6 மணி செய்திகள் 28/08/2016 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

6 மணி செய்திகள் 28/08/2016

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
www.sivakasiteacherkaruppasamy.com

📡📡📡📡📡📡📡📡📡.

♈🇮🇳🌴
அடுத்த 5 நாட்களுக்கு தெலங்கானாவில் மிக கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

பீகார் கனமழை: ஹெலிகாப்டர் மூலம் லாலு, தேஜஸ்வி யாதவ் பார்வை

பெரியகுளம் ஸ்டேட் பேங்க் காலனியில் டெங்குவால் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இமாச்சலில் கார் பள்ளத்தில் விழுந்து விபத்து: 4 பேர் பலி

சிரியாவில் துருக்கி ராணுவம் நடத்திய வான்வெளித் தாக்குதலில் 25 குர்தீஷ் தீவிரவாதிகள் பலி

சென்னையில் நடிகர் அருண் விஜய் காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். நுங்கம்பாக்கத்தில் குடிபோதையில் காரை ஒட்டி வந்து போலீஸ் வாகனத்தை நேற்று இடித்து தள்ளினார்.     குடிபோதையில் விபத்து ஏற்படுத்திய வழக்கில் காவல் நிலையத்தில் அருண் விஜய் வைக்கப்பட்டார். போலீஸ் காவலில் இருந்து தப்பி அருண் விஜய் தலைமறைவானதால் அவரது கார் பறிமுதல் செய்யப்பட்டது. குடித்துவிட்டு அதிவேகமாக கார் ஓட்டுதல், மற்றவர் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துதல் உள்பட 3 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது.

இமாச்சலப் பிரதேசத்தில் நிலஅதிர்வு: ரிக்டர் அளவுகோலில் 4.4ஆக பதிவு

கோவையில் செப்.,3-ம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக போராட்டம்

வாணியம்பாடி ஆசிரியர் காலணியில் சரண்சிங் என்பவர் வீட்டில் 30 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். பீரோவில் இருந்த 6 கிலோ வெள்ளிப் பொருட்களையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் தாது மணல் கொள்ளைய போவதாக புகார் எழுந்துள்ளது. சன் செய்தியாளர்களுக்கு குமரேசன் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

திருத்தணி அருகே பொதுட்டூர்பேட்டையில் பொதுமக்கள் 100 பேர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த 12 வயது சிறுவன் சீனிவாசன் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சிந்து, சாக்‌ஷி ஆகியோருக்கு வானொலி உரையில் மோடி பாராட்டு

எங்கள் நிர்வாகத்தின் கீழ் நடிகர் சங்கத்தில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை என சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் கருத்து தெரிவித்துள்ளார். நடிகர் சங்க கணக்குகள் அனைத்தும் முறையாக பராமரிக்கப்பட்டு வருகின்றன எனவும் விஷால் கூறியுள்ளார்.

குஜராத் மாநிலம் வதோதராவில் ஆவணி மாத சனிக்கிழமையை முன்னிட்டு அனுமன் ஆலயங்களில், அனுமனுக்கு சிறப்பு அலங்கார வழிபாடு செய்து வழக்கம். அதே போன்று நேற்று குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள அனுமன் ஆலயத்தில் ரூ.11 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களால், பக்தர்கள் அனுமனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. ரூபாய் நோட்டுக்களாலேயே சன்னதிக்கு வெளியில் தோரணமும் கட்டப்பட்டிருந்தது. இது ஏராளமான பக்தர்களை வியப்பு அடைய செய்துள்ளது.

மதுரையில் பஸ்-டூவிலர் மோதி விபத்து; இருவர் பலி

டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக்கம் அணி வெற்றி

சீனாவில் பஸ் கவிழ்ந்து 10 பேர் பலி

ஆந்திர மாநிலம் தடா சோதனை சாவடியில் ரூ.32 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக செங்குன்றத்தை சேர்ந்த மகேசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்கா சென்றார் பாதுகாப்பு அமைச்சர் பாரிக்கர்

ஊழல்: டில்லி மாஜி முதல்வர் ஷீலாவிடம் விசாரணை

www.sivakasiteacherkaruppasamy.com

பலுசிஸ்தான் சட்டசபையில் பிரதமர் மோடிக்கு எதிராக தீர்மானம்

📡💥📡💥📡💥📡💥📡💥📡

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here