📻📡📻📡📻📡📻📡📻📡📻
www.sivakasiteacherkaruppasamy.com
📻📻📻📻📻📻📻📻📻📻📻
📻மதுக்கூரில் அறுந்து கிடந்த மின் கம்பியைத் தொட்ட 2 சிறுவர்கள் பரிதாப பலி
பட்டுக்கோட்டை: தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூரில் திங்கள்கிழமை காலை அறுந்து கிடந்த மின் கம்பியைத் தொட்டபோது மின்சாரம் பாய்ந்து 2 சிறுவர்கள் உயிரிழந்தனர்.
📻புதுச்சேரி: வேளாண்மைக்கு ரூ.73.27 கோடி, கால்நடை பராமரிப்புக்கு ரூ.22.85 கோடி ஒதுக்கீடு
புதுச்சேரி: புதுச்சேரி பட்ஜெட்டில் வேளாண்மைத் துறைக்கு ரூ.73.27 கோடியும், கால்நடை பராமரிப்புக்கு ரூ.22.85 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
📡குழந்தை பெற்ற 5-ஆம் வகுப்பு பள்ளி மாணவி: மாமா தான் காரணம் என சந்தேகம்!-கர்நாடகாவில் உண்டு உறைவிட பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி ஒருவர் குழந்தை பெற்றெடுத்தது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
📻பீகாரில் 23 பள்ளி குழந்தைகள் உயிரிழந்த வழக்கு: தலைமை ஆசிரியருக்கு 10 ஆண்டு சிறை
பீகார்: சாப்ராவில் 23 பள்ளி குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் தலைமை ஆசிரியருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2013ம் ஆண்டு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 23 குழந்தைகள் உயிரிழந்தனர். பள்ளி மாணவர்கள் உயிரிழந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தலைமை ஆசிரியர் மீனா தேவிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை அளித்துள்ளது.
📡பாட்டியை 'பலி' வாங்கிய ஆட்டோகாரர்! கொலையில் முடிந்த தற்கொலை
குடும்பத்தகராறில் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட ஆட்டோகாரர், மூதாட்டி மீது விழுந்தார். இதில் மூதாட்டி உயிரிழந்தார். உயிர் பிழைத்த ஆட்டோகாரர் சிகிச்சை பெற்று வருகிறார்.
📻டெல்லியில் கனமழை: போக்குவரத்து பாதிப்பு
டெல்லி: தலைநகர் டெல்லியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சில இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
📡ஆருஷி கொலை வழக்கு: நுபுர் தல்வாருக்கு 3 வாரங்கள் பரோல்
அலகாபாத்: ஆருஷி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் நுபுர் தல்வாருக்கு 3 வாரங்கள் பரோல் அளித்து அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நுபுர் தல்வார் தாயின் உடல்நிலை சரியில்லாததால் அவரை பார்க்க நுபுர் தல்வாருக்கு 3 வாரங்கள் பரோல் அளிக்கப்பட்டுள்ளது.
📻கொடைக்கானலில் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி!
திண்டுக்கல்: கொடைக்கானலில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடந்துள்ளனர்.
📡என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம், பேச்சுவார்த்தை தோல்வி : திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும் என அறிவிப்பு
புதுச்சேரி: என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வது தொடர்பாக புதுச்சேரியில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது தொடர்ந்து திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
📻சொத்து விபரத்தை மல்லையா தெரிவிக்கவில்லை: சுப்ரீம் கோர்ட்டில் வங்கிகள் புகார்
புதுடில்லி: விஜய் மல்லையா தனது முழு சொத்து விபரத்தை தெரிவிக்கவில்லை என சுப்ரீம் கோர்ட்டில் வங்கிகள் சார்பில் புகார் கூறப்பட்டுள்ளது.சர்ச்சைக்குரிய தொழிலதிபர் விஜய் மல்லையா வங்கியில் கடன் வாங்கி கொண்டு லண்டனில் வசித்து வருகிறார். அவர் மீது பண மோசடி வழக்கும் உள்ளது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு உள்ளது. மல்லையா நேரில் ஆஜராக அமலாக்கத்துறை பல முறை சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால் அவர் ஆஜராகவில்லை.இந்நிலையில் மல்லையா வங்கியில் கடன் வாங்கியது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது வங்கிகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கோர்ட் உத்தரவுப்படி, மல்லையா தனது முழு சொத்து விபரத்தை வெளியிடவில்லை.
📡டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் பலியான நிலையில் பொதட்டூர்பேட்டையில் 9 பேருக்கு மர்ம காய்ச்சல்
பள்ளிப்பட்டு: பொதட்டூர்பேட்டையில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் பலியானான். இதைத்தொடர்ந்து அக்கிராமத்தில் மேலும் 9 பேருக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ளது பொதட்டூர்பேட்டை கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த தேவன் மகன் சீனிவாசன் (15) டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு சென்னை எழும்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் சீனிவாசன் இறந்தான். டெங்கு காய்ச்சல் காரணமாகத்தான் இறந்தான் என்று கூறி அவனது உறவினர்கள், பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
📻சசிகலா புஷ்பா முன் ஜாமீன் - தீர்ப்பு ஒத்திவைப்பு
சசிகலா எம்.பியின் முன் ஜாமீன் மனு மீதான விசாரணை முடிந்தது. தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தங்களை கொடுமைப்படுத்தியதாக வீட்டுப்பணிப்பெண்கள் இருவர் கொடுத்த புகாரில் கைதாகாமல் இருக்க, சசிகலா புஷ்பா, அவரது கணவர், மகன், தாயார் ஆகியோர் முன் ஜாமீன் கோரிய வழக்கில் சசிகலா புஷ்பா உட்பட அனைவரும் மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் 12.30 மணியளவில் நீதிபதி வேலுமணி முன்பு ஆஜரானார்கள். அரசு தரப்பு வழக்கறிஞர் புகழேந்தி ஆஜரானார். சசிகலா தரப்பில் மூத்த வழக்கறிஞர் வீர.கதிரவன் ஆஜரானார்.
சசிகலாவுக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என்று அரசு தரப்பில் கடும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கு விசாரணையை மாலை 4 மணிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி.
📡சென்னை, பெசன்ட் நகர் தேவாலயப் பெருவிழா தொடக்கம்.. பக்தர்கள் கூட்டத்தால் போக்குவரத்து ஸ்தம்பிப்பு!
சென்னை: சென்னை பெசன்ட்நகர் வேளாங்கண்ணி கோயிலுக்கு பக்தர்கள் ஏராளமானோர் சென்னையில் நடைப்பயணம் மேற்கொண்டதால், பெசன்ட்நகர், அடையாறு மற்றும் மந்தைவெளி ஆகிய இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
📻மரக்காணம் கலவரம் தொடர்பாக 32 பேரை கைது செய்ய ஐகோர்ட் உத்தரவு
சென்னை: விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நடந்த கலவரம் தொடர்பாக 32 பேரை கைது செய்ய ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2013ம் ஆண்டு பாமக நடத்திய திருவிழாவின் போது 7 வீடுகள் எரிக்கப்பட்டது தொடர்பாக 34 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் தரக்கோரி அசோக்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் 32 பேரை கைது செய்து திண்டிவனம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளது.
📡மேற்கு வங்க மாநிலத்தின் பெயர் மாற்றம்: சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேறியது
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை பங்களா என மாற்றி சட்டப்பேரவையில் கடும் எதிர்ப்புக்கு இடையே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
📻காவிரி விவகாரம்: தமிழகத்தில் நாளை பந்த்.. பஸ்கள் இயக்கத்தை ரத்து செய்தது கர்நாடகா
📡தற்கொலைப் படை தாக்குதல்... ஈராக்கில் 18 பேர் பலி.. 26 பேர் படுகாயம்
பாக்தாத்: ஈராக்கில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். 26 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
📻தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!
சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களின் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
📡இந்திய தண்டனை சட்டத்திலிருந்து மரண தண்டனை பிரிவை நீக்கவேண்டும்: திராவிடர் விடுதலைக்கழகம் கோரிக்கை
📻பணத்துக்காக வாலிபரை கடத்தி சித்ரவதை செய்த 5 பேர் கைது
திருவள்ளூர்: ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சித்த மருத்துவரிடம் ரூ.25 லட்சம் பணம் கேட்டு வாலிபரை கடத்திச் சென்று சித்ரவதை செய்த 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
📡டெங்கு காய்ச்சல் தொடர்பாக பொதுமக்கள் பீதி அடைய தேவையில்லை: தமிழக அரசு
சென்னை: டெங்கு காய்ச்சல் தொடர்பாக பொதுமக்கள் பீதியோ பதற்றமோ அடைய தேவையில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. டெங்குவை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
📻வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் கொடியேற்றப்பட்டது
நாகை: நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள பிரசித்திபெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் கொடியேற்றத்துடன் ஆண்டு திருவிழா துவங்குகியது. பேராலய முகப்பிலிருந்து புனிதக் கொடி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடைத்தெரு, கடற்கரை சாலை, ஆரிய நாட்டுத்தெரு வழியாக மீண்டும் பேராலய முகப்பில் வந்து சேரும். புனிதக் கொடியை தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் புனிதம் செய்து வைத்ததும் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.
📡தாயும், மகளும் கூட்டு பாலியல் பலாத்கார விவகாரத்தில் சர்ச்சை கருத்து: அசம் கானுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
உத்தரப் பிரதேச மாநிலம், புலந்த்சாஹரில் தாயும், மகளும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் ஆட்சேபத்துக்குரிய கருத்தை வெளியிட்ட மாநில அமைச்சர் ஆஸம் கானுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
📻விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் மிதமான மழை
விழுப்புரம்: விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. விக்கிரவாண்டி, கோழியனூரில் அரை மணி நேரமாக பலத்த மழை பெய்து வருகிறது.
📡பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக கே.பாண்டியராஜன் நியமனம்
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக கே.பாண்டியராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறையும் அவருக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
📻தமிழக அமைச்சரவையில் மாற்றம்: மாஃபா கே. பாண்டியராஜன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக நியமனம்!
சென்னை: பால்வளத்துறை அமைச்சர் பதவியில் இருந்து எஸ்.பி. சண்முகநாதன் விடுவிக்கப்பட்டார். சண்முகநாதன் வகித்து வந்த இலாக்கா கே.டி.ராஜேந்திர பாலாஜியிடம் ஒப்படைக்கப்பட்டது
📡திருவில்லிபுத்தூர் வனப்பகுதியில் செந்நாய்கள் அதிகரிப்பு
திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் வனப்பகுதியில் செந்நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே உள்ளது
📻பெஞ்சமினுக்கு ஊரக தொழிற்துறை ஒதுக்கீடு!
முதல்வர் ஜெயலலிதா பரிந்துரையின் பேரின் ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பள்ளிகல்வித்துறை அமைச்சர் பொறுப்பை வகித்து வந்த பெஞ்சமினுக்கு ஊரக தொழில்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
📡போதிய மழை இல்லாததால் ஆழியார் அணை நீர்மட்டம் சரிவு
பொள்ளாச்சி: பிஏபி., திட்டத்தில் முக்கிய நீராதாரமாக உள்ள ஆழியார் அணைக்கு, கான்டூர் கால்வாய், அப்பர் ஆழியார், குரங்கு அருவி மற்றும் நீரோடைகள் வழியாக தண்ணீர் வருகிறது. இந்த ஆண்டு பெய்த தென்மேற்கு பருவ மழையால், ஆழியார் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வந்தது. மாத துவக்கத்தில் 80 அடி வரை தண்ணீர் இருந்தது. தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை இல்லாததால், ஆழியார் அணைக்கு நீர்வரத்து நாளுக்கு, நாள் குறைந்து வருகிறது. தற்போது, அணை நீர் மட்டம் 71.65 அடியாக உள்ளது. வினாடிக்கு 58 கன அடி தண்ணீரே வந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் பழைய ஆயக்கட்டு பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு வினாடிக்கு 263 கன அடி தண்ணீர் திறப்பு தொடர்கிறது.
தண்ணீர் வரத்து குறைந்ததால், அணையின் பெரும்பாலான பகுதி பாறை மற்றும் மணல் மேடுகளாக காட்சியளிக்கிறது.
📻500 அம்மா பூங்காக்கள் -500 அம்மா உடற்பயிற்சிக் கூடங்கள்:ஜெ., அறிவிப்பு
📡டெங்கு தடுக்க போர்கால நடவடிக்கை: அரசு தகவல்
சென்னை: டெங்கு நோய் பரவாமல் தடுக்க தமிழக அரசு போர்கால நடவடிக்கை எடுத்து வருகிறது. மக்கள் அச்சப்பட வேண்டிய தேவையில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது
📻பேபி வாய்க்காலில் உடைப்பு: காலிங்கராயன் வாய்க்காலில் கழிவுநீர் கலந்து மாசுபடும் அவலம்
ஈரோடு: ஈரோடு அருகே காலிங்கராயன்பாளையத்தில் உள்ள காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து காலிங்கராயன் வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீர் சுமார் 75 கி.மீ., தூரம் பயணித்து ஆவுடையார்பாறை பகுதியில் நொய்யலில் கலக்கிறது. தற்போது பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் வாய்க்காலில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் இருந்து வெளியேறும் சாக்கடை, சாய, தோல் கழிவுநீர் வாய்க்காலில் கலப்பதை தடுக்கும் வகையில் வாய்க்காலின் வலதுகரையில் பேபி வாய்க்கால் கட்டப்பட்டுள்ளது. இந்த கழிவுநீர் பிச்சைக்காரன்பள்ளம் ஓடை, சுண்ணாம்பு ஓடை, பெரும்பள்ளம் ஓடை வழியே காவிரியில் கலக்கும் வகையில் பேபி வாய்க்கால் அமைந்துள்ளது.
சமீபகாலமாக பேபி வாய்க்கால் தூர் வாரும் பணி தொய்வடைந்ததால் பிளாஸ்டிக் கழிவுகளாலும், சாய திடக்கழிவுகளாலும், நிரம்பி வழிகிறது. இதன் காரணமாக கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடி காலிங்கராயன் வாய்க்காலில் கலக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது.
📡ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் புறநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு: காய்ச்சல் வார்டு அடைப்பால் அவதி
ஈரோடு: ஈரோடு மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பகல் நேரத்தில் வெயில் கொளுத்துவதும், மாலை நேரத்தில் மழை பெய்வதுமாக உள்ளதால் சீதோஷ்ணநிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த பருவநிலை மாற்றத்தால் திடீர் காய்ச்சல், சளி, இருமல் ஏற்பட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக மருத்துவ சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு வரும் புறநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
📡பசுவதை தடைச்சட்டம் அவசியமற்றது என பேசிய முன்னாள் அமைச்சருக்கு கொலைமிரட்டல்
தும்கூரு: பசுவதை தடைச்சட்டம் அவசியமற்றது என்று பேசியதற்காக தன்னை கொலைசெய்யப் போவதாக உடுப்பியை சேர்ந்த சுனில் என்பவர் கொலைமிரட்டல் கடிதம் அனுப்பியிருப்பதாக முன்னாள் அமைச்சர் லலிதாநாயக் கூறியுள்ளார்.
📻4 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு
சென்னை: 4 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. தூத்துக்குடி ஏ.எஸ்.பி. அருண் சக்திகுமார் மதுரை சட்டம்-ஒழுங்கு துணை ஆணையராக பதவி உயர்வு பெற்றார். கமுதி ஏ.எஸ்.பி. தேஷ்முக் சேகர் சஞ்சய், மதுரை அமலாக்கப்பிரிவு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். செங்கல்பட்டு ஏஎஸ்பி ஜார்ஜி ஜார்ஜுக்கு சேலம் சட்டம்-ஒழுங்கு துணை ஆணையராக பதவி உயர்வு வழங்கப்பட்டது. தூத்துக்குடி ஊரக ஏஎஸ்பி தீபா கனிகருக்கும் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டது.
📡தமிழக அமைச்சரவையில் திடீர் மாற்றம்: அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் பதவி பறிப்பு
சென்னை: தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி. சண்முகநாதன் பதவி பறிக்கப்பட்டது. அமைச்சரவையில் கே. பாண்டியராஜனுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.தமிழக சட்டசபைக்கு கடந்த மே மாதம் தேர்தல் நடந்தது. இதில் அ.தி.மு.க. வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர்.இந்நிலையில் தமிழக அமைச்சரவையில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.பால்வளத்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி. சண்முகநாதன் விடுவிக்கப்பட்டார். அவர் வகித்த இலாகா ராஜேந்திர பாலாஜியிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது. முதல்வர் ஜெயலலிதா பரிந்துரையின் பேரில் ஆளுநர் ரோசையா அறிவித்தார்.
தவிர பெஞ்சமின் வகித்த பள்ளிக்கல்வித்துறை பறிக்கப்பட்டு, அப்பொறுப்பு கே. பாண்டியராஜனிடமும், பெஞ்சமினுக்கு ஊரக வளர்ச்சித்துறையும் வழங்கப்பட்டது. இவர்கள் நாளை நடக்க உள்ள விழாவில் கவர்னர் ரோசைய பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
📻📡📻📡📻📡📻📡📻📡📻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக