மதிய செய்திகள் 31/08/2016 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

மதிய செய்திகள் 31/08/2016

    

📡💥📡💥📡💥📡💥📡💥📡
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
📡📡📡📡📡📡📡📡📡📡📡

📡மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயர்: மோடிக்கு கடிதம் போட்ட சுவாமி

டெல்லி: மதுரை விமான நிலையத்துக்கு தமிழக சுதந்திரப் போராட்ட வீரர் முத்துராமலிங்கத் தேவரின் பெயரை சூட்ட வேண்டும் என்று பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து சுப்ரமணிய சுவாமி தனது கடிதம்:

முத்துராமலிங்கத் தேவரை கெளரவிக்கும் விதமாக, மதுரை விமான நிலையத்துக்கு அவரது பெயரைச் சூட்ட வேண்டும் என்பது தமிழக மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.

இதே கோரிக்கையை, முந்தைய வாஜ்பாய் ஆட்சியின்போதும், முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்திலும் மதுரை விமான நிலையத்துக்கு சுதந்திர போராட்ட வீரர் 'முத்துராமலிங்க தேவர் சர்வதேச விமான நிலையம்' என்று பெயர் சூட்ட முன்வைக்கப்பட்ட கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது.

எனினும், இந்த கோரிக்கைக்கு அப்போதைய தமிழக அரசு இசைவு அளிக்கவில்லை.

எனவே, இதுதொடர்பான ஆவணங்களை பிரதமர் உடனடியாக ஆய்வு செய்து, மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் சர்வதேச விமான நிலையம் எனப் பெயர் மாற்றம் செய்ய உத்தரவிட வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டுள்ளார்.
www.sivakasiteacherkaruppasamy.com
💥ஆளுநர் ரோசய்யா பதவி நீட்டிக்க வாய்ப்பு

டெல்லி: ஆளுநர் ரோசய்யா பதவிக் காலம் இன்று மாலையுடன் முடிவடையம் நிலையில் அவருக்கு பதவி நீட்டிப்பு கிடைக்கலாம் என டெல்லியிலிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய ஆளுநரை நியமிப்பதில் ஏற்பட்டுள்ள குழப்பத்தால் பதவி நீட்டிப்பு எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி தமிழக ஆளுநராக ரோசய்யா நியமிக்கப்பட்டார்.

📡டோக்கியோவில் பாதுகாக்கப்படுகிறதா நேதாஜி அஸ்தி?

புதுடில்லி : நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் குறித்த பல ரகசிய ஆவணங்களை 7வது கட்டமாக மத்திய அரசு நேற்று வெளியிட்டது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள 25 ஆவணங்களில் நேதாஜியை கொலை செய்ய முயற்சி நடந்ததற்கான சாத்தியகூறுகள், அவரது உடல் தகனம் மற்றும் குடும்பத்தினருடனான நேதாஜியின் கடித பரிமாற்றம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.அதில், நேதாஜியை கொலை செய்யும்படி பிரிட்டிஷ் உளவுத்துறையின் சிறப்பு பிரிவு, இஸ்தான்புல் மற்றும் கெய்ரோவில் உள்ள தங்களின் ஏஜன்ட்களை அறிவுறுத்தி உள்ளனர். அதே சமயம் நேதாஜி மாஸ்கோ வழியாக ஜெர்மனி சென்றதால் அவர்களின் கொலை முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. டோக்கியோவில் உள்ள ரென்கோஜி கோயிலில் நேதாஜியின் அஸ்தி தற்போதும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

டிஎன்ஏ சோதனை மூலம் நேதாஜியின் மரணம் குறித்த புதிர்களுக்கு விடை காண்பதற்காக நேதாஜியின் அஸ்தியை திரும்பப் பெறும் முயற்சியில் ஜப்பானில் உள்ள இந்திய தூதரகம் ஈடுபட்டு வந்தது.ஆனால் நேதாஜியின் அஸ்தி வைக்கப்பட்டுள்ள கலசத்தை தனது ஒப்புதல் இல்லாமல் திறப்பதை ஏற்றுக் கொல்ல முடியாது என நோதாஜியின் மருமகள் கிருஷ்ணா போஸ், ரென்கோஜி கோயில் நிர்வாகிக்கு கடிதம் எழுதி உள்ளார். 1953ம் ஆண்டு, நேதாஜி மற்றும் ஆசாத் ஷிந்த் பவ்ஜி ஆகியோர் விட்டுச் சென்ற சொததுக்கள் குறித்து மத்திய அரசு விசாரிக்கும்படி வலியுறுத்த வேண்டும் என மேற்குவங்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து முன்னாள் இந்திய தேசிய ராணுவத்தின் சில சொத்துக்களை டோக்கியோவில் இந்திய சுதந்திர லீக்கிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் இந்த சொத்துக்கள் இந்தியா கொண்டு வரப்பட்டன என மத்திய அரசு வெளியிட்டுள்ள தற்போதைய ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

📡கரூரில் கொல்லப்பட்ட கல்லூரி மாணவி உடல் இடமாற்றம்

கரூர்: கரூரில் கொல்லப்பட்ட கல்லூரி மாணவி உடல் மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. மதுரை தனியார் மருத்துவமனையில் இருந்து பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. கரூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வகுப்பறையில் நேற்று மாணவி சோனாலி கொலை செய்யப்பட்டார்

💥செப்., 2ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவிப்பு

ராமேஸ்வரம்: செப்டம்பர் 2ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் என ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் அறிவித்துள்ளனர். இலங்கையில் உள்ள தமிழர்களின் 114 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வேலைநிறுத்தம் நடைபெறவுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

📡செய்யாறு அருகே மதுக்கடை முன் பெண்கள் போராட்டம்

செய்யாறு: செய்யாறு அருகே ராந்தம் கிராமத்தில் டாஸ்மாக் கடையை மூடக் கோரி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக பெண்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

💥திருப்பரங்குன்றம் ரயில்நிலையத்தில் இணைப்பு பாதை இல்லாததால் பயணிகள் கடும் அவதி

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் ரயில்நிலைய நடைமேடைகளில் இணைப்பு பாதை இல்லாததால் பயணிகள் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடக்கும் நிலை உள்ளது. எனவே நடைமேடைகளை இணைக்கும் விதமாக பாதை அமைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 

📡தாராபுரத்தில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி : ஒரு கிலோ ரூ.1.50-க்கு விற்பனை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

💥அதிமுகவில் சசிகலா புஷ்பா விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருவதால் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவில் இருந்து களையெடுக்கப்பட்டு வருகின்றனர். இதனால் யார் எப்போது நீக்கப்படுவோம் என்ற கலக்கத்தில் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட அதிமுகவினர் உள்ளனர்.

📡புதுவை மாநிலம் முழுவதும் இலவச மனைப்பட்டா தர நடவடிக்கை: அமைச்சர் ஷாஜஹான்

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் முழுவதும் இலவச மனைப்பட்டா தர நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த் துறை அமைச்சர் எப்.ஷாஜஹான் தெரிவித்துள்ளார்.

💥பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் 22 சதவீதம் உயிரிழப்பை தடுக்கலாம்

சேலம் : குழந்தை பிறந்த, ஒரு மணிநேரத்திற்குள் தாய்ப்பால் கொடுப்பதால், 22 சதவீதம் உயிரிழப்புகளை தடுக்கலாம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. 

📡தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 11% அதிகரிப்பு... தேசிய குற்ற ஆவணக் காப்பகம் பரபரப்பு

சென்னை: தமிழகத்தில் 2014ம் ஆண்டை விட கடந்த ஆண்டு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 11 சதவீதம் அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் புதிய தகவலை வெளியிட்டுள்ளது.

📡பருப்பு விலை மேலும் குறையும்: வெங்கையா நாயுடு

டெல்லி: பருப்பு வகைகள் அறுவடையும் அதிகம் இருக்கும் எதிர்பார்ப்பால் விலை மேலும் குறையும் என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் முக்கியமான பருப்பு வகைகளின் விலை குறைந்துள்ளது என வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

💥சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டும் பணிகள் : ஆய்வு நடத்த தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பு

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டுவதற்கான பணிகளை கேரள அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அட்டப்பாடியில் சிறுவாணியின் குறுக்கே அணைகட்டும் பணிக்கான ஆய்வு பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. கேரள அரசின் இந்த திட்டத்திற்கு தமிழக விவசாயிகள், பொதுமக்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் அணைகட்டும் பணிகளில் தீவிரப்படுத்தும் முயற்சியாக அங்கு ஆய்வு பணிகளை மேற்கொள்ள தனியார் நிறுவனம் ஒன்றை கேரள அரசு நியமித்திருப்பதாக தகவல் வெளியாகி இருப்பது விவசாயிகளை வேதனை அடைய செய்துள்ளது. 40 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கேரள அரசு சிறுவாணி அணைககட்டுமானத்தை கையில் எடுத்து அதற்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.

📡ஹைதராபாத்தில் பேய் மழைக்கு 7 பேர் பலி - மக்களுக்கு எச்சரிக்கை

ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் கனமழை கொட்டி வருகிறது. கனமழைக்கு இதுவரை 7 பேர் பலியாகியுள்ளதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

💥நாயை தூக்கி போட்ட மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் அபராதம்

சென்னை: சென்னை குன்றத்தூரில் மாடியிலிருந்து நாயை தூக்கி போட்ட மாணவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.கடந்த ஜூலை மாதம் சென்னை குன்றத்தூரில் மாடியிலிருந்து வளர்ப்பு நாயை தூக்கி போட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியானது. இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில் மாடியிலிருந்து நாயை வீசியவர் நெல்லையை சேர்ந்த கவுதம் சுதர்சன் எனவும், இதனை படம்பிடித்தது அவரது நண்பர் நாகர்கோவிலை சேர்ந்த ஆசிஸ் பால் எனவும் தெரியவந்தது. இவர்கள் மருத்துவ கல்லூரி மாணவர்கள் எனவும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அறிவுரைப்படி, மாணவர்களை அவர்களது பெற்றோர்களே போலீசில் ஒப்படைத்தனர்.

பின்னர் அவர்கள் ஜாமினில் விடுதலையானார்கள். மாணவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், மாணவர்களுக்கு மருத்துவ பல்கலை நிர்ணயம் செய்யலாம். அந்த தொகையை விலங்குகள் நல வாரியத்திடம் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

இதனையடுத்து கவுதம் சுதர்சன், ஆசிஸ் பால் ஆகியோருக்கு தலா ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை அகில இந்திய விலங்குகள் நல வாரியத்திடம் வழங்கப்பட உள்ளது.

📡காதலி கடித்து காதலன் சாவு- ஹிக்கி விபரீதம்!

காதலர்கள் தங்களுக்குள் செல்லமாக கடித்துக் கொள்வதை வெளிநாடுகளில் ஹிக்கி (லவ்-பைட்) என்று அழைப்பார்கள். அன்பு மிகுதியால் ஒருவரையொருவர் கழுத்தில் கடித்து வைத்துக்கொள்வதே ஹிக்கி ஆகும். இது அரிதாக சில நேரங்களில் விபரீதத்தில் முடிவது உண்டு. சமீபத்தில் மெக்ஸிகோவில் இந்த காதல்கடி ஒரு இளைஞரின் உயிரைக் காவு வாங்கியுள்ளது. கடித்த காதலி தலைமறைவாகியுள்ளார்.

💥ஐதராபாத்தில் கனமழையால் சாலைகளில் வெள்ளம்: கடும் போக்குவரத்து நெரிசல்; மக்கள் வீடுகளில் முடக்கம்

ஐதராபாத்: ஐதராபாத் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. பார்க்லேனில் பெய்த மழையால், பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

📡எங்களுக்கு 15 எம்எல்ஏக்கள் கிடைச்சிருப்பாங்க. ஜி.ராமகிருஷ்ணன் புலம்பல்!

திருப்பூர்: தேர்தல்களில் விகிதாசார பிரதிநித்துவம் அமலில் இருந்தால் சட்டசபை தேர்தலில் 6% வாக்குகளைப் பெற்ற மக்கள் நலக் கூட்டணிக்கு 15 எம்.எல்.ஏ.க்கள் கிடைத்திருக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

💥கோப்பை வென்றது தென் ஆப்ரிக்கா

செஞ்சுரியன்: நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் 204 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தென் ஆப்ரிக்க அணி. தொடரை 1-0 என கைப்பற்றி, கோப்பை வென்றது.

📡துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் தர்னா போராட்டம்

புதுக்கோட்டை: ஆதார் அட்டை எடுக்காமல் அலைக்கழிப்பதாக புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தைக் கண்டித்து பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட வருகின்றனர்.


💥மழையில் நனையும் தமிழகம்

சென்னை; தமிழக வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் கூறியதாவது:தென் தமிழகம் மற்றும் கன்னியாகுமரி கடலை ஒட்டியுள்ள பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. ஒரு சில இடங்களில் கனமழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மன்னார்குடியில் 12 செ.மீ., உத்தரமேரூர், வாணியம்பாடியில் தலா 11 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தின் அனேக இடங்களிலும் தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஓரிரு இடங்களில் கனமழை இருக்கும். அடுத்த 2 நாளுக்கு மழை நீடிக்கும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டததுடன் காணப்படும்.

ஓரிரு முறை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 30 வரையில், பெய்த தென்மேற்கு பருவமழையின் அளவு மழை 206 மி.மீ., ஆகும். இயல்பான அளவு 204 மி.மீ., ஆகும். இது இயல்பை விட 1 சதவீதம் அதிகம் எனக்கூறினார்.

📡மனை வணிகத்தில் சீர்திருத்தங்கள் கொண்டுவர மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: மனை வணிகத்தில் சீர்திருத்தங்கள் கொண்டுவர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து அறிவிப்பை அருண் ஜெட்லி வெளியிட்டார்.

📡தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகள் அளித்ப்பதில் எதிர்காலத்தில் இன்னும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

💥சேலம்-சென்னை எக்மோர் எக்ஸ்பிரஸ் ரயில் கொள்ளையில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் ஆதாரங்களை தேடி, சேலம் - சென்னை ரயில்வே தண்டவாளத்தில், விடிய விடிய சோதனை நடத்தினர்.

📡நாடு முழுவதும் 2015ம் ஆண்டில் 34, 651 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் அதிக அளவிலான பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்ட மாநிலங்களில் மத்திய பிரதேசம் முதலிடம் பிடித்துள்ளது.



📡மாலத்தீவு நாட்டில் வேலைக்காக சென்ற தமிழக இளைஞர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது உடல் சென்னைக்கு விமானம் மூலம் வந்தது. சென்னையிலிருந்து அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் ராஜாவின் சொந்த ஊருக்கு ஆம்புலன்சில் உடல் ஏற்றிச் செல்லப்பட்டது.

💥ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபோர் பகுதியில் பாதுகாப்புப் படையினர் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே நடைபெற்ற மோதலில் இளைஞன் ஒருவர் உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

📡கான்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மறுத்ததால் தந்தை தோளிலேயே உயிரைவிட்ட சிறுவன்--மருத்துவமனை மேலதிகாரி நீக்கம்

💥சென்னையில் சமீபத்தில் கவுதம் சுதர்சன், ஆசிஸ் பால் ஆகிய இருவரும் ஒரு மாடியிலிருந்து நாயை கீழீ வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றம் அளித்த உத்தரவின் பேரில், அவர்கள் இருவருக்கும் தலா ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப் பரிந்துரைத்துள்ளது எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம்

📡நீதிமன்றம் அனுமதியின் படி, இன்று எஸ்.ஆர்.எம். நிறுவனர் பச்சமுத்துவிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.காலை முதல் மாலை 05:30 மணி வரை இந்த விசாரணை நீடிக்கும்.மதன் இருப்பிடம் உள்ளிட்ட 200 கேள்விகளுக்கு அவரிடம் பதில்களை பெற உள்ளனர் போலீசார்.

💥சென்னையில் ஏ.டி.எம் பணம் கொள்ளை போன வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

📡தனுஷ்கோடியில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 16 வயது மீனவர் உயிரிழந்துள்ளார். கடல் சீற்றம் காரணமாக படகில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்து மீனவர் சக்தி உயிரிழந்துள்ளார்.

💥எப்டிஐ குறித்து பல முக்கிய முடிவுகள் எடுப்பதற்காக மத்திய அமைச்சரவை, பிரதமர் மோடி தலைமையில் இன்று கூட உள்ளது.

📡புதிய பரோல் விதிமுறைகளை மகாராஷ்டிர அரசு இன்று கொண்டு வந்துள்ளது. இதன்படி, பாலியல் குற்றங்களுக்காக கைது செய்யப்படும் குற்றவாளிகளுக்கு பரோல் வழங்கப்படாது என பரோல் வழங்கும் சட்டத்தை மகாராஷ்டிர அரசு கடுமையாக்கி உள்ளது.

💥டெல்லியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் இந்திரா காந்தி விமான நிலையத்தில் அனைத்து விமானங்களும் தாமதமாகியுள்ளன.

📡தமிழக ஆளுநர் ரோசய்யாவின் பதவி காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில் புதிய ஆளுநர் குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகததால் அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

💥இந்தியா இன்று இந்த உலகத்தில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது என்று அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஜான் கெர்ரி டெல்லி ஐஐடி மாணவர்கள் கலந்துகொண்டுள்ள நிகழ்ச்சியில் கூறினார்.

📡பொது வை-பை வசதியை பயன்படுத்தி இணையதளங்களில் கிரெடிட் கார்டு தகவல்கள், இமெயில் தகவல்கள் உள்ளிட்ட ரகசியங்களை அதிகம் பகிர்ந்து கொள்ளும் பழக்கம் கொண்டவர்களில் இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர்.

💥தென்மேற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள தீவான பப்புவா நியூ கினியாவில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகி உள்ளது.

📡திண்டுக்கல்லில் செப்.11இல் காவல் துறைக்கு எதிராக 25 ஆயிரம் பேருடன் ஊர்வலம்- இந்து முன்னணி மாநிலத் தலைவர் அறிவிப்பு

💥விவசாயிகளுக்கு ஆதரவாக, மேட்டூரில் தனியாக ரயில் மறியலில் ஈடுபட்ட, காங்., நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.

📡திருவண்ணாமலை, நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு விசாரணையை, அக்டோபர், 25ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

💥தெலுங்கானாவில் 2 லாரிகள் மீது கார் மோதி விபத்து: 8 பேர் பலி

📡3 நாள் பயணமாக இன்று அமேதிக்குச் செல்கிறார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி. ஜெகதீஷ்பூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசும் அவர், மேலும் பல கிராமங்களுக்கும் செல்கிறார். 

📡சச்சின் டெண்டுல்கர் நல்ல பேட்ஸ்மேன்தான். ஆனால் அவரை விட பெஸ்ட் இன்சமாம் உல் ஹக்தான் என்று கூறியுள்ளார் பாகிஸ்தான் முன்னாள் வேகப் பந்து வீசசாளர் சோயப் அக்தர்.

📡காதலிக்க மறுத்ததால் மேலும் ஒரு மாணவி

கொலை: பெண் பாதுகாப்பை உறுதி செய்க!ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கையில், ''சென்னை சுவாதி, விழுப்புரம் நவீனா படுகொலைகளால் ஏற்பட்ட அதிர்ச்சி நீங்குவதற்கு முன்பாகவே கரூரில் பொறியியல் மாணவி கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். காதலின் பெயரால் மாணவிகள் மற்றும் சிறுமிகளுக்கு இழைக்கப்படும் மிருகத்தனமான கொடுமை அதிர்ச்சியளிக்கிறது.

📡ஒரு தலை காதலால் மீண்டும் ஒரு விபரீதம்

தூத்துக்குடி : தூத்துக்குடியிலும் ஒரு தலைகாதலால் மீண்டும் ஒரு கொடூரம் அரங்கேறி உள்ளது. இது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.ஒரு தலை காதலலால் கரூர் கல்லூரியில்சிவகங்கையைச் சேர்ந்த மாணவி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள் தூத்துக்குடியில், ஒரு தலைகாதலால் தேவாலயத்திற்குள் பெண் ஒருவர் அரிவாலால் தாக்கப்பட்டுள்ளார்.தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு, இந்திராநகரை சேர்ந்தவர் நியூட்டன் மகள் பிரான்ஸினா(24) .இவர் பிரையண்ட் நகர் பகுதியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவரை கீகன் என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்ததாகவும், அதற்கு பிரான்ஸினா மறுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. பிரான்ஸினாவுக்கு வரும் 8 ம் தேதி வேறொருவருடன் திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று கீழ சண்முகபுரத்திலுள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் (பேட்ரிக் சர்ச்) பிரான்ஸினா ஜெப நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் சர்ச்க்குள் புகுந்த ஜெனிஸ்டன் தான் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தால் பிரான்ஸினாவை வெட்டினார். இதனால் பின் தலையில் கடுமையான காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிய நிலையில்  பிரான்ஸினா, ஆபத்தான நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

அரிவாளால் வெட்டிய கீகன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

💥நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்துள்ள கீழப்புலியூரில் நாகூர் மீரான் என்பவரது இடத்தில் பதுக்கி வைத்திருந்த 1100 கிலோ எடையுள்ள  ரேசன் அரிசி 23 மூடைகளை வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர் தலைமறைவான இடத்தின் உரிமையாளர் நாகூர் மீரான் மீது உணவு கடத்தல் தடுப்பு பிரிவு வழக்கு பதிவு செய்ய வருவாய் துறையினர் பரிந்துரை .

📡💥📡💥📡💥📡💥📡💥📡

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here