அந்த 570 கோடிகளை எண்ணுவதை வீடியோவாக தகவல்அறியும் உரிமை சட்டம் மூலம் பெற்ற வழக்கறிஞர் பிரம்மா - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

அந்த 570 கோடிகளை எண்ணுவதை வீடியோவாக தகவல்அறியும் உரிமை சட்டம் மூலம் பெற்ற வழக்கறிஞர் பிரம்மா

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது திருப்பூர் அருகே பிடிபட்ட ரூபாய் 570 கோடியை எண்ணும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. மே 13ஆம் தேதி திருப்பூரை அடுத்த பெருமாநல்லூரில் வேகமாக சென்ற 3 கண்டெய்னர் லாரிகளை சோதனை செய்ததில் பணம் இருந்தது தெரிய வந்தது. இந்த பணத்தை கோவையில் இருந்து விசாகப்பட்டிணத்திற்கு தாங்கள்தான் கொண்டு சென்றதாக எஸ்.பி.ஐ. வங்கி தெரிவித்தது. பணம் யாருடையது என்பதில் 3 நாள் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று திமுக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதையடுத்து இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையே உயர்நீதிமன்ற உத்தரவின்படி வருவாத்துறை அதிகாரிகள் கோவைக்கு எடுத்துச் சென்று எண்ணினர். இதில் 570 கோடி இருப்பது உறுதியானது. இந்த நிலையில் இதுதொடர்பான வீடியோ காட்சிகளை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா என்பவர் பெற்றுள்ளார். அவர் கூறுகையில், கண்டெய்னரில் இருந்த பெட்டிகளை எப்படி உடைத்தார்கள் என்பதை சிடியில் கொடுத்துள்ளனர். அதைத்தவிர நான் கேட்ட தகவல்களில் பெரும்பலான தகவல்களை மறுத்துள்ளார்கள். ஓட்டுநர் உரிமம், ஆர்.சி. புக், டிரிப் சீட், எங்கிருந்து எந்த தேதியில் புறப்பட்டது என்ற கேள்விக்கு இல்லை என்று மறுத்துள்ளனர். இதில் எனக்கு முழு தகவல் கிடைக்காததால், மீண்டும் மனு செய்ய உள்ளேன். அதில் முழு தகவலும் கிடைக்கும் என்று நம்புகிறேன். இந்த விவகாரத்தில் நாட்டு மக்கள் முழுமையாக தெரிய வேண்டும் என்பதால்தான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பெற்றுள்ளேன் என்றார்  நக்கீரன்.இன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here