💥🔵மதிய செய்திகள்🔵💥
🔵💥25/8/16 🔵💥
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
🔵💥🔵💥🔵💥🔵💥🔵💥🔵
🔵தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்புக்கான காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 8-ஆம் தேதி தொடங்கி 23-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.
💥லஞ்சம் கொடுப்பவர்களுக்கும் சிறை தண்டனை அளிக்கும் வகையில் சட்ட திருத்த மசோதா ராஜ்யசபா தேர்வுகுழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
🔵பிரெஞ்சு நிறுவனத்துடன் இணைந்து இந்திய கடற்படைக்கு உருவாக்கப்பட்டு வரும் 6 கப்பல்கள் குறித்த ரகசியம் கசிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
💥தீபாவளியை கவுரவிக்கும் வகையில் அமெரிக்க அரசின் சார்பில் சிறப்பு தபால்தலை வெளியிடப்படவுள்ளது.
🔵இத்தாலி நிலநடுக்கத்தில் இந்தியர்களுக்கு பாதிப்பில்லை : சுஷ்மா
💥ரங்கநாயகம்மா என்ற எழுத்தாளர் எழுதிய 'சாதி ஒழிப்பிற்கு புத்தம் போதாது அம்பேத்கர் போதாது, மார்க்சியமே தீர்வு' என்ற புத்தகம் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
🔵தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், ஊடக பிரிவு தலைவராக இருக்கும் கோபண்ணா உள்ளிட்டோர் தமக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் விஜய் இளஞ்செழியன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
💥காவிரி விஷயத்தில் கர்நாடகாவை நிர்ப்பந்தம் செய்யும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சியை முறியடிப்போம் என்று மத்திய ரசாயன உரத்துறை அமைச்சர் அனந்த்குமார் தெரிவித்தார்.
🔵மியான்மர் நாட்டை மையமாகக் கொண்டு இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோளில் 6.7-ஆகப் பதிவானது.
💥ரிசர்வ் வங்கியின் ரூ.20 லட்சம் மதிப்பிலான நாணயங்களுடன் சென்ற லாரி தாறுமாறாக ஓடியபோது, கோவை போக்குவரத்து போலீசார் மடக்கி பிடித்தனர். அப்போது, மதுபோதையில் டிரைவர் இருந்தது தெரியவந்தது.
🔵சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பான விசாரணையில் ஆஜராகுமாறு ப.சிதம்பரம் மனைவி நளினி சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
💥மாநகராட்சி பள்ளிகளில், யோகா மற்றும் சூரிய நமஸ்கார பயிற்சிகளை கட்டாயமாக்கும் தீர்மானத்தை, மும்பை மாநகராட்சி நிறைவேற்றியுள்ளது.
🔵ஐதராபாத்தில் குழந்தைகளுக்கான கோர்ட் துவக்கப்பட்டது. இது தென்னிந்தியாவில் குழந்தைகளுக்கான முதல் தனி கோர்ட் ஆகும்.
💥கடனை திருப்பி கொடுக்க மறுத்த நண்பரின் தலையை அரிவாளால் துண்டித்த வாலிபர் ரத்தம் சொட்ட சொட்ட தலையுடன் போலீசில் சரணடைந்த சம்பவம் பெங்களூருரில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
🔵ஆண்டிபட்டி வனத் துறை அலுவலகத்தில் புதன்கிழமை, வனக் காவலர்கள் இருவரை கட்டிப் போட்டு 2 சந்தன மரங்களை 9 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டிக் கடத்திச் சென்றது.
💥திருவண்ணாமலையில் ஆண்டுக்கு சுமார் 2 ஆயிரம் பேருக்கு சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்து பல லட்சங்களை சம்பாதித்ததாக, கைது செய்யப்பட்ட போலி பெண் மருத்துவர், மருத்துவத் துறை விசாரணையில் தெரிவித்துள்ளார்.
🔵வங்கக்கடலில் வெள்ளிக்கிழமை காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகும் சூழல் உள்ளதால், தமிழகத்தில் வெப்பம் குறைய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
💥மிசோரம் மாநிலத்தில் எச்ஐவி பாதித்த 437 கர்ப்பிணிகளுக்கு பிறந்த குழந்தைகளில் 405 பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு இல்லாதது ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
🔵சென்னை கெல்லீஸில் உள்ள அரசு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் ஏற்பட்ட மோதலின் விளைவாக, 6 சிறுவர்கள் செங்கல்பட்டு அரசு கூர்நோக்கு இல்லத்துக்கு மாற்றப்பட்டனர்.
💥சென்னை வந்த ரயிலில் வங்கிப் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பான விசாரணையில் முன்னேற்றம் ஏற்படாததால், துப்புத் துலக்குவதில் அதிகம் அனுபவமுள்ள போலீஸார் தனிப்படையில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
🔵சுற்றுலாப் பயணிகள் வருகையில், இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாக அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் அறிவித்துள்ளார்.
💥உ.பி.,யில் கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தும் நோக்கத்தில், காங்., துணை தலைவர் ராகுல் பாத யாத்திரை செல்ல முடிவு செய்துள்ளார்.
🔵பிணையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து 3 மாதங்களுக்கு பிறகு யுவராஜை நாமக்கல் சிபிசிஐடி போலீஸார் புதன்கிழமை இரவு மீண்டும் கைது செய்தனர்.
💥மகாநதி நீர்ப் பங்கீட்டுப் பிரச்னையில் ஒடிஸாவுக்கு அநீதி இழைக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமா பாரதி உறுதியளித்துள்ளார்.
🔵கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் நடைபெறும் உறியடி திருவிழாக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
💥திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள பிரபல அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் முன்பு பிச்சை எடுத்துப் பிழைத்து வரும் 70 வயது முதியவரை அசிங்கமாகப் பேசியதோடு அடித்தும் காயப்படுத்தியுள்ளார் அதிமுக பிரமுகர் நடராசன். இவர் இந்தக் கோவிலில் முன்பு அறங்காவலாரக இருந்துள்ளார்.
🔵பாகிஸ்தான் குறித்து நீங்கள் பேசினால் ராஜதந்திரம், நாங்கள் பேசினால் தேச விரோதமா என்று பா.ஜ.க வுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக் விஜய்சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
💥பாகிஸ்தானும், பாகிஸ்தானியர்களும் அமைதிக்கான பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளனர். வாய்ப்பு கிடைத்தால் பல ஆயிரம் மைல்களை நான் நடந்தே கடந்து பாகிஸ்தான் செல்ல விரும்புகிறேன் என்று நடிகையும், முன்னாள் காங்கிரஸ் எம்பியுமான ரம்யா தெரிவித்துள்ளார்.
🔵சத்தீஸ்கர் மாநிலத்தில் உணவு உட்கொள்ளாமல் 18 ஆண்டுகளாக தினமும் இரண்டு அல்லது மூன்று கப் பிளாக் டீ மட்டுமே குடித்து ஒரு பெண் உயிர் வாழ்ந்து வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
💥ஜெனிவாவிலுள்ள ஐரோப்பிய அணு ஆராய்ச்சி அலுவலகத்தில் நரபலி கொடுக்கப்பட்டதாக வெளியாகியுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
🔵3 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ
💥தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர்களை பாமக வழக்கறிஞர் பாலு இன்று திடீரென சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
🔵புதுச்சேரியை குற்றமில்லா மாநிலமாக உருவாக்குவோம்--கவர்னர் கிரண்பேடி
💥இங்கிலாந்தின் பெட்போர்ட்ஷையர் கவுண்டியில் உலகின் மிக நீளமான விமானத்தின் சோதனை ஓட்டம் நடந்தது. இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளானது.
🔵ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் கபூலில் உள்ள அமெரிக்க பல்கலைகழகத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இதில் 2 பேர் பலியாகியுள்ளனர். 5 பேர் காயமடைந்தனர்.
💥தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தி தொடக்க ஆட்டத்தில் அபார வெற்றி பெற்றது.
🔵சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (ஜிஎஸ்டி) சட்டத் திருத்த மசோதாவுக்கு, மத்தியப் பிரதேசம், தில்லி ஆகிய மாநில சட்டப்பேரவைகள் புதன்கிழமை ஒப்புதல் அளித்தன.
💥வரி ஏய்ப்பைத் தவிர்க்கும் விதமாக, சைப்ரஸ் நாட்டுடன் இந்தியா மேற்கொண்டிருக்கும் இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
🔵கோவா மாநில சட்டசபைக்கான பா.ஜ., தேர்தல் பொறுப்பாளராக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நியமிக்கப்பட்டுள்ளார்.
💥ரயில்வே துறையின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட ரூ.21 ஆயிரம் கோடி மதிப்பிலான இருப்புப் பாதை விரிவாக்கத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
🔵நாட்டிலேயே முதல் முறையாக, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நடைபெறும் பயங்கரவாத மோதல்களில் உயிரிழக்கும் அப்பாவி பொதுமக்களின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
💥மகாத்மா காந்தி படுகொலைக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பை அவமதிக்கும் வகையில் பேசவில்லை என உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார்.
🔵பலூசிஸ்தான் மாகாண விடுதலைக்கு ஆதரவளித்த பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சை, அங்குள்ள தலைவர்கள் வரவேற்றதற்காக அவர்கள் மீது தேசத் துரோக வழக்கு தொடுக்கப்பட்டுள்ள நிலையில், அந்தத் தலைவர்களைக் காப்பாற்ற ராணுவம் அனுப்பப்படுமா என்று சிவசேனைக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
💥தனக்கு எதிராக தமிழகத்தில் தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கை எதிர்த்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
🔵மெரீனா கடற்கரையில் பாய்மரப் படகு அகாதெமி, படகு போட்டிகளுக்கான திறன்மிகு பயிற்சி மையம் ஆகியன ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
💥தமிழக சட்டப் பேரவைக் கூட்டம் நான்கு நாள்கள் விடுமுறைக்குப் பிறகு மீண்டும் வரும் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 29) நடைபெறும்.
🔵50 திருநங்கைகளுக்கு நடப்பாண்டில் வாழைநார் கைத்திறத் தொழில் பயிற்சி அளிக்கப்படும் என்று ஊரகத் தொழில்கள் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி அறிவித்தார்.
💥உதகை உள்பட இரண்டு படகுக் குழாம்களில் மிதவை உணவகங்கள் அமைக்கப்படும் என்று சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் அறிவித்தார்.
🔵தமிழகத்தில் 6 இடங்களில் உள்ள மீன்குஞ்சு உற்பத்தி, வளர்ப்புப் பண்ணைகள் ரூ.13.65 கோடியில் மேம்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
💥தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் இன்று தனது 64வது பிறந்தநாளை குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
🔵காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆய்வு நடத்தினார். இதற்கிடையே கலவரபலி 66 ஆக உயர்ந்துள்ளது.
💥காவிரியில் தண்ணீர் திறந்து விடகோரி கர்நாடக முதல்வர் சித்தராமைய்யாவை சந்தித்து தமிழக விவசாயிகள் இன்று வலியுறுத்துகின்றனர்.
🔵ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கூடுதல் ஆவணங்களை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதன்கிழமை தாக்கல் செய்தது.
💥செல்லமுத்து, கே.பி.ராமலிங்கம் தலைமையில் தமிழக விவசாய சங்க கூட்டமைப்பினர் காவிரியில் தண்ணீர் திறந்துவிடக் கோரி கர்நடாக முதல்வர் சித்தராமையாவிடம் மனு அளித்தனர்.
💥நெல்லை அருகே விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததால் மணமுடைந்த விவசாயி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
🔵தமிழகத்தில் முதல்முறையாக, கோவை மத்திய சிறையில் திருநங்கைகளுக்கு என தனி அறை அண்மையில் தொடங்கப்பட்டுள்ளது.
💥இந்தியாவில் உள்நாட்டு விமான பயணத்தின் போது மொபைல்போன், லேப்டாப் உள்ளிட்ட மின்னணு கருவிகளைப் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இது விமானத்துக்கு வரும் சிக்னல்களுக்கு இடையூறாக இருக்கக்கூடும் என்பதால் இத்தகைய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகிறது.இந்நிலையில், விமானங்களில் வைபை சேவைக்கு விரைவில் அனுமதி அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
💥ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் வெறும் 2 பதக்கங்களை வென்றதற்காக இந்தியர்கள் கொண்டாடுவது வெட்கப்பட வேண்டியது என இங்கிலாந்தை சேர்ந்த பத்திரிகையாளர் பியர்ஸ் மார்கன் வாய்த் கருத்து தெரிவித்துள்ளார்.
🔵பழங்குடியினர் ஒருவருக்கு மருத்துவமனை அமரர் ஊர்தி வழங்காததால், அவர் தனது இறந்த மனைவியை 10 கிலோ மீட்டர் தோளில் தூக்கி கொண்டு சென்ற பரிதாப சம்பவம் ஒடிஷாவில் நடைபெற்றுள்ளது.
💥தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று தன் பிறந்த நாளை கட்சி அலுவலத்தில் கொண்டாடினார்.அவருக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர். மக்கள் நலக் கூட்டணித் தலைவர்களான வைகோ, திருமாவளவன், முத்தரசன் ஆகியோரும் விஜயகாந்த்தை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்
💥ஓடும் ரயிலில் ரிசர்வ் வங்கியின் 5.78 கோடி ரூபாய் ரயில் மேற்கூரையை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டது.சம்பவம் நடந்து 15 நாட்களாகியும் கொள்ளையர்களை நெருங்க முடியவில்லை.தற்போது 36 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் சி.பி.சி.ஐ.டி. போலீசார்.
💥இத்தாலி நிலநடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 247 ஆக உயர்வு
🔵ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி, முதல்வர் ஜெயலலிதா தமிழக மக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
💥கமல்ஹாசன் வற்றாத நதியாக வாழ்ந்து தமிழ்த் திரையுலகை செழிக்க வைக்க வேண்டும்: சீமான
💥செப்டம்பர் 8-ம் தேதி வரை யுவராஜை சிறையில் அடைக்க மாவட்ட நீதிபதி உத்தரவு
🔵திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்பயா பாலியல் வழக்கு குற்றவாளி வினய் ஷர்மா தற்கொலை முயற்சி.
💥பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் பாகிஸ்தான் நாட்டுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. பிரதமர் மோடி, இந்திய கொடிகளுடன் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். பாகிஸ்னாலிருந்து விடுதலை கோரி நீண்ட காலமாக பலுசிஸ்தான் மக்கள் போராடி வருகின்றனர். இதற்கு பிரதமர் மோடி ஆதரவு தெரிவித்துள்ளார்.
🔵வட சென்னை அனல் மின்நிலைய 2 நிலை முதல் அலகில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்படுள்ளது. கொதிகலன் பழுது காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
💥நாடு முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
🔵தீவிரவாதி புர்கான் வானி கொல்லப்படுவதற்கு முன்பே காஷ்மீரில் கலவரம் நடத்த திட்டமிட்டு பணம் வாரி இறைக்கப்பட்ட தகவல் அம்பலமாகியுள்ளது.
💥ஈரோட்டில், சமூக நலத்துறை உதவியுடன், ஒளிரும் ஈரோடு, அட்சயம் அறக்கட்டளை சார்பில், பிச்சைக்காரர்களை விடுதியில் சேர்க்கும் முகாம் நேற்று துவங்கியது. வரும், 27ம் தேதி வரை நடக்க உள்ள இப்பணியில், ஈரோடு எஸ்.எஸ்.எம்., கல்லூரி மற்றும் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியர் ஈடுபடுகின்றனர்.
🔵கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் மின் கம்பியில் சிக்கி ஆண் யானை உயிரிழந்தது.
💥தமிழ் சினிமாவில் துணை நடிகராக சில படங்களில் நடித்துள்ள இளவரசன் என்கிற அரசு எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
🔵தெற்கு ரயில்வேயின் 'ஜன் ஆஹார்' உணவகத்தில் சமீபத்தில் மசால் தோசை கவுண்ட்டர் திறக்கப்பட்டது. இங்கு ரூ.15க்குக் கிடைக்கும் மசால் தோசை ரயில் பயணிகளைப் பெரிதும் கவர்ந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக