இரவு செய்திகள் 19/08/2016 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

இரவு செய்திகள் 19/08/2016

📡💥இரவு செய்திகள் 💥📡

         📡💥19\08\16💥📡

📡💥📡💥📡💥📡💥📡💥📡💥

📡📡📡📡📡📡📡📡📡📡📡

📡பி.வி.சிந்துவுக்கு வெள்ளி
ரியோ ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில், ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினாவை எதிர்த்து , வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார் பி.வி.சிந்து.


📡உள்ளாட்சி தேர்தல் வருகிற 17-10-2016 மற்றும் 19-10-2016 ஆகிய இரு கட்டமாக நடைபெறுகின்றன.

22-09-2016 முதல் 29-09-2016 மனுதாக்கல்.

03-10-2016 வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள்.

ஓட்டு எண்ணிக்கை 21-10-2016..

📡கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 2 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழப்பு: பாவுநூல் வழங்காததால் உற்பத்தி முடக்கம்


📡பம்மல் திமுக கூட்டம்: ஜெயலலிதா மீது பழ.கருப்பையா குற்றச்சாட்டு!

சென்னை:

சட்டமன்றத்தில் விதி 110ன் கீழ் அறிக்கை வாசித்தே ஆட்சி நடத்துகிறார் என்று குற்றம் சாட்டுகிறார் அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏவும், இந்நாள் திமுக உறுப்பினரும் - விசுவாசியுமான பழ.கருப்பையா.

நேற்று இரவு பம்மலில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய கருப்பையா,

காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டும் பிரச்சினையில் தமிழக கட்சிகளின் எதிர்ப்பை பதிவு செய்ய ஜெயலலிதா மறுப்பது சரியான செயல் அல்ல என்றார்.




📡பள்ளி குழந்தைகளை கடத்தி பாலியல் வன்முறை செய்த வாலிபர் கைது

பள்ளி குழந்தைகளை கடத்தி பாலியல் வன்முறை செய்த வாலிபர் கைது

திருப்பூரில் பள்ளி குழந்தைகளை கடத்தி சில்மிஷம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தியதில் பல தகவல்கள் வெளியானது. மதுரையில் மட்டும் 20 பள்ளி குழந்தைகளை கடத்தி பாலியவல் வன்முறையில் ஈடுபட்ட வழக்கு உள்ளது.

திருப்பூரில் மட்டும் இதுவரை 10-க்கும் மேற்பட்ட சிறுமிகளிடம் தனது கைவரிசை காட்டியுள்ளார். உயர் போலீஸ் அதிகாரிகள் முருகனை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


📡விஜய் மல்லையாவின் ரூ.6000 கோடி சொத்துக்களை முடக்க அமலாக்கத்துறை தீவிரம்


📡உ.பி.யில் 150 கிலோ பசு இறைச்சி சிக்கியது: பஜ்ரங்தளம் போராட்டத்தால் பதற்றம்; மூதாட்டி உள்பட 2 பேர் கைது

லக்னோ: உத்தரபிரதேசத்தில் 150 கிலோ பசு மாட்டிறைச்சி சிக்கியதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. 60வயது மூதாட்டி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 


📡புதுச்சேரியில் இரண்டு கிராமத்தினர் இடையே மோதல் : போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம்

புதுச்சேரி: புதுச்சேரியில் இரண்டு கிராமத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் நிலவுகிறது

📡விழுப்புரம் நகரில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூடி ஊழியர்கள் போராட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் நகரில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூடி ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். விழுப்புரத்தில் டாஸ்மாக் கடையில் மதுபானம் வங்க வந்த சிலர் ஊழியர் ஒருவரை தாக்கியதாக புகார் கூறியுள்ளனர். தாக்கியவரை கைது செய்ய வலியுறுத்தி விழுப்புரம் நகரில் உள்ள 10 மதுக்கடைகள் மூடினர் ஊழியர்கள்.


📡உயிருக்கு ஆபத்து: கண்டுகொள்ளாத மாநகராட்சி

நெல்லை வண்ணாரப்பேட்டை பேட்டை பைபாஸ் சாலையில் நேற்று மின்கம்பம் அறந்து கிட்க்கிறது என்று சரி செய்யப்பட்டது. அதன் பின்பு வெட்டிய மரக்கிளைகளை சாலையிலே விட்டு சென்றுள்ளனர். பைபாஸ் சாலையில் மரக்கிளைகள் நடுவே கிடப்பதால் விபத்து ஏற்படும் சூழ்நிலை உ௫வாகியுள்ளது

📡வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கு: தம்பதிக்கு 2 ஆண்டு சிறை

சென்னை: வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த பிஎஸ்என்எல் பொறியாளருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பொறியாளர் ராஜுவின் மனைவி வளர்மதிக்கு ஓராண்டு சிறை தண்னை விதித்து சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


📡நாட்டுத் துப்பாக்கி பதுக்கி வைத்திருந்தவர் கைது!

வேலூர்: வேப்பங்குப்பம் அருகே நாட்டுத் துப்பாக்கி பதுக்கி வைத்திருந்தவரை போலீஸார் கைது செய்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


📡காவிரி நீரை பெற்றுத்தர வலியுறுத்தி சிதம்பரத்தில் கடை அடைப்பு: 170 பேர் கைது

சிதம்பரம்: காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி கர்நாடகஅரசு தர வேண்டிய 70 டிஎம்சி நீரை பெற்றுத்தர வலியுறுத்தியும், காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகியவை அமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி, இந்திய கம்யூ கட்சி விவசாயிகள் சங்கம், திமுக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் விவசாயிகள் சங்கங்கள் சார்பில் கடலூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா கடைமடை பகுதியான சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் பகுதியில் கடைஅடைப்பு மற்றும் சாலைமறியல் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிதம்பரம் நகரில் காலை 9 மணி முதல் 11 மணி வரை அனைத்து கடைகளும் வர்த்தகர் சங்க ஒப்புதலுடன் அடைக்கப்பட்டிருந்தனர்.



📡ரவை குண்டுகள் இல்லாவிட்டால் உயிரிழப்பு ஏற்படும்

ஸ்ரீநகர்: ரவை குண்டுகளை பயன்படுத்துவதை நிறுத்தினால், உயிரிழப்புகள் அதிகரிக்கும் என காஷ்மீர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் சி.ஆர்.பி.எப்., கூறியுள்ளது




📡சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட முக்கிய ரயில் நிலையங்களில் ரூ.40 கோடியில் கண்காணிப்பு கேமரா


📡மீஞ்சூர் அருகே பரபரப்பு; டாஸ்மாக் கடை எரிந்தது: மதுபாட்டில்கள் வெடித்து சிதறியது

பொன்னேரி: மீஞ்சூர் அருகே டாஸ்மாக் கடை எரிந்ததில் மதுபாட்டில்கள் வெடித்து சிதறியது. இதில் 1 லட்சம் ரூபாய் மதிப்பு மதுபாட்டில்கள் நாசமாகி விட்டது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே இலவம்பேடு கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இன்று அதிகாலை டாஸ்மாக் கடையில் இருந்து கரும்புகை கிளம்பியது. இதனால் அக்கம் பக்கத்தினர் பொன்னேரி தீயணைப்பு நிலையம், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதுபற்றி அறிந்ததும் டாஸ்மாக் மேற்பார்வையாளர் ராமு வந்தார். அவர் கடையை திறந்து பார்த்தார். கடையின் உள்ளே மதுபாட்டில்கள் வெடித்து சிதறிக் கிடந்தன.


📡ஆசியாவிலேயே 2வது இடம் பிடித்த சாத்தனூர் அணை பண்ணையில் 3 மாதத்தில் 8 முதலைகள் சாவு: உணவு கிடைக்காமல் மடியும் பரிதாபம்

📡டிவிட்டரில் தன்னை கேலி செய்த ரசிகருக்கு கூலாக பதிலடி கொடுத்த சாய்னா!!

ஐதராபாத்: ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதனையடுத்து டுவிட்டரில் அவரை பாராட்டி ரசிகர்கள் செய்திகளை பதிவு செய்து வருகின்றனர். அதேசமயம் ரசிகர் ஒருவர், தோல்வியடைந்த நட்சத்திர வீராங்கனை சாய்னாவை கேலி செய்து டுவிட் செய்தார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் "டியர் சாய்னா உங்களுடைய பேக்கை மூட்டை கட்டிக் கொள்ளுங்கள். சிறப்பான ஒருவரை எப்படி வீழ்த்துவது என்பதுபற்றி தெரிந்த ஒருவரை நாங்கள் கண்டுபிடித்து விட்டோம் என்று தனது டிவிட்டில் குறிப்பிட்டிருந்தார்.


📡செம்மரம் வெட்ட வந்ததாக கைது செய்யப்பட்ட 32 தமிழர்களின் காவல் நீட்டிப்பு

திருப்பதி: ஆந்திராவில் செம்மரம் வெட்ட வந்ததாக கைது செய்யப்பட்ட 32 தமிழர்களின் காவலை நீட்டித்து திருப்பதி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 32 பேரின் காவலையும் மேலும் 15 நாட்களுக்கு நீட்டித்தது.

📡கிரானைட் வழக்கில் அரசு வக்கீல் குற்றப்பத்திரிக்கை தாக்கல்

நீர் ஆதாரங்களை அழித்து கிரானைட் கற்கள் வெட்டி எடுத்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் நீதிமன்றத்தில் 2,933 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிக்கையை அரசு வக்கீல் தாக்கல் செய்தார் .

📡கடல் காற்று வலுவிழந்து தரையை நோக்கி வீசுவதால் தமிழ்நாட்டில் மேலும் 5 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும் என்று வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


📡காவிரி பிரச்சனைக்காக அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும்- தமிழக விவசாயிகள் சங்கம்
முதல்வர் நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்களே அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவோம்
அனைத்து கட்சி குழுவையும் அமைத்து மோடியை சந்திப்போம்-தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

📡ராம்குமாரை புழல் சிறையில் பெற்றோர் சந்திப்பு

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ராம்குமாரை, தந்தை பரமசிவம் மற்றும் தாயார் புஷபா ஆகியோர் சந்தித்தனர்.

📡மும்பை பாந்த்ரா இணைப்பு சாலையில் உள்ள கட்டிடத்தில் தீ விபத்து : தீயணைப்பு பணி தீவிரம்

மும்பை பாந்த்ரா இணைப்பு சாலையில் தேசிய கல்லூரி எதிரே உள்ள கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 16 தீயணைப்பு வண்டிகளில் வந்துள்ள தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்

📡மு.க.ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்

79  திமுக எம்எல்ஏ-க்களை சஸ்பெண்ட் செய்த சபாநாயகரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று முக.ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனார். சபாநாயகருக்கு அதிகாரம் வழங்கும் பேரவை விதி 121 அரசியல் சட்டப் பிரிவு 194 க்கு எதிரானது என்றும் தனது மனுவில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். விவாதத்தில் யார் பங்கேற்றனர் என்று விசாரணை இன்றி ஒட்டுமொத்தமாக சஸ்பெண்ட் உத்தரவிட்டார் சபாநாயகர் என்று அவர் கூறினார்.

📡குன்னூரில் பாரம்பரிய உணவு திருவிழா!

பாரம்பரிய உணவுப் பழக்கவழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக இத்திருவிழா நடைபெற்றது.சுமார் 40க்கும் மேற்பட்ட உணவுகள் மற்றும் பதார்த்தங்கள் இடம்பெற்றிருந்தன.குறிப்பாக கம்பு, கேழ்வரகு, கீரையால் செய்யப்பட்டிருந்த உணவுகள் உணவுப் பிரியர்களை மிகவும் கவர்ந்தன.


📡2.35 லட்சம் ட்விட்டர் கணக்குகள் முடக்கம்!

தற்போது முடக்கப்பட்டுள்ள கணக்குகளில் பயங்கரவாத ஆதரவு கருத்துக்கள் இடம்பெற்றிருந்தன.இதுவரை சுமார் 3 லட்சத்து 60 ஆயிரம் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.மதவாதம் குறித்து பயங்கர கருத்துக்களை பரப்பும் கணக்குகளும் முடக்கப்பட்டு வருகின்றன.


📡இறக்கத்துடன் தொடங்கிய பங்குச்சந்தைகள்!

வர்த்தக நேர தொடக்கத்தில் இந்தியப் பங்குச்சந்தைகள் சரிவுடன் காணப்படுகிறது.BSE sensex 24.16 புள்ளிகள் சரிந்து 28,099.28 புள்ளிகளாக உள்ளது.NSE nifty 3.20 புள்ளிகள் சரிந்து 8,670.05 புள்ளிகளாக உள்ளது.



📡தமிழகத்தில் ஒட்டகம் வெட்ட தடை!
தமிழகத்தில் ஒட்டகங்களை வெட்ட அனுமதிக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.ஒட்டகங்களை வெட்டுவதற்கு தனியாக பிரத்தியேகமான இறைச்சி கூடங்கள் என்பதும் வாதத்தின் ஒரு கூற்றாக உள்ளது.பக்ரீத் பண்டிகைக்கு சென்னையில் ஒட்டகம் வெட்டி, இறைச்சியாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

📡மெரினாவில் உலக புகைப்பட தின பேரணி!

ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19ம் தேதி உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது.சென்னை புகைப்படக் கலைஞர்கள் சங்கம் சார்பாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.புகைப்படக் கலையை பொதுமக்கள் அங்கிகரித்திட வேண்டும் என இப்பேரணியில் கோரப்பட்டது.


📡உயிரிழந்த மச்சிலி புலி பற்றி

ராஜஸ்தான் தேசிய பூங்காவில் வாழ்ந்து வந்த புகழ்பெற்ற மச்சிலி புலி உயிரிழந்தது.உலகிலேயே அழகான புலி என அனைவராலும் புகழப்பட்டவள் இந்த மச்சிலி. 19 ஆண்டுகள் கோவில் பகுதியில் வளர்ந்தாலும் இவளால் கால்நடைகளுக்கோ மனிதர்களுக்கோ துன்பம் நேர்ந்ததில்லை.ஆண்டுக்கு 46 கோடி ரூபாய் இந்திய வனத்துறைக்கு வருமானம் ஈட்டித்தந்தவள். காமிராக்களுக்கு பல்வேறு முக பாவங்களை கொடுத்து அசத்தியிருக்கிறாள்.


📡திமுகவுக்கு ஆதரவாக கேப்டன்!

தமிழக சட்டமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அதிமுகவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுக சட்டமன்ற ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிப்பதாக கருத்து

📡அட்லாண்டிக்கில் பயங்கர நிலநடுக்கம்!

தெற்கு அட்லாண்டிக் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆகப் பதிவாகியுள்ளது!


📡3 துணை வங்கிகளை இணைக்கும் SBI!

தன் 3 துணை வங்கிகள் மற்றும் பாரதிய மகிளா வங்கியைத் தன்னுடன் இணைத்துக் கொள்கிறது பாரத ஸ்டேட் வங்கி. அவ்வங்கியின் இயக்குனர் குழு இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆப் பிகானீர் அண்ட் ஜெய்ப்பூர் ஆகியவை SBIயுடன் இணையவுள்ளன!



📡இன்றும் இந்திய ரூபாய் மதிப்பு சரிவு!

அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு 14 காசுகள் சரிவடைந்துள்ளது. அமெரிக்க பொருளாதாரம் முன்னேற்றம் கண்டுள்ளது முக்கியக் காரணம். இன்று காலை நிலவரப்படி, இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.66.95. நேற்று மாலை ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.66.81.



📡வரி தொடர்பான குறைகள் விரைந்து தீர்க்கப்படும்!

குறைகளை விரைந்து நிவர்த்தி செய்யுமாறு வருமான வரித்துறைக்கு மத்திய நேரடி வரிகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.வரி செலுத்துவோர் அளித்துள்ள 3,700 புகார்கள் தீர்வு காணாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன.இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி வரும் 24ம் தேதி நேரடியாக தலையிடுகிறார்.



📡ராஜஸ்தானில் கைதானவர் பாக். உளவாளி?

ஜெய்சால்மர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் சுற்றித் திரிந்துள்ளார். அவரை இந்திய உளவுத் துறை அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கைதான அந்த நபர், பாகிஸ்தானைச் சேர்ந்த நந்து எனத் தெரிய வந்துள்ளது; அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது!



📡திருச்சி மணிகண்டம் அருகே நடுப்பட்டி கிராமத்தில் பேருந்தை விட்டு இறங்கி சென்ற 60 வயது மூதாட்டியிடம் வீட்டின் முன்பு பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து விட்டு ஒடிய பொன்மலையை சேர்ந்த வாலிபரை பொதுமக்கள் விரட்டி சென்று பிடித்து மணிகண்டம் காவல் துறையிடம் ஒப்படைப்பு மேலும் மணிகண்டம் ஊராட்சி அலுவலகம் முன்பு அனாதையாக நின்ற காரை பறிமுதல் செய்து காவல்துறை விசாரனை


📡கொடைக்கானல் அருகே கரடிப் பாறை ஆதிவாசிகள் கிராமத்தை சேர்ந்த 15 வயது மற்றும் 20 வயது பெண்களை பாச்சலூர் கிராம இளைஞர்கள், விஜயகுமார், மணி, முத்துப் பாண்டி மற்றும் சந்தோஷ் குமார் ஆகியோர் பாலியல் பலவந்தம் செய்ததாக மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு. மூன்று பேர் கைது.  சந்தோஷ் குமார் தலைமறைவு ...

📡ஈஷா மையம் நடத்தும் சமஸ்கிருதி பள்ளியில் குழந்தைகள் உரிமைகள் மீறல்: ஜெயந்திராணி குற்றச்சாட்டு

ஈஷா மையம் நடத்தும் சமஸ்கிருதி பள்ளியில் குழந்தைகள் உரிமைகள் மீறல் என்று ஜெயந்திராணி தெரிவி்த்துள்ளார். ஈஷா பள்ளியில் 6 முதல் 12 வயது வரையிலான 153 குழந்தைகள் உள்ளதாக ஜெயந்தி ராணி தகவல் தெரிவித்துள்ளார்.

📡யோகேஸ்வர் தத் மற்றும் பி.வி.சிந்து வெற்றி பெற யோகேஸ்வர் தத்தின் தாயார் பிரார்த்தனை

மல்யுத்த வீரர் யோகேஸ்வர் தத் மற்றும் பூப்பந்தாட்ட வீரர் பி.வி.சிந்து ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற யோகேஸ்வர் தத்தின் தாயார் சுசிலா தேவி பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளார்.



📡பெங்களூரில் மாலை முதல் பலத்த மழை

மழையால் நகரின் பல பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல்
பள்ளி, கல்லூரி, அலுவலகத்தில் இருந்து திரும்புவோர் கடும் அவதி

📡விழுப்புரம் நகரில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூடி ஊழியர்கள் போராட்டம்

விழுப்புரம் நகரில் உள்ள அனைத்து  மதுக்கடைகளையும் மூடி ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். விழுப்புரத்தில் டாஸ்மாக் கடையில் மதுபானம் வங்க வந்த சிலர் ஊழியர் ஒருவரை தாக்கியதாக புகார் கூறியுள்ளனர். தாக்கியவரை கைது செய்ய வலியுறுத்தி விழுப்புரம் நகரில் உள்ள 10 மதுக்கடைகள் மூடினர் ஊழியர்கள்.


📡அனல் மின் நிலைய முதல் அலகில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் முதல் அலகில் மின் மாற்றி பழுது காரணமாக நேற்று காலை 6 மணி முதல் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. 2,3,4 வது அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

📡தங்கம் விலை சவரனுக்கு ₹32 உயர்வு!

22 கேரட் தங்கம் ஒரு கிராம் - ₹2,992.00

22 கேரட் தங்கம் ஒரு சவரன் - ₹23,936.00

24 கேரட் தங்கம் 10 கிராம் - ₹25,600.00

வெள்ளி: ஒரு கிராம் - ₹50.60

வெள்ளி கட்டி: ஒரு கிலோ - ₹47,290.00

📡📡📡📡📡📡📡📡📡📡📡

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here