3 மணி செய்திகள் 06/09/2016 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

3 மணி செய்திகள் 06/09/2016


தயா மாஸ்டர் என்றழைக்கப்படும் விடுதலைப்புலிகளின் ஊடக இணைப்பாளராக இருந்த வேலாயுதம் தயா மாஸ்டருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு சட்ட வலுவற்றது என அவர் சார்பில் இன்று செவ்வாய்க்கிழமை வவுனியா மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி எம்.ஏ,சுமந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பெருங்கடல்கள் சூடாவதால் உண்டாகும் உலகளாவிய தாக்கம் குறித்து மிகவும் குறைவாக மதிப்பீடு செய்யப்படுவதாக 12 நாடுகளை சேர்ந்த 80 விஞ்ஞானிகள் தொகுத்துள்ள ஒரு அறிக்கை தெரிவித்துள்ளது. பருவநிலை மாற்றத்தால் மிதவைகள், ஜெல்லி மீன்கள், ஆமைகள் மற்றும் கடல் பறவைகள் ஆகியவை தங்களை காத்துக் கொள்ள கடல் நீரில் இறங்கி விடுவதாக, இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச அமைப்பு நிறுவியுள்ள ஆராய்ச்சி கூறியுள்ளது. முன்பு, பெருங்கடல் நீர் அவற்றுக்கு மிகவும் குளிராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.மீன் இனங்கள் புதிய அட்சரேகைகளுக்கு இடம் பெயர்ந்து விட்டதால், உலகின் மீன்பிடித்துறை சீர்குலைந்து விடலாம் என்றும் அந்த ஆராய்ச்சி மேலும் தெரிவித்துள்ளது.கடல் தொடர்பான வெப்ப மண்டல நோய்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் பாசிகளின் அதிகரிப்பு ஆகிய பிரச்சனைகள் பல புதிய பகுதிகளுக்கும் பரவக்கூடும் என்றும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஒரு தொண்டு நிறுவனத்தை தாக்கிய ஆயுதம் தாங்கிய மூன்று நபர்களை பாதுகாப்பு படையினர் கொன்று விட்டதாக ஆப்கானிஸ்தான் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
அமெரிக்க அதிபர் ஒபாமா குறித்து தகாத சொல் ஒன்றை பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டோ பயன்படுத்தியுள்ளதால், அவருடனான சந்திப்பை ஒபாமா ரத்து செய்துள்ளார்.

கர்நாடக மாநிலம் மாண்டியாவில், தமிழகத்திற்கு தண்ணீர் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்திவருகின்றனர்.அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கூறியதாவது, ” தமிழ்நாட்டில் ஒரு பொம்பள (ஜெயலலிதா) முதல்வரா இருந்து கொண்டு சாமர்த்தியமாக செயல்பட்டு வருகிறார். நம்ம கர்நாடகாவில் ஒரு ஆண் முதல்வர் (சித்தராமையா) சாமர்த்தியம் இல்லாமல் செயல்பட்டு வருகிறார். தண்ணீர் திறக்க சொல்ல உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. எங்களுக்கு குடிக்கவே தண்ணீர் இல்லாத நிலையில் தமிழக விவசாயிகளுக்கு எப்படி தண்ணீர் கொடுக்க முடியும்?.” என்றார்.மாண்டியாவில் நடக்கும் முழு அடைப்பு போராட்டத்தால், அம்மாவட்டத்தின் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு பதற்றத்தை தனிக்க போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சர்ச்சை நடிகைக்கு திருமணம்!-மானாட மயிலாட நடன நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் சுஜிபாலா. இவர், அய்யா வழி, சந்திரமுகி, கலவரம், முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம் ஆகிய படங்களில் துணை நடிகையாக நடித்திருக்கிறார். மேலும், உண்மை என்ற படத்தில் நாயகியாகவும் நடித்திருகிறார்.
உண்மை என்ற படத்தில் இவர் நடிக்கும் போது, அப்படத்தின் இயக்குனர் ரவிக்குமாருடன் நெருக்கம் ஏற்பட்டு, அவரை திருமணம் செய்துக் கொண்டுடார், பின் அத்திருமணம் விவாகரத்தில் முடிந்தது.
இந்நிலையில், அவர், ஊட்டியைச் சேர்ந்த பிரனேஷ் என்பவரை நேற்று திடீரென்று திருமணம் செய்துக்கொண்டார். சுஜிபாலாவின் சொந்த ஊரான நாகர்கோவில் இவர்கள் திருமணம் நடைபெற்றது. கிறிஸ்து அரசர் ஆலயத்தில் நடைபெற்ற இத்திருமணத்தில் சுஜிபாலாவின் குடும்பத்தினரும், நண்பர்கள் சிலரும் கலந்து கொண்டனர்.
பிரனேஷ், ஓட்டல் மேனேஜ்மெண்ட் படித்துவிட்டு கத்தார் நாட்டில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் வேலை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் செயலாளரும், கிரிக்கெட் வீரரும் என்னை பலாத்காரம் செய்தார்கள்: புயலை கிளப்பும் பெண்!-இலங்கை கிரிக்கெட் உலகில் பெண் ஒருவர் கூறிய பாலியல் புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் வர்த்தக பிரிவின் முகாமையாளராக பணியாற்றிய காயத்திரி விக்ரம சிங்க தான் பாலியல் புகாரை கூறியுள்ளார். இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ஏஸ்லி டி சில்வா உள்பட சில அதிகாரிகள் தன்னை பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறினார் காயத்திரி விக்ரம சிங்க.மேலும், முன்னாள் செயலாளர் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவரும் தன்னை பலாத்காரம் செய்ய முயன்றதாக அவர் கூறினார். இந்த பாலியல் குற்றச்சாட்டுகள் இலங்கை கிரிக்கெட் வரியத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.காயத்திரி விக்ரம சிங்கவிடம் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தகவல்களை பத்திரிகைகளுக்கு வழங்கிய குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தியபோது, இந்த பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்தார்.

தமிழக காங்கிரஸ் புதிய தலைவர் விஜயதாரணி?-சட்டசபை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ராஜினாமா செய்ததையடுத்து நீண்ட நாட்களாக அடுத்த தலைவர் நியமிக்கப்படாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் புதிய தலைவராக பலருடைய பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது. இதனையடுத்து அடுத்த தலைவர் ஒரு பெண்ணாக இருக்கலாம், அது விஜயதாரணியாக கூட இருக்கலாம் என செய்திகள் உலா வருகின்றன.இதனையடுத்து, காங்கிரஸ் கட்சியின் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களிடம் பேசிய விஜயதாரணி இந்தியாவின் கடல் பகுதிகளை பா.ஜ.க முழுமையாக இணைக்காததால் பாதுகாப்பானதாக இல்லை என கூறினார்.

இணையத்தில் அமைய இருக்கும் துறைமுக திட்டத்தை காங்கிரஸ் கட்சி எதிர்க்கவில்லை எனவும், இந்த திட்டத்தால் மீனவ கிராமங்கள் மற்றும் குடியிருப்புகள் அழிக்கப்படும் ஆபத்து இருக்கிறது. இதனால் மீனவர்கள் பாதிக்கப்படாதவாறு மறுசீரமைப்பு செய்து கொடுக்கப்படுவது குறித்து மத்திய அரசு விளக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.மேலும், தமிழக காங்கிரஸ் தலைவரை எங்கள் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் விரைவில் அறிவிப்பார்கள். இதற்காக 9 பேரிடம் கட்சியின் தலைமை நேர்காணல் நடத்தியுள்ளது. ஒரு பெண் அல்லது வேற யாராவது புதிய தலைவராக நியமிக்க வாய்ப்பு உள்ளது என அவர் கூறினார். இந்த பேட்டியின் மூலம் அவரே புதிய தலைவராக நியமிக்கப்படலாம் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

மந்திரியின் ஆபாச சிடியை வெளியிட்ட உதவியாளர் கைது-டெல்லி ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி சந்தீப் குமாரின் ஆபாச சிடியை வெளிட்ட அவரின் உதவியாளர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

லட்சங்களை உதறிவிட்டு தெருவோர குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் இன்ஜினியர்-மாதம் ரூ.3.5 லட்சம் சம்பளத்தை விட்டுவிட்டு இன்ஜினியர் ஒருவர் தெருவோர குழந்தைகளுக்கு பாடம் நடத்தி வருகிறார். குஜராத் மாநிலத்தில் விராட்ஷா என்ற இளைஞர் சிறு வயது முதல் கஷ்டப்பட்டு படித்தவர். கல்விக்கட்டணங்கள் கட்டுவதற்கு கூட கஷ்டப்பட்டுள்ளார். இவருக்கு படித்து முடித்தவுடன் துபாயில் மாதம் ரூ.3.5 லட்சம் சம்பளத்துடன் வேலையும் கிடைத்தது.

துபாயில் இருக்கும் போது அவருக்கு கெமிக்கல் இன்ஜினியருடன் திருமணம் நடந்தது. சிறுவயது முதல் இவருக்கு படிப்பை தொடர முடியாமல் கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்துள்ளது.சிறிது காலம் துபாயில் பணியாற்றி கிடைத்த பணத்தை எடுத்துக்கொண்டு வந்த விராத் ஷா அலகாபாத்தில் தெருவோர குழந்தைகளுக்கு கல்வி வழங்க தொடங்கினார்.45 வயதான ஷாவுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அவர் பள்ளி செல்லாமல் இருக்கும் குழந்தைகளை படிக்க வைப்பதற்காக தனது முழு நாளையும் எடுத்துக்கொள்கிறார். தெருவோரங்களில் வீடுகள் இல்லாமல் இருக்கும் குழந்தைகளை தனது பொறுப்பில் எடுத்து வளர்த்து வருகிறார்.
தற்போது 200க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கல்வி வழங்கி வருகிறார்.

தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை: பிஸ்கெட் சாப்பிட்டு உயிர்வாழும் இளம்பெண்

கர்நாடகா மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் சிறுவயது முதல் பிஸ்கட் மட்டுமே உணவாக உட்கொண்டு வாழ்ந்து வருகிறார். இந்த செய்தி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ராமாவா(18) என்ற இளம்பெண் குழந்தையாக இருந்த போது அவரது தாய் தனியார் நிறுவனத்தின் பிஸ்கெட் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். அதன் பின்னர் ராமாவா, பசியின் போது ரொட்டியை பசும்பாலில் தொட்டு சாப்பிடவிட்டு பழகியுள்ளார்.ராமாவா நாளடைவில் அதேபோல் பசி எடுக்கும் போதெல்லாம் குழந்தை முதல் சிறுமி வரை தொடர்ந்து பிஸ்கெட் மட்டுமே சாப்பிட்டு வந்துள்ளார். அவரின் தாய் இது கண்டுக்கொல்லாமல் விட்டுவிட்டார்.18 வயது நிரம்பியுள்ள ராமாவா பிஸ்கெட் தவிர வேறு எதுவும் உண்ணுவதில்லை. நாள் ஒன்றுக்கு 6 முதல் 7 பாக்கெட் வரை சாப்பிட்டு வருகிறார்.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

’பெண்களை சதைப்பிண்டங்களாக காட்டுகின்றனர்’ - இயக்குநர் ரஞ்சித்

சினிமாவில் பெண்கள் சதைப்பிண்டங்களாக காட்டப்படுகின்றனர் என்று திரைப்பட இயக்குநர் பா. இரஞ்சித் கூறினார்.
பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் சனிக்கிழமையன்று சென்னையில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு இயக்குநர் பா.இரஞ்சித் பேசினார்.


அப்போது பேசிய அவர், ”சினிமாவில் பெண்கள் சதைப்பிண்டங்களாக காட்டப்படுகின்றனர். பாலியல் இச்சை பற்றி பேசுகிற பெண்கள் வில்லன்களோடு இருப்பவர்களாகவும், அவர்கள் சிறுபான்மை சமூகத்தினர் பெயர் கொண்டவர்களாக காட்டுகின்றனர். உயர் சமூகத்து பெண்கள் பேசினால் அது புரட்சியாகவும், மற்ற பெண்கள் பேசினால் குற்றமாக சினிமா காட்டுகிறது.திரைப்படங்களில் சாதி மறுப்பு திருமணங்கள் செய்து கொள்பவர்கள் கொல்லப்படுவார்கள். படைப்பாளிகளுக்கு சமூக அக்கறையோடு இருக்க வேண்டும்.பெண்கள் பருவமடைந்த பெண் குழந்தைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் கற்பிக்கப்பட்டு, உளவியல் ரீதியாக பீதி உருவாக்கப்படுகிறது. இதனால் பெண்கள் சமூகத்தில் நிகழும் பிரச்சனைகளை தனியே எதிர்கொள்ள முடியாமல் ஆண் துணையை நாடுகிறார்கள். இதுவே மோசமானது. நமது குடும்ப அமைப்பு மிக மோசமானதாக உள்ளது” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here