💥📡இரவு செய்திகள் 📡💥
💥📡18\08\16📡💥
💥📡💥📡💥📡💥📡💥📡💥
📡📡📡📡📡📡📡📡📡📡📡
📡நடுக்கடலில் தவித்த வங்கதேச மீனவர்கள் 31 பேரை இந்திய கடலோர காவல்படையினர் மீட்டனர்
டெல்லி: நடுக்கடலில் தவித்த வங்கதேச 31 மீனவர்களை இந்திய கடலோர காவல்படையினர் மீட்டுள்ளனர். படகின் இயந்திரம் பழுதடைந்ததால் நடுக்கடலில் தவிப்பிற்குள்ளாகினர்.
📡சம்பா சாகுபடி: விவசாயிகளுக்கு மானியம்! சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு!!
சென்னை:
டெல்டா பகுதி விவசாயகிளுக்கு சம்பா சாகுபடிக்கு மானியம் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார்.
📡ஜெயலலிதா வெற்றி பெற்றது செல்லாது
என்று ஐகோர்ட்டில் வழக்கு
தமிழக சட்டசபைக்கு கடந்த மே 16-ம் தேதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில், ஜெயலலிதா, சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றார். இவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரி ஆர்.கே.நகர் தொகுதியை சேர்ந்த பிரவீணா என்ற பெண், சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.
📡வறட்சியால் பாதிக்கப்பட்ட கிராமத்தை தத்தெடுத்த சச்சின்!
மும்பை: ராஜ்யசபா எம்.பி சச்சின் டெண்டுல்கர், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள வறட்சியால் பாதிக்கப்பட்ட கிராமம் ஒன்றை தத்தெடுத்துள்ளார்.
📡பணிநீக்கப்பட்ட பொதுப்பணித்துறை தினக்கூலி ஊழியர்கள் சங்கு ஊதும் போராட்டம்: 310 பேர் கைது
புதுச்சேரி: புதுச்சேரியில் பொதுபணித்துறை அலுவலகத்திற்கு வியாழக்கிழமை சங்கு ஊதி மலர்வளையம் வைக்க வந்த, பணிநீக்கம் செய்யப்பட்ட தினக்கூலி ஊழியர்கள் 310 பேரை போலீசார் கைது செய்தனர்.
📡7-வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்துவதால் செலவாகும் ரூ.500 கோடியை மத்திய அரசே வழங்க வேண்டும்: நாராயணசாமி
புதுச்சேரி: 7-வது ஊதியக்குழு பரிந்துரையை அமுல்படுத்துவதால் ஏற்படும் செலவு ரூ.500 கோடியை மத்திய அரசே வழங்க வேண்டும் என முதல்வர் வி.நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
📡சீனா மாதிரி ஒலிம்பிக்கில் இந்தியா பதக்கம் வெல்ல வேண்டுமா.. ஜஸ்ட் ரூ.4224 கோடிதான் செலவு!
📡மாலைநேர நிலவரப்படி, ஒரு சவரன் தங்கம் ரூ.23,904 க்கு விற்பனை
சென்னை : காலையில் உயர்ந்திருந்த தங்கம் விலை, மாலையில் சற்று குறைந்து காணப்பட்டது. இன்றைய மாலை நேர நிலவரப்படி சென்னையில் ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2988 க்கும், 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.31,960 க்கும் விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.23,904 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.50.50 ஆகவும், பார்வெள்ளி விலை ரூ.47,210 ஆகவும் உள்ளது.
📡2 மாத கை குழந்தையை கொன்ற தந்தைக்கு போலீஸ் வலை!
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி அருகே உள்ளது அமீர்ந்த மங்களம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன் அவரது மனைவி அம்பிகா இவருக்கு அனுபிரியா, இந்துமதி என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர். அடுத்ததாக சில தினங்களுக்கு முன்பு மூன்றாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆண் குழந்தை பிறக்கும் என எதிர் பார்த்த தாமோதரன், முன்றாவதும் பெண் குழந்தை பிறந்ததால் ஏமாற்றம் அடைந்தார்.
இந் நிலையில் கணவன் மனைவிற்கும் இடையே தகறாரு ஏற்ப்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தாமோதரன் 2 மாத குழந்தை ஜோதி லட்சுமியின் கழுத்தை நெறித்து கொன்றார்.
இதில் குழந்தை பரிதாபமாக இறந்தது. இது குறித்து கவரபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான தாமோதரனை தெடிவருகின்றனர்.
📡அம்மன் தாலி செயின் திருட்டு!
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த புதுக்குப்பம் கிராமத்தில் தேவதை செல்லி அம்மன் கோவில் உள்ளது. நேற்று கோவில் புட்டு உடைக்கப் பட்டதாக பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது. அம்மன் கழுத்தில் உள்ள முன்று சவரன் தாலி சரடு செயின் மற்றும் உண்டியல் உடைக்கப்பட்டது, தெரியவந்தது. இது குறித்து சத்திய வேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.
📡மனைவியை கொலை செய்த கணவன் கைது!
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி அருகே உள்ளது நாகராஜ சண்டிகையில் வசித்து வருகிறார் மதுரை. இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராதா. மதுரை தினமும் வேலை முடித்து விட்டு குடித்து வருவது வழக்கமாக கொண்டுவந்தார். இதனால் கணவன், மனைவி இருவருக்கும் தினமும் தகறாரு ஏற்பட்டு வந்தது. இதனை மனைவி கண்டித்தும் மதுரை குடி பழக்கத்தை விட வில்லை.
இந் நிலையில் வழக்கும் போல நேற்று குடி போதையில் வந்துள்ளார். இருவருக்கும் தகறாரு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மதுரை விட்டில் உள்ள கத்தியை எடுத்து கழுத்தில் வெட்டினார். இதில் ராதாவின் அலரல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர் வந்து ராதாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அதற்குள் ராதா இறந்து போனார். இதனை பற்றி தகவல் அறிந்த ஆரம்பாக்கம் போலீசார் பொன்னேரி மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்கு ராதாவின் உடலை அனுப்பி வைத்தனர். பின்னர் மதுரையை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
📡இரண்டு போலி டாக்டர்கள் கைது!
திருவள்ளூர் மாவட்டம் போதந்தூர்பேட்டை, சோரைக்காய் பேட்டையில் ஆகிய பகுதிகளில் போலி டாக்டர்கள் மருத்துவம் பார்ப்பதாக திருவள்ளூர் எஸ்.பி. சாந்தனுக்கு புகார் வந்தது. அதன் பிேரில் திருத்தணி போலீசார் நேற்று இரவு சோதனை நடத்தினர். அப்போது நந்தகோபால், போதிநாயகம் பட்டி சுப்புராய் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
📡தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வு
சென்னை : சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 உயர்ந்துள்ளது. ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.2,988 ஆக உள்ளது. ஒரு சவரன் 23,904 ஆக உள்ளது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.50.50 ஆக உள்ளது. வெள்ளி ஒரு கிலோ ரூ.47,210 ஆக உள்ளது.
📡தமிழகத்தில் ஒட்டகம் வெட்டத் தடை :சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: தமிழகத்தில் ஒட்டகம் வெட்டத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
📡குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு
தென்காசி: குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் சுமாராக இருந்த நிலையில் பெரும்பாலான நாட்கள் சாரல் இல்லை. அருவிகளில் மட்டும் ஒரளவு தண்ணீர் சுமாராக விழுந்தது. குற்றாலம் சீசன் காலத்தில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை தரும் ஆடிமாதம் நிறைவடைந்து தற்போது கூட்டமும் குறைந்து விட்ட நிலையில் கடந்த 2 தினங்களாக சீசன் நன்றாக உள்ளது.
நேற்று மாலையில் அவ்வப்போது சாரல் பெய்த நிலையில் இரவில் மலையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் நல்ல மழை பெய்தது. இதையடுத்து மெயினருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. அதிகாலையில் பாதுகாப்பு வளைவின் மீது தண்ணீர் கொட்டியதால் மெயினருவியில் மட்டும் குளிக்க தடை விதிக்கப்பட்டது. ஐந்தருவி, பழையகுற்றால அருவி, புலியருவி ஆகியவற்றில் சுற்றுலா பயணிகள் தடையின்றி குளித்தனர்.
📡டெல்டா பாசன மாவட்டங்களில் நாளை முழு அடைப்பு: 1000 இடங்களில் மறியல் போராட்டம் நடத்த முடிவு
திருச்சி: காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து டெல்டா பாசன மாவட்டங்களில் நாளை முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது. 1000 இடங்களில் மறியல் போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது
📡ஜெ., 24.55 லட்சம் - கலைஞர் 25 லட்சம்:
வேட்பாளர்களின் தேர்தல் செலவு கணக்கு வெளியீடு
2016 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவு குறித்த விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்திருந்தனர். இதையடுத்து இந்த கணக்கு விவரங்களை தற்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
📡சிஆர்பிஎப் வீரர்களுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடிய மத்திய அமைச்சர் உமா பாரதி
நாக்பூர் : மத்திய அமைச்சர் உமா பாரதி நாக்பூர்
சிஆர்பிஎப் முகாமில் ராணுவ வீரர்களுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடினார். ராணுவ வீரர்கள் அனைவருக்கும் உமா பாரதி ராக்கி கயிறு கட்டினார்.
📡கோவையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் திடீர் சாலை மறியல் - 70 பேர் கைது
கோவை மாநகராட்சியில் உள்ள லஞ்ச ஊழலை ஒழித்திட வேண்டும், அடிப்படை வசதிகள் மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட 70 பேர் கைது செய்யப்பட்டனர்
📡சத்தியமங்கலம்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் குட்டிகளுடன் யானைகள் முகாம்
📡கோவையில் அரசு பேருந்து ஓட்டுநர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
கோவை: கோவை கருமத்தம்பட்டியில் அரசு பேருந்து ஓட்டுநர் முத்துப்பாண்டி விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். மேலதிகாரி நெருக்கடி கொடுத்ததால் தற்கொலைக்கு முயன்றதாக ஒர்ருனர் முத்துபாண்டியன் பேட்டி அளித்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
📡அரிதாக நடக்கும் பிழையை செய்த நாசா..!
மாணவர்களின் சோதனைகளை உள்ளடக்கி விண்வெளிக்குள் சென்ற நாசாவின் ஒரு சப்ஆர்பிட்டல் ராக்கெட் பேலோடை வளிமண்டலத்தில் இழந்து விட்டதாக நாசா அறிவித்துள்ளது, இது மிகவு, ஒரு அரிதான நிகழ்வு என்றும் நாசா குறிப்பிட்டுள்ளது.
📡ரிலையன்ஸ் சலுகை : அழைப்புகளில் 95% கட்டணம் சேமிக்க முடியும்.!
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ இண்டர்நெட் சேவை வெளியாக இருப்பதைத் தொடர்ந்து பல்வேறு தொலை தொடர்பு நிறுவனங்களும் இண்டர்நெட் விலையைக் குறைத்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் ரிலையன்ஸ் புதிய சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் அறிவித்திருக்கும் புதிய சேவையின் மூலம் ஆப்ஸ்களின் மூலம் மேற்கொள்ளப்பட்டும் அழைப்புகளின் கட்டணம் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📡உலகின் மிகப்பெரிய விமானம் பறந்து சோதித்து பார்க்கப்பட்டுள்ளது.
ஹைபிரிட் ஏர் வெகில்ஸ் என்ம் நிறுவனம் 35.6 மில்லியன் டாலர் செலவில் ஏர்லேண்டர்-10 (Airlander ) எனற விமானத்தை உருவாக்கியது. இந்த விமானம் 302 அடி நீளமும், 143 அடி அகலமும், 85 அடி உயரமும் கொண்டது.
விமானம், ஹெலிகாப்டர் மற்றும் விண்கலம் என மூன்றையும் கலந்து செய்த கலவையே இந்த விமானம். பெட்போர்டுசையரில் உள்ள கேர்டிங்டான் விமானத்தளத்திலிருந்து முதல் பயணத்தை தொடங்கியது.
உலகின் பெரிய விமானம் வானில் பறப்பதை காண, புகைப்படக்காரர்களும், மக்களும் விமான தளத்தில் குவிந்தனர்.
📡ஒலிம்பிக்கில் இந்தியாவால் பதக்கங்கள் வாங்க முடியாததற்கு
காங்கிரஸ்தான் காரணம் : தமிழிசை
📡மன்னிப்பு கேட்காவிட்டால் விஷால் படத்துக்கு ஒத்துழைப்பு கிடையாது... தயாரிப்பாளர்கள் கறார்
சென்னை: தயாரிப்பாளர் சங்கம் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த நடிகர் விஷால் இன்னும் ஒரு வார காலத்திற்குள் அதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவரின் படங்களுக்கு இனி ஒத்துழைப்பு கிடையாது என தயாரிப்பாளர் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
📡தமிழகத்திற்கு தண்ணீர் கிடையாது : சித்தராமையா
பெங்களூரு: தென்மேற்கு பருவமழை போதிய அளவிற்கு பெய்யாததால் காவிரியில் இருந்து பாசனத்திற்கு நீர் திறந்துவிட முடியாத நிலையில் இருப்பதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
📡முத்தூட் பைனான்ஸ் 730- சவரன் கொள்ளை:
முன்னாள் மேலாளர் கைது
சேலம் மாவட்டம், கெங்கவல்லி முத்தூட் பைனான்ஸில் 730 சவரன் தங்க நகைகள் மற்றும் 1,34 - இலட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட 48 -மணிநேரத்தில் போலீஸார் பறிமுதல் செய்து முன்னாள் வங்கி மேலாளரை கைது செய்தனர்.
📡ஆந்திராவில் கைதான 32 தமிழர்களின் ஜாமின் மனு தள்ளுபடி
ஐதராபாத் : ஆந்திராவில் கைது செய்யப்பட்ட 32 தமிழர்களின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.ஆந்திராவின் திருப்பதி அருகே உள்ள ரேணிகுண்டா ரயில் நிலையத்திற்கு செம்மரம் வெட்டுவதற்கு தமிழர்கள் வருவதாக அம்மாநில செம்மரம் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்புப் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் ஆந்திரப் போலீசார் தீவிரச் சோதனை மேற்கொண்டனர். அப்போது சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டுவதற்கு வந்ததாக 32 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரிடமும் ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. கைதான 32 பேரும் திருவண்ணாமலையை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
கைதானவர்களிடம் தலா 10 பேர் வீதம் பிரித்து திருப்பதி, புத்தூர், ரேணிகுண்டா என 3 இடங்களில் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழர்கள் 32 பேர் மீதும் 6 பிரிவுகளில் ஆந்திர போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கு தமிழக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபுவுக்கு முதல்வர் ஜெ., கடிதம் எழுதியிருந்தார்.
அவர்கள் தாக்கல் செய்த ஜாமின் மனு கடந்த 10ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்கள் ஜாமின் கேட்டு திருப்பதி அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. விசாரணை முடிவடையாத நிலையில், அவர்களின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
📡வந்தாச்சு தமிழ்நாடு பிரிமீயர் லீக்: கோப்பையை அறிமுகப்படுத்திய தோனி!
தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி 20 போட்டித் தொடர் விரைவில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான கோப்பையை, இந்திய ஒருநாள் போட்டிகளுக்கான அணித்தலைவர் தோனி சென்னையில் இன்று அறிமுகபப்டுத்தினார்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி 20 போட்டித் தொடர் விரைவில் நடைபெற உள்ளது. சென்னை, மதுரை, தூதுக்குடி உள்ளிட்ட எட்டு அணிகள் இந்த போட்டியில் பங்கேற்க உள்ளன.
இந்த கோப்பைக்கான அறிமுக விழா சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் சீனிவாசன், இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் போட்டியில் பங்கேற்க உள்ள 8 அணிகளின் உரிமையாளர்கள், பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
விழாவில் முதலில் ஒவ்வொரு அணியின் லோகோவும் மேடையில் அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் சீனிவாசன் பேசினார். அதற்குப் பின்னர் தமிழ்நாடு பிரீமியர் லீக் கோப்பையை தோனி அறிமுகம் செய்து வைத்து பேசினார். அப்பொழுது அவர் இந்த தொடர் இளம் வீரர்கள் தங்கள் திறமையயை வளர்த்துக் கொள்ள உதவும் என்று தெரிவித்தார்.
இந்த போட்டித் தொடர் வரும் 24-ந்தேதி தொடங்க உள்ளது. அடுத்த மாதம் 18-ந்தேதி வரை நடை பெற உள்ள இந்த போட்டிகள், சென்னை, திண்டுக்கல் மற்றும் நெல்லை ஆகிய இடங்களில் நடக்கின்றன.
📡பட்டுக்கோட்டை அருகே 50 சவரன் நகைகள் கொள்ளை
பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை பொன்னவராயன் கோட்டையில் அஞ்வலக மேலாளர் வீட்டில் 50 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். பாலசுப்பிரமணியன் வேலைக்கு சென்றிருந்த நேரத்தில் பட்டப்பகலில் வீட்டின் ஓட்டை பிரித்து கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளனர். மேலும் பீரோவில் இருந்த ரூ.40 ஆயிரம் பணத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். பாலசுப்பிரமணியன் புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📡சேலம்-சென்னை ரயிலில் வங்கி பணம் கொள்ளையடித்தவர்கள் 4 பேர் கைது?
சென்னை: சேலம்-சென்னை ரயிலில் வங்கி பணம் கொள்ளையடித்தவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. வேலூரையடுத்து பொன்னையில் 4 பேரும் பிடிப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளது.
📡ரியோ ஒலிம்பிக்: மல்யுத்தப் போட்டியில் பபிதா குமாரி தோல்வி
ரியோ: ரியோ ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தப் போட்டியில் இந்திய வீராங்கனை பபிதா குமாரி தோல்வியடைந்தார். 53 கிலோ எடைப் பிரிவில் கிரீஸ் வீராங்கனை மரியாவிடம் 5-1 என வீழ்ந்தார் பபிதா குமாரி.
📡ஏழைகள் பயன்பெறும் வகையில் முன்பதிவில்லாத ரயில்கள் அறிமுகம்: அமைச்சர் சுரேஷ் பிரபு தகவல்
📡டிஎன்பிஎல் கோப்பை: தோனி அறிமுகம்
சென்னை: சென்னை நத்தம் நெல்லை நகரங்களில் வரும் 27-ம் தேதி முதல் செப்-18-ம் தேதி வரை நடைபெற உள்ள தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 கிரிக்கெட் போட்டியின் கோப்பையை கேப்டன் தோனி அறிமுகப்படுத்தினார்.
📡திருச்சி விமான நிலையத்தில் 4 கிலோ தங்கம் பறிமுதல்
திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் 4 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மலேசியாவில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் கடத்தப்பட்ட தங்கம் சிக்கியது. 3.186 கிலோ கடத்தியதாக பெண் உள்பட 7 பேரை கைது செய்தது வருவாய் புலனாய்வுத்துறை.
📡இந்தியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங்
டிரினிடாட்: இந்தியா - மேற்கு இந்தியா தீவுகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெறுகிறது. மைதானத்தில் ஈரப்பதம் இருந்ததால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தாமதமாக தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியில் கேப்டன் பேட்டிங் செய்ய முடிவு செய்தார், இதனை தொடர்ந்து அந்த அணி களமிறங்கவுள்ளது.
📡ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு நிதியாக ரூ.1,976.50 கோடி ஒதுக்கீடு: மத்திய அரசு!!
:2016-08-18 டெல்லி: ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு நிதியாக ரூ.1,976.50 கோடி கோடி மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது . ஆந்திரா மற்றும் தெலங்கானா பிரிக்கப்பட்டதால் ஏற்பட்ட நிதி நெருக்கடியை சரி செய்யவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
📡📡📡📡📡📡📡📡📡📡📡
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக