மாலை செய்திகள் 12/08/2016 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

மாலை செய்திகள் 12/08/2016

📻📡மாலை செய்திகள் 📡📻

            📻📡12\ 08\16📡📻

📻📡📻📡📻📡📻📡📻📡📻📡

http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
📻📻📻📻📻📻📻📻📻📻📻📻

📻ஆடி கார் ஐஸ்வர்யாவுக்கு ஜாமீன் வழங்கி தீர்ப்பு!

சென்னை: மது போதையில் காரை ஓட்டி தொழிலாளியின் இறப்புக்கு காரணமான தொழிலதிபர் மகள் ஐஸ்வர்யாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.


📻ஆரணி அருகே செண்பகத்தோப்பு அணையின் மதகுகள் பழுதாகி அணையில் தண்ணீர் தேக்க முடியாத நிலை இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். செண்பகத்தோப்பு அணையின் மதகுகள் மற்றும் அதனை இயக்கும் மோட்டார்களும் துருபிடித்த நிலையில் உள்ளதால் காட்டாற்று வெள்ளம் மதகுகளை நிரப்பி செல்லும் போது மதகுகளின் கீழ் உள்ள கான்கிரீட் தளம் பெயர்ந்து கொண்டு செல்வதால் அணையின் அடிபாகம் வலுவிழந்து வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். 

📻மாயமான விமானத்தில் இருந்தவர்கள் பிழைக்க வாய்ப்பில்லை: மத்திய அரசு தகவல்

புதுடில்லி: மாயமான இந்திய விமானப்படை ஏ.என்.32 ரக விமானத்தில் இருந்தவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என லோக்சபாவில் மத்திய அரசு கூறியுள்ளது.


📻பியூஷ் மானுஷிடம் சிறைத்துறை அதிகாரி 2 மணி நேரம் விசாரணை

வேலூர்: சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷிடம் வேலூரில் சிறைத்துறை அதிகாரி ஹனிபா விசாரணை நடத்தினார். சேலம் சிறையில் தாக்கப்பட்டது குறித்து பியூஷிடம் 2 மணி நேரம் ஹனிபா விசாரணை நடத்தினார். விசாரணையின் பொது வேலூர் சிறை கண்காணிப்பாளர் சண்முகசுந்தரமும் உடன் இருந்தார்.


📻ஊராட்சித் தலைவர் தேர்தலில் வெற்றி பெற திருடினோம்: ரூ.33 லட்சம் திருடிய கும்பல் தகவல்

ஊராட்சித் தலைவர் தேர்தலில் வெற்றி பெற திருடினோம்: ரூ.33 லட்சம் திருடிய கும்பல் தகவல்

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே சித்தாலிக்குப்பத்தில் வசிப்பவர் வெங்கடாசலம் (வயது 75). என்.எல்.சி. நிறுவனத்தில் ஓய்வு பெற்ற இவர் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். கடந்த 6ஆம் தேதி இவரது வீட்டில் ஒரு கும்பல் புகுந்து வீட்டில் இருந்து 33 லட்சம் ரொக்கம், இரண்டு லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றது.

மாவட்ட எஸ்.பி. விஜயகுமார் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் தவமணி, சரவணன், புகழேந்தி, கண்ணன், நடராஜன் உள்பட 5 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஆளுர் அகரத்தைச் சேர்ந்த மாயவேல் என்பவர் கைது செய்யப்பட்டார்.


📻திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு

திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு

சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் 2 அறிக்கைகளை வாசித்தார்.

பாலங்கள் கட்டுவது குறித்தும், ஏரிகளை புனரமைப்பது குறித்தும் அவர் விரிவாக பேசினார். புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். துரைமுருகன் 110 விதியின் கீழ் பேசுவது பற்றி விளக்கம் கேட்க முயன்றார். அதை சபாநாயகர் அனுமதிக்கவில்லை. இதனால் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஜெ.அன்பழகன், ரங்கநாதன் உள்பட பல எம்.எல்.ஏ.க்கள் இருக்கையை விட்டு எழுந்து சபாநாயகர் அருகில் வந்து வாக்குவாதம் செய்தனர்.

இதனால் ஜெ.அன்பழகனை சபாநாயகர் எச்சரித்தார்

உங்கள் இடத்துக்கு செல்லுங்கள். சபைக்கு குந்தகம் விளைவித்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியதிருக்கும் என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

📻உத்திரபிரதேசத்தில் பெண்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் போலீசாருடன் தள்ளு முள்ளு ஏற்பட்டது. தலைநகர் லக்னோவில் பாஜகவின் இளைஞர் பிரிவான அகில பாரதிய வித்தியார்த்தி பரிசத் நடத்திய போராட்டத்தில் ஏராளமான பெண்கள் திரண்டிருந்தனர். சமாஜ்வாதி அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பிய அவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். 


📻காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்கள் பாஜவுக்கு தாவினர்: உத்தரபிரதேசத்தில் பரபரப்பு


📻நீதிபதிகளை நியமிப்பதில் ஏற்படும் தாமதத்தால் நீதித்துறை முடங்கியுள்ளது - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்


📻6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு: வெளிநாடு சென்றுவிட்டார் சசிகலா புஷ்பா?

6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு: வெளிநாடு சென்றுவிட்டார் சசிகலா புஷ்பா?

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா மீது பல்வேறு புகார்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. அவரது வீட்டில் பணிபுரிந்த இளம்பெண்கள் இருவர், சசிகலா தங்களை கொடுமைப்படுத்தியதாகவும், அவரது மகன் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறியுள்ளனர். இதையடுத்து சசிகலா மற்றும் அவரது கணவர் மற்றும் மகன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புகார் குறித்து விசாரணையும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் டெல்லியில் தங்கியிருந்த சசிகலா புஷ்பா வெளிநாடு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.


📻இரட்டிப்பு மகிழ்ச்சி...- முதல்வருக்கு நடிகர் சங்கம் நன்றி

சென்னை: பிரமாண்ட விழாவில் திரைப்பட விருதுகள் வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருவதாக நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அச் சங்கம் விடுத்துள்ள அறிக்கை:

தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் கலைஞர்கள் அனைவரின் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழக வரலாற்றில் பாரம்பரியமிக்க சட்டசபையில் தமிழ்நாடு முதலமைச்சர் 'டாக்டர் அம்மா' அவர்கள் இன்று கலைத்துறையைச் சார்ந்த கலைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டாக மிகப் பெரிய விழா எடுத்து விருதுகள் வழங்கப்படும் என்று அறிவித்தது ஒட்டு மொத்த திரையுலகத்தினருக்கு மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது.


📻சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி மெட்ரோ நிலையங்களில் வாகனங்கள் நிறுத்த தடை

டெல்லி: சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் 14ம் தேதி காலை 6 மணி முதல் 15ம் தேதி மதியம் 2 மணி வரை வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 


📻தாய்லாந்தில் ஹாவ் ஹின் என்ற பகுதியில் உள்ள ஒரு பீச் ஹோட்டலில் இரட்டை குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றும் வெளிநாட்டு பயணிகள் உட்பட 10 பேர் படுகாயமடைந்தனர்.

📻கிருஷ்ணகிரி - ஊத்தங்கரை அடுத்த சந்த கொட்டாவூர் பகுதியில் பள்ளபட்டியில் இருந்துவேலூர் நோக்கி செல்லும் அரசு பேருந்து பழுதாகி நின்றிருந்த போது  பின்னால் வந்த லாரி மோதியதில் அரவ குறிச்சியை சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் ஐயப்பன் என்பவர் பலி . நான்கு பேருக்கு காயம் . மருத்துவமனையில் அனுமதி


📻கோவை மாங்கரையில் காட்டுப்பன்றிக்கு வெடிவைத்து குட்டியானை இறந்த விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த முருகன் கைது செய்யப்பட்டுள்ளார், மேலும் ரங்கராஜ், ராஜேந்திரன் ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர். காட்டுப்பன்றிக்கு வைத்த வெடியில் சிக்கி காயம் அடைந்த குட்டியானை கடந்த 29ம் தேதி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

📻மேற்கு வங்காளத்தில் உள்ள ஜல்பாய்குரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 150 க்கும் மேற்பட்ட குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஜல்பாய்குரி மாவட்டத்தில் உள்ள பல பள்ளிகளில் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கம் மாத்திரைகள் வழங்கப்பட்டது. இந்த மாத்திரைகளை சாப்பிட்ட பின்பு பள்ளி குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 



📻தமிழ்கத்தில் நடைபெற்று வரும் சாலை விபத்துகளுக்கு மதுவே காரணம் என தமிழிசை சவுந்தரராஜன் குற்ற்ம் சாட்டியுள்ளார்

📻நெல்லை மாவட்டம் வடகரை ரகுமானியாபுரம்- அடவிநயினார் நீர்த்தேக்கம் செல்லும் சாலையில் காரும் இரு சக்கர வாகனமும் மோதிய விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த வடகரையை சேர்ந்த மிதார் மைதீன் (55) என்பவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழப்பு அச்சன் புதூர் போலீசார் விசாரைண

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here