ராணுவ பொது பள்ளிக் கூடங்களில் 8 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்.
இது பற்றிய விவரம் வருமாறு:-
ராணுவ பொது பள்ளிக்கூடங்கள் பல்வேறு இடங்களில் செயல்படுகிறது. தற்போது இந்த பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 8 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கள் வருமாறு...வயது வரம்பு :
பணி அனுபவம் இல்லாத, விண்ணப்பதாரர்கள் 40 வயதுக்கு உட்பட்டவர்களாகவும், அனுபவம் உள்ளவர்கள் 57 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். 1-4-2016-ந் தேதியை அடிப்படையாக வைத்து வயது வரம்பு கணக்கிடப்படும். கல்வித்தகுதி:
மேல்நிலைக்கல்வி, பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்புகளுடன் ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வுசெய்யும் முறை:
எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.கட்டணம் :
விண்ணப்பதாரர்கள் ரூ.600 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங், வங்கி செலான் ஆகிய வழிகளில் கட்டணம் செலுத்த முடியும்.விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 13-9-2016-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக