🌍📡காலை செய்திகள் 📡🌍
🌍📡12\08\16📡🌍
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
🌍அரக்கோணத்தில் 25 நாளில் அடுத்தடுத்து கொலை தாயை கொன்றது போல மகளும் கழுத்தறுத்து கொல்லப்பட்டார்
🌍ரூ.3 லட்சம் கேட்டேன். அதற்கு அவர் ரூ.50 ஆயிரம் குறைத்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வாங்கிக் கொள்ள சொன்னார். அட்வான்சாக ரூ.20 ஆயிரம் தந்தார். மீதி பணத்தை வேலை முடிந்த பின் தருவதாக கூறினார். மண்டப வேலையை 3 மாதத்தில் முடித்து தர கூறினார். நானும் 3 மாதத்தில் மண்டப பணிகளை முடித்து கொடுத்து விட்டேன். தியாகராஜன் பேசியபடி என் ஆட்டோ வாடகை தரவில்லை.
கடந்த பிப்ரவரி மாதம் தூத்துக்குடி மடத்தூர் ரோட்டில் உள்ள சசிகலா புஷ்பா எம்பி வீட்டுக்கு சென்று சம்பள பாக்கியை கேட்டேன். அப்போது அவர், அடுத்த வாரம் ஊருக்கு வருவேன். அங்கு வந்து மீதி பணத்தை வாங்கி கொள்ளுமாறு கூறினார். அவர் கூறியதுபோல அடுத்த ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு அடையல் முதலூரில் உள்ள சசிகலா புஷ்பா பண்ணை வீட்டுக்கு நான் சென்றேன். அங்கு இருந்த சசிகலா புஷ்பாவிடம் சம்பள பணம் கேட்டேன். ஆட்டோ வாடகை பாக்கியையும் வாங்கி தருமாறு கேட்டேன்.
அப்போது சசிகலா புஷ்பா டென்சனாகி இந்த இடத்தை விட்டு போயிருங்க, உனக்கு இனி எந்த சம்பள பாக்கியும் தர முடியாது என்று கூறி சாதி பெயரை சொல்லி திட்டினார். எனவே எனக்கு தர வேண்டிய சம்பள பாக்கி ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தை தராமலும், மினிடெம்போவை அபகரித்து சாதியை சொல்லி திட்டி மிரட்டிய அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறியுள்ளார்.
🌍திருச்சியில் போலி ஓட்டுநர் உரிமம் தயாரித்து விற்ற 4 பேர் கைது
திருச்சியில் போலி ஓட்டுநர் உரிமம் தயாரித்து வழங்கிய 4 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
இவர்கள் 200-க்கும் மேற்பட்டோருக்கு போலி ஓட்டுநர் உரிமம், போலி வாகன காப்பீடு உள்ளிட்டவற்றை விற்பனை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
🌍குட்டியானை உயிரிழப்பு: ஒருவர் கைது
கோவை: கோவை மாங்கரையில் காட்டுப்பன்றிக்கு வெடிவைத்து குட்டியானை இறந்த விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த முருகன் கைது செய்யப்பட்டுள்ளார், மேலும் ரங்கராஜ், ராஜேந்திரன் ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர். காட்டுப்பன்றிக்கு வைத்த வெடியில் சிக்கி காயம் அடைந்த குட்டியானை கடந்த 29ம் தேதி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
🌍பாசனத்திற்காக பவானிசாகர் அணை திறப்பு
ஈரோடு : முதல் போக பாசனத்திற்காக பவானிசாகர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று உத்தரவிட்டார். இதனையடுத்து இன்று அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.அரக்கன்கோட்டை, தடப்பள்ளி, காளிங்கராயன் வாய்க்கால்கள் மூலம் முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கொடிவேரி அணை வழியாக செல்லும் தண்ணீரால் 40,247 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற உள்ளன.
🌍சென்னை - காதல் ஜோடி தற்கொலை
சென்னை - காதல் ஜோடி தற்கொலை
சென்னை அருகே எருமையூர் வெளிவட்ட சாலை அருகே காதல் ஜோடிகளான சசிகுமார், சந்தியா ஆகியோர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். எச்சூரை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. சம்பவம் குறித்து அறிந்த போலீசார், இருவரின் உடல்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
🌍தாய்லாந்தில் மேலும் இரட்டை குண்டுவெடிப்பு: ஒருவர் பலி
தாய்லாந்து: தாய்லாந்து நாட்டில் மற்றொரு நகரத்தில் நடந்த மேலும் இரட்டை குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றும் 4 பேர் படுகாயமடைந்தனர். ஹாவ் ஹின் என்ற பகுதியில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 21 பேர் படுகாயமடைந்தனர்.
🌍ஐஎஸ் உருவாக ஒபாமாவே காரணம் : டிரம்ப் பேச்சால் பரபரப்பு
சன்ரைஸ் : குடியரசுக் கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப், தற்போதைய அதிபர் ஒபாமாவை ஐ.எஸ். பயங்கரவாதத்துடன் ஒப்பிட்டு கடுமையாக சாடியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
🌍சாட்டார்புரில் கனமழை: ஆபத்தான நிலையில் தண்ணீரை கடக்கும் மாணவர்கள்
சாட்டார்புர்: மத்திய பிரதேச மாநிலம், சாட்டார்புர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து அன்ரில் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் பள்ளி மாணவர்கள் ஆபத்தான நிலையில் தண்ணீரை கடந்து சிரமத்துடன் பள்ளிக்கு செல்கின்றனர்.
🌍தலித்துகளுக்கு எதிரான தாக்குதல் விவகாரத்தில் குற்றம் இழைப்போர் மீது மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்--மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
🌍ஒலிம்பிக் கலப்பு இரட்டையர் டென்னிஸ்; சானியா ஜோடி கால் இறுதிக்கு தகுதி
🌍சாதி பெயரை சொல்லி கொலை மிரட்டல் --சசிகலா புஷ்பா மீது மேலும் ஒரு பரபரப்பு புகார
🌍ஆன்ட்ரிக்ஸ்-தேவாஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில் இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் மீது சிபிஐ நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
🌍இந்தியா - இலங்கை இடையே, பாலம் கட்ட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவது, ஆதாரமற்ற தகவல்-- இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன
🌍சவுதி அரேபியாவில் வேலை இழந்து தவித்து வந்த இந்தியர்களில் ஒரு பகுதியினர் ஜெடாவில் இருந்து டெல்லி வந்தடைந்தனர்.
🌍மேற்கு தில்லியில் சுபாஷ் நகர் பகுதியில் சாலை விபத்தில் பலத்த காயமடைந்து வலியால் சுமார் ஒரு மணி நேரம் துடித்துக் கொண்டு உயிருக்குப் போராடிய காவலாளியைக் காப்பாற்ற யாரும் முன் வரவில்லை. இதனால், அவர் உயிரிழந்தார். மனித நேயமற்ற இச்சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது.
🌍லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்புடன் இணைந்து பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதாகக் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த சைஃபுல்லா என்கிற பகதூர் அலியை, வரும் 17-ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிப்பதற்கு தேசியப் புலனாய்வு அமைப்புக்கு (என்ஐஏ) சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
🌍உத்தரப் பிரதேச மாநில மூத்த பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களில் ஒருவரான பிரிஜ்பால் திவோடியா மீது நேற்று இரவு மர்மநபர்கள் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் படுகாயமடைந்த அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
🌍ஒசூர் தலைமைக் காவலர் முனுசாமியை கொலை செய்த வழக்கில் கைதான 2 பேரை, குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
🌍தமிழகத்தில் இயங்கும் எந்தத் தொழிற்சாலையும் தனியாருக்கு தாரைவார்க்கப்பட மாட்டாது --தொழில்துறை
அமைச்சர் எம்.சி.சம்பத்
🌍ஆகஸ்ட் 22-ஆம் தேதி முதல் அரசு நிர்ணயித்த கட்டணத்தில் டாக்ஸிகள் இயங்க வேண்டும் என தில்லி உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
🌍திருப்பூர் மாவட்டம் மூலனூரில் உடுமலை போலீஸ்காரர் தற்கொலை
🌍நாட்டின் மிகப்பெரிய துறைமுகங்கள் தனியார் மயமாகாது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
🌍பிரதமர் மோடி குறித்து, நான் ஏதாவது பேசினால், அதை பிரச்னையாக்கி விடுவர்-- ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன்
🌍இன்று வரலட்சுமி நோன்பு, ஆடிவெள்ளி, ஆடி 28 என ஒரே நாளில் கொண்டாடப்படுகிறது.
🌍வரும் 13,14, 15-08-2016 வங்கிகள் விடுமுறை. இரண்டாவது சனிக்கிழமை மற்றும் ஞாயிறுக்கிழமை மற்றும் திங்கள் கிழமை ( சுதந்திர தினம் ) வங்கிகள் மற்றும் அரசு அலுவலகம் இருக்காது.
🌍சேலம் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரிசர்வ் வங்கி பணம் ரூ.5.74 கோடி கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தை காங்கிரஸ் எம்பி பிரமோத் திவாரி நேற்று மாநிலங்களவையில் எழுப்பினார்.
🌍தமிழகத்தில் நடக்கும் கும்பகோணம் மகாமகம்போல் ஆந்திராவில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் கிருஷ்ண புஷ்கராலு இன்று கோலாகலமாக தொடங்குகிறது. இதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
🌍தலித்துகளுக்கு எதிரான தாக்குதல் விவகாரத்தில் குற்றம் இழைப்போர் மீது மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மக்களவையில் வலியுறுத்தினார்.
🌍ரிசர்வ் வங்கிப் பணம் ரயிலில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேரவையில் நேற்று கேள்வி எழுப்பினார்.
🌍திருப்பதி ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து வரும் அக்டோபர் மாதம் முதல் சர்வதேச விமானங்கள் இயக்கப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
🌍ஈஷா யோகா மையம் விவகாரம் : விசாரணை அறிக்கை ஐகோர்ட்டுக்கு அனுப்பப்பட்டது
🌍மேட்டூர் அரசு மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சையின்போது பார்வையிழந்தவர்களுக்கு அரசு வழங்கிய ரூ.3 லட்சம் நிதியுதவியை சேலம் கலெக்டரிடம் திரும்ப ஒப்படைக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
🌍திருப்பூரில், கன்டெய்னர் லாரிகளில், 570 கோடி ரூபாய் பிடிபட்டது தொடர்பாக, சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று, திருப்பூரில் விசாரணையை துவக்கினர்.
🌍கடலூர் மாவட்டம், மந்தாரக்குப்பத்தில் நகைக் கடையின் அருகே குழி தோண்டி, கடைக்குள் புகுந்து 1.5 கிலோ தங்கம், 25 கிலோ வெள்ளிப் பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டது.
🌍சென்னை வந்த ரயிலில் ரூ.5.75 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் சிபிசிஐடி விசாரணை நேற்று தொடங்கியது. ரயில்வே ஊழியர்கள் மற்றும் வங்கி அதிகாரிகள் 30 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
🌍ரயிலில் வங்கிப் பணம் ரூ. 5.75 கோடி கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தனிப்படை போலீஸார் 60 பேர் விருத்தாசலத்தில் நேற்று விசாரணை நடத்தினர்.
🌍கன்னியாகுமரி காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டரிடம் தகராறு செய்த வழக்கறிஞர் கைது செய்து சிறையிலடைப்பு
🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக