இரவு செய்திகள் 16/08/2016 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

இரவு செய்திகள் 16/08/2016

💥📡இரவு செய்திகள் 📡💥

              💥📡16\08\16📡💥

💥📡💥📡💥📡💥📡💥📡💥

📡📡📡📡📡📡📡📡📡📡

📡திருப்பத்தூரில் பரவும் மர்ம காய்சல்: பள்ளி மாணவன் பரிதாப பலி

வாணியம்பாடி: திருப்பத்தூர் அருகே மர்ம காய்ச்சல் ஏற்பட்டு மாணவன் இறந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

📡2017-ம் ஆண்டு பொங்கல் விழாவை ஜல்லிக்கட்டோடு கொண்டாடுவோம்: பொன்.ராதாகிருஷ்ணன்

எத்தகைய இடையூறு வந்தாலும் அதனை சமாளித்து வரும் ஆண்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முழுமுயற்சி எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

📡ஓட்டல் உரிமையாளர் மாமூல் தராததால் சிலிண்டரை தூக்கி சென்ற இன்ஸ்பெக்டர் டிரான்ஸ்பர்

📡நெல்லை மாவட்டத்தில் பரபரப்பு: ஜூவல்லரியில் ரூ.2.50 கோடி கொள்ளை; கடை ஊழியர் உள்பட 4 பேர் கைது

அம்பை: அம்பை நகைக்கடையில் 2 வாரங்களாக திட்டம் தீட்டி ரூ.2.5 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்த ஊழியர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். நகை, கார், பைக்கை பறிமுதல் செய்த போலீசார் தலைமறைவாக உள்ள டிரைவரை தேடி வருகின்றனர். 


📡புனே: 6 பேர் கொலை! பிணம் தோட்டத்தில் புதைப்பு!! டாக்டர் கைது!!!

புனே:

மகாராஷ்டிராவில் 6 பேரை கொலை செய்து பண்ணை வீட்டில் புதைத்ததாக டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் சட்டாரா பகுதியை சேர்ந்தவர் 45 வயதான சந்தோஷ் பால். டாக்டரான இவர் 5 பெண்கள் உள்பட 6 பேரை ஊசியில் வீரியம் மிக்க மருந்தை செலுத்தி கொலை செய்து தனது பண்ணை வீட்டில் புதைத்துள்ளது தெரியவந்துள்ளது.

📡ஈஷா யோகா மையத்தில் இருந்து மகனை மீட்டுத் தரக் கோரி தந்தை முதல்வர் தனிப்பிரிவில் மனு

கோவை ஈஷா யோகா மையத்தில் இருந்து தனது மகன் ரமேஷ் என்கிற பாலகுருவை மீட்டுத் தருமாறு தூத்துக்குடியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் முதல் அமைச்சர் தனிப்பிரிவில் மனு அளித்துள்ளார். தனது மகனை மூளைச் சலவை செய்து ஆசிரமத்தில் வைத்துள்ளதாகவும், ஊக்க மருந்துகள் கொடுக்கப்பட்டு மகன் கோமா நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் மாரியப்பன் குற்றம் சாட்டியுள்ளார்.


📡அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் அரைநிர்வாண போராட்டம்!

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுரை மாநகராட்சி 25-வது வார்டு பகுதி கண்ணனேந்தல் பகுதி பொதுமக்கள் தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி தங்கள் சட்டைகளை கழற்றி அரைநிர்வாண போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தங்கள் பகுதியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருப்பதாகவும் இதுவரை கழிப்பறை வசதிகள் தங்கள் பகுதியில் செய்து தரவில்லை என்றும் கடந்த 2013-ம் ஆண்டு கிழக்கு சட்டமன்ற தொகுதி நிதியில் இருந்து அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் தமிழரசன் பெண்களுக்கு குளியலறை மற்றும் கழிப்பறை கட்டி கொடுத்ததாகவும், அதுவும் இது வரை திறக்கப்படவில்லை என்று தெரிவித்தனர்.


📡போன வாரம் அம்மாவுக்கு இறுதிச் சடங்கு... இந்த வாரம் அரசு விருது!' - ஜெயந்தியின் உருக்கம்

சென்னையில் நேற்று நடந்த சுதந்திரத் தின விழாவின் போது, முதலமைச்சர் ஜெயலலிதா 'மயான புத்ரி ' என்றே அழைக்கப்படும் நாமக்கல்லைச் சேர்ந்த ஜெயந்திக்கு கல்பனா சாவ்லா விருதை வழங்கி கவுரவித்தார். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் உள்ள மின் மயானத்தில் சடலங்களை எரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார் இந்த ஜெயந்தி.


📡ஜல்லிக்கட்டை அனைத்து தமிழர்களும் விரும்புவதில்லை: மேனகா
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

சென்னை: ஜல்லிக்கட்டை அனைத்து தமிழர்களும் விரும்புவதில்லை என மத்திய அமைச்சர் மேனகா கூறியுள்ளார்.சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு காரணமாக தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இந்நிலையில் நேற்று சென்னை வந்த மேனகா, ஜல்லிக்கட்டை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் எனவும், ஜல்லிக்கட்டு ஆபத்தானது எனவும் கூறியிருந்தார். இதனை ஏற்க மற்றொரு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மறுத்தார். இந்நிலையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் மத்திய அமைச்சர் மேனகா கூறுகையில், ஜல்லிக்கட்டை அனைவரும் விரும்பவில்லை. சிலர் மட்டும் தான் விரும்புகின்றனர். ஜல்லிக்கட்டை வேண்டாம் என்று நானோ, பா.ஜ.,வோ கூறவில்லை.

சுப்ரீம் கோர்ட் தான் தடை செய்துள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவை அனைவரும் மதிக்க வேண்டும் எனக்கூறினார். இதனிடையே, ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் மேனகாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் சிலர் கறுப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


📡வழக்கில் சிக்கியதால் மன உளைச்சல்; தமிழக வங்கி அதிகாரி தெலங்கானாவில் தற்கொலை: ரயில் முன் பாய்ந்தார்

வாரங்கல் :தெலங்கானாவில் வசித்து வந்த மதுரையை சேர்ந்த வங்கி அதிகாரி, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தமிழகத்தில் உள்ள மதுரையைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (58). இவர், தெலங்கானாவில் உள்ள வாராங்கலில் ஆந்திரா வங்கியில் கூடுதல் பொது மேலாளராக பணியாற்றி வந்தார். ஹனம்கொண்டாவில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை சாலையில் உள்ள அபார்ட்மென்டில் குடியிருந்து வந்தார். நேற்று காலை காசியாபேட்டை மற்றும் வாரங்கல் இடையிலான தண்டவாளத்தில் அவர் பிணமாக கிடப்பது தெரிய வந்தது. போலீசார் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர்.


📡ஒரு மணி நேரம் பேசும் தி.மு.க.,வினர்: ஓ.பி.எஸ்., குற்றச்சாட்டு

சென்னை: தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் இன்று அமளியில் ஈடுபட்டனர். அவர்களை கண்டித்த சபாநாயகர், சபையை நடத்த விடாமல் அமளியில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. மக்களின் வரிப்பணத்தை தி.மு.க.,வினர் வீணடிக்கின்றனர் எனக்கூறினார்.இதன் பின்னர் நிதியமைச்சர் பன்னீர்செல்வம் பேசுகையில், சபையை நடத்தவிடாமல் அமளியில் ஈடுபடுவது கண்டிக்கதக்கது. மக்களின் வரிப்பணத்தை தி.மு.க.,வினர் வீணடிக்கின்றனர் .வேண்டுமென்றே அவை நேரத்திற்கு வீணடித்து வெளிநடப்பு செய்கின்றனர். திமுக உறுப்பினர்கள் ஒரு மணி நேரம் பேசுகின்றனர். 25 நமிமடங்கள் பேசும் வகையில் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும். வேண்டுமென்றே பதிலுரையை புறக்கணிக்க அமளியில் ஈடுபடுகின்றனர்.


📡அனைத்து பள்ளிகளிலும் இ-வகுப்பறைகள் ஆந்திர முதல்வர் பேச்சு

திருமலை: இந்தியாவின் 70வது சுதந்திர தின விழா நேற்று ஆந்திர மாநிலம் அனந்தபூரில் நடந்தது. இதில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தேசியக்கொடியை ஏற்றி வைத்து பேசியதாவது: ஆந்திர மாநிலத்தில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். உலக அரங்கில் கல்வியில் இந்தியா முதலிடம் வகிக்க ஆந்திர மாநிலம் முக்கிய காரணியாக விளங்கும். அவ்வாறு ஆந்திராவை கல்வியில் முதன்மை மாநிலமாக கொண்டு வருவதே எனது லட்சியம். அதன்படி அனந்தபூரில் சென்ட்ரல் பல்கலைக்கழகமும், விஜயநகரத்தில் டிரைபல் பல்கலைக்கழகமும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், மெரைன் பல்கலைக்கழகம் மற்றும் மருத்துவம், விளையாட்டு, லாஜிஸ்டிக்ஸ் போன்ற துறைகளுக்கு தனித்தனி பல்கலைக்கழகங்களும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.


📡சட்டசபையில் கையெழுத்து போட்டு திரும்பினார் கருணாநிதி

சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதி இன்று சட்டசபைக்கு வருகை தந்தார். அவரை தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வரவேற்றனர். பின்னர் சட்டசபைவளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பதிவேட்டில் கையெழுத்து போட்டு திரும்பினார்.


📡நீட் தேர்வு எழுதிய 11 லட்சம் பேரில் 4 லட்சம் பேர் தேர்ச்சி

டெல்லி: நீட் தேர்வு எழுதிய 11 லட்சம் பேரில் 4,09,477 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற 4,09,477 பேரில் 19,325 பேர் அதிக மதிப்பெண்கள் பெற்று முன்னிலையில் உள்ளனர். 720க்கு 685 மதிப்பெண்கள் பெற்று குஜராத் மாணவர் ஹெட் ஷா முதலிடம் பிடித்தார்


📡பொன்.ராதாகிருஷ்ணனின் விமர்சனத்திற்கு காங்கிரஸ் கண்டனம்!

பொன்.ராதாகிருஷ்ணனின் விமர்சனத்திற்கு காங்கிரஸ் கண்டனம்!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர்கள் கே.சிரஞ்சீவி, கே.தணிகாசலம், டி.செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக காங்கிரசையும், சத்தியமூர்த்தி பவனை பற்றியும் தேலையில்லாமல் விமர்சனம் செய்திருப்பதை வண்மையாக கண்டிக்கிறோம்


📡ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரைமணிநேரமாக பலத்த மழை பெய்து வருகிறது. திடீரென பெய்த மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


📡பி.எஸ்.என்.எஸ். அகண்ட அலைவரிசையின் வேகம் அதிகரிப்பு

அகண்ட அலைவரிசை வாடிக்கையாளர்களைக் கவர பி.எஸ்.என்.எல். புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.


📡தமிழக ஆளுநராக கர்நாடக மாநிலத்தவரை நியமிக்க ஜெயலலிதா எதிர்ப்பு?

தமிழக ஆளுநராக கர்நாடக மாநிலத்தவரை நியமிக்க ஜெயலலிதா எதிர்ப்பு?

தமிழக ஆளுநராக உள்ள ரோசய்யாவின் பதவிக் காலம் ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே புதிய ஆளுநரை நியமிக்க மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் கர்நாடகாவில் சட்ட மேலவை உறுப்பினராக நீண்ட காலம் பதவி வகித்த சங்கரமூர்த்தியை ஏதேனும் ஒரு மாநிலத்தில் ஆளுநராக நியமிக்கலாம் என்று அம்மாநில முன்னாள் முதல் அமைச்சர் எடியூரப்பா பரிந்துரை செய்துள்ளார். எனவே தமிழக ஆளுநராக சங்கரமூர்த்தி நியமிக்கப்படலாம் என்று கருதப்பட்டது.

ஆனால் சங்கரமூர்த்தியை நியமிக்க வேண்டாம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.



📡கரூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை

கரூர்: கரூரில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கரூர் செட்டிநாடு பொறியியல் கல்லூரியில் படித்து வந்த சிவகங்கை மாவட்டம் சூடாமணிபுரத்தைச் சேர்ந்த ப்ரீத்தி ரோஜா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

📡மேட்டூர் அணை திறக்க வாய்ப்பு இல்லை? 2 லட்சம் விவசாய தொழிலாளர்கள் பாதிப்பு

திருச்சி: கர்நாடகா உரிய தண்ணீரை தராததால், சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணை திறப்பதற்கான வாய்ப்பு குறைந்து உள்ளது. எனவே டெல்டா மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சம் விவசாய தொழிலாளர்கள் வேலை இன்றி பாதிக்கப்பட்டு உள்ளனர். 



📡தடையில்லாமல் தண்ணீர் ஓடும் வகையில் தூர்வாராமல் கங்கையை சுத்தப்படுத்த முடியாது: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கருத்து



📡ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய நர்சிங் யாதவ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதில் சிக்கல்

டெல்லி: ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய நர்சிங் யாதவ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு முகமை மேல்முறையீடு செய்துள்ளது. எனவே நர்சிங் யாதவ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 



📡கல்விக்கடன் திருப்பி செலுத்த கேட்டு வீட்டுக்கே வந்து மிரட்டும் வங்கிகள்: மாணவர்கள் கண்ணீர்

புதுக்கோட்டை: வேலைவாய்ப்பு குறைந்ததால், கல்விக்கடன் வாங்கிய பெரும்பாலான மாணவர்கள் கல்விக்கடனைத் திருப்பி செலுத்த முடியாத நிலை உள்ளது. இந்நிலையில், கல்வி கடன் கட்ட வேண்டும் என்று மாணவர்களது வீட்டிற்கு சென்று மிரட்டுவது, நோட்டீஸ் அனுப்புவது உள்ளிட்ட மிரட்டும் நடவடிக்கையில் வங்கிகள் ஈடுபட்டு வருவதாக மாணவர்கள், பெற்றோர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.


📡நீடூளி வாழ்க': கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து

புதுடில்லி: டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் மூலமாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.கெஜ்ரிவால் தனது 48 வது பிறந்தநாளை இன்று கொண்டாடினார். இதையடுத்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் " சிறந்த ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வாழ்த்துக்கள்" என கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து செய்தி பதிவிட்டுள்ளார். இதற்கு கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழத்து கூறியதற்கு நன்றி கூறியுள்ளார்.




📡நீட் தேர்வு எழுதிய 11 லட்சம் பேரில் 4 லட்சம் பேர் தேர்ச்சி!!

:2016-08-16 டெல்லி: நீட் தேர்வு எழுதிய 11 லட்சம் பேரில் 4,09,477 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்ச்சி பெற்ற 4,09,477 பேரில் 19,325 பேர் அதிக மதிப்பெண்கள்  பெற்று முன்னிலையில் உள்ளனர். 720க்கு 685 மதிப்பெண்கள் பெற்று குஜராத் மாணவர் ஹெட் ஷா முதலிடம் பிடித்தார்.

📡எம்.பி.பி.எஸ். சீட்டுகளை விற்று கோடி கோடியாக குவித்த தனியார் மருத்துவக் கல்லூரிகள் அதிர்ச்சி!!

2016-08-16 டெல்லி: எம்.பி.பி.எஸ். சீட்டுகளை விற்று கோடி கோடியாக குவித்த தனியார் மருத்துவக் கல்லூரிகள் அதிர்ச்சியடைந்துள்ளன. தனியார் கல்லூரிகள் எம்.பி.பி.எஸ். சீட் விற்றதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.100 கோடி குவித்தது. தனியார் கல்லூரிகள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்டறவரை மட்டுமே எம்.பி.பி.எஸ்.சில் சேரக்க முடியும்.


📡மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு!!

2016-08-16 டெல்லி: மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ இணையதளமான  www.cbseresults.nic.in-ல் தெரிந்துகொள்ளலாம். நீட் தேர்வை 11 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.


📡சீனாவில் தயாரிக்கப்படும் மாஞ்சா நூல் விற்பனைக்கு டெல்லியில் தடை!!

:2016-08-16 டெல்லி: சீனாவில் தயாரிக்கப்படும் மாஞ்சா நூல் விற்பனைக்கு டெல்லியில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக டெல்லி அரசு வட்டார  தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த நூலால் பலர் உயிர் இழந்துள்ளதால் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.


📡தமிழக ஆளூநர் ரோசய்யா பதவிக்காலம் ஆக., 31-ம் தேதியுடன் முடிவடைகிறது!!

:2016-08-16சென்னை: தற்போது உள்ள தமிழகத்தின் ஆளூநர் ரோசய்யா பதவிக்காலம் ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. ரோசய்யாவுக்கு பதிலாக புதிய ஆளுநரை நியமிக்க மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

📡தமிழக ஆளூநர் ரோசய்யா பதவிக்காலம் ஆக., 31-ம் தேதியுடன் முடிவடைகிறது!!

:2016-08-16சென்னை: தற்போது உள்ள தமிழகத்தின் ஆளூநர் ரோசய்யா பதவிக்காலம் ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. ரோசய்யாவுக்கு பதிலாக புதிய ஆளுநரை நியமிக்க மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.



📡யூரி பகுதியில் தீவிரவாதிகளிடம்இருந்து ஆயுதம் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல்!!

2016-08-16 யூரி: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் யூரி பகுதியில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து ஆயுதம்மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. இந்த தாக்குதலில் சிஆர்பிஎப் அதிகாரிபிரமோத் குமார் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

📡📡📡📡📡📡📡📡📡📡📡

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here