🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
📡📡📡📡📡📡📡📡
அதிமுகவில் நயன்தாரா: அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்!-நடிகை நயன்தாரா அதிமுக சம்பந்தப்பட்ட விழா ஒன்றில் கலந்து கொண்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இதனால் நயன்தாரா அதிமுகவில் சேர இருப்பதாக பேசிக்கொள்கிறார்கள். சென்னையில் அம்மா ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் என்ற அமைப்பு, அம்மா அவார்ட்ஸ் என்ற விருதை முதல்வர் ஜெயலலிதா பெயரில் வழங்கியது. இந்த விழாவுக்கு வந்து வீரர்களுக்கு விருதை வழங்கியவர் நயன்தாரா.வழியெங்கும் அதிமுக கொடி தோரணங்கள் கட்டப்பட்டு, அதிமுக கொடி பறக்கும் கார்கள் புடை சூழ வந்து இறங்கிய நயன்தாரா அதிமுகவில் இணைவார் பேசிக்கொள்கிறார்கள்.
ரூ.51க்கு 4ஜி டேட்டா: ஏர்டெல் அதிரடி
ஏர்டெல் நிறுவனம் தற்போது ரூ.51க்கு 4ஜி டேட்டா சேவை வழங்க திட்டமிட்டுள்ளது.
நான் நிர்வாணமாக தான் தூங்குவேன்: பிரபல நடிகையின் சூடான பேச்சு-
தான் எப்பொழுதுமே பிறந்தமேனியாக தான் தூங்குவேன் என கூறி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார் பிரபல நடிகை ஒருவர். இவர் சமீபத்தில் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் தன்னுடைய அரைநிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் மனதை படபடக்க வைத்தார். தற்பொழுது சமீபத்தில் பத்திரிகை ஒன்றுக்கு அளித்து பேட்டி ஒன்றில் நான் பெரும்பாலும் நிர்வாணமாக தான் தூங்குவேன் எனவும், அப்படி தூங்குவது தான் உடல் நலத்திற்கு சிறந்தது என விளக்கமளித்துள்ளார்.இந்த பேட்டியை அளித்து நிர்வாணமாக தூங்குவோரின் பட்டியலில் இணைந்து, ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார் ஐ நடிகை.
விஷாலுக்கு இச்சு இச்சு என முத்தம் கொடுத்த வரலட்சுமி!-அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் உட்பட பல நலத்திட்ட உதவிகளை வழங்கி தன்னுடைய 38-வது பிறந்த நாளை நேற்று முன்தினம் சிறப்பாக கொண்டாடினார் நடிகர் விஷால். சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமியை விஷால் திருமணம் செய்து கொள்ள இருப்பது ஊரே அறிந்த கதை. தன்னுடைய காதலரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது கூடவே இருந்தார் வரலட்சுமி.திரையுலகினர், பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தாலும் காதலி வரலட்சுமியின் பிறந்த நாள் வாழ்த்தில் விஷால் ரொம்பவே குஷியாகிவிட்டார்.வரலட்சுமி தனது டுவிட்டர் பக்கத்தில் விஷாலுக்கு வாழ்த்து தெரிவித்தார். அதில், கிரேஸி மற்றும் என் வாழ்வின் காதலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்… உம்மா என்று பதிவிட்டுள்ளார்.டுவிட்டரில் விஷாலுக்கு வரலட்சுமி உம்மா கொடுத்தது, அவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என்பதை உறுதி செய்வதாக கோடம்பாக்க குருவிகள் பேசிக்கொள்கின்றன.
தேர்தல் விதிகளை மீறியதாக ஜெயலலிதாவுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்-தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா, தேர்தலின் போது பல வகையான இலவசங்களை வழங்குவதாக வாக்குறுதிகள் அளித்த நிலையில், அதற்கான நிதி ஆதாரங்களைத் தெரிவிக்காததற்கு தேர்தல் ஆணையம் தற்போது கண்டித்துள்ளது.
பொதுமக்களின் உதவியை எதிர்பார்க்கும் பவர் ஸ்டார்!-'லத்திகா', 'கண்ணா லட்டு தின்ன ஆசையா', 'ஐ' உள்பட பல படங்களில் வித்தியாசமான கோணத்தில் தன் நடிப்புத் திறமையை பவர் ஸ்டார் வெளிப்படுத்தினார். தற்போது, இவர் ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க’ என்ற படத்தில் முதலமைச்சர் வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.இந்நிலையில், சேலத்திற்கு வந்த நடிகர் பவர்ஸ்டார் கூறியதாவது, “நான் விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருக்கிறேன். உங்கள் ஆதரவு எனக்கு வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
உசைன் போல்ட் படுக்கையிலும் வேகமானவர் : போட்டுடைத்த முன்னாள் காதலி
பெண்களின் சம உரிமைக்காக போராட வேண்டும்-ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் ஐநா சபையின் தென்னிந்திய பெண்கள் நல்லெண்ண தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதனை முன்னிட்டு ரஜினிகாந்த் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். "என்னுடைய மகளான ஐஸ்வர்யா எப்போதும் தன்னுடைய சொந்த காலில் நிறுக்கும் அளவுக்கு தன்னம்பிக்கையும் ஆற்றலும் பெற்றவர். அவர் ஐநா உடன் இணைந்து பெண்களுக்கான சம உரிமைக்காக பணியாற்றுவது எங்களுக்கு பெருமைக்குரிய மற்றும் மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும். பெண்களுக்கான சம உரிமைக்காக அவர் செய்துள்ள பணிகளை நான் பாராட்டுகிறேன். அவர் செய்யும் இப்பணிகளுக்கு நான் ஆதரவாக இருப்பேன். ஒரு தந்தையாக உலக நாடுகளுக்கான பெண்கள் அமைப்பின் இந்திய தூதுவராக ஐஸ்வர்யா நியமிக்கப்பட்டுள்ளது எனக்கு சந்தோஷத்தை அளிக்கிறது. அவர் பெருமைக்குரிய இப்பணியில் இருந்து பெண்களுக்கான சம உரிமை மற்றும் முன்னேற்றத்துக்காக பணியாற்றவிருப்பது எனக்கு மகிழ்ச்சியே. சம உரிமை என்பது பெண்களுக்கான ஒரு பிரச்சனை மட்டும் அல்ல, அவர்களின் சம உரிமைக்காக நாம் அனைவரும் போராட வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நிறுத்தப்பட வேண்டும். பெண்களுக்கு வீடுகளிலும், அவர்கள் வேலை செய்யும் இடங்களிலும் சம உரிமை கிடைக்க வேண்டும்."- இவ்வாறு தனது செய்தியில் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் டாப் கான்ட்ரவர்சிகள்
நாட்டாமை தனது மனைவிக்கு அவமரியாதை செய்துவிட்டதாக பொங்கியதைத்தான் இன்றும் நமட்டு சிரிப்புடன் பேசி வருகிறது கோடம்பாக்கம். சொந்தமாக கட்சி வைத்திருக்கும் இவர், ஆளும் கட்சி துரத்தியதால், தேசிய கட்சியுடன் கூட்டணி பேசி, கடைசி நிமிடத்தில் துரத்திவிட்ட கட்சியிடமே அடைக்கலமாகி, ஒரேயொரு எம்எல்ஏ சீட்டுக்காக இன்னொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு... இதற்கு மேல் சொந்தக்கட்சி வைத்திருக்கும் ஒருவர் அவமானப்பட முடியாது. அதிலும், வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் மற்ற வேட்பாளர்களுடன் கூட்டத்தோடு கோவிந்தாவாக நாட்டாமை இருந்த ஸ்டைலை குறிப்பிட்டு, இவ்வளவு அவமானங்களை சகிச்சுகிட்டவர் ஒரு சின்ன பெயர் விஷயத்தில் இப்படி பொங்குறாரே என சிரிக்கின்றனர்.நாட்டாமை... இதற்கு பதிலேதும் இருக்கா
ஒரு பெயர் விஷயம் இவ்வளவு பெரிய பிரச்சனையாச்சுன்னா, ஒரு புகைப்படம் ஒரு காதலையே கவிழ்த்திருக்கு. இசையமைப்பாளராகவும் காமெடியனாகவும் இருக்கும் அந்த குண்டு அமுல்பேபிக்கு இன்டஸ்ட்ரியின் இளம் அழகியான நடிகையுடன் காதல். சிருஷ்டிகளில் அற்புதமான நடிகை அந்த குண்டு தோற்றத்தில் எப்படி கவிழ்ந்தார் என்று இப்போதும் இன்டஸ்ட்ரியில் ஆச்சரியம்தான்.
அந்த மாய வலையிலிருந்து விழித்தெழுந்தவர் இசையமைப்பாளருடனான காதலை கத்தரித்திருக்கிறார். நடிகை மதுவருந்தும் புகைப்படத்தை வெளியிட்டதே அவரது முன்னாள் காதலர்தான் என்றும் கூறுகிறார்கள்.எது எப்படியே... நடிகை காதலை கத்தரித்ததால் பலருக்கும் வயிற்றில் அமிலம் சுரப்பது நின்று பால்வார்க்க ஆரம்பித்துள்ளது.
ஆள் பார்க்க ஒல்லியாக இருந்தாலும் முன்னாள் இயக்குனரும், இந்நாள் காமெடி நடிகருமான அவருக்கு மனோ பலம் அதிகம் என்கிறார்கள். அவரையே சோகத்தில் தள்ளியுள்ளது ஒரு விஷயம்.
இயக்குனர் இயமத்திடம் உதவி இயக்குனராக இருந்த காலத்திலேயே கிழக்கு சீமையிலே நடிகையுடன் நடிகருக்கு நல்ல நட்பு. இந்த நாற்பதாண்டு நட்பு, நடிகர் சங்க விஷயத்தில் இயக்குனர் எதிர்தரப்புக்கு ஆதரவு தெரிவித்ததால் டமாரென்று உடைந்தது. எனினும், தனது மகளின் திருமணத்துக்கு நடிகை அழைப்பு அனுப்புவார் என இயக்குனர் எதிர்பார்த்தார். காத்திருந்ததுதான் மிச்சம். கடைசிவரை வரவில்லையாம் அழைப்பு.
இது கொஞ்சம் சீரியஸான விஷயம். தெலுங்கில் தயாரான பிரமாண்ட சரித்திர படம் இந்தியாவின் பாக்ஸ் ஆபிஸை சிதறிடித்ததே... அதன் இரண்டாம் பாகத்தின் தமிழக உரிமையை பச்சை நிறுவனம் வாங்கியதாக ஒரு செய்தி வெளியாகி, வெளியான வேகத்தில் மறைந்தும் போனது. இப்போது வேறொரு நிறுவனம்தான் படத்தை தமிழில் வெளியிட உள்ளது. முதல்பாகத்தை வெளியிட்ட பச்சை நிறுவனம் மொத்த வசூலில், சுமார் 17 கோடிகள் அளவுக்கு குறைத்து காண்பித்ததாம். அந்த விஷயம் தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் தெரியவர, கடுப்பாகியிருக்கிறார்கள் இருவரும். இனிமேல் எந்தப் படத்தையும் பச்சை நிறுவனத்துக்கு தருவதில்லை என்று முடிவு செய்திருக்கிறார்களாம். சரித்திர படத்தின் இரண்டாம் பாகத்தை அவர்களுக்கு தராததன் பின்னணி இதுதான் என்கிறார்கள்.
சுவாதி கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று ராம்குமாரின் தாயார் புஷ்பம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
சர்க்கரை அளவை குறைக்க சாலமன் பாப்பையா கூறும் வழிமுறை தெரியுமா?
சர்க்கரை அளவை எவ்வாறு குறைப்பது என்று பட்டிமன்ற பேச்சாளர் தனது முகநூல் பக்கத்தில் நகைச்சுவையாக பதிவொன்றினை இட்டுள்ளார். அதில் இடம்பெற்றுள்ள செய்தி பின்வருமாறு:
அன்பார்ந்த சர்க்கரை நோயாளிகளே...
தினமும் காலையில் வெறும்
வயிற்றில் ஏழு எறும்புகளை
உயிருடன் பிடித்து பல்லு படாமல்
விழுங்கி வந்தால் உடலில் சர்க்கரை
அளவு குறையும்..
நான் கூறுவதில் உங்களுக்கு
சந்தேகம் இருந்தால் உங்க வீட்டுல
இருக்குற சர்க்கரைய கீழக்கொட்டி
அதுமேல எறும்புகள
மேயவிடுங்க சர்க்கரை
குறையலைனா என்கிட்ட வந்து
கேளுங்க..
நாளைக்கு கொழுப்ப
குறைக்குறது எப்படினு
சொல்லிதரேன்...
WWW.sivakasiteacherkaruppasamy.com
♈🇮🇳🌴🌴🌴🌴🌴🇮🇳♈
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக