மாலை செய்தித்தாள் 04/09/2016 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

மாலை செய்தித்தாள் 04/09/2016


ஜெர்மனியின் வடகிழக்கு மாநிலமான மெக்லென்பர்க் மேற்கு போமெரானியாவின் (அல்லது மெக்லென்பர்க் வோர்போமேர்ன்) பிராந்திய நாடாளுமன்றத் தேர்தலில் இன்று வாக்கெடுப்பு நடைபெறுகிறது.அடுத்த ஆண்டு வரயிருக்கும் பொதுத் தேர்தலுக்கு முன்னால் சான்சலர் ஏங்கெலா மெர்கல் மக்களிடம் கொண்டிருக்கும் பலத்தை சோதனை செய்யும் முக்கிய தேர்தலாக இது பார்க்கப்படுகிறது.

சீனாவின் ஆன்குய் மாகாணத்தில் லாவ்யா கிராமத்தில், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பல ஆண்கள் தங்களுடைய வாழ்க்கையை பிரம்மசாரிகளாகவே தொடரும் நிலை இன்றைய சீனாவில் கூர்மையாகி வரும் சமூகச் சிக்கல்களை எடுத்துகாட்டுகிறது. கிராமத்தின் சாலை வசதி குறை ..இதனால் பெண்கள் இங்கு வாழ விரும்பவில்லையாம் .

உலகின் மிக பெரிய பொருளாதார நாடுகளின் தலைவர்கள் ஜி20 நாடுகள் உச்சி மாநாட்டிற்காக சீனாவின் ஹாங்சௌ நகரில் குழுமியுள்ளனர்.உலகப் பொருளாதாரத்தின் ஆரோக்கியம் அவர்களின் நிகழ்ச்சிநிரலில் முக்கியமானதாக இருக்கும்.

’கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டும்’ - அழகான இளம்பெண்ணுக்கு முகேஷ் அம்பானி சொன்ன பதில்!-பூஜா என்ற ஒரு அழகான இளம்பெண், ”பணக்கார ஆண்மகனை திருமணம் செய்து கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்” என்று இணையதளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இது குறித்து பூஜா கூறியதாவது, ”என் வயது 25. நான் பார்க்க மிகவும் அழகாக இருப்பேன். ஸ்டைல் மற்றும் நல்ல ரசனை உள்ள பெண். நான் வருடத்திற்கு நூறு கோடிக்கு மேல் சம்பாதிக்கும் ஆண்மகனை திருமணம் செய்துக் கொள்ள விரும்புகிறேன். அதற்கு என்ன செய்ய வேண்டும்?.” என்றார்.இந்த பதிவை பார்த்த முகேஷ் அம்பானி அப்பெண்ணிற்கு பதில் அளித்து கூறியதாவது, “உங்களை போல பல பெண்கள் இந்த சந்தேகத்துடன் உலாவி வருகிறார்கள். ஒரு முதலீட்டாளராக உங்கள் இந்த சந்தேகத்திற்கு, ஒரு நல்ல தீர்வை தர நான் விரும்பிகிறேன். எனது வருட சம்பாத்தியமும் நூறு கோடிக்கு மேலானது தான். ஆனால், உங்களை போன்ற ஒரு பெண்ணை தேர்வு செய்வது என் பார்வையில் தவறு என்று தான் நான் கருதுவேன். காரணம், அழகு என்பதை பெண்ணாகவும், பணம் என்பதை ஆணாகவும் வைத்துக் கொண்டால். இங்கு ஒரு பெரிய பிரச்சனை எழும். அழகு வருடத்திற்கு வருடம் குறைந்துக் கொண்டே போகும் ஒன்று.பணம் என்பது வருடத்திற்கு, வருடம் உயர்ந்துக் கொண்டே போகும் ஒன்று. பொருளாதார பார்வையில் இதை கண்டால், பணம் எனும் ஆண் (நான்) அதிகரிக்கும் சொத்து, அழகு எனும் பெண் (பூஜா) தேய்மானம் அடையும் சொத்து. ஒரு பத்து வருடம் கழித்து பார்க்கும் போது உங்களுக்கான மதிப்பு மிகவும் குறைந்திருக்கும். செழிப்படையும் ஒரு சொத்தை, தேய்மானம் அடையும் சொத்துடன் சேர்க்க எந்த முதலீட்டாளரும் முனைய மாட்டார். வர்த்தக நிலையில் பார்க்கையில் நூறு கோடிக்கு மேல் சம்பாதிக்கும் எந்த ஒரு நபரும் உங்களுடன் டேட்டிங் செய்வாரே தவிர, திருமணம் செய்துக் கொள்ள மாட்டார்.எனவே, உங்கள் அழகு தோற்றத்தையும், நூறு கோடி சம்பாதிக்கும் ஆண்மகன் தான் வேண்டும் என்பதை மறந்து விட்டு நீங்கள் நூறு கோடி சம்பாதிக்கும் பெண்ணாக வளருங்கள்.” என்றார்.

பொதுநல விரும்பிகளை பற்றிய அதிர்ச்சி தகவல்!-பொதுநல விரும்பிகளுக்கு அந்த மேட்டரில் ஆர்வம் அதிகம் என ஆய்வில் தெரியவந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், தொண்டு செய்யும் மனப்பான்மை உள்ளவர்கள், எதிர்பாலினத்தவரால் அதிகமாக கவரப்படுவார்கள் என்று கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது நடத்தப்பட்ட அறிவியல் ஆராய்ச்சியின் படி, பொதுநலத்தில் அதிகம் அக்கறை உள்ளவர்கள் தான் அதிகமாக செக்ஸ் தொடர்பு வைத்துக்கொள்கிறார்கள் என்று   நிரூபிக்கப்பட்டுள்ளது.மேலும், அவர்கள் செக்ஸில் அதிகம் ஆர்வம் உள்ளவர்கள் என்றும், அவர்கள் தான் அதிக முறை செக்ஸ் வைத்துக்கொள்பவர்கள் என்று ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.மேலும் விவரங்கள் கிடைக்கவில்லை ..

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பங்கேற்றவர் தற்கொலை: நடிகையின் விளக்கம்!- லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியதாவது, புகார் கொடுத்த ராதிகா, அந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் என்னுடன் செல்பி எடுத்தார். நாகப்பனை அவரது மனைவி அம்பிகா, மகள் ரேணுகா ஆகியோர்தான் அதிகமாக, அசிங்கமாக திட்டினார்கள். வீட்டில் இரண்டு மகள்களுக்கு செக்ஸ் தொந்தவு கொடுத்தார் என்று அவரது குடும்பத்தினர்தான் கூறினார்கள். எங்களுடைய டூயூட்டி போலீசுக்கு தகவல் கொடுப்பதும், குழந்தைகள் அமைப்பிடம் சொல்வதும் தான். நான் இந்த விவகாரத்தில் எந்த தவறும் செய்யவில்லை” என்றார்.

நடிகை டாப்சிக்கு அஜித் சொன்ன அறிவுரை!- இவர் அஜித்தின் ‘ஆரம்பம்’ படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அப்போது, நடிகர் அஜித் இவருக்கு சொன்ன அறிவுரையை தான் இப்போதும் கடை பிடிப்பதாக டாப்சி கூறியுள்ளார்.
இதுகுறித்து டாப்சி கூறியதாவது, “நம்மைப்பற்றி வரும் நல்ல கருத்துக்களை விட்டுவிடு, நமக்கு எதிராக வரும் விமர்சனங்களை மனதில் கொள்ள வேண்டும். அதை வைத்து தான், நமது தவறுகளை நாம் திருத்திக்கொள்ள முடியும், என்று அஜித் என்னிடம் கூறி இருக்கிறார். அவர் சொன்ன இந்த அறிவுரையைத் தான் நான் இன்றும் பின்பற்றுக்கிறேன். என்றார்.
தற்போது அவர், இந்தி, தெலுங்கு பட உலகில் மிக முக்கிய இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிலையன்ஸுக்கு பிஎஸ்என்எல் சரியான போட்டி: ஒரு ரூபாய்க்கு ஒரு ஜிபி இண்டர்நெட்-அரசு பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் ஒரு ஜி.பி. இண்டர்நெட்டுக்கு ஒரு ரூபாய் மட்டுமே செலவாகும் புதிய பிராட்பேண்ட் சலுகை ஒன்றை அறிவித்துள்ளது

வழி தெரியாமல் தவித்தவருக்கு வழிகாட்டிய பூனை-சுவிட்சர்லாந்தில் உள்ள ஆல்ப்ஸ் மலையில் வழி தெரியாமல் சிக்கித் தவித்த சுற்றுலா பயணியை பூனை ஒன்று வழிநடத்தி, பாதுகாப்பாக விடுதிக்கு கொண்டு சேர்த்துள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள ஆல்ப்ஸ் மலையில் வழி தெரியாமல் சிக்கித் தவித்த சுற்றுலா பயணிக்கு பூனை ஒன்று வழிகாட்டி, பாதுகாப்பாக விடுதிக்கு கொண்டு சேர்த்துள்ளது.இதுகுறித்து அவர் கூறியதாவது:- ஜிம்மல்வேல்டு  கிராமத்திற்கு அருகே உள்ள மலையில் பயணித்தபோது, அங்கிருந்து கீழே இறங்கும் வழி மறந்துபோனது. வழியை வரைப்படத்தில் பார்த்துக் கொண்டிருந்தேன்.  வரைப்படத்தில் இருந்த வழி மூடப்பட்டு இருந்தது. அப்போது வெள்ளை மற்றும் கருப்பு நிறத்துடன் ஒரு பூனை, என்னை ஒரு பாதையில் வழிநடத்தி சென்றது.அவ்வப்போது பின்னல் நான் வருகிறேனா என்று பார்த்துக்கெண்டே முன்னே சென்றது. இறுதியில் என்னை ஒரு பாதுகாப்பாக விடுதிக்கு கொண்டு சேர்த்தது.இவ்வாறு அவர் கூறினார்.

அதிமுக மேயர் மீதான மோசடி புகார் ’க்ளோஸ்’-நெல்லை அதிமுக மேயர் மீதான மோசடி புகார் முடித்து வைக்கப்பட்டதாக உயர்நீதி மன்ற கிளை தெரிவித்துள்ளது. நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த முத்துக்கண்ணன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ”அலுவலகம் அமைப்பதற்காக இடம் பார்க்கையில் தேன். பாளையங்கோட்டையிலுள்ள ஒரு வணிக வளாகத்தில் கடை காலியாக இருப்பதாக தகவல் கிடைத்தது.
கடைக்கான ஒப்பந்தம் மற்றும் சாவியை பெற நெல்லை அதிமுக மேயர் புவனேஸ்வரிக்கு ரூ.3 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என கூறினர். இந்த பணத்தை மேயரின் உதவியாளரிடம் கொடுத்தேன். அதன்பிறகு கடை சாவியை கொடுத்தனர். ஆனால் வாடகை ஒப்பந்தத்தை தரவில்லை. இதனிடையே, ஆக .2ல் கடையை பூட்டி சீல் வைத்தனர். மேயர் புவனேஸ்வரி உள்ளிட்டோர் கூட்டு சேர்ந்து என்னிடம் பணத்தை பெற்று மோசடி செய்துள்ளனர். எனது புகார் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி எஸ்.விமலா விசாரித்தார். அப்போது அரசுத் தரப்பில் மனுதாரரின் புகார் விசாரித்து முடிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்தும் வகையில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்து கட்சிகள் குழு ஸ்ரீநகர் சென்று உள்ளது. இந்நிலையில் சோபியானில் வன்முறை வெடித்து உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் எதிரொலியாக காவிரியில் ரகசியமாக கர்நாடக அரசு 11 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து உள்ளது. 

கேரளாவில் வீட்டிற்குள் தெருநாய் புகுந்து 11 மாத குழந்தையை தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

பிரதமர் மோடிக்கு சீன மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட பழங்கால இந்திய புனித நூல்கள் பரிசாக வழங்கப்பட்டது

ஆப்கானிஸ்தானில் பேருந்து-டேங்கர் லாரி மோதல்; 36 பேர் பலி

காசிம் அலி தூக்கிலிடப்பட்டதில் பாகிஸ்தான் கவலை, குறைபாடுடைய விசாரணை என கண்டனம்

சீனாவில் ஒபாமா தரையிறங்கிய போது ’இது எங்களுடைய நாடு!’ என சீன அதிகாரி கூச்சல்

பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார், இருதரப்பு உறவு குறித்து ஆலோசிக்கப்பட்டது

வாடிகனில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் அன்னை தெரசாவை புனிதராக அறிவித்தார்

விவசாயிகளை அவமதித்து பேசிய கருப்பண்ணனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு  தலைவர் பி.ஆர்.பாண்டியன் மன்னார
குடியில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். நடுவர்மன்ற தீர்ப்புக்கு முரணாக செயல்படும் எடப்பாடி பழனிச்சாமியின்  அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும்.

பஞ்சாப் மாநிலம் ஹோசியர்பூரில் குப்பை கிடங்கில் உள்ள குப்பையில் கிடந்த குண்டுவெடித்ததில் 2 பேர் உயிரிழந்தனர்.

ஜி20 மாநட்டில் பங்கேற்க சென்றுள்ள பிரதமர் மோடியை பெருமைப்படுத்தும் விதமாக சீனாவில் ஷீஜெயிங்கில் உள்ள பிரபல கலைக்கூடத்தின் பெயிண்டர் சென் சூ என்பவர் வரைந்த மோடியின் போட்டோவை பரிசாக அளித்தனர்.

சென்னை அயனாவரத்தில் உள்ள பாலாஜி ஜுவல்லா்ஸ் நகைக் கடையில் 9 கிலோ நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சோமசுந்தரம் தெருவில் உள்ள நகைக் கடையில் ரூ.2 லட்சம் பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கொள்ளை சம்பவத்தையடுத்து அக்கடையின் ஊழியா் தீபன் என்பவா் தலைமறைவாகிவிட்டதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனா்.

சீனாவில் பிரதமர் மோடி-ஆஸ்திரேலிய பிரதமர் டர்ன்புல் சந்திப்பு

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து

திருக்கோவிலூா் அருகே சந்தப்பேட்டையில் 3ம் வகுப்பு மாணவன் மா்மமான முறையில் உயிரிழந்துள்ளான். மாணவன் உயிரிழந்தது குறித்து அன்னை தெரசா உண்டு உறைவிட பள்ளியில் கல்வித்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் பள்ளியில் விசாரணை நடத்தினா்.

சிங்கப்பூரில் மேலும் இரு இந்தியர்களுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு

அரியலூர் ஓடும் அரசு பேருந்தின் ஓட்டுனர் மாரடைப்பால் உயிரிழந்தார். அவர், சாதூர்ணியமாக செயல் பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சேலத்தில் இருந்து தஞ்சாவூர் சென்ற அரசு பேருந்து அரியலூர் அருகே கீழப்பழூவூர் என்ற இடத்தில் சென்ற போது ஓட்டுனர் கணேசனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் சாதூர்ணியமாக பேருந்தை சாலை ஓரம் உள்ள வீட்டின் சுவரில் மோதி நிறுத்தினார். பின்னர் தனியார் மருத்துவமணைக்கு கொண்ட சென்ற போது அவர் உயிரிழந்தார்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் விநாயகர் சதுர்த்தி நாளில். அனைவருக்கும் அனைத்து நலமும் வளமும் கிடைக்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தியில், நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாகவும், நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசுத்தொகை ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும் எனவும் கூறினார்.

♈🇮🇳🌴🌴🌴🌴🌴🇮🇳♈

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here