திமுக தலைவர் அறிக்கை
💥💥💥💥💥💥💥💥💥💥💥
சிறுவாணியில் அணை கட்ட கேரள அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது!
📌📌📌📌📌📌📌📌📌📌📌
www.sivakasiteacherkaruppasamy..com
சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை ஒன்றைக் கட்டுவது பற்றி, மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறையும், கேரள அரசும் எழுதிய பல கடிதங்களுக்கு தமிழக அரசிடமிருந்து எந்தவிதமான பதிலும் வராத நிலையில், அணைக் கட்டும் திட்டத்திற்கான அனுமதியை நதி நீர்ப் பள்ளத்தாக்கு மற்றும் புனல் மின் திட்டங் களுக்கான மத்திய நிபுணர்கள் குழு, இந்தத் திட்டத்தை மேற்கொள்வதற்கான வரைமுறைகளைப் பரிந்துரை செய்திருக்கிறது என்று "இந்து" நாளிதழில் 26-8-2016 அன்று வெளி வந்த அதிர்ச்சி தரத் தக்க செய்தியைப் பார்த்துவிட்டு, நானும் தமிழ்நாட்டில் உள்ள மற்ற எதிர்க் கட்சிகளின் தலைவர்களும் அவசர அவசரமாக அறிக்கைகள் விடுத்திருந்தோம். அனைத்துக் கட்சிகளின் சார்பில் அறிக்கைகளை வெளியிட்ட பிறகு, தமிழக அரசு விழித்துக் கொண்டு, தமிழக முதலமைச்சர் அவசர அவசரமாக ஆனால் வழக்கம் போல, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அணை கட்டும் திட்ட ஆய்வுக்கான அனுமதியினை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், இந்த அணைகட்டும் திட்டத்தை கேரள அரசு தொடரக் கூடாது என்று கேரள அரசுக்கு ஆலோசனை வழங்க வேண்டுமென்று கடந்த 21-6-2012 அன்று அப்போதைய பிரதமருக்குக் கடிதம் எழுதியிருந்ததாகவும், முதல் அமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டிருக்கிறார். 2012ஆம் ஆண்டிற்குப் பிறகு நான்கு ஆண்டுகள் ஆகின்றனவே, இந்த இடைக்காலத்தில் தமிழக அரசு முக்கியமான இந்தப் பிரச்சினை பற்றி டெல்லியில் ஆளும் புதிய அரசுக்குத் தெரியப் படுத்தியிருக்கிறதா? நேரில் சந்தித்த போது, பிரதமரிடம் பேசியிருக்க வேண்டாமா? இப்போது அணை கட்டுவதற்கான முயற்சிக்கு மத்திய அரசு ஒப்புதல் தந்த பிறகு, அதனைத் திரும்பப் பெற வேண்டும் என்று கடிதம் எழுதுவது தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிக்கின்ற முயற்சி அல்லவா என்ற சந்தேகங்கள் எல்லாம் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட மக்கள் மத்தியில் எழுகின்றனவா அல்லவா?
முதலமைச்சர் ஜெயலலிதா நேற்றைய தினம் (27-8-2016) பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், "தமிழக அரசுக்கு மத்தியச் சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறை பல முறை கடிதம் எழுதியதாகக் குறிப்பிட்டிருப்பது உண்மையில் தவறான தாகும்"" என்று தெரிவித்திருக்கிறார். ஆனால் 26-8-2016 தேதிய "இந்து"ஆங்கில நாளிதழில், "The WRD Additional Chief Secretary wrote to the Tamil Nadu Public Works Department Secretary on May 4. No reply was received from the State of Tamil Nadu till August 11 and 12 when the EAC Meeting was held" அதாவது "மத்திய அரசின் நீர் வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் 4-5-2016 அன்று தமிழக அரசின் பொதுப்பணித் துறைச் செயலாளருக்கு கடிதம் எழுதினார். ஆகஸ்ட் 11, 12ஆம் தேதி வரை எந்தப் பதிலும் தமிழக அரசிடமிருந்து வரவில்லை" என்று எழுதப்பட்டிருக்கிறது என்றால்; முதல் அமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் பல முறை கடிதம் எழுதியதாகக் குறிப்பிட்டிருப்பது உண்மையில் தவறானதாகும் என்று சொல்லி யிருப்பது தவறான செய்தியா? அல்லது 4-5-2016 அன்று தமிழக அரசின் பொதுப்பணித் துறை செயலாளருக்கு மத்திய அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியதாகக் கூறியிருப்பது தவறான செய்தியா? இதிலே எது உண்மை? மத்திய அரசு சொல்வது சரியா; அல்லது ஜெயலலிதா சொல்வது சரியா? எது சரி என்று நாடு தெரிந்து கொள்ள வேண்டாமா?
மேலும் முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்தத் திட்டத்தை ஆட்சேபித்து மத்திய அரசின் சுற்றுச் சூழல், வனம் மற்றும் வானிலை மாற்றத் துறை மற்றும் கேரள அரசு ஆகியோருக்கு தமிழக அரசு பல முறை கடிதம் எழுதியுள்ளது என்று தெரிவித்திருக்கிறார். ஆனால் வந்த செய்தியில், With the Tamil Nadu Government failing to respond to “several letters” sent by the Union Ministry of Environment and Forests and the Kerala Government - அதாவது "மத்திய அரசும், கேரள அரசும் எழுதிய பல கடிதங்களுக்கு தமிழக அரசு பதில் அளிக்காத நிலையில்"என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் முதலமைச்சர் ஜெயலலிதா பல முறை கடிதம் எழுதியதாக நேற்று தெரிவித்திருக்கிறார். இதிலே எது உண்மை?
முதலமைச்சர் ஜெயலலிதா கூறுவது போல தமிழக அரசு பல கடிதங்கள் எழுதியது உண்மை என்றால், எந்தெந்த தேதியில் கடிதங்கள் தமிழக அரசின் சார்பில் அண்மைக் காலத்தில் எழுதப்பட்டன என்ற விவரங்களையெல்லாம் தெரிவிக்க வேண்டாமா? அப்பொழுது தானே அவரது கூற்றில் உள்ள உண்மை விளங்கும்.
அது மாத்திரமல்ல; தமிழக அரசு நடவடிக்கை எடுக்கிறதோ இல்லையோ, சிறுவாணியில் அணை கட்ட மத்திய அரசு ஒப்புதல் அளித்தால் தமிழ்நாட்டின் மூன்று மாவட்டங்கள் பாலைவனமாகி விடும் என்ற நிலையை உத்தேசித்து, உடனடியாக மத்திய-மாநில அரசுகள் சிறுவாணியில் கேரள அரசு அணையைக் கட்டுவதைத் தவிர்த்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்பதை வலியுறுத்துவதற்காக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கொங்கு மண்டலத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று என்னுடைய ஒப்புதலைப் பெற்று நடத்தப்படுமென்று நாமக்கல் நிகழ்ச்சியில் கழகப் பொருளாளர் அறிவித்திருக்கிறார். அதன்படி வரும் செப்டம்பர் 3ஆம் தேதியன்று காலை 10 மணி அளவில் கோவை சிதம்பரம் பூங்காவில், கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களின் சார்பில் கழகப் பொருளாளர் மு.க. ஸ்டாலின் தலைமையில், சிறுவாணியில் அணை கட்ட கேரள அரசுக்கு மத்திய அரசு எவ்வித அனுமதியும் அளிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில், மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். கழகத் தோழர்கள் அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று சிறப்பாக கழகத்தின் குரலை எதிரொலிக்க வேண்டுமென்றும்; மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த பொது மக்கள் குறிப்பாக விவசாயப் பெருமக்கள் ஒத்துழைத்திட வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
🚉🚉🚉🚉🚉🚉🚉🚉🚉🚉🚉 🅱NEWS🚉DERAILMENT OF THIRUVANANTHAPURAM-MANGALURU EXPRESS
12 coaches of Train No.16347 Thiruvananthapuram - Mangaluru express which left Thiruvananthapuram at 20.40 hrs on 27/8/2016, derailed near Karukutty station(after passing Aluva) at 02.55 hours on 28/8/2016. No injuries or casualties reported. ALL PASSENGERS ARE SAFE.
Since both tracks are affected, All train services passing through Ernakulam and Alwaye are likely to be delayed until the rescue operations are completed. Shri P.K.Mishra, Additional General Manager, Southern Railway, Shri Prakash Butani, Divisional Railway Manager, Trivandrum have rushed to the spot to oversee the relief and rescue operations
Tickets will be refunded. Buses have been arranged to transport passengers from Karukutty to Chalakudy from where they will be taken to their destination by special trains.
Helpline Numbers: 9746769960, 9746761072, 0471-2320012.
Consequent to the derailment of Train No.16347 Thiruvananthapuram – Mangaluru Express between Angamali and Karukutty stations in Ernakulam –Thrissur section on 28/8/2016, the following is the pattern of train services:-
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
CANCELLATION OF TRAIN SERVICES
1. Train No.56352 Ernakulam-Shoranur Passenger on 28/8/16
2. Train No.56361 Shoranur-Ernakulam Passenger on 28/8/16
3. Train No.56379 Ernakulam-Alapuzha Passenger on 28/8/16
4. Train No.56384 Alapuzha-Ernakulam Passenger on 28/8/16
5. Train No.56376 Ernakulam-Guruvayoor Passenger on 28/8/16
6. Train No.56603 Thrissur-Kozhikode Passenger on 28/8/16
7. Train No.56370 Ernakulam-Guruvayoor Passenger on 28/8/16
8. Train No.56371 Guruvayoor- Ernakulam Passenger on 28/8/16
9. Train No.56365 Punalur-Guruvayoor Passenger on 28/8/16
10. Train No.56366 Guruvayoor- Punalur Passenger on 28/8/16
11. Train No.56373 Guruvayoor- Thrissur Passenger on 28/8/16
12. Train No.56374 Thrissur- Guruvayoor Passenger on 28/8/16
13. Train No.56375 Guruvayoor- Ernakulam Passenger on 28/8/16
14. Train No.56043 Guruvayoor- Thrissur Passenger on 28/8/16
15. Train No.56044 Thrissur- Guruvayoor Passenger on 28/8/16
16. Train No.16305 Ernakulam-Kannur Inter City Express on 28/8/16
17. Train No.16308 Kannur-Alapuzha Inter City Express on 29/8/16
18. Train No.16307 Alapuzha- Kannur Inter City Express on 29/8/16
19. Train No.16306 Kannur-Ernakulam Inter City Express on 30/8/16
20. Train No.16341 Guruvayoor-Thiruvananthapuram Express on 28/8/16
21. Train No.16342 Thiruvananthapuram- Guruvayoor Express on 28/8/16
SHORT TERMINATION OF TRAIN SERVICES on 28th August 2016
1. Train No.16343 / 16349 Thiruvananthapuram-Palakkad Town / Nilambur Amritha/Rajyarani Link express will terminate its service at Ernakulam Town on 28/8/16
2. Train No.16127 Chennai Egmore-Guruvayoor Express will terminate its service at Ernakulam Jn on 28/8/16
3. Train No.16606 Nagercoil-Mangaluru Eranad Express will terminate its service at Ernakulam Jn on 28/8/16
4. Train No.12076 Thiruvananthapuram-Kozhikode Janshatabdi Express will terminate its service at Ernakulam Jn on 28/8/16
5. Train No.16302 Thiruvananthapuram-Shoranur Venad Express will terminate its service at Ernakulam Jn on 28/8/16
6. Train No.16650 Nagercoil-Mangaluru Parasuram Express will terminate its service at Ernakulam Town on 28/8/16
PARTIAL CANCELLATION
1. The service of Train No.16343 / 16349 Thiruvananthapuram-Palakkad Town / Nilambur Amritha/Rajyarani Link express will be partially cancelled between Ernakulam Town and Palakkad Jn(Pollachi Jn)/Nilambur Road on 28/8/16
2. The service of Train No.16605 Mangaluru-Nagercoil Eranad express will be partially cancelled between Ernakulam Jn and Mangaluru Central on 28/8/16
3. The service of Train No.12075 Kozhikode-Thiruvananthapuram Janshatabdi express will be partially cancelled between Kozhikode and Ernakulam Jn on 28/8/16
4. The service of Train No.16301 Shoranur-Thiruvananthapuram Venad express will be partially cancelled between Shoranur and Ernakulam Jn on 28/8/16
5. The service of Train No.16649 Mangaluru- Nagercoil Parasuram Express will be partially cancelled between Mangaluru Central and Ernakulam Town on 28/8/16
DIVERSION OF TRAIN SERVICES
1. Train No.12512 Thiruvananthapuram-Gorakhpur Rapthisagar Tri-weekly express will be diverted via Tirunelveli on 28/8/16
2. Train No.17229 Thiruvananthapuram-Hyderabad Sabari express will be diverted via Tirunelveli on 28/8/16
3. Train No.16382 Kanyakumari-Mumbai CST express will be diverted via Tirunelveli on 28/8/16
4. Train No.16525 Kanyakumari-Bengaluru express will be diverted via Tirunelveli on 28/8/16
5. Train No.13352 Alapuzha-Dhanbad Tatanagar express will be diverted via Tirunelveli on 28/8/16
RESCHEDULING OF TRAIN SERVICES
1. Train No.16346 Thiruvananthapuram-Lokmanya Tilak Netravathi Express will leave Thiruvananthapuram Central on delayed timings on 28/8/16
2. Train No.12625 Thiruvananthapuram-New Delhi Kerala Express will leave Thiruvananthapuram Central on delayed timings on 28/8/16
3. Train No.12515 Thiruvananthapuram-Guwahati Express will leave Thiruvananthapuram Central on delayed timings on 28/8/16
4. Train No.12202 Kochuveli-Lokmanya Tilak Garibrath bi-weekly Express will leave Thiruvananthapuram Central on delayed timings on 28/8/16
5. Train No.19261 Kochuveli-Porbandar Express will leave Thiruvananthapuram Central on delayed timings on 28/8/16
www.sivakasiteacherkaruppasamy.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக