~~~~~~பின்கோடு அறிமுகம் செய்யப்பட்ட தினம் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

~~~~~~பின்கோடு அறிமுகம் செய்யப்பட்ட தினம்

*🍊 தபால்களை சரியான முகவரியில் சேர்க்கும் தொழில்நுட்பம்*

🌻இன்று 70-வது சுதந்திர திரு நாளைக் கொண்டாடும் இதே நாளில் 1972-ம் ஆண்டு பின் கோடு எனப்படும் இந்திய அஞ்சல் துறையின் குறியீட்டு எண் அறி முகப்படுத்தப்பட்டது

🌻பின்கோடு (PINCODE) முறையை அறிமுகப் படுத்துவதற்கு முன் ஒரு நகரத்தின் தபால் பட்டுவாடா பகுதிகளை அந்த தபால் நிலையத்துக்கான பகுதி எண்ணாக குறிப்பிட்டு வந்த னர்.

🌻அன்றைய மதராஸ் (GPO) பகுதிக்கு மதராஸ் 1 என்றும், அண்ணா சாலை பகுதிக்கு மதராஸ் 2 என்றும், பார்க் டவுன் பகுதிக்கு மதராஸ் 3 என்றும், மயிலாப்பூர் பகுதிக்கு மதராஸ் 4 என்றும், திருவல்லிக்கேணி பகுதிக்கு மதராஸ் 5 என்றும் தொடர்ச்சியாக பல்வேறு பகுதிகளுக்கு இதுபோல் எண்கள் ஒதுக்கப்பட்டு வந்தன.

🌻மும்பை, கொல்கத்தா போன்ற பெரிய நகரங்களில் இந்த முறையே பின்பற்றப்பட்டு வந்தது.

🌻ஆரம்ப காலங்களில் தபால் சென்றடையும் கிராமத்துக்கு வழி (VIA) என்று குறிப்பிட்டு வந்தனர்.

🌻 உதாரண த்துக்கு, பாலக்காட்டுக்கு அனுப்பப்பட்ட கடிதங்கள் வழி கோயம்புத்தூர், தேனிக்கு அனுப்பப் படும் கடிதங்கள் வழி திண்டுக்கல் என்று பல்வேறு விதமாக கடிதப் போக்குவரத்து வழிகளை குறிப் பிட்டு வந்தனர்.

🌻 இந்த நடை முறை ஒருவகையில் பெரிய நகரங்களுக்கு மட்டுமே பொருந்தி யதால் ஒரே பெயர்களைக் கொண்ட கிராமங்களுக்குத் தபால்களை அனுப்புவதில் சிரமமாக இருந் தது.

🌻 இதனால், தபால்கள் பொது மக்களுக்கு தாமதமாக சென்றடை யத் தொடங்கின. இதையடுத்து கடிதப் போக்குவரத்தை துரிதப் படுத்தவும், தபால்களைச் சரியான முகவரியில் சேர்க்கவும், இந்திய தபால்துறை 1972 ஆக. 15-ம் தேதி அஞ்சல் குறியீட்டு எண் (PINCODE) என்ற புதிய முறையை அறிமுகப்படுத்தியது.

🌻இதுகுறித்து தேசிய விருதுபெற்ற முன்னாள் அஞ்சல் ஊழியர் நா.ஹரிஹரன் கூறியது:

🌻இந்தியா 8 பகுதிகளாக பிரிக் கப்பட்டு தபால் பட்டுவாடா அலுவலகங்களுக்கு தனித்தனி எண்கள் ஒதுக்கப்பட்டன. 8 பகுதி களின் முதல் எண், குறிப்பிட்ட அந்த மாநிலத்தை குறிப்பிடும்.

🌻 தமிழ்நாடு, கேரளம், லட்சத்தீவுகள் ஒரு பகுதியாக பிரிக்கப்பட்டு, அதற்கு முதல் எண் 6 என ஒதுக்கப்பட்டது.

🌻 பின்கோடு எண்ணின் இரண்டாவது மற்றும் மூன்றாவது எண் அஞ்சல் பிரிப்பகத்தின் துணை மண்டலத் தையும், மாவட்டத்தையும் குறிப் பதாக அமைக்கப்பட்டது.

🌻 கடைசி 3 எண்கள் தபால் பட்டுவாடா நிலையத்தை குறிப்பிடும்படி குறியீட்டு எண்கள் வழங்கப்பட்டன.

🌻ராணுவத்துக்கான தபால் சேவைக்கு 9 ஆரம்ப எண் கொடுக்கப்பட்டது.

🌻 இந்தியாவின் முதல் பின்கோடு எண்களைக் கொண்ட தபால் நிலையமாக புதுடெல்லி தலைமை தபால் நிலையம் செயல்படத் தொடங்கி யது.

🌻 அதன் எண் 110001. எந்த ஒரு நபர், நிறுவனத்துக்கு முகவரி எப்படி முக்கியமாக இருக்கிறதோ, அதுபோல் அந்த முகவரியில் குறிப்பிடப்படும் அவர்கள் ஊரின் பின்கோடும் இருந்தால் மட்டுமே அவருக்கான தபால் சேவை செய்ய முடியும் என்றார்.

*🍊பின்கோடு எண் முக்கியத்துவம்*

🌻நா.ஹரிஹரன் மேலும் கூறும்போது, “இந்தியாவில் ஒரே பெயரைக் கொண்ட பல ஊர்கள் உள்ளன. தமிழகத்தில் மேட்டூர், ஆத்தூர் என்ற பெயரில் மட்டுமே 10-க்கும் மேற்பட்ட ஊர்கள் அமைந்துள்ளன.

🌻 அதுபோல் தமிழகம், கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் மட்டும் ஒரே பெயரைக் கொண்ட 100-க்கும் மேற்பட்ட ஊர்கள் உள்ளன.

🌻 ஒரே பெயர் கொண்ட இந்த ஊர்களில் வசிப்பவர்களுக்கு அந்த ஊர்களின் பின்கோடு குறியீடு எண் மூலம் தபால்துறை, தபால்களை உரியவரிடம் கொண்டு சேர்க்கிறது.

🌻 இதனால், இன்றுவரை இந்தியா 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தபால் நிலையங்களுடன், 100 கோடி மக்களின் தபால் சேவையை சிறப்பாகக் கையாண்டு வருகின்றன.

🌻உலகின் மிகப் பெரிய துறை நமது இந்திய தபால் துறை. எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு அதிகமாக மொழிகளைக் கொண்ட நாடு இந்தியாதான்.

🌻எந்த ஒரு மொழியிலும் கடிதங்களில் முகவரியைக் குறிப்பிட்டாலும் பின்கோடு எண்ணை குறிப்பிடும்பட்சத்தில் அது அந்த ஊரைச் சரியாகச் சென்றடையும்” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here