🌍விழுப்புரம் திமுக நகரச்செயலாளர் திரு.செல்வராஜ் காலை நடைபயிற்சி சென்ற போது மர்ம நபர்களால் வெட்டிக்கொலை.
🌍சிவகாசி அருகே பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து
சிவகாசி: சிவகாசி அருகே வி.சொக்கலிங்கபுரத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டது. மூலப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் வெடி விபத்து ஏற்பட்டதில் 3 அறைகள் சேதமடைந்துள்ளது.
📡40 ஆயிரம் பேருக்கு டெங்கு, சிக்குன்குனியா பாதிப்பு
நாடு முழுவதும் சுமார் 40 ஆயிரம் பேர் டெங்கு, சிக்குன்குனியா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்தார்.
இதுகுறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியதாவது:
நாட்டில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களின் தாக்கம் திடீரென ஏற்பட்டுள்ளது. இதுவரை நாடு முழுவதும் சுமார் 40 ஆயிரம் பேர் இந்நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
🌍அதிமுக நிர்வாகி மறைவு: ஜெயலலிதா இரங்கல்
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக ஒன்றியச் செயலாளர் பழனியப்பன் மறைவுக்கு முதல்வரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட இரங்கல்: புதுக்கோட்டை மாவட்டம், அரிமழம் ஒன்றியச் செயலாளர் பழனியப்பன் உடல் நலக்குறைவால் மரணமடைந்து விட்டார் என்ற செய்தியறிந்து வருத்தமுற்றேன்.
அதிமுகவின் மீதும், அதன் தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்த ஆரம்ப கால உறுப்பினர் பழனியப்பன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்
📡கர்நாடகத்துக்கு மின்சாரம் வழங்க எதிர்ப்பு: என்எல்சியை முற்றுகையிட முயன்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் கைது
கர்நாடகத்துக்கு மின்சாரம் வழங்க எதிர்ப்பு தெரிவித்து, நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைமையகத்தை முற்றுகையிட முயன்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் 200 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
🌍நாமக்கல் மாவட்டத்தில் ரூ. 15 கோடிக்கு தேங்காய் வர்த்தகம் பாதிப்பு
கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக ஏற்பட்டுள்ள கலவரத்தால் நாமக்கல் மாவட்டத்தில் ரூ. 15 கோடி மதிப்பிலான தேங்காய் வர்த்தகம் பாதிப்படைந்துள்ளது.
📡கர்நாடக கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு தேவை
கர்நாடகத்தில் ஏற்பட்ட கலவரத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மத்திய அரசு, கர்நாடக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வலியுறுத்தியுள்ளார்.
🌍கவனக்குறைவாக செயல்படும் மருத்துவ மையம், அழகு நிலையங்கள்: விளக்கம் கேட்டு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு
மருத்துவ மையம் (கிளினிக்), அழகு நிலையங்கள் கவனக்குறைவாக செயல்படுவது தொடர்பாக எத்தனை புகார்கள் வந்துள்ளன? அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது உள்ளிட்ட 10 கேள்விகளை எழுப்பி, செப்டம்பர் 19-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
📡தங்கம் பவுனுக்கு ரூ.88 குறைவு
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.88 குறைந்து, ரூ.23,664-க்கு விற்பனையானது.
சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றத்தினால் தங்கத்தின் விலை இரண்டு நாள்களாக சரிவடைந்துள்ளது. வெள்ளியின் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டாலும் செவ்வாய்க்கிழமை விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.11 குறைந்து, ரூ.2,958-க்கு விற்பனையானது.
வெள்ளியின் விலையில் மாற்றம் ஏதும் ஏற்படாமல் ஒரு கிராம் ரூ.48.90க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.45,696-க்கும் விற்பனையானது.
செவ்வாய்க்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்):
ஒரு கிராம் தங்கம் 2,958
ஒரு பவுன் தங்கம் 23,664
ஒரு கிராம் வெள்ளி 48.90
ஒரு கிலோ வெள்ளி 45,695
📡காற்றழுத்தத் தாழ்வு பகுதி நீடிப்பு: இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி நீடிப்பதால், தமிழகத்தில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
🌍பண்ணைகளில் வயது முதிர்ந்த 45 லட்சம் கோழிகள் 36 லட்சம் தரம் குறைந்த முட்டை உற்பத்தி
நாமக்கல் மண்டலத்தில் ஏறத்தாழ 45 லட்சம் வயது முதிர்ந்த கோழிகளால் தினமும் 36 லட்சம் தரமற்ற முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதனால் தரமான முட்டைக்கும் மைனஸ் விலைக்கு விற்க வேண்டியுள்ளதாக பண்ணையாளர்கள் சிலர் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
📡பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது
சென்னை: பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட ஊர்களுக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகள் ஆர்வமுடன் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர்.
🌍பெங்களூருவில் இயல்பு நிலை திரும்பியது! பேருந்துகள் இயக்கம்- தனியார் பள்ளிகள் மட்டும் மூடல்!!
பெங்களூரு: காவிரி பிரச்சனையில் போர்க்களமாக காட்சியளிக்கும் பெங்களூரு நகரம் இன்று இயல்பு நிலைமைக்கு திரும்பியது. பெங்களூருவில் அரசு பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் இயங்குகின்றன. இருப்பினும் பல தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்துள்ளன.
📡உதகை மான் பூங்காவில் இரு கடமான்கள் சாவு
உதகையில் அமைந்துள்ள மான் பூங்காவில் இரு கடமான்கள் உயிரிழந்துள்ளன.
உதகையில் படகு இல்லம் அருகே மான் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. படகு இல்லத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் இப்பூங்காவில் 10-க்கும் மேற்பட்ட கடமான்களும், புள்ளி மான்களும் வனத் துறையினரால் பராமரிக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், இப்பூங்காவிலிருந்த கடமான்களில் ஒன்று திங்கள்கிழமை இரவு உயிரிழந்துள்ளது. அதைத்
தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை காலை மற்றொரு கடமான் உயிரிழந்துள்ளது. இதுகுறித்து, முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, வனத் துறை கால்நடை மருத்துவக் குழுவினர் உயிரிழந்த மான்களின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
🌍8 அடி நீள மலைப் பாம்பு
திருமலையில் 8 அடி நீள மலைப் பாம்பு பிடிபட்டது .
திருமலையில், உள்ளூர்வாசிகள் வசிக்கும் பாலாஜி நகர் பகுதியிலுள்ள குழந்தைகள் விளையாட்டுப் பூங்கா அருகில் சுமார் 8 அடி நீள மலைப் பாம்பு இருந்தது. இதைக் கண்ட பொதுமக்கள், தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், பாம்பு பிடிக்கும் ஊழியர் பாஸ்கர் நாயுடு அங்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர் பாம்பை லாவகமாகப் பிடித்து கோணி பைக்குள் அடைத்து, அடர்ந்த வனப் பகுதிக்குள் கொண்டு சென்றுவிட்டார்.
📡ஜன்தன் திட்ட சேமிப்பு 42 ஆயிரம் கோடியை தாண்டியது
புதுடில்லி: பிரதமரின் ஜன்தன் திட்ட சேமிப்பு 42 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது: ஜீரோ பேலன்ஸ் திட்டத்தின் படி ஆரம்பிக்கப் ட்ட பிரதமரின் ஜன் தன் திட்டம் கடந்த ஏப்ரல் மாதம் வரையில் 36 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. தற்போது கடந்த 7-ம் தேதி வரையில் இதன் வருவாய் 42 ஆயிரத்து 504 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த சேமிப்பு திட்டத்தில் சுமார் 24.27 கோடி கணக்குகள் துவக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
🌍அடுத்த 3 மாதங்களில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்
புதுடில்லி:'உலகளவில், வரும் அக்., - டிச., வரையிலான மூன்று மாதங்களில், இந்திய நிறுவனங்கள், அதிகளவில் வேலைவாய்ப்பை வழங்கும்' என, மேன்பவர் குழுமம் மதிப்பீடு செய்துள்ளது.இக்குழுமம், இந்தியாவைச் சேர்ந்த, 5,089 நிறுவனங்கள் மற்றும் 42 நாடுகளில், மதிப்பீட்டு காலாண்டில், வேலைவாய்ப்பு நிலவரம் குறித்து ஆய்வு செய்து, அறிக்கை வெளியிட்டு உள்ளது.
📡பெங்களூரு: துப்பாக்கி சூட்டில் இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம்
பெங்களூரு: துப்பாக்கி சூட்டில் இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம்
கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டதை கண்டித்து மாநிலம் முழுவதும் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. பெங்களூருவில் நேற்று முன்தினம் தமிழகத்துக்கு எதிராக கன்னட அமைப்புகள் சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. தமிழக லாரிகளும், பஸ்களும் தீவைத்து கொளுத்தப்பட்டன.
வன்முறையில் ஈடுபட்டவர்கள் போலீஸ் ரோந்து வாகனத்திற்கு தீவைத்தார்கள். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டது. இதில் 3 வாலிபர்கள் குண்டுகாயம் அடைந்தார்கள்.
அவர்களில் துமகூரு மாவட்டத்தை சேர்ந்த உமேஷ் (வயது 25) என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். படுகாயமடைந்த 2 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
உமேசுக்கு கலாவதி என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். கலாவதி தற்போது 7 மாத கர்ப்பமாக உள்ளார். உமேசின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உமேஷ் உடல் போலீஸ் பாதுகாப்புடன் சொந்த ஊருக்கு கொண்டுசெல்லப்பட்டது.
உமேஷ் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்தது. உமேசின் சகோதரரிடம் அதற்கான காசோலை வழங்கப்பட்டது.
🌍ராமேசுவரத்தில் கர்நாடக பக்தர்களுக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு
ராமேசுவரம் திருக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த கர்நாடக மாநில பக்தர்களை இந்து மக்கள் கட்சியினர் பூரண கும்ப மரியாதையுடன் செவ்வாய்க்கிழமை வரவேற்றனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடத்தில் தமிழர்கள் மீதும், தமிழக வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ராமேசுவரத்திலும் கர்நாடக பதிவெண் கொண்ட வாகனங்கள் மீது சிலர் திங்கள்கிழமை தாக்குதல் நடத்தினர்.
இந்நிலையில், ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக பெங்களூரு ஆஸ்டின் டவுன் பகுதியை சேர்ந்த சுமன்(21) தலைமையில் தனி பேருந்தில் 50 பக்தர்கள் செவ்வாய்க்கிழமை வந்தனர்.
திங்கள்கிழமை ராமேசுவரத்தில் கர்நாடக வாகனங்கள் தாக்கப்பட்டது குறித்த தகவல் அறிந்த அவர்கள் பெரும் அச்சமடைந்தனர். இதையடுத்து இந்து மக்கள் கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட தலைவர் பிரபாகரன் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் சென்று கர்நாடக பக்தர்களை சந்தித்தனர். பின்னர், இரு மாநிலத்தினரின் ஒற்றுமையை நிலைநாட்டும் வகையில் அவர்களை பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்று, கோயிலுக்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர், புனித தீர்த்தங்களில் நீராட வைத்து ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் சுவாமி தரிசனம் செய்ய வைத்து பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.
📡டெல்லியின் கஃபர் சந்தையில் தீ விபத்து
புதுடெல்லி: டெல்லியில் உள்ள கஃபர் சந்தையில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வண்டிகளுடன் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தற்போது தீ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுள்ளனர்.
🌍அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஜெயலலிதா இன்று ஆலோசனை
அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஜெயலலிதா இன்று ஆலோசனை
காவிரி விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இன்று ஜெயலலிதா ஆலோசனை நடத்த உள்ளார்.
📡கொல்கத்தாவின் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விபத்து
கொல்கத்தா: கொல்கத்தாவின் பதுரியாகாத பகுதியில் உள்ள மூன்று மாடி கட்டிடம் ஒன்று நேற்று இரவு இடிந்து விபத்துக்குள்ளானது. கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கி இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. மேலும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
🌍105 வயது மூதாட்டிக்கு விருது வழங்குகிறார் பிரதமர்
மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கிராமங்கள் தோறும் கழிப்பறைக் கட்ட மானியம் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநிலம், டன்கரகத்தில் வசிக்கும் 105 வயதான மூதாட்டியான குன்வர் பாய் என்பவர், தனது ஆடுகளை விற்று கழிப்பறையை கட்டியுள்ளார். இதனால் அவரை கவுரவிக்கும் வகையில் சுவச் பாரத்தி அபியான் விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. வரும் 17ஆம் தேதி டெல்லியில் நடக்கும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி இந்த விருதினை அவருக்கு வழங்குகிறார்.
📡காவிரி பிரச்சினை: தமிழ்நாடு தவிர மற்ற பிரிவுகளுக்கு கர்நாடக பேருந்துகள் இயக்கம்
கர்நாடகா: காவிரி பிரச்சினை தொடர்பாக, கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் அரசுப் பேருந்துகளை தமிழ்நாடு தவிர மாண்டியா மற்றும் மைசூர் உட்பட அனைத்து பிரிவுகளுக்கும் இயக்கப்படுகிறது.
🌍வதோதரா பந்தலில் விநாயகருக்கு நோட்புக், பென்சில் படையல்
நோட்புக்குகளும் மற்றும் பென்சில்களும் வதோதரா பந்தலில் விநாயகருக்கு வழங்கப்பட்டது. பின்னர் அந்த நோட்புக்குகளும் மற்றும் பென்சில்களும் அப்பகுதியில் உள்ள பின்தங்கிய குழந்தைகளுக்கு விநியோகிக்கப்பட்டன.
📡கொலம்பியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6 ஆக பதிவு
கொலம்பியா: கொலம்பியாவின் வடமேற்கு பகுதியில் சக்கிவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகியுள்ளது.
🌍சென்னை தேனாம்பேண்டையில் முன் விரோதம் காரணமாக முத்துராமலிங்கம் என்பவரது வேன் தீ வைத்து எரிப்பு
📡தஞ்சையில் இருந்து கும்பகோணம் சென்ற அரசு பேருந்துதை மர்ம நபர்கள் தண்டாங்கோரை என்ற இடத்தில் கல் வீசி தாக்குதல் முன்பக்க கண்ணாடி சேதம் அய்யம்பேட்டை போலிசார் விசாரணை
🌍சென்னை பூக்கடை பகுதியில் நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற காவல்உதவிஆய்வாளர் குப்புசாமி மீது தாக்குதல்
📡பாராலிம்பிக்-ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் தேவேந்திர ஜஜாரியா உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
🌍சீனாவில் உள்ள ஷாங்காய் பல்கலைக்கழகத் தலைவருக்கு தெய்வப் புலவர் திருவள்ளுவரின் திருவுருவப் படத்தை முன்னாள் எம்.பி. தருண் விஜய் அன்பளிப்பாக வழங்கினார்
📡கர்நாடகத்தில் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர கலவரத் தடுப்புப் படை வீரர்கள் 700 பேர் கூடுதலாக அந்த மாநிலத்துக்கு சென்றுள்ளனர்.
🌍தனது பிறந்த நாளை சொந்த மாநிலமான குஜராத்தில் கொண்டாட பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.வரும் 17-ம் தேதி பிரதமர் மோடி தனது 66-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
📡உத்தரப் பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவிடம் இருந்து, அந்த மாநில சமாஜவாதி கட்சித் தலைவர் பதவியை பறித்து, தனது சகோதரரும், மூத்த அமைச்சருமான சிவ்பால் சிங் யாதவிடம் அக்கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் வழங்கியுள்ளார்
🌍நாடு முழுவதும் சுமார் 40 ஆயிரம் பேர் டெங்கு, சிக்குன்குனியா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்தார்
📡கேரளத்தில் இருந்து கடந்த ஜூலை மாதம் மாயமான 6 பெண்கள், 3 குழந்தைகள் உள்ளிட்ட 22 பேர், ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளின் முகாமை சென்றடைந்துவிட்டனர் என்று தேசியப் புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) தெரிவித்துள்ளது
🌍பழநி மாஜி எம்.பி., கார்வேந்தன், பா.ஜ.,வில் நேற்று இணைந்தார்.
📡காவிரி நீர் பிரச்னை செய்திகளை டி.வி செய்தி சேனல்கள் கட்டுப்பாட்டுடன் ஒளிபரப்ப வேண்டும்: மத்திய அரசு
🌍டெல்லி --தனது 10 ஆடுகளை விற்று கழிப்பறை கட்டிய 105 வயது மூதாட்டிக்கு தூய்மை இந்தியா திட்டத்தின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 17 ம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி விருதினை வழங்க உள்ளார்.
📡பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு மஹிந்திர கார் மற்றும் 10 லட்ச ரூபாய் பரிசுத் தொகையும் வழங்குகிறது மஹிந்திரா நிறுவனம்
🌍கர்நாடகத்துக்கு மின்சாரம் வழங்க எதிர்ப்பு: என்எல்சியை முற்றுகையிட முயன்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் கைது
📡சென்னை அருகே மாயமான விமானத்தை தேடுவதற்காக சாகர்நிதி கப்பலில் ஆழ்கடல் வாகனம் பொருத்தப்பட்டு ஆய்வு செய்யப்படுகிறது. இந்த வாகனம், வரும் 16ஆம் தேதி முதல் தேடுதல் பணியில் ஈடுபடும் எனத் தெரியவந்துள்ளது
🌍சீனா பார்லிமென்ட்டில் மாகாண உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களில் 45 பேர் லஞ்சம் கொடுத்தும் மோசடி செய்தும் எம்.பி. பதவியை பிடித்தது தெரியவந்ததையடுத்து அவர்கள் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக