தமிழக வாழ்கை இலக்கியம் உண்மைகளை உலகிற்கு உணர்த்தும் ஜோக்கர் தமிழ் சினிமா. - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தமிழக வாழ்கை இலக்கியம் உண்மைகளை உலகிற்கு உணர்த்தும் ஜோக்கர் தமிழ் சினிமா.


சவேரா :நேற்று 28 வருடமாக விடாமல் நட்புடன் தொடரும் பள்ளி தோழனுடன் நைட் ஷோ ‪#‎ஜோக்கர்‬ ..
"துடைப்பம், துடைப்போம் " என்று சைக்கிளில் விற்பவரை வேடிக்கை பார்க்கும் காலை கடன்களை வெளியில் கழிக்கும் சிறுவர்கள் காட்சியில் ஆரம்பித்த படம் .. "நாளை ஓரு போராட்டம், வீதிக்கு வா தோழா " என்று முடியும் வரை சமூக அவலங்களை:
a) மன்னர்மன்னர் முலமாக ..
b)மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் சாயலில் உள்ள பொன்னூஞ்சல் முலமாக ..
c)கொடுக்காவிட்டால், தட்டிப்பறி என்ற Che Guevara memoirs அந்த செக்யூரிட்டி தாத்தா முலமாக ..
என்று நாம் தொலைத்து கொண்டு இருக்கும் மனசாட்சியை விடாமல் கிள்ளி இருக்கிறார் இயக்குனர் ...
1) ஆளும்கட்சிகளை முக்கியமாக ஊழலுக்கு என உருவாகும் திட்டம் சொல்லப்பட்ட விதம் condensed narrative correlation பிரமாண்டத்தை காட்சி அமைப்பில் இல்லாமல் cut short scene வசனத்தில் முலமாக இப்படியும் காட்டலாம் என்ற முன்மாதிரி தமிழ் சினிமாவுக்கு புதுசு ..

2) வயிற்றிலே சீசுவுடன் உயிருக்கு போராடும் பெண்ணை பின்புலத்தில் நிறுத்தி 10 காவலர்களை காவல் போட்டு - செல்லரித்த ஊழல் திட்டத்தின் பெருமையை ஜனாதிபதி பேச்சை காட்டும் போது பீறிட்டு கிளம்பும் இயலாமையின் குற்றவுணர்ச்சி உணர்வு தமிழ் சினிமாவுக்கு புதுசு ....
3) எறும்பை கொல்லாமல் எடுத்து வேறு இடத்திலே விடும் மன்னர் மன்னன் அவரின் மனைவியை கருணை கொலை செய்ய நீதிமன்றத்தின் நெடுங் கதவினை தட்டி கொண்டே செல்லும் வலி தமிழ் சினிமாவுக்கு புதுசு ....
4)பிரிண்ட் மீடியாவை மொத்தமாக புறம் தள்ளி நம்ம சோசியல் மீடியாவில் நாம உரிமையுடன் வம்பிழுத்து சண்டை போட்டு கொள்ளும் அன்சாரி முஹம்மது Athisha Vino Yuvakrishna , Boopathy Murugesh ., etc, எல்லாரையும் கோர்த்து விட்ட லாவகம் .. தமிழ் சினிமாவுக்கு புதுசு ..
5)கிளைமாக்ஸில் வட மாநிலத்தில் போஸ்டரில் அந்த கருப்பு வெள்ளை ரோஹித் வெமுலா ..... காந்திசமாதி ராஜ்பாத் ரோட்டுக்கு எதிராக மன்னர் மன்னன் நடை ..அதனை தொடர்ந்து அவரின் ***** pragmatic logical conculsion தமிழ் சினிமாவுக்கு புதுசு ..
6)அரசியல் கட்சிகள் பிரியாணி , குவாட்டர் கூட்டும் கூட்டத்தின் நவீன தமிழ்நாட்டு சீரழிவு கலாச்சாரத்தின் லாரிக்குளே துளிர் விடும் காதல் ரோஜா தமிழ் சினிமாவுக்கு புதுசு ..
முதல் முதலாக மக்கள் ஜனாதிபதி என்கிற போது தியேட்டர் மொத்தமும் சிரித்தது .. இறுதியில் கனத்த மௌத்துடன் மொத்த கூட்டமும் கலைந்தது..
இந்த படத்தை எப்படியா ரிலீஸ் செய்ய விட்டார்கள் ?!.. என்று என்னும் போது அங்கே ஆங்கில சொல் ‪#‎joker‬ ஆமை விடும் போராட்டத்தின் வெற்றி கமுக்கமாக சிரிக்கிறது..
முதலில் review கேட்டு விட்டு குழந்தைகள் வேண்டாம் என்று விட்டு விட்டேன் .. சீரழிந்த தமிழக கலாச்சாரத்தை ஓவியமாக படம் பிடித்த காட்சியினை teenage குழந்தைகள் கூட பார்க்க வேண்டும் என்று இப்போது நினைக்கிறன் ...
This film not only touches the very basics problem of democra"z" y system we got - but every contemporary problems we face .. கொண்டாட பட வேண்டிய சொத்து இந்த படம் ..
யோவ் யாருயா நீ Raju murugan .. நேரிலே பார்த்தால் இடம் பொருள் எதுவும் பார்க்காமல் இறுக்கி அணைச்சு முத்தம் தருவேன் ... சொல்லிட்டேன் . yes
ORDERS promulgated .
Sd

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here