இரவு செய்திகள் 04/09/2016 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

இரவு செய்திகள் 04/09/2016

           
📡📻 📡📻 📡📻 📡📻 📡📻
www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

📻📻📻📻📻📻📻📻📻📻📻


📻பீகாரில் கனமழைக்கு 198 பேர் பலி

பீகாரில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. வெள்ளம் பெருக்கெடுத்து வீடுகளை சூழ்ந்ததால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். புஷார், போஜ்பூர், வைசாலி, சரண் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 2,179 கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. கனமழைக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 198 ஆக உயர்ந்துள்ளது.


📻இறந்த மனைவியை தோளில் சுமந்து சென்றவரின் குடும்பத்திற்கு தொண்டு நிறுவனம் ரூ.5 லட்சம் நிதியுதவி

ஒடிசா மாநிலத்தில் இறந்த மனைவியின் உடலை தோளில் சுமந்து 10 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றவரின் குடும்பத்திற்கு சுலப் இண்டர்நேஷனல் தொண்டு நிறுவனம் நிதியுதவி வழங்கியுள்ளது.



📻திருப்பதியில் ஆண்டொன்றுக்கு 1.25 கோடி பக்தர்கள் தலைமுடி காணிக்கை

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தலைமுடி காணிக்கை செலுத்தும் கல்யாண கட்டாவில் 6 அரங்குகள் உள்ளது. இதில் முதல்கட்டமாக தற்போது ஒரு அரங்கு பக்தர்களுக்கு காற்றோட்டமாகவும் பிற வசதிகள் நிறைந்ததாகவும் புனரமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு, அறங்காவலர் குழு தலைவர் சதலவாடா கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கி, புனரமைக்கப்பட்ட புதிய அரங்கை பக்தர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இதில், பங்கேற்ற தலைமை செயல் அலுவலர் சாம்பசிவராவ் பேசியதாவது:
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஓராண்டில் 1.25 கோடி பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்துகின்றனர். 

இதில், 1.10 கோடி பேர் மொட்டை அடித்தும், மீதமுள்ள பெண் பக்தர்கள் தங்களது தலைமுடியின் கொனை முடியை காணிக்கையாகவும் செலுத்துகின்றனர்.


📻ஆவடியில் ஏரியில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு

ஆவடி: திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் ஏரியில் குளிக்கச் சென்ற மாணவன் சேற்றில் சிக்கி உயிரிழந்தான். 11-ம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவரான குமார் பிருந்தாவன் நகர் ஏரியில் மூழ்கி உயிரிழந்தார்.


📻கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் முதலாவது அணு உலையில் திடீர் கோளாறு: மின் உற்பத்தி பாதிப்பு

திருக்கழுக்குன்றம்: கல்பாக்கத்தில் இயங்கி வரும் சென்னை அணுமின் நிலையத்தில் 2 அணுமின் உலைகள் உள்ளது. அதில் ஒவ்வொன்றும் 220 மெகாவாட் திறன் கொண்ட 2 அணு உலைகள் இயங்கி வருகிறது. இந்த அணு உலைகள் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை முறையே ஒவ்வொரு அணு உலையாக நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். 


📻5-வது ஒருநாள் போட்டி: பாகிஸ்தான் அணிக்கு 303 ரன்கள் வெற்றி இலக்கு

கார்டிஃப்: இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 5-வது ஒருநாள் போட்டி கார்டிஃப்பில் நடந்து வருகிறது. முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஒவர்களில் 9 விக்கெட்டுளை இழந்து 302 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜேசன் ராய் 87, பென் ஸ்டோக்ஸ் 75 ரன்கள் எடுத்தனர். இதனையடுத்து பாகிஸ்தான் அணி 303 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க உள்ளது.


📻அன்னை தெரசாவிற்கு இந்திய தபால் தலை வெளியீடு!

அன்னை தெரசாவிற்கு புனிதர் பட்டம் அளிக்கப்பட்டதை தொடர்ந்து இந்திய அஞ்சல் துறை அவரது படத்துடன் கூடிய தபால் தலை வெளியிட்டு கௌரவித்துள்ளது.


📻ஆந்திராவில் இருந்து ரயிலில் 12 கிலோ கஞ்சா கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதன் பேரில் சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்புப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதனையடுத்து ஆந்திரா காக்கிநாடாவில் இருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு நேற்று காலை 6.30 மணிக்கு சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றது. அதில் வந்த பயணிகளை போலீசார் நோட்டமிட்ட போது வாலிபர் ஒருவர் 2 டிராவல் பேக்குகளுடன் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தார்.

இன்ஸ்பெக்டர் சகாயராஜ் தலைமையிலான போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அந்த வாலிபர் வைத்திருந்த பைகளை சோதனையிட்ட போது, ஒவ்வொரு பேக்குக்குள்ளும் 6 கிலோ கஞ்சா வீதம் 12 கிலோ கஞ்சா இருந்து. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த வாலிபர் உசிலம்பட்டியைச் சேர்ந்த கணேஷ் (31) என்றும், ஆந்திராவில் இருந்து கஞ்சாவை மொத்தமாக கடத்தி வந்து தமிழகம் முழுவதும் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதே போல் அவர் பல முறை கடத்தி வந்தததாக போலீசாரிடம் தெரிவித்தார். அவரை கைது செய்த போலீசார் போதை பொருள் தடுப்புப்பிரிவு (என்ஐபி) போலீசார் வசம் ஒப்படைத்தனர்.

📻வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது வேன் மேதிய விபத்து.விபத்தில் சிக்கிய ஆற்காடு நகர காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் நசிர் ஆற்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றிஉயிரிழந்தார் அவருடம் சென்ற தினகரன் சிகிச்சைகாக அனுமதி



📻அரியலூர். விஷக்காய்ச்சலுக்கு ராணுவ வீரர் பலி       அரியலூர் மாவட்டம் அழகாபுரத்தை சேர்ந்த ராஜதுரை என்பவர் ராணுவ பட்டாலியனாக டில்லியில் பணியாற்றிய போது காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  அவரது உடல் தேசிய கொடி போர்த்தப்பட்ட நிலையில் 2ராணுவ வீரர்களின் பாதுகாப்புடன் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது


📻காஷ்மீரில் பதற்றம் : மாஜிஸ்திரேட் அலுவலகத்திற்கு தீவைப்பு!!

2016-09-04 ஜம்மு: ஜம்முவில் உள்ள ஷோபியான் மாவட்ட மாஜிஸ்திரேட் அலுவலகம் தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மாஜிஸ்திரேட் அலுவலகத்திற்குள் நுழைந்த கும்பல் ஒன்று அலுவலகத்தை தீ வைத்துக் கொளுத்தியது. இதில் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பின்னா் பாதுகாப்புபடையினர் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனா். இருந்தும் அங்கு பதற்றம் நிலவுகிறது

📻உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் டெபாசிட் தொகை பிரசார செலவு வரம்பு உயர்வு?!"

2016-09-04 சேலம்: தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு, அடுத்த வாரம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான பணிகளில், மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கடந்த 1995ம் ஆண்டு அரசாணைப்படி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்களின் டெபாசிட் தொகை பெறப்பட்டு வருகிறது. அதன்படி, ஊராட்சி உறுப்பினர் 200, தலைவர் 600, ஒன்றிய உறுப்பினர் 600, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் 1,000, பேரூராட்சி, நகராட்சி (3ம் நிலை) உறுப்பினர்கள் 500, நகராட்சி உறுப்பினர் 1,000, மாநகராட்சி உறுப்பினர் 2,000 என டெபாசிட் கட்ட வேண்டு–்ம். எஸ்சி., எஸ்டி பிரிவினராக இருந்தால் இதில் 50 சதவீத தொகை கட்டினால் போதும். இவற்றை நடப்பு தேர்தலில் உயர்த்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.இதேபோல் தேர்தலின் போது, வேட்பாளர்கள் மேற்கொள்ளும் பிரசார செலவுகளின்  உச்சவரம்பும் அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2011 தேர்தலின் போது, மாவட்ட ஊராட்சி உறுப்பினருக்கு 1,12,500, ஒன்றிய உறுப்பினருக்கு  56,250, ஊராட்சி தலைவருக்கு 22,500, ஊராட்சிஉறுப்பினருக்கு 5,625, பேரூராட்சி உறுப்பினர்களுக்கு 11,250, முதல் மற்றும் இரண்டாம் நிலை நகராட்சி உறுப்பினர் 22,500, தேர்வு மற்றும் சிறப்பு நிலை நகராட்சி உறுப்பினர் 56,250, மாநகராட்சி உறுப்பினர் (சென்னை மாநகராட்சியை தவிர) 33,750, சென்னை மாநகராட்சி வார்டு உறுப்பினர் 56,250 என செலவின உச்சவரம்பு உள்ளது.இதனை 20 சதவீதம் வரை உயர்த்த வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: கடந்த 1995ல் நிர்ணயிக்கப்பட்ட வேட்பாளர்களின் டெபாசிட் தொகை, 20 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது. எனவே நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் இவை அதி்கப்படுத்த வாய்ப்புள்ளது. வேட்பாளரின் பிரசார செலவை பொறுத்தவரை, விலைவாசி ஏற்றத்தால், 2011ம் ஆண்டை காட்டிலும், தற்போது அனைத்து வகை செலவினங்களும் கூடியுள்ளது. எனவேஉச்சவரம்பை அதிகரிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, சென்னையில் அனைத்துகட்சி கூட்டம் நடத்தி, புதிய உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது என்றனர்.

📻பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்களை தனிமைப்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி

பிரிக்ஸ் அமைப்பு நாடுகள், பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்களையும், ஊக்குவிப்பவர்களையும் தனிமைப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி கூறினார்.

சீனாவில் ஜி20 மாநாடுகள் கூட்டம் நடக்கிறது. இந்த மாநாட்டில் பல நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, பிரிக்ஸ் நாடுகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசுகையில், தெற்கு ஆசியாவில் உள்ள பயங்கரவாதிகளுக்கு உதவி செய்ய என எந்த தனி வங்கிகளும் இல்லை. ஆயுத தொழிற்சாலைகளும் இல்லை. இதன் மூலம் பயங்கரவாதிகளுக்கு யாரோ உதவி செய்வது தெளிவாக தெரியவந்துள்ளது. அவர்களை பிரிக்ஸ் நாடுகள் கண்டறிந்து, பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவதுடன், பயங்கரவாதத்தை ஊக்குவித்து ஆதரவளிக்கும் நாடுகளை கண்டறிந்து, தனிமைப்படுத்த வேண்டும். பயங்கரவாதம் நிலைத்தன்மையற்ற நிலை ஏற்படுத்துவதுடன், சமூகத்திற்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது எனக்கூறினார்.


📻செங்கல்பட்டு அருகே சாலை விபத்து: 3 பேர் உயிரிழப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே மாமண்டூரில் நடந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மாமண்டூரில் அடுத்தடுத்து 3 கார்கள் மோதியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.



📻ஆப்கானிஸ்தானில் பேருந்து-டேங்கர் லாரி மோதல்: 36 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் பேருந்து மற்றும் எரிபொருள் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி மோதியதில் 36 பேர் உயிரிழந்தனர். ஜாபூல் மாகாணத்தில், காந்தகாரிலிருந்து காபூல் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து-டேங்கர் லாரி மீது மோதியது. இந்த சம்பவத்தில் 36 பேர் பலியானார்கள். 28 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தில் பேருந்தில் இருந்த பெண்களும், குழந்தைகளும் தீயில் கருதி உயிரிழந்தனர்.



📻கல்லூரி மாணவி மர்ம சாவு: குளத்தில் சடலம் மீட்பு!!

மயிலாடுதுறை: மாயமான கல்லூரி மாணவி கோயில் குளத்தில் சடலமாக  மீட்கப் பட்டார். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்த பேரளத்தை சேர்ந்தவர் ரேவதி. இவரது கணவர் ராஜேந்திரன் ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களது மகள் ஜெயமாலா(21). மயிலாடுதுறையில் உள்ள ஞானாம்பிகை அரசு பெண்கள் கலை கல்லூரியில் பிஏ வரலாறு 3ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றவர் மாலையில்நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.ரேவதியை மயிலாடுதுறை சின்ன மாரியம்மன் கோயில் வடக்கு ராமலிங்கம் தெருவை சேர்ந்த மோகன்(45) என்பவர் செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது மயூரநாதர் ஆலய குளக்கரையில் ஜெயமாலாவின் கைப்பை கிடந்ததாக தெரிவித்துள்ளார். சந்தேகமடைந்த ஜெயமாலாவின் உறவினர்கள் நேற்று  கோயில் குளத்தில் இறங்கி தேடி பார்த்தனர். ஆனால் ஜெயமாலாவை கண்டுபிடிக்க முடியாததால் மயிலாடுதுறை போலீசில் புகார் செய்தனர். மாலை குளத்தில் அவரது சடலம் மிதந்தது.தகவலறிந்த போலீசார் சென்று சடலத்தை கைப்பற்றினர். இதுகுறித்து வழக்கு பதிந்து ஜெயமாலா எப்படி இறந்தார், குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா என கைப்பையை எடுத்தவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

📻நாளை ஆசிரியர் தினம் : தலைவர்கள் வாழ்த்து!!

சென்னை: நாளை ஆசிரியா் தினம் கொண்டாடப்படுவதையொட்டி தமிழக ஆளுநா் வித்யாசாகா் ராவ் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவா்தமது வாழ்த்துச் செய்தியில் அனைவருக்கும் கல்வி கற்பிக்கும்ஆசிரியா்களுக்கு நமது நன்றியை செலுத்தும் நாளே ஆசிரியா் தினம் என குறிப்பிட்டுள்ளார்.  மேலும் நாளை கொண்டாடப்பட உள்ள ஆசிரியா் தினத்தையொட்டி முதலமைச்சா் ஜெயலலிதா, பா.ம.நிறுவனா் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலா் வைகோ, ஜி.கே.வாசன், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனா்.

📻ஆபாச வீடியோ பிரச்சனை : சரணடைய சென்ற ஆம் ஆத்மி முன்னாள் அமைச்சரை கைது செய்து விசாரணை!!

டெல்லி: சஸ்பென்ட் செய்யப்பட்ட டெல்லி அமைச்சா் சந்தீப் குமார் மீது பாலியல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் அவரை கைது செய்துள்ளனா்.


📻அதிமுக பிரமுகரை கண்டித்து கலெக்டர் பங்களா முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி!!

திருச்சி: திருச்சி உறையூர் சாலை ரோட்டை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி பத்மாவதி நேற்று மாலை மகள், பேரக்குழந்தைகள் என 6 பேருடன் காஜாமலை காலனியில் உள்ள கலெக்டர் பங்களாவுக்கு வந்தார். திடீரென பங்களா முன் சாலையில் அமர்ந்து தர்ணா பேராட்டத்தில் ஈடுபட்டார். பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீஸ் ஒருவர், பத்மாவதியிடம் போராட்டத்தில் ஈடுபட்டதற்கான காரணம் குறித்து கேட்டபோது, கலெக்டரை சந்திக்க வேண்டும் என கூறினார். பெண் போலீஸ், ‘கலெக்டர் இன்னும் பங்களாவிற்கு வரவில்லை’ என கூறினார். அப்போது பத்மாவதி தான் கேனில் கொண்டு வந்திருந்த கெரசினை உடலில் ஊற்ற முயன்றார்.இதை கண்ட போலீஸ் கெரசின் கேனை பறித்து, பத்மாவதி உள்பட 6 பேரை கே.கே.நகர் போலீசில் ஒப்படைத்தார்.


📻ஹோசியர்பூர்: பஞ்சாப் மாநிலம் ஹோசியர்பூரில் குப்பை கிடங்கில்உள்ள குப்பையில் கிடந்த குண்டுவெடித்ததில் 2 பேர் உயிரிழந்தனர்.

📻திமுக கொள்கை பரப்பு இணைச்செயலாளராக வி.சி.சந்திரகுமார் நியமனம்: திமுக அறிவிப்பு

திமுக கொள்கை பரப்பு இணைச்செயலாளராக வி.சி.சந்திரகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். எஸ்.ஆர்.பார்த்திபனை திமுக தேர்தல் பணிக்குழு செயலாளராகவும், சி.எச்.சேகர், செஞ்சி சிவா திமுகவின் தீர்மானக்குழு உறுப்பினர்களாகவும்,  கான்ஸ்டன்டைன் ரவீசந்திரன் திமுக செய்தித் தொடர்பு இணைச்செயலாளராகவும், திமுகவின் விவசாய அணி இணைச் செயலாளராக எஸ்.அப்துல்காதர் ஆகியோரை க.அன்பழகன் நியமித்துள்ளார்.

http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

📻திருக்கோவிலூர் அருகே மேலும் ஒரு மாணவன் உயிரிழப்பு

திருக்கோவிலூர் அருகே சந்தப்பேட்டையில் மேலும் ஒரு மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 6-ம் வகுப்பு மாணவன் ராஜதுரை உயிரிழந்தார். அன்னை தெரசா உண்டு உறைவிட பள்ளி மாணவிகள் 2 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. மாணவர்கள் ஐயனார், ராஜதுரை உயிரிழப்பு குறித்து கல்வி, சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


📻செங்கல்பட்டு அருகே சாலை விபத்து: 3 பேர் உயிரிழப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே மாமண்டூரில் நடந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மாமண்டூரில் அடுத்தடுத்து 3 கார்கள் மோதியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

📻பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்களை தனிமைப்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி

பிரிக்ஸ் அமைப்பு நாடுகள், பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்களையும், ஊக்குவிப்பவர்களையும் தனிமைப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி கூறினார்.

சீனாவில் ஜி20 மாநாடுகள் கூட்டம் நடக்கிறது. இந்த மாநாட்டில் பல நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, பிரிக்ஸ் நாடுகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசுகையில், தெற்கு ஆசியாவில் உள்ள பயங்கரவாதிகளுக்கு உதவி செய்ய என எந்த தனி வங்கிகளும் இல்லை. ஆயுத தொழிற்சாலைகளும் இல்லை. இதன் மூலம் பயங்கரவாதிகளுக்கு யாரோ உதவி செய்வது தெளிவாக தெரியவந்துள்ளது. அவர்களை பிரிக்ஸ் நாடுகள் கண்டறிந்து, பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவதுடன், பயங்கரவாதத்தை ஊக்குவித்து ஆதரவளிக்கும் நாடுகளை கண்டறிந்து, தனிமைப்படுத்த வேண்டும். பயங்கரவாதம் நிலைத்தன்மையற்ற நிலை ஏற்படுத்துவதுடன், சமூகத்திற்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது எனக்கூறினார்.



📻சென்னை : சுரங்க பாதையில்  ரயில் சோதனை ஓட்டம்

சென்னை கோயம்பேடு - நேருபார்க் இடையே உள்ள சுரங்க பாதையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் இன்று காலை நடைபெற்றது. 8 கி.மீ. தொலைவு கொண்ட இந்த பாதையில் சோதனை நடைபெற்றது.


📻நாளை பிள்ளையார் சதுர்த்தி: ஜெ. வாழ்த்து!

தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள விநாயகர் சதுர்த்தி வாழ்த்துச் செய்தி: ஓம் எனும் ஓங்கார வடிவமான விநாயகர் பெருமான் அவரித்த தினம் இது. சகலத்திற்கும் தலைவனான பிள்ளையாரை வணங்கினால் நற்காரியங்கள் தடையின்றி நடைபெறும்!


📻 தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

22 கேரட் தங்கம் ஒரு கிராம் - ரூ.2,94522 கேரட் தங்கம் ஒரு சவரன் - ரூ.23,56024 கேரட் தங்கம் 10 கிராம் - ரூ.31,500வெள்ளி: ஒரு கிராம் - ரூ.50.00வெள்ளி கட்டி: ஒரு கிலோ - ரூ.46,760 

📻ரூ.1க்கு 1GB: அசத்தும் BSNL!

ரூ.50க்கு 1GB டேட்டாவை சமீபத்தில் அறிவித்தது ரிலையன்ஸின் ஜியோ. இதற்குப் போட்டியாக ரூ.1க்கு 1GB ப்ராட்பேண்ட் சேவையை BSNL நிறுவனம் அறிவித்துள்ளது. வரும் 9ம் தேதி முதல் இத்திட்டம் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

📻சென்னை-மதுரை இடையே ஏர் கார்னிவல் மாலை சேவை!

சென்னைக்கும் மதுரைக்கும் இடையே ஏற்கனவே காலை நேர சேவையை அளித்து வருகிறது ஏர் கார்னிவல் விமான நிறுவனம். இந்த நிலையில் அதன் மாலை நேர சேவையும் கடந்த 1ம் தேதி முதல் தொடங்கியுள்ளது. விரைவில் திருச்சி மற்றும் தூத்துக்குடிக்கும் விமான சேவையை அளிக்க உள்ளது ஏர் கார்னிவல்!



📻 மதுரை, சேலம் மற்றும் திருச்சி  "மாலைமலர்" கிளைகளின் முன்னாள் போட்டோகிராபர் அழகுசுந்தரம்  உடல்நலக்குறைவால் இன்று திருச்சியில்  உயிரிழந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

📻வேலூர்மாவட்டம்

வேலூரில் 2 ஏ டி எம் கள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில்  தனிப்படை போலீஸார் ஹரியானாவில் கொள்ளையர்களின் வாகனத்தை அடையாளம் கண்டுகொண்டதாகவும் விரைவில் கொள்ளையர்கள் கைது செய்யப்படுவார்கள் போலீஸார் தகவல்


📻ஆதித்தமிழர் மக்கள் கட்சியின்  மாநில செயற்குழு கூட்டத்தில், எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவை ஆதரிக்கப் போவதாக அறிவிப்பு. மேலும் கொடைக்கானல் குறிஞ்சி நகரில் வசிக்கும் அருந்ததியினர் மீதான அதிகார வர்க்கத்தின் அடக்கு முறைக்கு கடும் கண்டனம் தெரிவித்து செய்தியாளர்களுக்கு கட்சியின் நிறுவனத் தலைவர் கல்யாண சுந்தரம் செய்தியாளர்களுக்கு பேட்டி...


📻திண்டுக்கல் மாவட்டம் பழனி இந்து சமய  அறநிலைய துறை தலைமை அலுவலகத்தில் இருந்த சந்தனமரம் மர்ம நபர்களால் வெட்டி கடத்தல் கோவில் நிர்வாகம் வனத்துறை மற்றும் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்


📻மேலூர் அருகே டாடா சுமோ விபத்து. ஐந்து பேர் காயம்.
நான்கு வழிச்சாலையில் பள்ளத்தில் பாய்ந்தது. போலிஸ் விசாரணை.


📻அடுத்த மாதம் முதல் மீண்டும் ஹோண்டா அக்கார்ட்!
இந்த மாடல் காரை சமீப காலமாக நிறுத்தி வைத்திருந்தது ஹோண்டா நிறுவனம். இந்நிலையில் அதன் பெட்ரோல் மற்றும் ஹைப்ரிட் அக்கார்ட் மாடல்கள் மீண்டும் சந்தைக்கு வருகின்றன. இந்தியாவில் அவை அடுத்த மாதம் முதல் விற்பனைக்குக் கிடைக்கும்!

📻ராஜபக்சேவைத் தாக்க முயன்ற தமிழர்கள்!

மலேசியாவில் பயணம் மேற்கொண்டுள்ளார் இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே. அவருக்கு எதிராக அங்குள்ள தமிழர்கள் மிகவும் ஆக்ரோஷமான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராஜபக்சே தங்கியிருந்த இடத்திலுள்ள உணவகத்தை முற்றுகையிட்ட தமிழர்கள், அவரைத் தாக்கவும் தயாராக இருந்தனர். ஆனால் அவர் அங்கிருந்த பின் வாசல் வழியாகத் தப்பி விட்டார்



📻மலேசியாவில் ஜிக்கா!

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஜிக்கா வைரஸ், தற்போது மலேசியாவிலும் தலைகாட்டியுள்ளது. சபாவைச் சேர்ந்த 61 வயது நபரை ஜிக்கா வைரஸ் தொற்றியுள்ளதாகக் கருதப்படுகிறது. அண்டை நாடான சிங்கப்பூரில் இதுவரை 189 பேர் ஜிக்கா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்!



📻சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவ மனையில் இருசக்கர வாகனத்தில் விபத்து ஏற்ப்பட்ட சென்னை மாநகராட்சி மேயர் துரைசாமியின் பாதுகாவலர் பி.கே.ராதாகிருஷ்ணன் உரிய சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் எனக்கூறி உறவினர்கள் ஆர்ப்பாட்டம் இடம் சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை புதிய கட்டத்தின் பின்புறம்

📻மோடியின் போட்டோவை வரைந்து பரிசளித்த சீனாவின் பிரபல பெயிண்டர்

ஜி20 மாநட்டில் பங்கேற்க சென்றுள்ள பிரதமர் மோடியை பெருமைப்படுத்தும் விதமாக சீனாவில் ஷீஜெயிங்கில் உள்ள பிரபல கலைக்கூடத்தின் பெயிண்டர் சென் சூ என்பவர் வரைந்த மோடியின் போட்டோவை பரிசாக அளித்தனர்.

📻கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல் நிலையம் புதிய கட்டிடம் தேசிய நெடுஞ்சாலைக்கு மாற்றப்பட்டு ஒரு மாதம் மேல் ஆகிறது அன்று முதல் தொலைபேசி இனைப்பு மாற்றம் செய்யப்படாததால் புகார் தெரிவிக்க சிரமம் ஏற்பட்டுள்ளது .


📻கொக்கிரகுளம் கிழவீர்ராகபுரத்தில் வைத்திருந்த பிள்ளையார் சிலையை மேலப்பாளையம் காவல்துறையினர் எடுத்து சென்று காவல்நிலையத்தில் வைத்துள்ளனர்.
இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் ஆ.எஸ்..எஸ் அமைப்பினர் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் குவிந்துள்ளனர்


📻சென்னை அயனாவரத்தில் 9 கிலோ நகை கொள்ளை

சென்னை அயனாவரத்தில் உள்ள பாலாஜி ஜுவல்லா்ஸ் நகைக் கடையில் 9 கிலோ நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சோமசுந்தரம் தெருவில் உள்ள நகைக் கடையில் ரூ.2 லட்சம் பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கொள்ளை சம்பவத்தையடுத்து அக்கடையின் ஊழியா் தீபன் என்பவா் தலைமறைவாகிவிட்டதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனா்.


📻சீனாவில் பிரதமர் மோடி-ஆஸ்திரேலிய பிரதமர் டர்ன்புல் சந்திப்பு

ஜி20 மாநட்டில் பங்கேற்க சென்றுள்ள பிரதமர் மோடி ஆஸ்திரேலிய பிரதமர் மால்கோம் டர்ன்புல்லை சந்தித்து பேசினார். அவர்களது சந்திப்புக்கு பின்னர்  அணுசக்தி விநியோகக் கூட்டமைப்பு நாடுகளில் இந்தியாவுக்கான இடத்திற்காக ஆதரவு அளித்து வரும் ஆஸ்திரேலியாவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக மோடி  தெரிவித்தார். மேலும் அந்நாட்டு பிரதமரை இந்தியாவிற்கு வர அழைப்பு விடுத்துள்ளார்.



📻கோபி அருகே உள்ள கவுத்தப்பாடியில் திருமணமான புது தம்பதியர் மணிகண்டன், கவுரி பிரியா மற்றும் அவரது உறவினர்கள் சென்ற கார் எதிரே வந்த ஆம்னி பேருந்து மீது நேருக்கு நேர் மோதியதில் மணமக்கள் உட்பட 4 பேரும் படுகாயம்

📻காஞ்சிபுரம் - மறைமலைநகர் -கடந்த மாதம் விபத்தில் காயமடைந்து சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த  மறைமலைநகர் நகர்மன்ற துணைத்தலைவர் அதிமுகவை சேர்ந்த முருகன் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு .



📻காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போருரில்  உள்ள  திருவள்ளுவர் பூங்காவில்  திருப்போரூர் தமிழ் சங்கம் சார்பில் அமைக்கப்பட்டு திறந்து வைக்கும் நிலையில் இருந்த  திருவள்ளுவர் சிலையை   நள்ளிரவில் கோட்டாட்சியர் பன்னீர்செல்வம்  மற்றும் அரசு அதிகாரிகள் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட சிலை என கூறி சிலையை அப்புறப்படுத்தியதால் திருப்போருரில்   பரபரப்பு ஏற்பட்டுள்ளது

📻இராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில்  டிஎஸ்பி வாகனம்
  மோதி ஒருவர் கவலைக்கிடம். பொதுமக்கள்  சாலை மறியலில் ஈடுபட்டனர்.

📻ஜாதி மாறி காதலித்த ஜோடியை ஊர்க் கூட்டம் போட்டு 'கொல்ல' முடிவடுத்த கிராமம்.. திருச்சி அருகே பகீர்!
      உ.பி.யில் மண்ணில் குழந்தை உயிரோடு புதைப்பு.. மணல் அசைந்ததால் குழந்தையை காப்பாற்றிய மக்கள்
  திருவள்ளூர் மாவட்டத்தில் வேகமாக பரவும் டெங்கு: சிறுமி பரிதாப சாவு பலி 8 ஆனது பீதியில் மக்கள்
   புரட்சி பாரதம் மாவட்டச் செயலாளரை சுட்டுப் பிடிக்க உத்தரவு.. சென்னை, பெரம்பலூரில் பரபரப்பு


📻நெல்லை பாளையங்கோட்டை அருகே திம்மராஜபுரத்தில் நிகழ்ந்த சாலைவிபத்தில் ஏரல் காவல் நிலைய தலைமை காவலர் பரமகிருஷ்ணன் (45) உயிரிழந்தார். அவரது மகள் நந்தினி (12) காயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதி. இருசக்கர வாகனத்தில் சென்றபோது கார் மோதி விபத்துக்குள்ளானது. தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அடுத்த தட்டான்குளத்தை சேர்ந்த வர் பரமகிருஷ்ணன்.



📻📡📻📡📻📡📻📡📻📡📻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here