தலைப்பு செய்திகள் 19/08.2016 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தலைப்பு செய்திகள் 19/08.2016

📡🌏தலைப்பு  செய்திகள் 🌏📡

          📡🌏19\08\16🌏📡

http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
📡🌏📡🌏📡🌏📡🌏📡🌏📡

🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏

🌏நெல்லை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு

நாளை ஒண்டிவீரன் நினைவு தினம், செப்டம்பர் 1ம் தேதி பூலித்தேவன் பிறந்த நாளை முன்னிட்டு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. நெல்லை மாவட்டம் முழுவதும் 144 தடை பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வெளியூரில் இருந்து வரும் வாகனங்கள் அனுமதி பெற்றே நுழைய வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

🌏நரசிங் யாதவ்க்கு தடை: தாய், சகோதரி கண்ணீர் மல்க பேட்டி

இந்திய மல்யுத்த வீரர் நரசிங் யாதவ், 4 ஆண்டுகள் சர்வதேச ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க 'வாடா' தடை விதித்துள்ளது. என்னிடன் வார்த்தைகளே இல்லை, என் மகன் சதியினால் பாதிக்கப்பட்டிருக்கிறான் என்று- நரசிங் யாதவின் தாய் புல்னா தேவி தெரிவித்துள்ளார். மேலும் நரசிங் யாதவ் நீக்கப்பட்டதற்கு தடை விதித்து எங்களை ஆதரிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முறையிடுகிறேன். அவர் கண்டிப்பாக தங்கம் வெல்வார் என்று நரசிங் யாதவின் சகோதரி தெரிவித்துள்ளார்.

🌏தேனியில் மாணவர்களிடையே மோதல்: 3 பேர் கைது

தேனி: தேனியில் 5 மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 3 பிளஸ் டூ மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காயமடைந்த 2 மாணவர்கள் தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

🌏கோபால்கஞ்ச் கள்ளச் சாராயம் அருந்தி 16 பேர் உயிரிழப்பு: 25 போலீசார்கள் இடைநீக்கம்

கோபால்கஞ்ச்: பீகார் மாநிலம், கோபால்கஞ்ச் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்தி 16 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து கோபால்கஞ்ச் பகுதியில் 25 போலீசார்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர், 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் மற்றும் 14 பேருக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவுசெய்யப்பட்டுள்ளது. 

🌏புதுவையில் இன்று உள்ளூர் விடுமுறை

புதுச்சேரியை அடுத்த வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோயில் தேர்த் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை (ஆக.19) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

🌏காரை வழிமறித்து தாக்கிய 'நிஜ' பேய்... வீடியோ எடுத்து பேஸ்புக்கில் போட்ட 'தில்' சூரி

சென்னை: நடிகர் சூரி பழனி சாலையில் பேயை நிஜத்தில் சந்தித்ததாக தனது அனுபவத்தை வீடியோவுடன் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

🌏குற்றாலம் பிரதான அருவியில் குளிக்க அனுமதி

குற்றாலம்: குற்றாலம் பிரதான அருவியில் தண்ணீர் வரத்து குறைந்ததை அடுத்து குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 26 மணி நேரத்துக்கு பிறகு குற்றால அருவியில் குளிக்க காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். 

🌏திமுக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்டை ரத்து செய்ய மறுப்பு சபாநாயகர் பிடிவாதம் ஏற்புடையதல்ல: தலைவர்கள் கருத்து

சென்னை: திமுக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்டை ரத்து செய்ய மாட்டேன் என்ற சபாநாயகரின் பிடிவாதம் ஏற்புடையதல்ல என்று அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். 

🌏சென்னை காவல்துறையில் ஒரே நாளில் அதிரடி: 19 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

சென்னை: சென்னையில் பல்வேறு காவல்நிலையங்களில் பணியாற்றி வரும் 19 இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம் செய்து நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். அதில் 10 சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர்கள் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

🌏பெண்களுக்கான தொழில் பூங்கா தெலுங்கானா அரசு அமைக்கிறது

ஐதராபாத் : தெலுங்கானா அரசு, மேதக் மாவட்டத்தில், பெண்களுக்கான தொழில் பூங்காவை அமைக்க உள்ளது. தெலுங்கானா அரசு, 'பிக்கி லேடிஸ் ஆர்கனைசேஷன்' எனப்படும், எப்.எல்.ஓ., அமைப்புடன் இணைந்து, பெண்களின் தொழில் திறனை மேம்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக, அம்மாநிலத்தில் உள்ள, மேதக் மாவட்டம், சுல்தான்பூர் என்ற இடத்தில், பெண்களுக்கான குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தொழில் பூங்கா அமைக்கப்பட இருக்கிறது

🌏இறுதிச்சுற்றில் வெற்றி பெறுக! பிரணாப், மோடி வாழ்த்து

ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் இறுதிச்சுற்றில் வெற்றி பெற குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

🌏திருவாரூரில் மறியலில் ஈடுபட்ட 50 விவசாயிகள் கைது

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே ஆலங்காட்டில் மறியல் செய்த 50 விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவிரி டெல்டா மாவட்டங்களில் இடதுசாரி விவசாய சங்கங்கள் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் அழைப்பை ஏற்று முழு கடையடைப்பு போராட்டத்துக்கு ஏராளமான வியாபாரிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

🌏ஒலிம்பிக் போட்டி கனவு தகர்ந்தது: நரசிங் யாதவ் 4 ஆண்டுகள் விளையாட தடை

ரியோ டி ஜெனிரோ: இந்திய மல்யுத்த வீரர் நரசிங் யாதவின் ஒலிம்பிக் கனவு தகர்ந்தது. அவர் 4 ஆண்டுகள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க 'வாடா' தடை விதித்துள்ளது.

🌏டெல்டா மாவட்டங்களில் விவசாய சங்கங்கள் போராட்டம் தொடங்கியது

டெல்டா மாவட்டங்களில் விவசாய சங்கங்கள் நடத்தும் கடையடைப்பு போராட்டம் தொடங்கியது. காவிரியில் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசை வலியுறுத்தி முழு கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இடதுசாரி விவசாய சங்கங்கள் நடத்தும் கடையடைப்பு போராட்டத்துக்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். டெல்டா பாசன பகுதிகளான திருச்சி, தஞ்சை. திருவாரூர், நாகை, புதுக்கோட்டையில் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாய சங்கங்கள் சார்பில் 1,000 இடங்களில் மறியல் போராட்டமும் நடத்தப்படுகிறது.

🌍

🌏சுதந்திரத்துக்குப் பிறகு தேசத்தின் நலனுக்காக பாஜக செய்த தியாகங்களைப் போல வேறு எந்தக் கட்சியும் செய்ததில்லை --பிரதமர் மோடி

🌏கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டத்தில் பசுப் பாதுகாவலர்களால் பாஜக தொண்டர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

🌏மகாராஷ்டிராவில் போலீஸ் உயர் அதிகாரிகள் முன்னிலையில், பாஜ எம்எல்ஏ ஒருவர் கான்ஸ்டபிளை அறைந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

🌏தங்களது 16 கோரிக்கைகளை, சட்டசபையில் போலீஸ் மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பாரா என எதிர்பார்ப்பில் இருக்கும் போலீசார், அவற்றை 'வாட்ஸ் ஆப்' மூலம் பரப்பி வருகின்றனர்.

🌏திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அன்னை வேளாங்கண்ணி பள்ளி 9ம் வகுப்பு மாணவி சத்யா, 15, உலக கேரம் போட்டியில் பங்கேற்க உள்ளார். இவர் மார்ச் 3ல் கன்னியாகுமரியில் நடந்த மாநில இளையோர் கேரம் போட்டியில் 3ம் இடம் பிடித்தார்.இவரது சாதனைகளுக்கு பரிசாக, மாலத்தீவில் 16 நாடுகள் பங்கேற்கும் உலக போட்டியில் பங்கேற்கிறார்.

🌏முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரரும், பா.ஜ., முன்னாள் எம்.பி.,யுமான, நவ்ஜோத் சித்து விதிக்கும் கடுமையான நிபந்தனைகளை ஏற்பதில், பெரும் தயக்கமும், சிக்கலும் உள்ளதால், ஆம் ஆத்மி கட்சியில், அவர் இணைவதற்கான வாய்ப்புகள், குறைந்து வருகின்றன.

🌏மதுரை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்திரராஜன் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு  ராக்கி கட்டினார்.

🌏ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை வழக்கு சந்தேக நபரின் உருவப்படம் வெளியிட ஐ.ஜி திடீர் தடை

🌏சேலத்தில் இருந்து சென்னை சென்ற ரயிலில் ரிசர்வ் வங்கி பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. மகேஷ்குமார் அகர்வால் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டார்.

🌏பத்தாம் வகுப்பை தனித்தேர்வில் எழுதி தேர்ச்சி பெற்றிருந்தாலும், 3 ஆண்டு எல்எல்பி மாணவர் சேர்க்கையில் அனுமதிக்கலாம் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

🌏கோவையில் தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்திய போது, வெட்டப்பட்ட மரங்களுக்கு மாற்றாக மரக்கன்று முழுமையாக நடவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளதால் அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.

🌏தெற்கு ரயில்வே சார்பில் சென்னை, எர்ணாகுளம் ரயில்வே ஸ்டேஷன்களிலிருந்து வரும் செப்., மாதம் சுவிதா அதிவிரைவு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

🌏தமிழகத்தில் ஒட்டகம் வெட்டத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

🌏5வது முறையாக தங்கப் பத்திரங்கள் வினியோகம் செய்யப்பட உள்ளன. தங்கம் மீதான தேவை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை. கடந்த மாதம் வெளியிடப்பட்ட தங்கப் பத்திரங்கள் மூலம் ரூ.919 கோடி திரட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது!

🌏புதுச்சேரியில், 4000 பேர் பங்கேற்கும் மாநில அளவிலான மராத்தான் போட்டி வரும் 21ம் தேதி நடக்கிறது.

🌏ராணுவ தலைமை தளபதியாக இருந்த, தற்போதைய மத்திய அமைச்சர், வி.கே.சிங், எனக்கு பதவி உயர்வு கிடைக்கக் கூடாது என்பதற்காக, திட்டமிட்டு, என் மீது பொய் குற்றச்சாட்டுகளை கூறினார் என, ராணுவ தலைமை தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹாக், சுப்ரீம் கோர்ட்டில் கூறியுள்ளார்.

🌏சிரியாவின் வடக்கு பகுதியில் நடந்த வான் தாக்குதலில் இடிந்து தரை மட்டமான கட்டடம் ஒன்றில், உயிருடன் மீட்கப்பட்ட 5 சிறுவனின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

🌏தெற்கு சூடான் அதிபர் சல்வா கீர், ரெய்க் மச்சரை துணை அதிபர் பதவியிலிருந்து நீக்கினார்.இதனால் அரசு படையினருக்கும் ரெய்க்கின் ஆதரவாளர்களுக்கும் மோதல் வெடித்துள்ளது.இதையடுத்து ரெய்க் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

🌏இந்திய மல்யுத்த வீரர் நரசிங் யாதவின் ஒலிம்பிக் கனவு முடிவுக்கு வந்தது. அவர் 4 ஆண்டுகள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க 'வாடா' தடை விதித்துள்ளது.

🌏இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.112 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்து 976 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2,872-க்கு விற்கிறது.

வெள்ளியும் கிலோவுக்கு ரூ.180 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.48 ஆயிரத்து 380ஆக உள்ளது. மேலும், ஒரு கிராம் வெள்ளி ரூ.51.80 ஆகவும் உள்ளது.

🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here