மாலை செய்திகள் 31/08/2016 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

மாலை செய்திகள் 31/08/2016

🙏�🙏�🙏�🙏�🙏�🙏�🙏�🙏�🙏�🙏�🙏�
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
மகாராஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ், தமிழக ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என்று குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கூர் நில சர்ச்சை: விவசாயிகளிடம் நிலத்தை திருப்பியளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு-டாட்டா நிறுவனம் நானோ கார் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க, மேற்குவங்க மாநிலம் சிங்கூரில் ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டதை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

தமிழ் கைதி ஒருவர் மீது கவனக் குறைவாக துப்பாக்கிச் சூடு நடத்தி, அவரை கொன்றதாக, குற்றச்சாட்டுக்கு உள்ளான முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை விதித்தது. அத்துடன், 20 லட்சம் ருபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

கடந்த மாதத்தில் வடகொரியாவின் உயர்நிலை அமைச்சர் ஒருவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டதாக தென்கொரிய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வடக்கு சிரியாவில் அனைத்து அச்சுறுத்தல்களும் நீக்கப்படும் வரை தனது நாட்டின் தாக்குதல் தொடரும் என்று துருக்கி பிரதமர் பினாலி இல்திரிம், தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக்கொள்ளும் அமைப்பின் முக்கிய தலைவர் ஒருவர் சிரியாவில் கொல்லப்பட்டதாக அந்த அமைப்புடன் தொடர்புடைய ஊடகம் ஒன்று அறிவித்துள்ளது.

WWW.sivakasiteacherkaruppasamy.com

இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள ஐநா பொது செயலாளர் பான் கி மூன் இன்று (புதன்கிழமை) கொழும்பு வருகின்றார்.

மத்திய தரைக் கடலில் தவிக்கும் மேலும் 3,000 குடியேறிகளை மீட்கும் பணிகளை ஒருங்கிணைத்து வருவதாக இத்தாலிய கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.

பலமான சூறாவளி தாக்கிய வடக்கு ஜப்பானில் உள்ள முதியவர்களுக்கான நல இல்லமொன்றில், தாங்கள் ஒன்பது சடலங்களை கண்டெடுத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மியான்மரில் பல தசாப்தங்களாக நடந்து வரும் இன ரீதியான மோதல்களை முடிவுக்கு கொண்டு வர தேவையான முறைகளை ஆலோசிக்க சமாதான மாநாடு ஒன்று நடக்கவுள்ளது.

வட தமிழகத்தின் பல இடங்களிலும் தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

பெண் குழந்தைக்கு தன்னுடைய பெயரை வைத்த விஷால்: பிறந்த நாள் விழாவில் நடந்த காமெடி!-அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் உட்பட பல நலத்திட்ட உதவிகளை வழங்கி தன்னுடைய 38-வது பிறந்த நாளை நேற்று முன்தினம் சிறப்பாக கொண்டாடினார் நடிகர் விஷால். திருவல்லிக்கேணியில் உள்ள அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு விஷால் தங்க மோதிரம் வழங்கினார். அப்போது ஒருவர் தன்னுடைய குழந்தைக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை எனவும் விஷாலை பெயர் வைக்குமாறும் கூறினார்.பெயர் வைக்க கையில் கொடுக்கப்பட்ட குழந்தை பெண் குழந்தை என்பதை அறியாமல் விஷால் உடனடியாக தன்னுடைய பெயரான விஷால் என்பதை வெச்சிருவோம் என கூறியுள்ளார்.உடனே குழந்தையின் பெற்றோர் பிறந்திருப்பது பெண்குழந்தை என கூற, அப்டினா விஷால் தேவின்னு வெச்சுட்டாப் போச்சு என்று சமாளித்துள்ளார் விஷால்.

மங்களூரில் கிணற்றில் இருந்து கொதிக்கும் நீர் ஊற்றெடுத்து வருவதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அதை பெரும் பரபரப்புடன் காண்கின்றனர்.

அதிர்ஷடவசமாக உயிர் தப்பிய விளையாட்டு வீரர்!-அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 12-ம் நிலை வீரரான பிரான்ஸ் நாட்டின் கால் மான்பில்ஸ், லக்சம்பார்க் வீரர் ஜைல்ஸ் முல்லரை எதிர்கொண்டார். முதல் செட்டை 6-4 என மான்பில்ஸ் கைப்பற்றினார். 2-வது செட்டை விளையாடிக் கொண்டிருந்தபோது முல்லர் அடித்த பந்து உயரமாக வந்ததால், அதை கோர்ட்டின் பின்னால் சென்று வேகமாக அடிக்க முயன்றார். அப்போது, எதிர்பாராத விதமாக பின்னால் இருந்த சுவர் மீது அவர் மோதியதில் சுவற்றில் பொருத்தப்பட்டிருந்த பெரிய கடிகாரம் பெயர்ந்து விழுந்தது.உடனே, மான்பில்ஸ், தனது ராக்கெட்டை கீழே போட்டுவிட்டு கடிகாரத்தை தள்ளிவிட்டு தப்பினார். இதனால் அவர்  அதிர்ஷடவசமாக உயிர் தப்பியனார். பின்னர், தொடர்ந்து விளையாடி அந்த செட்டை 6-2 என அவர் கைப்பற்றினார். 3-வது செட்டிலும் கடும் போரட்டத்திற்கு பின் 7-6(5) என வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

தனுஷ், அமலா பால் இடையில் புகுந்த ரஜினியின் மாஸ்டர் பிளான்-நடிகை அமலாபாலுக்கு தான் நடிக்க இருக்கும் வட சென்னை படத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டதை தனுஷின் மனைவி ஐஸ்வர்யா விரும்பவில்லை. தான்னுடைய எதிர்ப்பையும் மீறி அமலாபாலுக்கு வாய்ப்பு வழங்கியதால் இந்த விவகாரத்தை ஐஸ்வர்யா தனது தந்தை ரஜினியிடம் கொண்டுசென்றதாக பேசப்பட்டது. ஏற்கனவே நடிகர் தனுஷுக்கும், அமலா பாலுக்கும் இடையே கிசுகிசுக்கப்பட்டது. இதனால் தான் ஐஸ்வர்யா அமலாபாலுக்கு சிகப்பு கொடி காட்டியதாக பேசப்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரத்தை ரஜினியிடம் கொண்டு சென்றதால் இதில் ரஜினி ராஜதந்திரமாக ஒரு முடிவெடுத்ததாகவும் தற்போது செய்திகள் வருகின்றன.தனுஷ் தயாரிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அடுத்த படத்துக்கு அமலா பாலை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்ய இருப்பதாக தகவல்கள் வருகின்றன.ரஜினியின் ஜோடியாக அமலா பால் ஒப்பந்தம் செய்யப்பட்டால். தற்போது தமிழ் சினிமாவில் பேசப்படும் நடிகையாக இருக்கும் அமலா பாலை இதில் ஒப்பந்தம் செய்தால் படத்திற்கு கூடுதல் பப்ளிசிட்டி, ரஜினிக்கு ஒரு இளம் ஜோடி என ஒரு கணக்கு.மற்றொரு முக்கியமான கணக்கு ஆறு அல்லது ஏழு மாதத்திற்கு அமலா பால், ரஜினியுடன் நடிக்க வேண்டி வரும். அதனால், ரஜினி மற்றும் ஐஸ்வர்யா கண்காணிப்பு வளையத்திற்குள் அமலாபாலை கொண்டு வந்துவிடலாம் என்பதே. மேலும், அமலாபால் ரஜினியுடன் நடித்தால் தனுஷ் அமலாபால் நட்புக்கான வாய்ப்பும் குறையும்.

என் மார்பகம் பிளாஸ்டிக் தான் அதற்கு என்ன இப்ப? – கடுப்பான நடிகை-பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை தன் கவர்ச்சி உடையில் அச்சிட்டு, மார்பகம் தெரிவது போல் போஸ் கொடுத்து சர்ச்சையில் சிக்கியவர் நடிகை ராக்கி சாவந்த். இந்நிலையில், அவரின் மார்பகத்தை பிளாஸ்டிக்கில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக இணையதளங்களில் செய்திகள் வெளியானது. அதற்கு அவரிடம் விளக்கம் கேட்டபோது, அவர் கூறியதாவது, “ஆமாம், நான் என் மார்பகத்தை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்துக்கொண்டது உண்மைதான், அதற்கு என்ன இப்போ?, நானாவது அதை உங்கள் இடம் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், நீங்கள் பாலிவுட்டை சேர்ந்தவர்களின் உடலில் இருக்கும் பிளாஸ்டிக்கை சேகரிக்க வேண்டும் என்று நினைத்தால், அதற்கு மூன்று லாரிகள் தேவைப்படும்.” என்றார்

அடுத்தவர் விஷயத்தில் தலையிடுவது மோசமான பழக்கம் - சமந்தா பேட்டி
உள்ளத்தில் இருப்பதை உதடுவழி பேசிவிடுகிறவர் சமந்தா. அவர் உள்ளத்தை மூடி வைத்திருக்கும் ஒரே விஷயம், காதல் மற்றும் திருமணம். அவர்தான் முதலில் மீடியாவில் தனது காதலை வெளிப்படுத்தினார். என்றாலும் அடக்கிவாசிக்கும்படி காதலரின் வீட்டில் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதால்தான் புதுப்படங்களை ஒப்புக் கொள்ளவில்லை என்று கூறப்படுவது பற்றி...?

என்னைப் பற்றி நிறைய கிசுகிசுக்கள் வருது. சொந்த வாழ்க்கையையும் விவாதித்துக் கொண்டு வருகிறார்கள். இது உண்மையிலேயே வருத்தப்பட வைக்கும் விஷயம். நாட்டில் நல்ல விஷயங்கள் எவ்வளவோ உள்ளது. அதைப் பற்றி பேசுவதுதான் வரவேற்கக் கூடியதாக இருக்கும்.

கிசுகிசுக்களை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?

மற்றவர்களைப் பற்றி ஏதாவது பேசிக் கொண்டேயிருப்பது கறை சொல்வது சரியில்லை. சிலர் அடுத்தவர்களை எப்போதும் கேலி, கிண்டல் செய்து கொண்டேயிருப்பார்கள். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிடுவது மோசமான பழக்கம். அதை நான் விரும்புவதில்லை.

இனி விருந்தினர்களுக்கு பல்புதான்: கேரளா தீர்மானம்-அரசு விழாக்களில் கலந்துக்கொள்ளும் விருந்தினர்களுக்கு, பூங்கொத்துகளுக்கு பதில் எல்.இ.டி. பல்புகளை வழங்க கேரளா மின்சார வாரியம் தீர்மானித்துள்ளது.

எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரிக்கு மாயமான மதன் இடைத்தரகராக செயல்பட்டார் என்பதை காவல்துறை விசாரணையில் எஸ்.ஆர்.எம். குழும தலைவர் பச்சமுத்து ஒப்புக்கொண்டுள்ளார்.

மூன்றாவது பெரிய தொலைத் தொடர்பு நிறுவனத்தை உருவாக்கும் முயற்சியில் ரிலையன்ஸ் - ஏர்செல் புதிய கூட்டணி
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ஏர்செல் ஆகிய இரண்டு நிறுவனங்களும் வரும் செப்டம்பரில் இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளனர்.

உங்களுக்கு நகைச்சுவை உணர்வு இருக்கிறதா? பின் இதைப் படித்துத் தெரிந்துக்கொள்ளுங்கள்!-லிங்கா படத்தில் நடிகர் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடித்தவர் சோனாக்ஷி சின்ஹா. இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், அவருக்கு எப்படிப்பட்ட கணவர் கிடைக்க வேண்டும் என்பது குறித்து கூறினார். அப்போது கூறியதாவது, “என்னை எப்போதும் சிரிக் வைத்துக்கொண்டே இருக்கும் வகையில் நகைச்சுவை உணர்வு கொண்ட ஒருதரை தான் நான் திருமணம் செய்துக்கொள்ள தேடிக்கொண்டிருக்கிறேன்” என்றார்.

திருட சென்ற வீட்டில் நகை, பணம் இல்லாததால் ஆத்திரமடைந்த திருடன் வீட்டிலிருந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்த சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் குட்டி சுட்டீஸ் நிகழ்ச்சி போல், கேரளாவில் சூர்யா டிவியில் ஒளிபரப்பாகும் குட்டி பட்டாளம் நிகழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. மூன்று வருடங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட அந்த ஒரு நிகழ்ச்சியில் ஒரு சிறுமி கலந்து கொண்டாள். அவளிடம் அந்த  பெண் தொகுப்பாளினி “ நீ எதற்காக இங்கே வந்தாய்?” எனக்கேட்டார். அதற்கு அந்த சிறுமி கல்யாணம் செய்து கொள்ள என்று கூற அந்த சிறுமியின் பெற்றோர் மட்டுமில்லாமல் அங்கிருந்த பார்வையாளர்கள் அனைவரும் சிரித்தனர்.
உடனே அந்த தொகுப்பாளினி, இந்த பொண்ணுக்கு திருமணம் செய்து கொள்ள அதிக ஆசை போல் இருக்கு என்று கூறியதோடு, அந்த சிறுமியிடம் இந்த கூட்டத்தில் யார் உனக்கு கணவனாக வர வேண்டும்? என்று கேட்க, அந்த சிறுமியோ, அங்கிருந்த ஒரு ஆணை கைகாட்ட அதற்கும் அனைவரும் சிரித்தனர்.இந்நிகழ்ச்சியை பார்த்த ஒருவர், கேரள சிறுவர் நல ஆணையத்திற்கு புகார் அனுப்பினார். அந்த நிகழ்ச்சி குழந்தைகளுக்கு மன ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துவதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், அந்த தொகுப்பாளினி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் குழந்தைகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து சிறுவர் நல ஆணையம் நடவடிக்கை எடுக்கவே, அந்த நிகழ்ச்சியை விரைவில் முடித்துக் கொள்வதாக தொலைக்காட்சி தரப்பு விளக்கம் அளித்தது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here