ரியோவின் ரியல் ஹிரோ. - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ரியோவின் ரியல் ஹிரோ.

ரியோ ஒலிம்பிக்: பேட்மின்டன் இறுதிப் போட்டியில் வெள்ளி வென்றார் பி.வி.சிந்து
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
ரியோ ஒலிம்பிக்: பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் இறுதி போட்டியில் வெள்ளி வென்று பி.வி.சிந்து சாதனை படைத்துள்ளார். அவரை எதிர்த்து ஆடிய கரோலினா  மரினிடம் 21-19, 12-21, 15-21 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்ததன் மூலம் வெள்ளிப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.

முன்னதாக நேற்று இரவு நடந்த அரையிறுதிப் போட்டியில் ஜப்பானின் ஓகுஹரா நஸோமியை, 21-19, 21-10 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்திய இந்தியாவின்  பி.வி.சிந்து, ஒலிம்பிக் பேட்மின்டன் இறுதி போட்டிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஸ்பெயினின்  கரோலினா மரின், 2 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. வலுவான வீராங்கனையான அவரது சவாலை எதிர்த்து விளையாடிய  சிந்து வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இதன் மூலம் ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா வென்றுள்ள முதல் வெள்ளி இது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக  நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை சாக்‌ஷி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவின் பதக்க பட்டியலை  தொடங்கியது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியாவுக்கு இது 2வது பதக்கமாகும்.

ஒலிம்பிக்கில் இதுவரை 4 இந்திய வீராங்கனைகள் மட்டுமே பதக்கம் வென்றுள்ளனர். அவை அனைத்துமே வெண்கலம். தற்போது பி.வி.சிந்து வெள்ளி வென்ற  இந்திய வீராங்கணை என்ற சாதனையை படைத்துள்ளார். இதனால் ஒலிம்பிக்கில் வெண்கலம் அல்லாத பதக்கத்தை கைப்பற்றும் முதல் இந்திய வீராங்கனை என்ற  பெருமைக்கு பி.வி.சிந்து சொந்தக்காரரானார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here