🌍📡🌍📡🌍📡🌍📡🌍📡🌍
http://www.sivakasiteacherkaruppasamy.Blogspot.ccom
🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍
🌍மின்சாரம் பாய்ந்து 2 சிறுவர்கள் சாவு
தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூரில் திங்கள்கிழமை அறுந்து கீழே விழுந்து கிடந்த மின் கம்பியைத் தொட்ட சிறுவர்கள் இருவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர்.
மதுக்கூர் ஆற்றங்கரைத் தெருவில் வசிக்கும் சுமைத்தூக்கும் தொழிலாளி ரமேஷின் மகன் மணிகண்டன் (5). அப்பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த சமையல் தொழிலாளி மணிமாறனின் மகன் ஸ்ரீதர் (4). அரசு பாலர் பள்ளி மாணவர். இருவரும் நண்பர்கள். திங்கள்கிழமை காலை வீட்டுக்கு பக்கத்திலுள்ள இடையக்காடு பால்பண்ணை சாலை பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் வீடு அருகே மணிகண்டன், ஸ்ரீதர் இருவரும் விளையாடிக் கொண்டிருந்தனராம்.
அப்போது, அங்குள்ள புதரில் நாய்க்குட்டியின் முனகல் சப்தம் கேட்டுள்ளது. அதை தூக்குவதற்காக சென்ற சிறுவர்கள் இருவரும், பாதையில் அறுந்து கிடந்த மின் கம்பியை தொட்டுள்ளனர். அதிலிருந்து மின்சாரம் பாய்ந்ததில் இருவரும் மயங்கி விழுந்தனர். உடனடியாக இருவரையும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் இரு சிறுவர்களும் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தகவலறிந்த பட்டுக்கோட்டை வட்டாட்சியர் ஆர். குருமூர்த்தி, மதுக்கூர் காவல் ஆய்வாளர் தியாகராஜன், மதுக்கூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் சாணக்கியன், கிராம நிர்வாக அலுவலர் மணி ஆகியோர் சம்பவயிடத்தைப் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து மதுக்கூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
📡ரூ. 5 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பிடிபட்டன
நாகலாபுரம் அருகே வனத்துறையினர் நடத்திய வாகனச் சோதனையில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பிடிபட்டன.
இதுதொடர்பாக, ஒருவர் கைது செய்யப்பட்டார்.
🌍பாரிவேந்தர் ஜாமீன் மனு மீது விசாரணை தள்ளிவைப்பு
பாரிவேந்தரின் ஜாமீன் மனு மீதான விசாரணை செவ்வாய்க்கிழமைக்குத் தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில், அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீஸார் மனுத்தாக்கல் செய்தனர்.
சென்னை எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாக 112 பேரிடம் ரூ.75 கோடி வரை மோசடி செய்ததாக, மத்தியக் குற்றப்பிரிவில் வேந்தர் மூவிஸ் உரிமையாளர் மதன், எஸ்.ஆர்.எம். குழும நிறுவனங்களின் தலைவர் பாரிவேந்தர் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதில், பாரிவேந்தர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது அவரது உடல்நிலையை சுட்டிக் காட்டி கோரப்பட்ட ஜாமீனை குற்றவியல் நீதிமன்ற நடுவர் பிரகாஷ் நிராகரித்து, செப்டம்பர் 9-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இந்த நிலையில், ஜாமீன் மனு திங்கள்கிழமை பிற்பகலில் விசாரணைக்கு வந்தபோது, பாரிவேந்தர் 5 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரும் மனுவை போலீஸார் தாக்கல் செய்தனர். அப்போது, விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று நீதிபதி தெரிவித்தார்.
முன்னதாக, ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்த 16 மாணவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகததால், அந்த மனு மீதான விசாரணையையும் செவ்வாய்க்கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டது.
📡மரக்காணம் கலவரம் தொடர்பான வழக்கு: 32 பேரை கைது செய்ய உத்தரவு
மரக்காணம் கலவரம் தொடர்பான வழக்கில், 32 பேரை கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
🌍அரசுத் துறை செயலர் காலியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்
உயர்கல்வி, தொழில் துறை உள்பட 12 அரசு துறைகளில் காலியாக உள்ள செயலர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
📡டாஸ்மாக் ஊழியரைத் தாக்கி ரூ. 2.39 லட்சம் கொள்ளை
மதுராந்தகத்தை அடுத்த ராமாவரம் மதுக் கடை மேற்பார்வையாளரைத் தாக்கி ரூ. 2.39 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
மதுராந்தகத்தை அடுத்த கீழ்மருவத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தீனதயாளன் (45). அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள ராமாவரம் டாஸ்மாக் மதுக் கடையில் மேற்பார்வையாளராகப் பணிபுரிந்து வருகிறார். அவருடன் அப்பகுதியைச் சேர்ந்த பரணி விற்பனையாளராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மது பாட்டில்களை விற்ற ரூ. 2.39 லட்சம் ரொக்கத்தை தனது இரு சக்கர வாகனத்தில் வைத்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை இரவு தீனதயாளன் தனது ஊருக்கு வந்து கொண்டிருந்தார். மேல்மருவத்தூர் நெடுஞ்சாலையில் வந்தபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த முகமூடி அணிந்த 2 நபர்கள் தீனதயாளனுடைய வாகனத்தின் மீது மோதியுள்ளனர்.
இதில் கீழே விழுந்த தீனதயாளன் வாகனத்தை தூக்கி நிறுத்த முயன்றார். அப்போது மர்ம நபர்கள் தீனதயாளனை கத்தியைக் காட்டி மிரட்டி வாகனப் பெட்டியில் வைத்திருந்த பணத்தைப் பறித்துக் கொண்டு தப்பினர். இதுகுறித்து அச்சிறுப்பாக்கம் காவல் நிலையத்தில் தீனதயாளன் அளித்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் தமிழ்வாணன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.
🌍முதல்வர் பொது நிவாரண நிதி: 5 பேருக்கு ரூ.9 லட்சம் நிதி உதவி
முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து 5 பேருக்கு ரூ. 9 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், இந்த நிதியுதவிக்கான காசோலைகளை மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் வழங்கினார்.
சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் ஜூலை 4-இல் நந்தினி, நஜ்ஜீ ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது வழிப்பறி சம்பவத்துக்கு ஆளாகினர். அப்போது, நிலைதடுமாறி கீழே விழுந்த நந்தினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் சென்ற நஜ்ஜீ காயமடைந்தார். அப்போது, வழிப்பறியில் ஈடுபட்டவரின் வாகனம் மோதி சாலையில் சென்ற முதியவர் சாகர் உயிரிழந்தார்.
இறந்த இருவரின் குடும்ப உறுப்பினர்களான செல்வி, உமாமகேஸ்வரி ஆகியோருக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் 6 லட்சம் வழங்கப்பட்டது.
🌍வேளாண் தகவல் மையத்தில் நாளை காளான் வளர்ப்பு பயிற்சி
காளான் வளர்ப்பு குறித்து ஒருநாள் பயிற்சி தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக தகவல், பயிற்சி மையத்தில் புதன்கிழமை (ஆக.31) நடைபெற உள்ளது.
இந்தப் பயிற்சியில், இளைஞர்கள், மாணவர்கள், தொழில்முனைவோர், வியாபாரிகள், தொண்டு நிறுவனத்தினர், வீட்டிலிருப்போர் உள்ளிட்டோர் கலந்துகொள்ளலாம்.
பயிற்சியின் நிறைவாக சான்றிதழ் வழங்கப்படும்.
இதில், கலந்துகொள்ள விரும்புவோர் விவரங்களுக்கு 044-26263484 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
🌍நடிகர் அருண் விஜய் ஏற்படுத்திய கார் விபத்து: விசாரணை அதிகாரி ரயில்வே காவல் துறைக்கு மாற்றம்
சென்னை நுங்கம்பாக்கத்தில் நடிகர் அருண் விஜய் ஏற்படுத்திய கார் விபத்து வழக்கின் விசாரணை அதிகாரி, ரயில்வே காவல்துறைக்கு திங்கள்கிழமை மாற்றப்பட்டார்.
📡எம்.எஸ்.சுப்புலட்சுமி நூற்றாண்டு விழா: நிதி திரட்டி 3,000 பேருக்கு கண்புரை சிகிச்சை : சுதா ரகுநாதன் தகவல்
எம்.எஸ்.சுப்புலட்சுமி நூற்றாண்டு விழாவையொட்டி ஏழை மக்கள் 3,000 பேருக்கு இலவச கண்புரை அறுவை சிகிச்சை செய்ய நிதி திரட்ட அமெரிக்காவில் வரும் செப்டம்பர் 3-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை இசைக்கலைஞர் சுதா ரகுநாதனின் இசை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
🌍விளையாட்டுக்கு முக்கியத்துவம் தரும் கல்வி நிறுவனங்கள் மிக குறைவு: ரயில்வே ஐஜி ராமசுப்பிரமணி
நம் நாட்டில் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பள்ளி, கல்லூரிகள் மிகவும் குறைவாகவே உள்ளன என்று ரயில்வே ஐ.ஜி. ராமசுப்பிரமணி வேதனை தெரிவித்தார்.
📡திருப்பூர் அருகே ரயில் மோதி இரண்டு தொழிலாளர்கள் உயிரிழப்பு
திருப்பூர்: திருப்பூர் அருகே தண்டவாளத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஒப்பந்த தொழிலாளர்கள் 2 பேர் ரயில் மோதி உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
🌍மேற்கு வங்கத்தின் பெயரை மாற்றும் தீர்மானம் நிறைவேறியது
கோல்கட்டா: மேற்குவங்க மாநிலத்தின் பெயரை மாற்றும் தீர்மானம், அம்மாநில சட்டசபையில், நேற்று நிறைவேறியது. மேற்குவங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., அரசு அமைந்துள்ளது. மாநிலத்தின் பெயரை, பெங்காலியில், 'பங்கலா' என்றும், ஆங்கிலத்தில், 'பெங்கால்' என்றும், ஹிந்தியில், 'பங்கல்' என்றும் மாற்றுவதற்கான தீர்மானம், நேற்று கொண்டு வரப்பட்டது.
📡கொற்கைப் பாண்டியனின் வித்தியாசமான நாணயம்!
சங்ககால கொற்கை பாண்டியனின் மாறன் என்ற பெயர் பொறித்த கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த வித்தியாசமான நாணயத்தை தினமலர் ஆசிரியரும், தென்னிந்திய நாணயவியல் ஆய்வுக் கழகத்தின் தலைவருமான இரா.கிருஷ்ணமூர்த்தி கண்டறிந்துள்ளார்.
🌍ஐ.நா. நல்லெண்ண தூதரானார் ஐஸ்வர்யா தனுஷ்
திரைப்பட இயக்குநரான ஐஸ்வர்யா தனுஷ் பெண்கள் முன்னேற்றம் மற்றும் அவர்களின் வளர்ச்சிக்கான ஐக்கிய உலக நாடுகளின் இந்தியாவிற்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐ.நா. நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள ஐஸ்வர்யா தனுஷ், இதன் மூலம் பெண்களுக்கான சம உரிமை மற்றும் அவர்களின் முன்னேற்றம் பற்றிய விழிப்புணர்வை இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு எடுத்துக் கூறுவார். ஆண், பெண் இருபாலருக்கும் சமமான உலகை வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் உருவாக்குவதுதான் இதன் நோக்கமாகும். இதற்கு "பிளானட் 50-50' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இது குறித்து ஐஸ்வர்யா தனுஷ் கூறியதாவது:
உலக நாடுகளின் பெண்களுக்கான அமைப்பின் இந்திய தூதுவராக இருந்து பெண்களுக்கான சம உரிமை மற்றும் அவர்களுக்கான முன்னேற்றத்திற்க்காக வேலை செய்வது எனக்கு பெருமை அளிக்கிறது.
📡செல்லிடப்பேசி செயலியில் அரசுப் பேருந்துகளில் முன்பதிவு
நீண்டதூரம் செல்லக்கூடிய அரசு பேருந்துகளில் செல்லிடப்பேசி செயலி மூலமும் முன்பதிவினை மேற்கொள்ளும் புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்தார்.
🌍ராஜ்நாத் சிங் தலைமையில் காஷ்மீருக்கு செப்.4-இல் அனைத்துக் கட்சிக் குழு பயணம்
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழு, வரும் செப்டம்பர் மாதம் 4-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்குச் செல்கிறது.
📡நகராட்சி, பேரூராட்சித் தலைவர்களை உறுப்பினர்களே தேர்ந்தெடுக்கலாம்: சட்டத் திருத்த மசோதா தாக்கல்
மாநகராட்சியைத் தொடர்ந்து, நகராட்சி, பேரூராட்சிகளின் தலைவர்களையும் மன்ற உறுப்பினர்களே தேர்ந்தெடுக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா சட்டப் பேரவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
🌍சிறைகளில் தமிழர்கள் தாக்கப்படுவதாக வந்த புகாரில் உண்மையில்லை: ஆந்திர சிறைத் துறை ஐ.ஜி.
ஆந்திர சிறைகளில் உள்ள தமிழர்கள் தாக்கப்படுவதாக வந்த புகாரில் உண்மையில்லை என அம்மாநில சிறைத்துறை ஐ.ஜி. சுனில்குமார் தெரிவித்தார்.
📡இஸ்ரோ சாதனைக்கு கருணாநிதி வாழ்த்து
சென்னை : திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) மற்றொரு மைல் கல் சாதனையாக காற்று மண்டலத்தில் இருக்கும் ஆக்ஸிஜனை உறிஞ்சி, திரவ ஹைட்ரஜன் ஆற்றலின் மூலம் பறக்கும் நவீன ராக்கெட் எஞ்சின் பரிசோதனை நேற்று வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. ஸ்கிரேம்ஜெட் என்று அழைக்கப்படும் இந்த ராக்கெட் ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது. இந்தப் பரிசோதனை வெற்றி பெற்றதை, இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு திருப்பு முனை என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குநர் கே.
சிவன், இது இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் மிகப் பெரிய சாதனை என்று பாராட்டியதோடு, இதுவரை அமெரிக்கா, சீனா போன்ற ஒரு சில நாடுகள் மட்டுமே இப்படிப்பட்ட தொழில் நுட்ப சோதனை செய்துள்ளன, தற்போது அந்த வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது என்று தெரிவித்திருக்கிறார். விண்வெளி விமானத்தில் இந்த என்ஜினைப் பயன்படுத்தும் போது, இப்போது இந்தியாவிலிரு ந்து 18 மணி நேரம் பயணித்து செல்லக் கூடிய அமெரிக்காவுக்கு, ஒரு மணி நேரத்தில் சென்று விட முடியும் என்றும் சிவன் கூறியிருக்கிறார். முக்கியமான இந்த வெற்றிக்கும், சிறப்பான ஆராய்ச் சிக்கும் காரணமான இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவரையும் திமுக சார்பில் மனதாரப் பாராட்டு கிறேன், வாழ்த்துகிறேன். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
🌍தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 630 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் திங்கள்கிழமை இரவு நிலவரப்படி 630 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
📡யானைக் குட்டி சடலம் மீட்பு
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள ஆசனூர் வனத்தில் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 5 வயதுள்ள ஆண் யானைக் குட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை மீட்கப்பட்டது.
ஆசனூர் வனச் சரக வேட்டைத் தடுப்புக் காவலர்கள் மாரிகுடி கோவில் வனப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது, 20-க்கும் மேற்பட்ட யானைகள் பிளிறியபடி அப்பகுதியில் நின்றிருந்துள்ளன. வனத் துறையினர் ஆய்வில், 5 வயது மதிக்கத்தக்க ஆண் யானைக் குட்டி அங்கு உயிரிழந்து கிடப்பதும், அதனைச் சுற்றி தாய் யானையுடன் சில யானைகள், யாரையும் நெருங்கவிடாதவாறு நின்றுகொண்டிருந்ததும் தெரியவந்தது.
மேலும், அந்த யானைகள் வன ஊழியர்களைத் தாக்க வந்ததால் யானைக் குட்டியின் உடலை மீட்கும் முயற்சியை அவர்கள் கைவிட்டனர்.
அதைத் தொடர்ந்து, வனப் பாதுகாப்புப் படையினர் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் 20-க்கும் மேற்பட்டோர் திங்கள்கிழமை காலை அங்கு சென்று பட்டாசுகள் வெடித்து யானைகளை விரட்டினர்.
இதையடுத்து, யானைகள் அங்கிருந்து அகன்ற பின் உயிரிழந்த யானைக் குட்டியின் உடல் மீட்கப்பட்டு, சத்தி புலிகள் காப்பக இணை இயக்குநர் கே.ராஜ்குமார் முன்னிலையில், கால்நடை மருத்துவர் யானைக் குட்டியின் உடலைப் பரிசோதனை செய்தபின் அங்கேயே புதைக்கப்பட்டது.
🌍டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை! - தமிழக அரசு
சென்னை: டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''திருவள்ளூர் மாவட்டத்தில், காய்ச்சல் மிக வேகமாக பரவி வருவதாக மக்கள் மனதில் பீதியை ஒருசாரார் ஏற்படுத்தி வருகின்றனர். எல்லா காய்ச்சலும் டெங்கு காய்ச்சல் அல்ல. டெங்கு காய்ச்சல் என்பது ஒரு வகையான வைரஸ் காய்ச்சலே. டெங்கு போன்ற காய்ச்சல் ஏற்பட்டாலே இறப்பு நேரிடும் என்பது ஒரு தவறான கருத்தாகும்.
உரிய நேரத்தில் தக்க சிகிச்சை எடுக்கத் தவறிய அசாதாரண ஒரு சதவீதத்திற்கும் குறைவான நிகழ்வுகளில் மட்டுமே உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அதனையும் முற்றிலுமாக தடுத்திட அரசு எண்ணற்ற நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. டெங்கு காய்ச்சலை மருந்து மாத்திரைகள் மூலமாக எளிதில் குணப்படுத்த இயலும்.
டெங்கு காய்ச்சல் 'ஏடிஸ்' வகை கொசுவினால் பரப்பப்படுகிறது. இந்த வகை கொசு நல்ல தண்ணீரில் மட்டுமே உற்பத்தியாகும் கொசுவாகும். பகல் பொழுதில் கடிக்கும் குணமுடையது. எனவே பொதுமக்கள் வீடு மற்றும் வீட்டிற்கு அருகில் தண்ணீரை தேக்கி வைத்துள்ள இடங்களை மூடி வைக்க வேண்டும்.
கூடுதல் களப்பணியாளர்கள் மூலம் கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து போர்க்கால அடிப்படையில் கொசு ஒழிப்பு பணி நடந்து வருகிறது. கொசு மருந்து தெளித்தல் மற்றும் கொசு ஒழிப்பு புகை மருந்துகளை அடித்தல் மூலமாகவும் கொசுக்களை கட்டுப்படுத்தி வருகிறது.
பொதுமக்கள் காய்ச்சல் கண்டவுடன் எவ்வித பதட்டமுமின்றி அருகில் உள்ள அரசு பொது சுகாதார நிலையத்தையோ, மருத்துவமனையையோ அல்லது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையையோ உடனடியாக அணுகி தகுந்த சிகிச்சையை உரிய நேரத்த்இல் பெற வேண்டும். மருத்துவ சீட்டு இல்லாமல் மருந்து கடைகளுக்கு சென்று தாமாகவே மருந்து வாங்கி உட்கொள்வதை முற்றிலும் நிறுத்த வேண்டும். மேலும் உரிய, தகுதியற்ற, போலி மருத்துவர்களிடம் சென்று சிகிச்சை பெறுவதை தவிர்க்க வேண்டும்.
மேலும், அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலை கண்டறியும் உபகரணங்கள், மருந்து மாத்திரைகள் இருப்பை தமிழக அரசு தொடர்ந்து உறுதி செய்து வருகிறது. இயற்கையான முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி காய்ச்சலை குணப்படுத்தும் நிலவேம்பு குடிநீர் அனைத்து மருத்துவமனைகளிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. எனவே, காய்ச்சல் கண்டவுடன் பீதி அடையாமல் அரசு மருத்துவமனையை அணுகி தேவையான சிகிச்சையை உரிய நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று அதில் கூறப்பட்டு உள்ளது.
📡விநாயகர் சிலையை தூக்கி வந்தவர்கள் மீது மின்சாரம் தாக்கி 2 பேர் பலி
மகா: மகாவின் உல்ஹாஸ்நகர் பகுதியில் மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் ஒருவர் படுகாயமடைந்துள்ளனர். உயர் மின்கம்பி விநாயகர் சிலை மீது விழுந்ததும், சிலையை தூக்கிச் சென்ற 3 பேர் மீது மின்சாரம் பாய்ந்தது.
🌍சிலிண்டர் வெடித்து விபத்து: ஒருவர் பலி - ஒருவர் படுகாயம்
நாமக்கல் அடுத்த அணியாபுரத்தில் நாகராஜ் என்பவர் வீட்டில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நாகராஜ் தாயார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நாகராஜ் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார்.
📡விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து லாரிகள் நிறுத்தம்
விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சத்தியமங்கலத்தில் 200 சரக்கு லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளது. காவிரி நீர் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி விவசாயிகள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
🌍தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம்
தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம்
காவிரியில் இருந்து தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
📡சென்னை: எஸ்ஆர்எம் குழும தலைவர் பச்சமுத்துவின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாக 72 கோடி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் எஸ்.ஆர்.எம். குழும தலைவர் பச்சமுத்துவுக்கு செப்டம்பர் 9ம் தேதி வரை நீதிமன்றக்காவல் விதிக்கப்பட்டு புழல் சிறையில் உள்ளார்.
இந்நிலையில் நேற்று பச்சமுத்துவின் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்றது. ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைத்துவிடுவார் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
பச்சமுத்துவுக்கு ஜாமீன் வழங்க பாதிக்கப்பட்ட மாணவர்களும், மதனின் தாயாரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து ஜாமீன் மனு மீதான விசாரணையை இன்றைக்கு ஒத்தி வைத்தது சைதாப்பேட்டை 11வது குற்றவியல் நீதிமன்றம்.
அதன்படி இன்று அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை நடக்கிறது. ஜாமீன் கிடைத்து வெளியில் வருவாரா பச்சமுத்து என்று அவரது ஆதரவாளர்கள் காத்திருக்கின்றனர்.
🌍4 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு; 8 பேர் பணியிட மாற்றம்
காவல் துறையில் 4 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு காவல் கண்காணிப்பாளராக (எஸ்.பி.) பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 8 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலர் அபூர்வவர்மா திங்கள்கிழமை வெளியிட்டுள்ள உத்தரவு:-
பணியிட மாற்றம் செய்யப்பட்டோர்- (பழைய பணியிடம் அடைப்புக்குள்):
பி.அருண் சக்திக்குமார் - மதுரை மாநகர சட்டம், ஒழுங்கு துணை ஆணையர் (தூத்துக்குடி ஏ.எஸ்.பி.)
தேஷ்முக் சேகர் சஞ்சய் - மதுரை மதுவிலக்குப் பிரிவு கண்காணிப்பாளர் (ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஏ.எஸ்.பி.)
ஜார்ஜி ஜார்ஜ் - சேலம் மாநகர சட்டம், ஒழுங்கு துணை ஆணையர் (செங்கல்பட்டு ஏ.எஸ்.பி.)
எஸ்.தீபா கனிகர் - சென்னை திருட்டு சி.டி.
ஒழிப்புப் பிரிவு எஸ்.பி. ( தூத்துக்குடி புறநகர் ஏ.எஸ்.பி.)
இவர்கள் 4 பேரும் ஏ.எஸ்.பி. பதவியில் இருந்து எஸ்.பி.களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
பணியிட மாற்றம் செய்யப்பட்ட 8 பேர்:
எஸ்.என்.உமையாள் - திருச்சி தமிழ்நாடு சிறப்புக் காவல் படையின் முதல் அணி கமாண்டன்ட் (மதுரை மதுவிலக்குப் பிரிவு எஸ்.பி.)
எம்.விஜயலட்சுமி - சென்னை சமூகநீதி, மனிதஉரிமைப் பிரிவு ஏ.ஐ.ஜி. (தமிழ்நாடு சிறப்புக் காவல்படையின் முதல் அணி கமாண்டன்ட்)
ஆர்.சின்னசாமி - திருப்பூர் மாநகரத் தலைமையிட துணை ஆணையர் (ராஜபாளையம் தமிழ்நாடு சிறப்புக் காவல்படையின் 11-ஆவது அணியின் கமாண்டன்ட்)
எஸ்.செல்வராஜ் - மதுரை மாநகரத் தலைமையிட துணை ஆணையர் (சேலம் மாநகர துணை ஆணையர்)
எச்.ஜெயலட்சுமி - சென்னை மத்திய மண்டல லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி. (சென்னை திருட்டு சி.டி. ஒழிப்புப் பிரிவு எஸ்.பி.)
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
பி.கண்ணம்மாள் - சென்னை தலைமையிட ஏ.ஐ.ஜி. (காத்திருப்போர் பட்டியல்)
பி.ஆர்.வெண்மதி - தமிழ்நாடு கமாண்டோ படை எஸ்.பி. (சென்னை தலைமையிட ஏ.ஐ.ஜி.)
வந்திதா பாண்டே - ராஜபாளையம் தமிழ்நாடு சிறப்புக் காவல்படையின் 11வது அணி கமாண்டன்ட் (காத்திருப்போர் பட்டியல்)
எம்.ஸ்ரீ. அபினவ் - கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை ஏ.எஸ்.பி. (விழுப்புரத்தில் ஏ.எஸ்.பி. பயிற்சி முடித்தவர்)
ரோஹித் நாதன் ராஜகோபால் - கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஏ.எஸ்.பி. (நாகப்பட்டினத்தில் ஏ.எஸ்.பி. பயிற்சி முடித்தவர்).
எஸ்.செல்வநாகரத்தினம் - தூத்துக்குடி நகர ஏ.எஸ்.பி. (கன்னியாகுமரியில் ஏ.எஸ்.பி.பயிற்சி முடித்து வந்துள்ளார்) என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய 3 ஏ.எஸ்.பி.கள்: விழுப்புரம், நாகப்பட்டினம், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் கடந்த 6 மாதங்களாக ஏ.எஸ்.பி. செய்முறை பயிற்சியை பெற்று வந்த மூவர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பார்கள் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
📡ஜார்க்கண்ட்டில் வேலை ஒதுக்கீடு கோரி உள்ளூர் வாசிகள் போராட்டம்: 2 பேர் பலி
ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் பகுதியில் வேலை ஒதுக்கீடு வழங்க கோரி அனல் மின் நிலையத்தின் வெளியே உள்ளூர் வாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே உள்ளூர் வாசிகள் மற்றும் போலீஸ்காரர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
🌍கழிப்பறை உபயோகிப்பதன் முக்கியத்துவத்தை கற்பிக்கும் 16 வயது சிறுமி
கர்நாடகா: கர்நாடகா மாநிலம் கொப்பல் பகுதியில் 16 வயது சிறுமியான மல்லம்மா, ஒவ்வொருவருடைய வீட்டில் கழிப்பறை உபயோகிப்பதன் முக்கியத்துவத்தை பற்றி மற்றவர்களுக்கு கற்பித்து விழுப்புணர்வு ஏற்படுத்துகிறார்.
📡அமைச்சராக இன்று மாலை பதவியேற்கிறார் மாஃபா பாண்டியராஜன்
அமைச்சராக இன்று மாலை பதவியேற்கிறார் மாஃபா பாண்டியராஜன்
தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது முறையாக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்த நிலையில், இப்போது முதல் முறையாக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக, அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பால் வளம்-பால் பண்ணைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.சண்முகநாதன், அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். ஆவடி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினராக உள்ள கே.பாண்டியராஜன், பள்ளிக் கல்வி-விளையாட்டு-இளைஞர் நலத் துறை அமைச்சராக நியமிக்கப்படுகிறார்.
அமைச்சரவையில் இரண்டு அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன. ஊரக தொழில்கள் துறை அமைச்சராக இருந்த கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு, பால் வளம்-பால் பண்ணைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும், பள்ளிக் கல்வி-விளையாட்டு-இளைஞர் நலத் துறை அமைச்சராக இருந்த பி.பென்ஜமினுக்கு ஊரகத் தொழில்கள் துறை பொறுப்பும் அளிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் பரிந்துரையை ஏற்று, இந்த மாற்றங்கள் செய்யப்படுவதாக ஆளுநர் கே.ரோசய்யா தெரிவித்துள்ளார்.
புதிய அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள கே.பாண்டியராஜன், ஆளுநர் மாளிகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4.35 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொள்கிறார். அவருக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியையும் ஆளுநர் கே.ரோசய்யா செய்து வைக்கிறார்.
கே.பாண்டியராஜனின் சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் விளாம்பட்டி ஆகும். 1959- ஆம் ஆண்டு ஏப்ரல் 26- இல் பிறந்தார். பொறியியல் பட்டதாரியான அவர், எம்.பி.ஏ., பட்டமும் பெற்றுள்ளார். மனிதவள மேம்பாட்டு நிபுணராக இருக்கும் அவர், கடந்த 2011- 16 ஆம் ஆண்டில் தேமுதிக சார்பில் விருதுநகர் சட்டப் பேரவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் பின், அதிமுகவில் இணைந்த அவர் கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
🌍கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால்... - சுப்ரமணியன் சுவாமி என்ன சொல்கிறார்?
புதுடெல்லி: கச்சா எண்ணெய் விலை 60 டாலர்களை தாண்டினால், இந்தியா மிகப்பெரிய பொருளாதார சிக்கலை சந்திக்கும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி ட்விட் செய்துள்ளார்
📡இடைநீக்க நடவடிக்கை நிறைவு: சட்டப்பேரவைக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர் திமுக எம்எல்ஏக்கள்
இடைநீக்க நடவடிக்கை நிறைவு: சட்டப்பேரவைக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர் திமுக எம்எல்ஏக்கள்
தர்ணா போராட்டம், போட்டி சட்டப்பேரவை நடத்திய திமுக எம்எல்ஏக்கள் 79 பேர் மீதான இடைநீக்க நடவடிக்கை முடிவடைந்ததால் அவர்கள் இன்று பேரவை கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
கடந்த 17ஆம் தேதி அமளியில் ஈடுபட்டட எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட 79 திமுக உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து அவர்கள் ஒரு வாரம் இடைநீக்கம் செய்யப்படுவதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். இடைநீக்கம் செய்யப்பட்ட திமுக உறுப்பினர்கள் 18ஆம் தேதி சட்டப்பேரவை வளாகத்தில் தர்ணா போராட்டமும், 19ஆம் தேதி போட்டி சட்டப்பேரவை கூட்டமும் நடத்தினர்.
இந்த நிலையில் நேற்றுடன் இடைநீக்க நடவடிக்கை முடிவடைந்ததால், இன்று நடக்கும் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர்கள் பங்கேற்கின்றனர்.
🌍மாயமான விமானத்தை தேடும் பணியில் திருத்தம்: கடலுக்கு அடியில் இறக்கை கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக தகவல்
கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருள் மாயமான விமானத்தின் பாகமா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து 29 பேருடன் போர்ட்பிளேயர் புறப்பட்ட ஏ.என்.32 விமானம் கடந்த ஜூலை 22ம் தேதி நடுவானில் மாயமானது. 23,000 அடி உயரத்தில் விமானம் பறந்தபோது, வெளிப்புற சக்தி தாக்குதல் காரணமாக இந்த விமானம் நடுக்கடலில் விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது. எனவே அதனை தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் சமுத்ரா ரத்னகர் ஆய்வு கப்பல் ஈடுபடுத்தப்பட்டது.
ஒருமாத தேடலுக்குப் பின்னர், கடலுக்கு அடியில் மர்மபொருட்கள் இருப்பது மின்காந்த அலைகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. கிடைத்த 25 பொருட்களில் ஒன்று, மாயமான ஏ.என்.32 விமானத்தின் இறக்கையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இது விமானத்தின் இறக்கைதானா என்று ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்னும் 2 நாட்களில் உறுதியான தகவல் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
📡கர்நாடகாவை கண்டித்து இன்று முழு அடைப்பு! சாலை, ரயில் மறியல் !
சென்னை: தமிழகத்தின் உரிமையான காவிரி நீர் தர மறுக்கும், கர்நாடக மாநில அரசைக் கண்டித்து, இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு நடத்த உள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.
🌍குட்டைப் பாவாடை: மத்திய அமைச்சரின் கருத்தால் சர்ச்சை
"இந்தியாவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டுப் பெண் பயணிகள், குட்டைப் பாவாடை அணிவதைத் தவிர்க்க வேண்டும்'' என்று மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா கூறிய கருத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
📡பிரஸ் க்ளப் தேர்தல்... நீதிபதி சந்துரு மேற்பார்வையில் நடத்த உத்தரவு!
சென்னை: சென்னை பத்திரிகையாளர் மன்ற (பிரஸ் க்ளப்) தேர்தலை மூன்று மாதங்களுக்குள் நடத்திமுடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
🌍ஏமாற்று விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களுக்கு அபராதத்துடன் 5 ஆண்டு சிறை? இன்று ஆலோசனை
ஏமாற்று விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களுக்கு அபராதத்துடன் 5 ஆண்டு சிறை? இன்று ஆலோசனை
தவறாக வழிகாட்டும் விளம்பரங்களில் நடிக்கும் திரை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பிரபலங்களுக்கு 5 ஆண்டு வரை சிறைத் தண்டனையும், ரூ.50 லட்சம் வரை அபராதமும் விதிக்க வழி செய்யும் புதிய சட்ட மசோதா குறித்து மத்திய அமைச்சரவைக் குழு இன்று (செவ்வாய்க்கிழமை) விவாதிக்க இருக்கிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நுகர்வோர் பாதுகாப்பு மசோதா மீது பாராளுமன்ற நிலைக்குழு தனது சிபாரிசுகளை அளித்துள்ளது. அதை ஏற்று, மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சகம் ஒரு வரைவு மசோதாவை உருவாக்கி உள்ளது.
அந்த மசோதாவில், ஏமாற்று விளம்பரங்களை கட்டுப்படுத்தவும், அவற்றில் நடிக்கும் பிரபலங்களுக்கு பொறுப்புணர்வை உண்டாக்கவும் கடுமையான சட்டப்பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
அதன்படி, ஏமாற்று விளம்பரங்களில் நடிப்பதன் மூலம், முதல்முறை தவறு செய்யும் பிரபலங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதமும், 2 ஆண்டுவரை ஜெயில் தண்டனையும் விதிக்கப்படும். இரண்டாவது தடவை தவறு செய்தால், ரூ.5 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். கலப்படம் செய்பவர்களுக்கும் இதே ஜெயில் தண்டனை, அபராதத்துடன் உரிமமும் ரத்து செய்யப்படும்.
இந்த வரைவு மசோதா பற்றி மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையிலான மந்திரிகள் குழு இன்று கூடி ஆலோசனை நடத்துகிறது.
📡மழை காரணமாக இரண்டு மாடி கட்டிடம் சரிந்து விழுந்தது: 2 பேர் பலி
மத்தியப் பிரதேசம்: மத்தியப் பிரதேசம், சாட்டார்புர் மாவட்டத்தில் கடும் மழை காரணமாக இரண்டு மாடி கட்டிடம் சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும், 7 பேர் காயமடைந்துள்ளனர்.
www.sivakasiteacherkaruppasamy.com
🌍📡🌍📡🌍📡🌍📡🌍📡🌍
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக