சொந்த பந்தம் பார்த்து செய்து வைத்த திருமணத்தில் பெண்கள் மீதான வரதட்சணை மற்றும் பாலியல் கொடுமைகள் அதிகம் நடைபெறுகிறது. ராமதாஸ் கேள்வி CPM ஜி.ராமகிருஷ்ணன் பதில் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

சொந்த பந்தம் பார்த்து செய்து வைத்த திருமணத்தில் பெண்கள் மீதான வரதட்சணை மற்றும் பாலியல் கொடுமைகள் அதிகம் நடைபெறுகிறது. ராமதாஸ் கேள்வி CPM ஜி.ராமகிருஷ்ணன் பதில்



பெண்களின் பாதுகாப்பு குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அனைத்துக் கட்சியினருக்கும் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பதில் அளித்துள்ளது. அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் இதுகுறித்து விடுத்துள்ள அறிக்கையில்,

http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
“பெண்களின் பாதுகாப்பு குறித்து அரசியல்கட்சிகள் குரல் கொடுக்க வேண்டும் என்றவேண்டுகோளையும், சில ஆலோசனைகளையும்உள்ளடக்கிய உங்கள் கடிதம் கிடைத்தது. நன்றி.
பெண்கள் மீதான வன்முறை பல வகைப்பட்டது.பெண் என்பதால் வரும் பாலியல் தாக்குதல்;தொழிலாளி, விவசாயி, அலுவலக ஊழியர் என்றுவேலை தலத்தில் எதிர்நோக்கும் வன்முறை;போராட்டங்களின் போது அரசு/காவல்துறைகட்டவிழ்த்து விடும் வன்முறை; தலித்/பழங்குடியின பெண் என்பதால் வரும் சாதியவன்முறை, மதவெறித் தாக்குதலில் நடக்கும்வன்முறை. இவை அனைத்தையும்கட்டுப்படுத்துவதற்கான போராட்டத்தில் கட்சிஅணியினர் முன்வரிசை படையாக நிற்கவேண்டும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிஎப்போதும் வலியுறுத்தி வந்திருக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப்பொறுத்தவரை, கட்சி உறுப்பினர்கள் கடைப்பிடிக்கவேண்டிய நெறி முறைகளில் ஒன்றாகப் பாலினசமத்துவத்தை வலியுறுத்துகிறோம். எங்கள்கட்சியின் திட்டத்திலேயே, பாலின சமத்துவபோராட்டம், ஜனநாயகத்துக்கான ஒரு பகுதிஎன்பதையும், குடும்ப ஜனநாயகம்வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்பதையும்இடம்பெற வைத்திருக்கிறோம். குடும்பவன்முறையை ஒழுங்கு நடவடிக்கைக்கு உரியகுற்றமாகக் கருதுகிறோம். 
தமிழகத்தில் அன்றாடம் நடந்து வரும் பெண்கள்,குழந்தைகள் மீதான வன்முறை நிகழ்வுகளில்கட்சியும், பெண்கள், வாலிபர், தீண்டாமை ஒழிப்புமுன்னணி உள்ளிட்ட அமைப்புகளும் அயராமல்தலையிட்டு வருகின்றன.
காதலுக்கு எதிரி அல்ல என்று ஒரு புறம் நீங்கள்சொன்னாலும், மறுபுறம் காதல் திருமணங்கள்மீதான வெறுப்பு, குறிப்பாக வெவ்வேறுசாதிகளைச் சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்கள் திருமணம் குறித்து தீர்மானிப்பதில்உங்களுக்கு ஒவ்வாமை இருப்பதுவெளிப்படுகிறது. 
காதல் வழி சாதி மறுப்பு திருமணம் சாதிகளைஒழிக்காது என்று கூறியிருக்கிறீர்கள். அதுமட்டுமே உதவாது என்பது உண்மை தான். தலித்மக்களுக்குப் பொது சொத்தின்/நிலத்தின் மீதானஉரிமைகள் அளிக்கப்பட வேண்டும், தனியார்துறையில் இட ஒதுக்கீடு வேண்டும் என்பனபோன்ற பொருளாதார நடவடிக்கைகளும்இணைந்து எடுக்கப்பட வேண்டும் அதே சமயம்,அகமணமுறை என்பது சாதிய கட்டமைப்பைப்பாதுகாக்கும் கோட்டை என்னும் போது, அதில்மாற்றம் வந்தால், கட்டமைப்பு பலவீனப்படும்என்பது சரியானது தானே? ஒரு வாதத்துக்கு  –இல்லை என்றே வைத்துக் கொள்வோம் –அதற்காகக் காதல் திருமணங்களே வேண்டாம்என்று சொல்லி விட முடியுமா? வெவ்வேறுசாதிகளைச் சேர்ந்தவர்கள், சாதியை ஒழிக்கவேண்டும் என்ற நோக்கில் தான் திருமணம்செய்கிறார்கள் என்றும் கூற முடியாது.விரும்புகிறவர்கள் வாழ்க்கையில்இணைகிறார்கள். இது அரசியல் சட்டம்அளித்திருக்கும் ஜீவாதார உரிமை. 
பெற்றோர் விருப்பத்துடன் திருமணங்கள் நடப்பதுநல்லது தான். காதல் திருமணம் செய்யவிரும்புபவர்கள், பெற்றோரையும் உடன்படவைக்கும் போராட்டத்தை நடத்துவதுதேவையானது. அதே சமயம், காரண காரியமின்றி,சாதியை மனதில் வைத்து அல்லது தன் மகன்/மகள் சுயமாக முடிவெடுப்பதை விரும்பாமல்பெற்றோர் மறுக்கும் போது, வேறு வழியில்லாமல்நண்பர்கள் உதவியுடன் திருமணத்தை நடத்திக்கொள்கிறார்கள் என்பதே யதார்த்தம். இது குறித்துபொது வெளியில் விவாதிப்பது கூட பயன் தரும்.
ஏமாற்றுவதும், மோசடி செய்வதும் காதல்திருமணங்களில் மட்டும் நாம் பார்ப்பது இல்லை;வெவ்வேறு சாதி இணையும் திருமணங்களில்மட்டும் நடப்பதில்லை. பெற்றோர் பார்த்துவைக்கும் திருமணங்களில், ஒரே சாதிக்குள்ளானதிருமணங்களில் கூட எத்தனை எத்தனை ஏமாற்று,மோசக்கார வேலைகள், வரதட்சணைகொடுமைகள்! நெருக்கமான உறவினர்குடும்பத்திலிருந்து மாப்பிள்ளை வந்தாலும், பெண்வன்முறைக்குத் தப்புவதில்லை. ஏராளமானவழக்குகள் எங்களுக்கும் வருகின்றன.பெண்ணின் தாழ்ந்த சமூக அந்தஸ்து, ஆணாதிக்கசமூகக் கட்டமைப்பு போன்றவை தான் இந்தஏமாற்று வேலைகளுக்கும், கொடுமைகளுக்கும்களம் அமைத்துக் கொடுக்கின்றன. நோயின் வாய்நாடி சிகிச்சைக்கு முயற்சிக்க வேண்டும் என்பதேஎங்கள் கருத்து.
காதலை கார்பைடு வைத்து கனிய வைப்பதில்எங்களுக்கும் உடன்பாடு கிடையாது. அதே போல்திருமணத்தில் இரு மனங்கள் கனிய வேண்டும்,நமது குழந்தைகள் என்பதாலேயே கார்பைடுவைத்துத் திருமணத்தைக் கனிய வைக்கக்கூடாது. கட்டாய காதல் அல்லது கட்டாயதிருமணத்தை எதிர்த்து தொடர்ந்து போதிக்கவேண்டும். காதலிக்க மறுத்தாலும் பெண்ணுக்குவன்முறை, காதலித்து திருமணம் செய்தாலும்சாதி ஆணவ கொலை இரண்டும் வேண்டாம்என்று உரத்து குரல் கொடுப்போம். 
அதே சமயம், காதலுக்கு சம்பந்தமே இல்லாமல்நடக்கிற வன்முறை பற்றிக் கவலைப்படவேண்டாமா?. கடமலைக்குண்டு பகுதியில்பழங்குடியின பெண்கள் மீது வனத்துறையினர்நடத்திய வன்கொடுமை என்ன?, சேலம் 6 வயதுசிறுமி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு, கொலைசெய்யப்பட்டு அண்டாவில் திணித்து வைக்கப்பட்டபிரச்னை என்ன?, தஞ்சை சாலியமங்கலம் இளம்பெண் கூட்டு பாலியல் வல்லுறவுக்குஉள்ளாக்கப்பட்டு கொலையும் செய்யப்பட்டகொடுமை என்ன?, நெகமம் அருகில் 8 மாத பச்சைகுழந்தை பாலியல் கொடுமை செய்யப்பட்டுமண்டை ஓடு சிதைக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட அராஜகம் என்ன?, இதில் காதல்எங்கிருந்து வருகிறது?.
சாதிய கட்டமைப்பின் ஒரு முக்கிய பகுதியாகஆணாதிக்கம் இருக்கிறது. ஒன்றைப் பாதுகாத்துக்கொண்டே மற்றொன்றை முழுமையாக ஒழித்துவிட முடியாது. பாலின பாகுபாட்டைத் தன் லாபவேட்கைக்காக முதலாளித்துவம்பயன்படுத்துகிறது. இவற்றையும் கணக்கில்எடுத்து, பெண்ணின் மீதான ஒடுக்குமுறைக்குப்பின்புலமாக இருக்கும் கொள்கைகளையும்,அவற்றின் விளைவுகளையும் ஒரு துளி கூடசமரசம் இல்லாமல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிஎதிர்த்து தொடர்ந்து போராடும்” எனத் தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here