டதாக கருதி தேவஸ்தான ஊழியர்கள் மயானத்தில் வீசினர். ஆனால் அவர் உயிருடன் இருப்பது தெரிய வந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் சிருடியை சேர்ந்தவர் பிரதிமா சிவாஜிபோசி(78). இவர் அடிக்கடி விஜயவாடா வந்து செல்வது வழக்கமாம். இந்நிலையில், 4 நாட்களுக்கு முன்பு விஜயாவாடா வந்த அவர் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய தனியாக வந்துள்ளார். உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர் நேற்றுமுன்தினம் திடீரென சுருண்டு விழுந்துள்ளார்.
இதை பார்த்த தேவஸ்தான சுகாதார ஊழியர்கள், அவர் இறந்துவிட்டதாக நினைத்து ஒரு மூட்டையில் கட்டி குப்பை லாரியில் ஏற்றிச்சென்று பாலாஜி நகரில் உள்ள மயானத்தில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.
📡ஊதியக் குழு பரிந்துரையை ஆய்வு செய்ய சிறப்புக் குழு அமைக்கப்படும்: அருண் ஜேட்லி
ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளின் அடிப்படையில், அரசு ஊழியர்களுக்கு இதர படிகளை (அலவன்ஸ்) அளிப்பது குறித்து முடிவு செய்வதற்காக மத்திய நிதித் துறைச் செயலர் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.
📡ரியோ டி ஜெனிரோ: ரியோ ஒலிம்பிக்ஸ் துடுப்பு படகு 1,500 மீட்டர் பிரிவில் இந்தியாவின் தத்து போக்கனால் காலிறுதியில் 4-வது இடம் பிடித்து அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார்.
📡சசிகலாபுஷ்பா கணவர், மகன் மீது பாலியல் புகார்: ஏஎஸ்பி தலைமையில் விசாரணை தொடங்கியது
தூத்துக்குடி: சசிகலாபுஷ்பா கணவர் மற்றும் மகன் மீது கூறப்பட்டுள்ள பாலியல் புகார் குறித்து ஏஎஸ்பி தலைமையில் குழு அமைத்து விசாரிக்க தூத்துக்குடி எஸ்பி அஸ்வின் கோட்னீஸ் உத்தரவிட்டுள்ளார். ஏஎஸ்பி தீபாகனிகர் தலைமையிலான போலீசார் இன்று விசாரணையை தொடங்கியுள்ளனர்.
📡நாடு முழுவதும் 15 நாள் சுதந்திர தின விழா: பிரதமர் துவக்கி வைக்கிறார் ம.பி.யில் பிரமாண்ட நிகழ்ச்சி
போபால்: நாட்டின் 70வது சுதந்திர தினத்தையொட்டி 15 நாள் விழா கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய பிரதேசத்தில் சந்திரசேகர் ஆசாத் நினைவிடத்தில் இன்று பிற்பகலில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு 15 நாள் விழாவையும் துவக்கி வைக்கிறார். இந்திய சுதந்திர போராட்டத்தில் முக்கியமான நிகழ்வான வெள்ளையனே வெளியேறு தினத்தின் 75வது ஆண்டு விழா இன்று அனுசரிக்கப்படுகிறது. மேலும், நாட்டின் 70வது சுதந்திர தின விழாவை 15 நாள் விழாவாக கொண்டாட மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
📡நெல்லை மாவட்டம்
அம்பாசமுத்திரம்
அருகே உள்ள
சேரன் மாகதேவியில் நேற்றிரவு கொலை செய்யப்பட்ட பொதுப் பணித்துறை ஊழியர் செல்லையா கொலை வழக்கில் கண்ணன்(17)மற்றும்
மாதேஷ் ஆகிய இருவர் கைது
📡"கடலூரை 2 மாவட்டமாக பிரிக்க வாய்ப்பில்லை"!
கடலூரில் விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படுமா என சட்டசபையில் கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு வாய்ப்பில்லை என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.விருத்தாசலம் இன்னும் தனக்குரிய போதிய கட்டமைப்புகளை பெறவில்லை என தெரிவித்தார்.
📡காஷ்மீர் குறித்து மவுனம் கலைத்தார் மோடி!
காஷ்மீர் மாநிலத்தில் நடந்துள்ள வன்முறைகள் குறித்து பிரதமர் மோடி பேசாமல் இருந்தார்.இந்நிலையில் இன்று அம்மாநிலத்திற்கு மத்திய அரசு உதவும் என அறிவித்துள்ளார்.காஷ்மீர் மக்களுக்கு அமைதி தேவைப்படுகிறது; அதற்கான நடவடிக்கையை எடுப்போம் என அறிவித்துள்ளார்.
📡பாலியல் புகார்...
ஒலிம்பிக் வீரர் ஜோனாஸ் கைது!
நமீபியா நாட்டு வீரர் ஜோனாஸ் ஜினியஸ் மீது பாலியல் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.ஒலிம்பிக் கிராமத்தில் ஒரு துப்புரவு பணிப்பெண்ணிடம் இவர் தவறாக நடக்க முயற்சித்துள்ளார்.ஜோன்சை பிரேசில் போலீசார் கைது செய்தனர்.
📡ரயிலில் கொள்ளையடிக்கப்பட்டவை கிழிந்த ரூபாய் தாள்களே!
சென்னை ரிசர்வ் வங்கிக்கு சேலத்திலிருந்து ரயில் மூலம் பணம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது.ஆனால் அவை கிழிந்த ரூபாய் தாள்கள் என ரிசர்வ் வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது
📡கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை!
சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் 70வது சுதந்திர தின விழா அணி வகுப்பிற்கான ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.ஆகஸ்ட் 15ம் தேதியன்று முதல்வர் ஜெயலலிதா அங்கு தேசியக் கொடி ஏற்ற உள்ளார்.அதை தொடர்ந்து முப்படை அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொள்வார்.
📡விசாரணைக்கு வராத விஜயகாந்துக்கு நீதிபதிகள் கண்டனம்!
விஜயகாந்த் மீது விழுப்புரம் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடரப்பட்டது.இந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தது.ஆனால் விஜயகாந்த் ஆஜராகாததால், நீதிபதி அவருக்கு கண்டனம் தெரிவித்தார்.
📡கொச்சி பஸ்களில் பெண் கண்டக்டர்கள்!
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு தனியார் பேருந்தில் பெண் நடத்துனர் நியமிக்கப்பட்டுள்ளார். 23 வயதான லினி என்ற அந்தப் பெண் நேற்று தன் பணியைத் தொடங்கினார். மேலும் 24 பெண்கள் இன்று பேருந்து நடத்துனராகத் தங்கள் பணியைத் தொடங்குகின்றனர்!
📡துப்பாக்கி சுடுதல்: ஓய்வு பெற்றார் அபினவ்!
ரியோ ஒலிம்பிக்ஸில் தோல்வியடைந்த விரக்தியில் தன் ஓய்வை அறிவித்துள்ளார் அபினவ் பிந்த்ரா. "இனி பொழுதுபோக்கிற்குக் கூட துப்பாக்கியைத் துக்க மாட்டேன்" என்று அவர் கூறியுள்ளார். "என் துப்பாக்கியை விற்கப் போகிறேன். வாங்கிக் கொள்கிறீர்களா?" என்றும் கேட்டுள்ளார் அபினவ்!
📡ரயில் நிலையங்களில் CCTV காமிரா பொருத்தப்படும்!
ரயில் பயணிகள் பாதுகாப்பு குழு உறுப்பினராக உள்ள ஹெச்.ராஜா கூறியதாவது:முக்கிய ரயில் நிலையங்களில் 90 நாட்களில் CCTV கேமிராக்கள் பொருத்தப்படும்.17 பேர் கொண்ட மத்திய குழு இன்று சென்னை வந்துள்ளது.சென்னையில் அனைத்து ரயில் நிலையங்களிலும் கேமிராக்கள் பொறுத்தப்படும்.
📡கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஹுலிமாவு பகுதியில் அத்துமீறி கட்டப்பட்ட கட்டிடங்களை மாநகராட்சி தொழிலாளர்கள் இடித்தனர். பல்வேறு குடியிருப்புகள், கடைகள் அத்துமீறி கட்டப்பட்டுள்ளதாக வந்த புகாரை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
📡சென்னை வானகரம் அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தின் போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் பலி. அரசு பேருந்தில் பயணம் செய்த 30 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்துள்ள அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை கோயம்பேட்டிலிருந்து கள்ளக்குறிச்சி சென்ற அரசு பேருந்து விபத்துக்குள்ளானது.
📡பழனி அருகே நெய்க்காரப்பட்டியில் விற்பனைக்காக வைத்திருந்த 25கிலோ கஞ்சா பறிமுதல்.. கஞ்சா வைத்திருந்த செல்வி, ராஞ்சி , ராமாத்தாள், ராமன் ஜெயா உள்ளிட்ட 5 பேர் கைது ..
📡சேலத்திலிருந்து சென்னைக்கு ரயிலில் வந்த ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான கழிந்த நோட்டுகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ரயிலில் வந்த பணத்தின் மதிப்பு ₹342 கோடி சில பெட்டிகளில் மட்டும் மேற்கூரையை உடைத்து கொள்ளையர்கள் கைவரிசை.
📡அரசியலில் ஈடுபடும் என்னை ஏன் சிலர் தடுக்க முயற்சிக்கின்றனர் என்று தெரியவில்லை மணிப்பூரின் முதலமைச்சராவதே தமது இலக்கு - இரோம் ஷர்மிளா.
📡புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டிணத்தை சேர்ந்த 4 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது.
📡பெங்களூரில் நடைபெற்ற சர்ச் குண்டு சம்பவங்கள் தொடர்பாக முக்கிய குற்றவாளியான அமிர் அலி கைது.
📡மருத்துவம், கல்வி நிதி உதவியாக 12 பேருக்கு தலா ரூ.25,000 திமுக தலைவர் கருணாநிதி வழங்கினார்.
📡அயோத்தியில் சாலையோரம் வசிப்பவர்கள் மீது கனரக வாகனம் மோதி 7 பேர் பலி.
📡கொடுமையான கல்விக் கொள்கையை மத்திய அரசு புகுத்த முயல்கிறது - முக.ஸ்டாலின்.
📡ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றம் - இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டு.
📡பிரபல திரைப்பட தயாரிப்பாளர், கதை வசனகர்த்தா, பாடலாசிரியர் பஞ்சு அருணாச்சலம் சென்னையில் காலமானார்.
📡ராம்குமாரை வீடியோ எடுக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வீடியோ பதிவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ராம்குமார் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
📡ரேணிகுண்டா அருகே செம்மரம் கடத்தியதாக திருவண்ணாமலை செங்கத்தை சேர்ந்த சிறுவன் கைது.
📡ஆஸ்திரேலிய முன்னாள் அதிரடி வீரர் மேத்யூ ஹைடன் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம்.
📡செங்கல்பட்டு - பரனூர் மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் தீ அணைப்பு வீரர் பரூக் அப்துல்லா சம்பவ இடத்திலேயே பலி.
📡தமிழ் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை ஜோதிலெட்சுமி காலமானார்.
📡புதுச்சேரி அருகே வட மாநில இளைஞர் ஒருவர் கல்லால் அடித்து கொலை.
📡கோயில் விவகாரத்தில் நாகை ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு.
📡மதுரை திருப்பரங்குன்றம் தனியார் கல்லூரி மாணவர் ஆனந்த் கிணற்றில் குளித்த போது மூழ்கி உயிரிழந்தார்.
📡சேலம் ஐ.ஓ.பி., வங்கியிலிருந்து , பழைய நோட்டுகளை ஏற்றிக்கொண்டு, ரயில் சென்னை நோக்கி ஆத்தூர், சேலம், விழுப்புரம் வழியாக வந்தது. 228 பணப்பெட்டிகள் கொண்ட அந்த விரைவு ரயிலில் மர்ம நபர்கள் நள்ளிரவில் மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கி சில பெட்டிகளை மட்டும் உடைத்து பல கோடி ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், ரயில் சென்னை வந்த பிறகே தெரியவந்துள்ளது. எழும்பூர் ரயில் நிலையம் வந்த பின்னர் தான், பணப்பெட்டிகள் திறந்து கிடந்தது அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கொள்ளையடிக்கப்பட்ட பணம் எவ்வளவு என்பது கண்டுபிடிக்கப்படவில்லை.
📡தமிழ்நாட்டில் ஓடும் ரயிலில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். சம்பவம் தொடர்பாக ரிசர்வ் வங்கி அதிகாரிகள் போலீசில் புகார் அளித்துள்ளனர். பணம் ரயிலில் கொண்டு வருவதை முன்பே அறிந்த சிலரே பணத்தை கொள்ளையடித்திருக்கலாம் எனக்கூறப்படுகிறது.
📡பாமகவின் அங்கீகாரம் குறித்து தேர்தல் ஆணையம் ...
பா.ம.க.வின் அங்கீகாரத்தை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், இந்தியத் தேர்தல் ஆணையம் பரிசீலித்து முடிவெடுக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
📡தங்கம், வெள்ளி விலைகள்: மாலை நிலவரம்!
22 கேரட் தங்கம் ஒரு கிராம் - ₹2,956.0022 கேரட் தங்கம் ஒரு சவரன் - ₹23,648.0024 கேரட் தங்கம் 10 கிராம் - ₹25,288.00வெள்ளி: ஒரு கிராம் - ₹50.70வெள்ளி கட்டி: ஒரு கிலோ - ₹47,405.00
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக