சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த தாண்டவராயபுரத்தில் 1941-ஆம் வருடம் பிறந்தவர் பி.ஆர்.பச்சமுத்து.
எம்.எஸ்.சி.பட்டப்படிப்பு படித்த இவர் ஆரம்பத்தில் கணிதத்துறை ஆசிரியராக பணியாற்றியவர். சென்னை மாம்பலத்திற்கு இடம் பெயர்ந்த அவர் நைட்டிங்கேல் என்ற பெயரில் சிறிய பள்ளி ஒன்றை தொடங்கினார்.
அதன்பின்னர், படிப்படியாக வளர்ந்து வள்ளியம்மை ராமசாமி அறக்கட்டளை பெயரில் சென்னை மறைமலை நகரை அடுத்த காட்டாங்குளத்தூரில் சிறிது நிலம் வாங்கி வள்ளியம்மை பாலிடெக்னிக்கை ஆரம்பித்தார்.
பின்னர் அதேபகுதியில் எஸ்.ஆர்.எம்.கல்லூரி என்னும் என்ஜீனியரிங் கல்லூரியை தொடங்கினார்.
சென்னையின் புறநகர் பகுதி என்பதால் கிடுகிடுவென வளர தொடங்கியது கல்லூரி.
எஸ்.ஆர்.எம். என்ஜீனியரிங் கல்லூரி படிப்படியாக வளர்ந்து இன்று 600 ஏக்கர் பரப்பளவில் பல்கலைக்கழகமாக உருவெடுத்து இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளிலிருந்தும் மாணவர்கள் வந்து தங்கி படித்து வருகின்றனர்.
இனி பாரிவேந்தரின் சொத்துப்பட்டியலை பார்க்கலாம்:-
எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம் 600-ஏக்கர் (காட்டாங்குளத்தூர்)
வள்ளியம்மாள் ஆர்ட்ஸ் & சயின்ஸ் கல்லூரி
வள்ளியம்மாள் பாலிடெக்னிக்
வள்ளியம்மாள் பொறியியல் கல்லூரி
எஸ்.ஆர்.எம்.மருத்துவக்கல்லூரி (காட்டாங்குளத்தூர்)
எஸ்.ஆர்.எம்.பல்மருத்துவக்கல்லூரி (காட்டாங்குளத்தூர்)
எஸ்.ஆர்.எம்.பல் மருத்துவக்கல்லூரி ராமாபுரம்
எஸ்.ஆர்.எம்.மேனேஜ்மெண்ட் கல்லூரி ராமாபுரம்
எஸ்.ஆர்.எம்.ஈஸ்வரி என்ஜீனியரிங் கல்லூரி ராமாபுரம்
எஸ்.ஆர்.எம்.ஆர்ட்ஸ்&சயின்ஸ் மேனேஜ்மென்ட் கல்லூரி - வடபழனி
SIMS Hospital – (வடபழனி)
எஸ்.ஆர்.எம்.ஹோட்;டல் (காட்டாங்குளத்தூர்)
எஸ்.ஆர்.எம்.ஹோட்டல் (தூத்துக்குடி )
எஸ்.ஆர்.எம்.ஹோட்டல் (திருச்சி )
எஸ்.ஆர்.எம். 5 நட்சத்திர ஹோட்டல் கிண்டி
எஸ்.ஆர்.எம்.ஹாஸ்பிட்டல் மாம்பலம்
எஸ்.ஆர்.எம். பவர் (கடலூர்) (2000 மெ.வாட் கொண்ட மின் உற்பத்தி நிறுவனம் பணிகள் நடைபெறுகிறது)
எஸ்.ஆர்.எம்.டிராவல்ஸ் (சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சொகுசு Volvo பேருந்துகள்)
எஸ்.ஆர்.எம்.டிரான்ஸ்போர்ட்ஸ் (Hyundai, Maruthi போன்ற கார்களை சுமந்து செல்லும் ஆயிரக்கணக்கான வாகனங்கள்)
எஸ்.ஆர்.எம்.பார்சல் சர்வீஸ்
எஸ்.ஆர்.எம்.எலக்ட்ரிக்கல்ஸ் (சி.எப்.எல்.மற்றும் டியூப்லைட்டுகள் தயாரிக்கும் கம்பெனி)
வளசரவாக்கத்தில் பல ஏக்கர் பரப்பளவி;ல் உள்ள ஆடம்பர பங்களா
திருச்சி டி.ஆர்.பி.என்ஜினீயரிங் கல்லூரி
திருச்சி எஸ்.ஆர்.எம்.மருத்துவக்கல்லூரி
டெல்லி நொய்டா எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம் (200 ஏக்கர் பரப்பளவு)
இலங்கை கொழும்புவில் கல்லூரி
தமிழகம் முழுவதும் எஸ்.ஆர்.எம். ளுவரனல ஊநவெசந - எனும் பெயரில் 500க்கும் மேற்பட்ட மையங்கள்
அசோக் நகரில் உள்ள ஐ.ஜே.கே.கட்சி தலைமை அலுவலகம்
புதிய தலைமுறை தொலைக்காட்சி
புதிய தலைமுறை வார இதழ்
புதுயுகம் தொலைக்காட்சி
வேந்தர் தொலைக்காட்சி இவற்றுக்கான சொந்தகட்டிடங்கள்.
எஸ்.ஆர்.எம். Constructions - என்ற பெயரில் நூற்றுக்கணக்கான இடங்களில் கட்டுமானங்கள்
சென்னை தி.நகர் ஜி.என் செட்டி சாலை அடுக்குமாடி கட்டிடம்.
கிண்டி எஸ்.ஆர்.எம்.இன்போடெக்
ஒட்டுமொத்தமாக எஸ்.ஆர்.எம்.குழுமங்களை பொறுத்தவரை மொத்தம் 65ஆயிரம் பேர் படித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாரிவேந்தரின் குடும்பம்
பாரிவேந்தரின் மனைவி பெயர் - ஈஸ்வரியம்மாள்.
மகன்கள் - பி.ரவி.டாக்டர்.பி.சத்தியநாராயணா
மகள் பெயர் கீதா
இதில் மூத்த மகன் ரவி எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தின் தலைவராகவும், கட்டுமானம் டிரான்ஸ்போர்ட் ஹோட்டல்கள் உள்ளிட்ட தொழில்களையும் நிர்வகித்து வருகிறார்.
2வது மகன் சத்தியநாராயணா புதிய தலைமுறை தொலைக்காட்சி, புத்தகம், மற்றும் பல்கலைக்கழத்தின் பெரும்பகுதியை நிர்வகித்து வருகிறார்.
அவரது மகள் கீதா மற்றும் அவரது கணவர் சிவக்குமார் திருச்சி டி.ஆர்.பி.என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் மருத்துவக்கல்லூரி, ராமாபுரம் ஈஸ்வரி எனஜினீயரிங்கல்லூரி மற்றும் பல் மருத்துவக்கல்லூரி ஆகியவற்றை நிர்வகித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக