தஞ்சாவூர் மண்ணெடுத்து பாடலுடன் நாதனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தஞ்சாவூர் மண்ணெடுத்து பாடலுடன் நாதனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர். நாதனின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இறுதி சடங்கில் அவருக்கு மிகவும் பிடித்த தமிழ் பாடலான ‛தஞ்சாவூரு மண்ணெடுத்து' பாடல் ஒலிபரப்பப்பட்டது.
சிங்கப்பூரின் நீண்ட நாள் அதிபர் என்னும் பெருமை பெற்றவர் எஸ்.ஆர்.நாதன். தமிழ் மக்களால் அதிகம் விரும்பப்பட்ட அவர் கடந்த 22 ம் தேதி உடல் நலக் குறைவின் காரணமாக காலமானார்.
சிங்கப்பூர் பார்லிமென்ட் ஹவுசில் நடந்த இறுதி அஞ்சிலி நிகழ்ச்சியில் 20,000 க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர். அங்கு நடந்த புகழஞ்சலி கூட்டத்தில் நாதன் மிகவும் விரும்பி கேட்கும் தமிழ் பாடலான ‛தஞ்சாவூரு மண்ணெடுத்து, தாமிர பரணி தண்ணிய விட்டு சேத்து சேத்து செஞ்சதிந்த பொம்ம' என்ற பாடல் முழுவதுமாக ஒலிபரப்பப்பட்டது. கவிஞர் வைரமுத்துவின் வரிகளால் அமைந்த இந்த பாடாலை அங்கு கூடியிருந்தவர்கள் உருக்கத்துடன் கேட்டனர்.

இறுதி அஞ்சலி நிகழ்ச்சிகளில் சிங்கப்பூர் பிரதமர் லி ஷியன் லுாங், அரசு உயர் அதிகாரிகள், வி.வி.ஐ.பி.,க்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக, அவரின் உடல் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக கொண்டு செல்லப்பட்டு முக்கிய இடங்களில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. பின்னர், ராணுவ வீரர்களின் அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here