@ மாலை செய்தித்தாள் @ 06/09/2016 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

@ மாலை செய்தித்தாள் @ 06/09/2016

🔵🔴கர்நாடகா விவசாயிகளின் போராட்டம் எதிரொலியாக மைசூர் மற்றும் ஓசூர் செல்லும் சாலைகள் வாகன நெரிசலால் திணறிக் கொண்டிருக்கிறது. மைசூரு, மாண்டியா மற்றும் ஸ்ரீரங்கப்பட்டினா பகுதிகள் முற்றாக ஸ்தம்பித்து போயுள்ளன.

🔵🔴கர்நாடகாவில் குடிநீருக்கே தண்ணீர் பற்றாக்குறை இருக்கும் போது தமிழகத்திற்கு தண்ணீரா?-- எடியூரப்பா

🔵🔴காவிரி நீர் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலம் மாண்டியாவில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

🔵🔴காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து கர்நாடக சட்ட நிபுணர்களுடன் முதலமைச்சர் சித்தராமையா ஆலோசனை

🔵🔴காவிரி விவகாரத்தில், தமிழக எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக போராடுவதாக முன்னாள் பிரதமர் தேவ கவுடா கூறியுள்ளார்.

🔵🔴காவிரி பிரச்சினை தொடர்பாக கர்நாடகாவில் போராட்டம் நடைபெறுவதையடுத்து சென்னையில் உள்ள கர்நாடக மாநில நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

🔵🔴உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி கர்நாடகா தண்ணீர் திறந்து விட வேண்டும்-- ஜி.கே.வாசன்

🔵🔴உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காத கர்நாடக அரசின் தன்னிச்சை போக்கு கூட்டாட்சி முறைக்கு எதிரானது--ஜி.கே. வாசன்

🔵🔴போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கர்நாடக அமைப்புகளின் இனவெறிப்போக்கு கண்டிக்கத்தக்கது--திருமாவளவன்

🔵🔴மு.க. ஸ்டாலினின் நேர்முக உதவியாளர் ஆதிசேஷன் தகுதியிறக்கம் செய்யப்பட்டுள்ளார்.இதுகுறித்து காரணம் கேட்டு சட்டசபை சபாநாயகருக்கு தி.மு.க. கொறடா சக்கரபாணி கடிதம் அனுப்பியுள்ளார்.ஸ்டாலினின் சிறப்பு நேர்முக உதவியாளராக ஆதிசேஷனை நியமிக்க வலியுறுத்தியுள்ளார்.

🔵🔴ஆன்லைன் ரம்மி: சூதாட்டம் என்பது மோசமான போதை; தடை செய்ய வேண்டும்--டாக்டர் ராமதாஸ

🔵🔴ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெகபூபா முப்தியை நாய் வாலுடன் பா.ஜ., எம்.பி., சுப்ரமணியன்சாமி ஒப்பிட்டு பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

🔵🔴தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் கொடநாடு சென்று ஓய்வு எடுத்து விட்டு சில நாட்கள் அங்கு அலுவலக பணிகளை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

🔵🔴பழனி அருகே அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். 40% மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

🔵🔴ஜம்மு-காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படும் --ராஜ்நாத் சிங்

🔵🔴பீகார் மாநிலம் சஹாப்ராவில் நேற்று மதுபான பாட்டில்கள் கொண்டு சென்ற வாலிபரை உள்ளூர் மக்கள் மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

🔵🔴பிஹாரில் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. மழை மற்றும் வெள்ளம் காரணமாக அங்கு இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. மழை தொடர்பான சம்பவங்களில் இதுவரை 198 பேர் உயிரிழப்பு; 5 லட்சம் பேர் கடும் பாதிப்பு

🔵🔴அமெரிக்கா அதிபர் ஒபாமாவை மிக மோசமான கெட்ட வார்த்தைகளில் சகட்டுமேனிக்கு பிலிப்பைன்ஸ் அதிபர் திட்டிய சம்பவம் சர்வதேச நாடுகளை அதிர வைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ் அதிபர் ரோடிரிகோவுடனான ஒபாமா சந்திப்பை ரத்து செய்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

🔵🔴ஹாங்காங்கில் நடைபெற்று முடிந்த ஹாங்காங் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாக சீன எதிர்ப்பாளர்கள் சிலர் வெற்றி பெற்றுள்ளனர். இளம் அரசியல் தலைவர்கள் பலர் வெற்றி பெற்றுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here