🌴🇮🇳♈🙏�🙏�🙏�🙏�🙏�🙏�🙏�🙏�🙏�🙏�📡📡📡📡📡📡📡📡📡📡
♈🇮🇳🌴
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
இலங்கையில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவர்கள் மீதான வகுப்புத் தடையை நீக்கக் கோரி சக மாணவர்கள் இன்று வியாழக்கிழமை சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இசைக்கருவி வாசிக்கும் கலைஞர்களுக்கு பிரிட்டன் மருத்துவர்கள் எச்சரிக்கை-நாதஸ்வரத்தைப் போல, பிரிட்டனில் தாமிரத்தாலான பேக்பைப் இசைக் கருவியை வாசிக்கும் கலைஞர்களுக்கு மருத்துவர்கள் அபாய எச்சரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறார்கள்.அந்தக் கருவியின் குழாயை முறையாக, அடிக்கடி சுத்தம் செய்யாவிட்டால், அதில் பல ஆண்டுகளாகப் படியும் அழுக்கு, உயிருக்கே ஆபத்தாக முடியும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.அதுபோன்று, ஓர் இசைக்கலைஞரின் பேக்பைப்பில் படிந்த அழுக்கு, அவரது நுரையீரலில் குணப்படுத்த முடியாத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி, 61 வயதான அவர் உயிரிழந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தோரக்ஸ் மருத்துவ இதழில் விவரிக்கப்பட்டுள்ளது.வாசிக்கும் இசைக்கருவிகளின் உள்பக்கக் குழாய்களில் அபாயகமான நோய்க் கிருமிகள் படியாமல் தடுக்க, இசைக் கலைஞர்கள் தங்கள் கருவிகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவறுத்தியுள்ளனர்.
காஷ்மீரில் வன்முறையை தூண்டும் 5 சதவிதத்தினர் தேசத்திற்கு எதிரானவர்களே - மெகபூபா முப்தி
ரகுராம் ராஜனும், அரவிந்த் சுப்ரமணியனும் அமெரிக்காவால் இந்தியா மீது திணிக்கப்பட்டவர்கள்: சுப்ரமணியன் சுவாமி சொல்கிறார்
‘ஸ்கார்பீன்‘ நீர்மூழ்கி கப்பல் ரகசியங்கள் கசிவு விவகாரம்: எங்களுடைய தரப்பிலிருந்து வெளியாகவில்லை – எம்டிஎல்
”அன்பு, அமைதி மற்றும் சகோதரதுவம் மேம்படுவதற்காக” கடந்த 30 ஆண்டுகளாக கிருஷ்ணரை வழிபடும் முஸ்லிம் குடும்பம்- கான்பூரில் வசித்து வரும் முஸ்லிம் குடும்பம் கடந்த 30 ஆண்டுகளாக கிருஷ்ண ஜெயந்தியை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.கான்பூரில் வசித்து வருபவர் டாக்டர் அகமது, இவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கடந்த 30 ஆண்டுகளாக தனது வீட்டில் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடி வருகிறார். அவரது வீட்டில் கிருஷ்ணர் படங்களை அலங்காரம் செய்யப்பட்டு அவரது வீடே விழாக்கோலமாக மாறி உள்ளது.
கோவா சட்டசபை தேர்தல்:பாஜக தேர்தல் பொறுப்பாளராக நிதின் கட்காரி நியமனம் அமித்ஷா அறிவிப்பு
அரசு மருத்துவமனை வரிசையில் நிற்க வைத்த 11 வயது சிறுமி மரணம்- அரியானா மாநிலம் குர்கானில் உள்ள அரசு மருத்துவமனைக்கு 11 வயது சிறுமி ஒருவர் கிட்னி பிரச்சனைக்கு சிகிச்சைபெறுவதற்காக மிகவும் ஆபத்தான நிலையில் தனது தாயுடன் சென்றிருந்தார். அட்மிஷன் சிலிப் வாங்குவதற்கு அவரை வரிசையில் நிற்கச் சொல்லி உள்ளனர். சுமார் 45 நிமிடம் அவர் வரிசையில் நின்ற நிலையில், திடீரென மயக்கமுற்று அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
ஜம்மு காஷ்மீரில் வன்முறையை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் பெல்லட் துப்பாக்கிகளுக்கு மாற்று உபகரணம் விரைவில் அறிவிக்கப்படும் என்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறிஉள்ளார்.
ரோகித் வெமுலா தலித் அல்ல அவரது தற்கொலைக்கு துணை வேந்தர் காரணம் இல்லை விசாரணை அறிக்கையில் தகவல்- ஐதராபாத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் –
வட மாநிலங்களில் வெள்ளத்தினால் அடித்துவரப்பட்ட முதலைகள்:குடியிருப்பு பகுதிகளில் நுழைவதால் கிராம மக்கள் அச்சம்
நியூ ஜெர்சி செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் அவசரமாக கஜகஸ்தானில் தரையிறக்கப்பட்டது
தெலுங்கானா துணை முதல்-மந்திரி வெளிநாட்டு பயிற்சியாளர் கருத்து; கோபிசந்த், பிவி சிந்து பதில்- பிவி சிந்து பேசுகையில், ”எனக்கு கோபி சார் தான் நல்ல பயிற்சியாளர், வேறு எதுவும் சொல்வதற்கு நான் விரும்பவில்லை,” என்று கூறிவிட்டார். கரோலின் மரின் உண்மையாகவே சிறப்பாக ஆடினார், அது அவருடைய நாள். அடுத்த மாதம் நடைபெற உள்ள சூப்பர் சிரியஸ் போட்டிக்கு தயாராகி வருகின்றேன், என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்று சிந்து மகிழ்ச்சி பொங்க கூறிஉள்ளார்.தெலுங்கானா துணை முதல்-மந்திரி முகமது அலியின் சரியான பயிற்சியாளர் கருத்து தொடர்பாக கோபிசந்த் பேசுகையில், ’அவர் தெரியாமல் கூறியிருக்கலாம், சாதகமான விஷயங்களில் கவனம் செலுத்த இருக்கின்றேன்,” என்று கூறிஉள்ளார்.
மனிதர்கள் வாழ தகுந்த பூமியை போன்றே மற்றொரு கிரகம் கண்டுபிடிப்பு
மனிதர்கள் வாழ தகுந்த பூமியை போன்றே மற்றொரு கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இரண்டாவது பூமியாக திகழும் புதிய கிரகம் குறித்த தகவல்களை விஞ்ஞானிகள் வெளியிட்டு உள்ளனர்.
நமது சூரிய மண்டலத்தில் இருந்து சுமார் 4.2 ஒளியாண்டுகள் அல்லது 25 ட்ரில்லியன் மைல் தொலைவில் உள்ளது. குறித்த புதிய கிரகம் ப்ரோக்ஸிமா பி சென்டவுரி (Proxima Centauri)அருகில் உள்ளது.
நமது சூரியக் குடும்பத்திற்கு அப்பால் பிராக்ஸிமா போல ஆயிரக்கணக்கான, கோடிக்கணக்கான குட்டி குட்டி நட்சத்திரங்கள் உள்ளன. இருப்பினும் நமது சூரியக் குடும்பத்திற்கு வெகு அருகே நம்மைப் போன்ற ஒரு கிரகம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
மினாவில் சாத்தான் மீது கல் எறியும் நிகழ்ச்சி 12 மணி நேரமாக குறைப்பு சவுதி அரசு முடிவு
நஜாத் பெல்கசம் இப்போது பிரான்ஸின் கல்வி அமைச்சராக இருக்கிறார். அவருடைய ஆரம்பகால வாழ்க்கையோ மொராக்கோவில் ஆடு மேய்க்கும் சிறுமியாக வேலை பார்த்ததுதான்.
பல்வேறு நாடுகளில் போகிமோன் கோ விளையாட்டிற்கு தடைவித்திக்க முடிவு
பெண்களின் பாதுகாப்புக்கு அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் அனைத்துக்கட்சி தலைவர்களுக்கு டாக்டர் ராமதாஸ் கடிதம்
தமிழ்நாட்டில் 2 நாட்கள் மழைபெய்யும் சென்னை வானிலை மையம்
பிறந்தநாள் விழா விஜயகாந்துக்கு மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் வாழ்த்து
மழை வெள்ளம் எதிரொலி: அலகாபாத் பள்ளிகளுக்கு ஆகஸ்ட் 27-ம் தேதி வரை விடுமுறை
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.208 குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.2,957-க்கும், ஒரு சவரன் ரூ.23,656-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.48.20-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.45,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
டெல்லியில் உள்ள ஜே.என்.யூ. பல்கலைக்கழக மாணவர்கள் அன்புமணிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். ஜே.என்.யூ. பல்கலைக்கழக கருத்தங்கில் பங்கேற்ற வந்த அன்புமணிக்கு எதிராக போராட்டம் நடத்துகின்றனர். தருமபுரி கலவர சம்பவத்திற்கு அன்புமணி காரணம் என குற்றம்சாட்டி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஐதராபாத் நகரில் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் ஆட்டோ ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்தனர்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நடவடிக்கைக்கு எதிரான போராட்டம் தொடரும் : ராகுல்காந்தி
சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் இரண்டு பெண் நக்சல்களை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒரு பெண் நக்சல் போலீசார் முன்னிலையில் சரணடைந்தார்.
சர்வதேச ஒருநாள், டி 20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் தில்ஷான்
ஏமன் நாட்டில் உள்நாட்டு யுத்தத்தில் நடைபெற்ற மீறல்கள் பற்றி சர்வதேச விசாரணை நடத்த ஐ.நா. மனித உரிமைகள் தலைமை அழைப்பு விடுத்துள்ளது.
சென்னை அடுத்து கூடுவாஞ்சேரியில் கொடி மரத்தில் மின்சாரம் தாக்கியதில் 5 பேர் காயமடைந்துள்ளனர். விஜயகாந்த் பிறந்தநாளை ஒட்டு 70 அடி கம்பத்தில் கொடியேற்ற தேமுதிக தொண்டர்கள் முயற்சி செய்துள்ளனர். அப்போது மின்சார கம்பியை உரசியதால் கொடிமரத்தல் மின்சாரம் பாய்ந்து 5 பேர் காயமடைந்துள்ளனர்.
கர்நாடகாவில் ஜூனியர் என்டிஆர் ரசிகர்களுடன் நடந்த மோதலில் பவன் கல்யாண் ரசிகர் ஒருவர் உயிரிழந்தார். இறந்த ரசிகரின் குடும்பத்துக்கு நேரில் சென்று பவன் கல்யாண் ஆறுதல் கூறினார்.
பீகார் மாநிலம் பாட்னாவில் காலணி கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கடையில் இருந்த பல பொருட்கள் எரிந்து சாம்பலானது.சம்பவ இடத்திற்கு 6 தீயணைப்பு வண்டிகள் விரைந்துள்ளன.
காவிரி பிரச்சினை குறித்து விவாதிக்க கர்நாடகாவில் நாளை மறுநாள் அனைத்துக் கட்சி கூட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகத்தில் காவிரி பாயும் மாவட்ட எம்.பி.க்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மணலியில் ரூ.7 கோடி மதிப்புள்ள இந்தோனேஷியா சிகரெட் பண்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரிலிருந்து கன்டெய்னரில் 700 அட்டை பெட்டிகளில் எடுத்து வரப்பட்ட சிகரெட் பண்டல்களை கைப்பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பனங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் கலா(32). இவருக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து காய்ச்சல் வந்துள்ளது. இதனையடுத்து பரிசோதனை செய்ததில் அவருக்கு டெங்கு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த வருடம் இந்த பகுதியில் டெங்கு காய்ச்சலுக்கு பலர் பாதிக்கப்பட்டனர். இந்த வருடம் டெங்கு தற்போது ஆரம்பமாகியுள்ளது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சித்தராமையாவுடன் தமிழக விவசாயிகள் சந்திப்பு
உலக வங்கி தலைவர் பதவிக்கு, தற்போதைய தலைவர் ஜிம் யோங் கிம்மை, நிறுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க நிதித்துறை மற்றும் கருவூல செயலாளர் ஜேக்கல்லியூ கூறுகையில்,உலக வங்கியின் தலைவராக தனது பதவிக்காலத்தில் பணிகளை திறம்பட செய்தவர் ஜிம் யாங். தற்போது உலகிற்கு அச்சுறுத்தலாக உள்ள பல சவால்களை சமாளித்தும், ஏழ்மை மற்றும் ஏற்றத்தாழ்வுகளை நீக்கவும், பருவமழை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளை தடுக்கும் பணியில் ஈடுபட்டார். முதல் பதவிக்காலத்தில், சிறப்பாக பணியாற்றிய ஜிம் யாம் கிம்மை மீண்டும் தேர்வு செய்வதன் மூலம் உலக வங்கி மேற்கொண்டு வந்த முக்கிய முயற்சிகள் மற்றும் சீர்திருத்தத்தங்களை நிறைவேற்ற முடியும் என்றார்.
உலக வங்கியின் தலைவராக, தென் கொரியாவை சேர்ந்த ஜிம் யாங் கிம், கடந்த 2012ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி பதவியேற்றார். உலக வங்கியின் 12வது தலைவராக பதவியேற்று அவரது பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது.
விமான நிறுவனத்தில் சேர விரும்பிய தன்னை, ஆளுமை திறன் இல்லாத காரணத்தினால் நிராகரிக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.
கிருஷ்ண ஜெயந்தி போன்ற விழாக்களின் போது மனித பிரமிடு அமைத்து உரியடி நிகழ்ச்சி வடமாநிலங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சிகளில் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களை அனுமதிக்கக் கூடாது, மனித பிரமிடின் உயரம் 20 அடிக்கு மேல் இருக்கக் கூடாது எனவும் சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது.
ஆனால் சுப்ரீம் கோர்ட்டின் தடையை மீது மும்பையில் சுமார் 3300 மண்டலங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்று கூடி மனித பிரமிடு அமைத்து உரியடி நிகழ்ச்சி நடத்தினர். இந்த உறியடி நிகழ்ச்சியின் போது 12 பேருக்கு காயம் ஏற்பட்டதாகவும், அவர்களில் 9 பேர் முதலுதவி அளிக்கப்பட்டு வீட்டிற்கு சென்று விட்டதாகவும், 3 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
ஆபத்தான தெரு நாய்களை கொல்லும் கேரள அரசின் முடிவுக்கு, விலங்குகள் நல அமைப்பு, கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
♈🇮🇳🌴🌴🌴🌴🌴🇮🇳♈
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக