📡💥📡💥📡💥📡💥📡💥📡
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
📡📡📡📡📡📡📡📡📡📡📡
💥இறந்த துப்புரவுப் பணியாளர்கள் 41 பேரின் குடும்பங்களைக் கண்டுபிடிப்பது கடமை: அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
இறந்து போன 41 பேரின் குடும்பங்களைக் கண்டறிவது அரசின் கடமை. இல்லையெனில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்று தமிழக அரசுக்கு
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
📡ஆக்கிரமிப்பு அகற்றம்: செப். 26-க்குள் அறிக்கை தர அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து செப்டம்பர் 26-க்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
💥கோகுலாஷ்டமி: புதிய சலுகைகளை அறிவித்தது பி.எஸ்.என்.எல்.
கோகுலாஷ்டமியை முன்னிட்டு, பி.எஸ்.என்.எல். தமிழ்நாடு தொலைபேசி வட்டம் புதிய சலுகைத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி வியாழக்கிழமை முதல் வாடிக்கையாளர்களுக்கு மூன்று டேட்டா எஸ்.டி.வி. எனப்படும் சிறப்பு விலை கட்டண சேவை திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
டேட்டா எஸ்.டி.வி. 1099 திட்டத்தில்,அளவற்ற டேட்டா பயன்பாடுகளுடன், அதி வேக சேவையும், டேட்டா எஸ்.டி.வி. 549 திட்டத்தில் 10 ஜி.பி. டேட்டா பயன்பாடும் 30 நாள்கள் வேலிடிட்டியுடன்
அளிக்கப்பட்டுள்ளன.
இதேபோல், டேட்டா எஸ்.டி.வி. 156 திட்டத்தில் 2 ஜி.பி. டேட்டா பயன்பாட்டுடன், 10 நாள்களுக்கு வேலிடிட்டியும் வழங்கப்பட்டுள்ளன.
📡தமிழக ஆளுநருடன் தாய்லாந்து தூதர் சந்திப்பு
தமிழக ஆளுநர் கே.ரோசய்யாவை, தாய்லாந்து நாட்டின் தூதர் ராங்கநீட் ரக்சரோன் வியாழக்கிழமை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
💥சோமாலியாவில் ஓட்டலில் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல்
மொகாதிசு: சோமாலியாவில் ஒட்டல் ஒன்றில் ஆயுங்களுடன் புகுந்த பயங்கரவாதிகள் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தி வருகின்றனர்.ஆப்ரிக்க நாடான சோமாலியாவின், அல்கொய்தா ஆதரவு பெற்ற அல்ஷகாப் என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டுவருகிறது. இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் சில தலைநகர் மெகாதிசு கடற்கரையோரம் உள்ள பானாதிர் என்ற ஓட்டலில் துப்பாக்கியுடன் புகுந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். முன்னதாக போலீஸ் செக் போஸ்டை கார் குண்டு மூலம் தகர்த்தனர்.இரவில் தாக்குதல் நடத்தியதால் அங்கு தொடர்ந்து துப்பாக்கிச்சுடும் சத்தம் கேட்டதாக செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
📡ரயில் பயணிகளுக்கு 92 பைசாவில் பயணக் காப்பீடு
புதுடில்லி : ரயிலில் முன்பதிவு செய்து பயணிக்கும் ரயில் பயணிகளுக்கு, 92 பைசாவில், 10 லட்சத்திற்கான பயணக் காப்பீடு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டம் வரும் ஆக்., 31ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.ரயில்களில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பயணிகளுக்காக 92 பைசாவில் பயணக் காப்பீடுத் திட்டமானது, வரும் 31ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஆன்லைன் டிக்கெட் முன்பதிவில், விருப்பத் தேர்வாக இருக்கும் இந்த பயணக் காப்பீடு திட்டத்திற்கு, பயணிகள் விரும்பினால், கட்டணத்துடன் கூடுதலாக 92 பைசா செலுத்தி பயணக் காப்பீடு எடுத்துக் கொள்ளலாம். இத்திட்டத்தின் படி, ரயில் விபத்து அல்லது பயங்கரவாதத் தாக்குதலில் பயணக் காப்பீடு எடுத்துள்ள பயணிகள் பலியானாலோ அல்லது முழுமையாக செயல்படாத அளவுக்கு ஊனமடைந்தாலோ அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். அதேபோல் உடல் உறுப்புகளை இழப்பவர்களுக்கு ரூ.7.5 லட்சமும், காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவுக்கு ரூ.2 லட்சம் வரையும் வழங்கப்படும். இத்திட்டம் 5 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கும், வெளிநாட்டினருக்கும், புறநகர் ரயில்களில் பயணிப்பவர்களும் பொருந்தாது. மேலும் முன்பதிவு டிக்கெட்டை ரத்து செய்தால் பயணக் காப்பீட்டுத் தொகை திருப்பி அளிக்கப்படமாட்டாது.
📡பயங்கரவாதம் குறித்து மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சு: இந்தியா திட்டவட்டம்
பாகிஸ்தானுடன் எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக இந்தியா மீண்டும் தெரிவித்துள்ளது.
💥தமிழகத்துக்கு தண்ணீர் தர இயலாது: கர்நாடக முதல்வர் சித்தராமையா
தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடும் நிலையில் கர்நாடகம் இல்லை என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
📡இன்னொரு காதல் திராவகம்! காதலன் மீது முன்னாள் காதலன் ஆசிட் வீச்சு!
இளைஞர் ஒருவர், தான் விரும்பிய பெண்ணை காதலித்த வருமானவரித்துறை அதிகாரி மீது ஆசிட் வீசிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
💥ராகுலுக்கு ஞானம் பிறந்தது: வெங்கையா நாயுடு கிண்டல்
புதுடில்லி : காங்., துணைத் தலைவர் ராகுலுக்கு ஞானம் பிறந்ததாக பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான வெங்கையா நாயுடு டுவிட்டரில் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
📡காசியாபாத்தில் துப்பாக்கிச் சூடு: ஒரு போலீஸ் அதிகாரி காயம்
காசியாபாத்: காசியாபாத் மாநிலம், முரட்நகரில் போலீசார்கள் மற்றும் அடியாட்கள் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு போலீஸ் அதிகாரி சுடப்பட்டார். அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும் அடியாட்களை காட்டில் தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர்.
💥மகனை பார்க்க ஷார்ஜா வந்த தேனி முதியவர் மாயம்.. தெரிந்தால் தகவல் கொடுங்களேன்!
ஷார்ஜா: ஷார்ஜா வந்த தமிழகத்தைச் சேர்ந்த பி. காளியப்பனை (62 ) காணவில்லை. இவர் தமிழகத்தில் வங்கி ஒன்றில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். காணாமல் போன தனது தந்தையை கண்டுபிடித்து தருமாறு அவரது மகன் லக்ஷ்மண் கோரிக்கை விடுத்துள்ளார்.
சார்ஜாவில் எடிசலாட் நிறுவனத்தில் தொழில்நுட்ப பணியாளராக லக்ஷ்மண் பணிபுரிந்து வருகிறார். இவர் தேனியைச் சேர்ந்தவர். குடும்பத்துடன் வசித்து வரும் இவர் தனது பெற்றோரை விசிட் விசாவில் அழைத்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இவர்கள் சார்ஜாவந்தனர்.
நேற்று முன் தினம் புதன்கிழமை மாலை 6.30 மணிக்கு வீட்டில் இருந்து தனியாக நடைப்பயிற்சி சென்றார். அவரிடம் கைபேசி எதுவும் இல்லை. வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் மிகவும் கவலையடைந்துள்ளனர்.
இது குறித்து சார்ஜா போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போன காளியப்பன் குறித்த விபரம் தெரிந்தவர்கள் அவரது மகன் லக்ஷ்மணனை 0565745161 / 0565490814 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
📡இத்தாலி நில நடுக்கம்.. மாயமானவர்களை தேடும் பணி மூன்றாவது நாளாக தொடர்கிறது
ரோம்: இத்தாலியில் நேற்றுமுன்தினம் அதிகாலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. அக்குமோலி, அமாட்ரைஸ் உள்ளிட்ட நகரங்களில் நிலநடுக்கத்தால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை இதுவரையிலான நிலவரப்படி 250 ஆக உள்ளது. 368க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
💥கோயம்புத்தூரில் வெள்ளை காகம் கண்டுபிடிப்பு
கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் நகரில் வெள்ளை காகம் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த காகம் அல்பினீசத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
💥தண்ணீர் கிடைக்காமல் அல்ல.. பன்றி காய்ச்சல் பாதிப்பால் மயங்கி விழுந்தாரா ஜெய்ஷா
டெல்லி: நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக் விளையாட்டில் இந்தியா சார்பில் கேரளாவைச் சேர்ந்த ஜெய்ஷா (33) இவர் பெண்களுக்கான 42 கி.மீ மாரத்தனில் பங்கேற்றார். இந்த போட்டியில் 89வது இடத்தை பிடித்தார் ஜெய்ஷா. இலக்கை 2 மணி 47 நிமிடம் 19 வினாடிகளில் அவர் கடந்தார்.
இதனிடையே போட்டியின் போது தனக்கு இந்தியா சார்பில் தண்ணீர் கூட வழங்கவில்லை எனவும், இதனால் தான் உயிருக்கே போராட வேண்டிய நிலை இருந்ததாகவும் புகார் கூறியிருந்தார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ சோதனையில் ஹெச்1என்1 வைரஸ் (பன்றி காய்ச்சல்) இருப்பது தெரியவந்துள்ளது. அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
📡அமைதியான காஷ்மீரே இந்தியாவின் எதிர்காலம்! - ராஜ்நாத் சிங்
ஸ்ரீநகர்: காஷ்மீரில் அமைதியும், இயல்பு நிலையும் திரும்ப ஒவ்வொருவரும் ஒத்துழைக்க வேண்டும். இளைஞர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களது எதிர்காலத்தோடு விளையாடாதீர்கள். அமைதியான காஷ்மீரே இந்தியாவின் எதிர்காலம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறி உள்ளார்.
📡நேற்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இந்தியாவின் பல்வேறு இடங்களில் கொண்டாட்டம்
நேற்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இந்தியாவின் பல்வேறு இடங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. வங்காளம் மாநிலம் டாக்காவில் உள்ள தகேஸ்வரி கோயிலில் யாகம் நடத்தியும், மோளம் அடித்தும், வேடமிட்டும் மக்கள் உற்சாகமாக கொண்டாடினர். மேலும் உத்தரகண்ட் மாநிலம் டேராடூன், உத்தரபிரதேச மாநிலம் மதுரா போன்ற இடங்களில் உள்ள கிருஷ்ணர்கள் கோவில்களிலும் மற்றும் டெல்லியில் உள்ள இஸ்கான் கோவிலிலும் கிருஷ்ண ஜெயந்தியை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
💥கோலூன்றிக்கூட நடக்க முடியாத நிலையில் ம.தி.மு.க.! - சாடும் தமிழிசை
புதுடெல்லி: தமிழகத்தில் பா.ஜ.க. ஒருபோதும் காலூன்றாது என்று தமிழக சட்டப்பேரவை தேர்தலின்போது வைகோ கூறினார். ஆனால், கோலூன்றிக்கூட நடக்க முடியாத நிலையில் வைகோவின் ம.தி.மு.க. உள்ளது என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறி உள்ளார்.
📡பாரிவேந்தரிடம் விசாரணை
வேந்தர் மூவிஸ் மதன் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தலைமறைவாகிவிட்டார். இந்தநிலையில் மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.100 கோடி வரை மோசடி செய்துவிட்டதாக பட அதிபர் மதன் மீது புகார்கள் குவிந்தன. இந்த புகாரின் அடிப்படையில் மதன் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. மோசடி வழக்கில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் பெயரும் சேர்க்கப்பட்டது. இந்த மோசடி வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தின் வேந்தரும், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவருமான பாரிவேந்தரிடம் வியாழக்கிழமை போலீசார் 'திடீர்' விசாரணை மேற்கொண்டனர்.
💥உணவு உற்பத்தியில் தமிழகம் முன்னோடி மாநிலம்: வேளாண்மை துறை அமைச்சர் பேச்சு
உணவு உற்பத்தியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது என்றார் வேளாண்மைத் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு.
📡மேகதாதூவில் பெரும் அணையை கட்டுகிறது கர்நாடகம்: கிருஷ்ணராஜ சாகர் அணையை விட பெரிய அணை கட்ட திட்டம்
கர்நாடகம்: மேகதாதூவில் காவிரியின் குறுக்கே ரூ.5900 கோடி செலவில் பெரும் அணை கட்டப்படும் என்று கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாடேல் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
💥மேற்கு வங்கத்தில் பரவும் டெங்கு.. 5,639 பேர் பாதிப்பு... பலி எண்ணிக்கை 23-ஆக உயர்வு!
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் டெங்கு காய்ச்சலால் 5000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டெங்கு காய்சலால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்துள்ளது.
📡காற்றழுத்த தாழ்வு நிலை: இன்று மழைக்கு வாய்ப்பு
வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலையால், தமிழகத்தில் வெள்ளிக்கிழமை மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
💥வேலூர் நாட்ராம்பள்ளியில் வழக்கறிஞர் உடல் கண்டெடுத்தனர். சென்னையில் காணாமல் போன வழக்குரைஞர் ஷ்யாம்சுந்தர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று காவல்துறை தகவல்.
📡சென்னை: சென்னை மணலி அருகே ரூ. 7 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்களை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
💥திண்டுக்கல் Rvs கல்லூரி அருகே குடும்ப தகராறில் மனைவி மகேஷ்வரியை கட்டையால் தாக்கி தலையில் கல்லை போட்டு கொலை செய்த கணவன் போலீசார் விசாரணை.
📡திருவள்ளூர் திருத்தணி அடுத்த ஆர்.கே.பேட்டை அருகே நாகபூண்டியில் அதிமுக நிர்வாகிகள் கோஷ்டி மோதலில் மாவட்ட கவுன்சிலர் உட்பட ஐந்து பேர் படுகாயம்
💥கடையநல்லூர் Eb அருகே புளியங்குடியிலிருந்து தென்காசிக்கு சென்ற அரசு பஸ்ஸில் பாய்ந்து அடையாளம் தெரியாத நபர் பலி
📡நெல்லை மாவட்ட அணைகளின் நீர் மட்டம் (26-08-16)
பாபநாசம்:
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 54.05 அடி
நீர் வரத்து : 428.82 கன அடி
வெளியேற்றம் : 554.75 கன அடி
சேர்வலாறு :
உச்ச நீர்மட்டம்: 156 அடி
நீர் இருப்பு : 68.04 அடி
மணிமுத்தாறு :
உச்ச நீர்மட்டம்: 118 அடி
நீர் இருப்பு : 61.56 அடி
நீர் வரத்து : 13 கன அடி
வெளியேற்றம் : 405 கன அடி
📡💥📡💥📡💥📡💥📡💥📡
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக