இரவு செய்திகள் 14/09/2016 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

இரவு செய்திகள் 14/09/2016

    
🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵

🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴

🔵🔴🔵🔴🔵🔴🔵🔵🔴🔵🔴

🔴கரூரில் சிக்கிய பெண் மாவேயிஸ்ட் கோர்ட்டில் ஆஜர்.. திருச்சி சிறையிலடைப்பு

கரூர்: கரூரில் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் மாவோயிஸ்டுகளில் ஒருவரான சந்திராவை வரும் அக்டோபர் 10-ம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

🔵வாகைக்குளம் கோயிலில் புரட்டாசி விழா : நேர்த்திக்கடனுக்காக தயாராகும் வண்ண வண்ண பொம்மைகள்

திருமங்கலம்: திருமங்கலத்தை அடுத்த வாகைகுளத்திலுள்ள அய்யனார் கருப்பசாமி கோயில் புரட்டாசி பொங்கல் திருவிழாவையொட்டி, பல்வேறு வண்ணங்களில் நேர்த்திக்கடன் பொம்மைகள் தயாராகி வருகின்றன. 

🔴நீதிபதிகள் நியமனங்களில் காலதாமதம் இல்லை: மத்திய அரசு தகவல்

டெல்லி: நீதிபதிகள் நியமனங்களில் எந்த காலதாமதமும் இல்லை என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் நியமனங்களில் மேற்கொண்ட நடவடிக்கை குறித்த ஆவணங்களை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது. கொலீஜியம் கொடுத்த பெயர் பரிந்துரைகளின் அடிப்படையில் விரைவில் நியமனங்கள் நடைபெறும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

🔵போர்பந்தரில் 36 மீனவர்கள் பாகிஸ்தான் கடற்படையினரால் கைது

போர்பந்தர்: குஜராத் மாநிலம் போர்பந்தரில் 36 மீனவர்களை பாகிஸ்தான் கடற்படையினர் கைது செய்த்தனர். இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

🔵விரைவில் : பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு ஜியோ 4ஜி சேவை..!

இந்திய அரசு நடத்தும் தொலைதொடர்பு ஆப்ரேட்டர் ஆன பிஎஸ்என்எல் நிறுவனம், ரிலையன்ஸ் உடன் 2ஜி மற்றும் 4ஜி சேவைகளுக்கான உள்-வட்ட ரோமிங் ஓப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட உள்ளது.

இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பெற்ற பிறகு, பிஎஸ்என்எல் ரிலையன்ஸ் ஜியோவின் 4ஜி களுக்கான குரல் அழைப்புகள் சேவையில் இருந்து 2ஜி சேவையை பெற முடியும். பின்னர் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு ஜியோ 4ஜி சேவையையும் பெரும் ஒன்றும் வகுக்கப்பட இருக்கிறது.

🔴தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

🔵தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து நெல்லையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம்

நெல்லை: தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து நெல்லையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

🔴மருத்துவ கழிவுகள் வழக்கு : தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல்

சென்னை: மருத்துவ கழிவுகள் கூடுதல் விலைக்கு தனியாருக்கு விற்கபடுவதை தடுக்கக் கோரி சண்முகம் என்பவர் தொடர்ந்த வழக்கில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்துள்ளது. 21 தனியார் மருத்துவமனைகள் 240 கிலோ மருத்துவ கழிவுகளை தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளதாக அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அக்டோபர் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

🔵விசேஷ நாட்கள்: போக்குவரத்து நெரிசலை குறைக்க 3 இடங்களில் பேருந்து நிலையம்!

சென்னை:

தீபாவளி, பொங்கல்போன்ற விசேஷ நாட்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க 3 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

🔴ஜீன்ஸ் அணிந்தால் கைது! வடகொரியா அதிரடி அறிவிப்பு!!

வடகொரியா:

வடகொரியாவில் நீல நிற ஜீன்ஸ் அணிந்தால் கைது செய்யப்படுவார்கள் என அந்நாட்டு அரசு அறிவித்து உள்ளது.

மது மற்றும் இணைய சேவைகளுக்கு தடை விதித்துள்ள வட கொரியா அடுத்த அதிரடியாக பொதுமக்கள் நீல நிற ஜீன்ஸ் அணிய தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

வட கொரியாவில் பொதுமக்கள் மது அருந்தவும் இணைய சேவைகளை பயன்படுத்தவும் அந்த நாட்டின் ஜனாதிபதி கிம் ஜோங் தடை விதித்துள்ளார். 

🔵நீதிமன்றத்தை நாடுவேன்: நடிகர் சரத்குமார் விளக்கம்

நடிகர் சங்கத்தில் இருந்து சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோர் உறுப்பினர் பதவியிலிருந்து தாற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்கள். இதுகுறித்து நடிகர் சரத்குமார் பதில் அளித்துள்ளார்கள்.

இந்த விவகாரம் குறித்து நடிகர் சங்கம் அறிக்கையில் கூறப்பட்டதாவது: முந்தைய நிர்வாகம் செய்த முறைகேடுகள் பல ஆவணங்கள் மற்றும் விவரங்கள் மூலமாக தெரிய வந்துள்ளது. இது பற்றி பலமுறை செயற்குழுவில் விவாதித்து பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் கடந்த ஆண்டு பொதுக்குழுவில் நடவடிக்கைகள் எடுக்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அதன்படி சட்டப்படி பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சங்க விதிமுறைகளின்படியும் இப்போது நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.

அதன்படி இந்த முறைகேடுகளின் விசாரணை முடிந்து உண்மை தெரியும் வரை முன்னாள் நிர்வாகிகளான சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோர் தாற்காலிகமாக நடிகர் சங்க உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது பழிவாங்கும் நடவடிக்கை அல்ல என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

நடிகர் சங்கத்தின் இந்த நடவடிக்கை குறித்து நடிகை ராதிகா சரத்குமார் ட்விட்டரில் கூறியதாவது: நடிகர் சங்கத்தில் பழிவாங்கும் படலம் தொடங்கிவிட்டது. 100 கோடி மோசடி என்று குற்றச்சாட்டை ஆரம்பித்தார் விஷால். அதற்குரிய விளக்கம் தரப்படவில்லை. ஆனால் உறுப்பினர் பதவியைப் பறித்துள்ளார்கள். நடிகர் சங்கத்தில் அனுபவம் உள்ளவர்கள் தேவைப்படுகிறார்கள். ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள்...! இதன் முடிவு என்ன? கசப்பணுவத்தை அழிக்கமுடியுமா? கருத்துவேறுபாடுகள் தோன்றியபோது விளக்கமளிக்க உங்களுக்குச் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது. நீங்களும் மன்னிப்பு கோரினீர்கள். விஷால், உங்களுக்குள் அளவுக்கு அதிகமான வெறுப்புணர்வை வளர்த்துக்கொண்டுள்ளீர்கள் என்றார்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து சரத்குமார் பதிலளித்துள்ளார். நடிகர் சங்க உறுப்பினர் பதவியிலிருந்து தன்னைத் தாற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ பதில் எதுவும் வரவில்லை. ஊடகங்கள் வாயிலாகவே தகவல் அறிந்தேன். கடிதம் வந்தால் நீதிமன்றத்தை நாடுவேன் என்று சரத் குமார் கூறியுள்ளார்.

🔵கால் முறிந்த மூதாட்டி... பெங்களூரு ஆம்புலன்ஸ் தமிழகம் வர மறுப்பு... பல கார் மாறி வீடு சேர்ந்த அவலம்

தருமபுரி: கால் எலும்பு முறிந்து அறுவை சிகிச்சை செய்து கொண்ட மூதாட்டியை தமிழகத்திற்கு கொண்டு வர கர்நாடக ஆம்புலன்ஸ்கள் மறுத்துவிட்டதால் தமிழக எல்லை வரை ஒரு வாடகை காரிலும், பின்னர் அங்கிருந்து சொந்த ஊருக்குச் செல்ல தமிழகத்தைச் சேர்ந்த காரிலும் மாறி மாறி பயணம் செய்து கடும் சிரமத்திற்கு இடையே வீடு சென்று சேர்ந்துள்ளார் 78 வயதான மூதாட்டி.

🔴சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 4 அறைகள் தரைமட்டம்

சிவகாசி: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு நான்கு அறைகள் தரைமட்டமாக அழிந்தன. இதில் அதிர்ஷ்டவசமாக தொழிலாளர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. படியூரில் இயங்கிவந்த ஷண்முகப்ரியா பைரோடெக்னிக் ஆலையில் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சர வெடி ,பூ சட்டி ஆகிய பட்டாசுகள் தயாரிக்கும் இந்த ஆலையில் ஜேசுராய் என்பவர் இன்று காலை உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை எடை போட்டுள்ளார். அப்போது எடைகள் தவறி விழுந்ததால் ஏற்பட்ட தீ பொறி அருகில் இருந்த பட்டாசுகளில் பரவியது. இந்த விபத்தில் மூலப்பொருட்கள் வைத்திருந்த நான்கு அறைகளும் வெடித்து சிதறின. 

விபத்து ஏற்படுவதை முன்கூட்டியே அறிந்த ஜேசுராய் அங்கு இருந்து தப்பிக்கும் போது கீழே விழுந்து சிறிய காயம் அடைந்தார்.

🔵சென்னை: கிரைண்டரில் துப்பட்டா சிக்கி உணவக ஊழியை சாவு

சென்னை: சென்னை அரும்பாக்கத்தில் கிரைண்டரில் துப்பட்டா சிக்கி பெண் இறந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
மதுரவாயல் ஏரிக்கரை பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பிரசாத். இவர் மனைவி ஹெப்சிபா (24). இவர் அரும்பாக்கம் ரசாக் கார்டன் பிரதான சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் ஹெப்சிபா செவ்வாய்க்கிழமை மாலை, அந்த உணவகத்தில் உள்ள கிரைண்டரில் மாவு அரைத்துக் கொண்டிருந்தாராம்.

அப்போது அவர் அணிந்திருந்த சுடிதாரின் துப்பட்டா, கிரைண்டரின் மோட்டார் பகுதியில் சிக்கிக் கொண்டதை ஹெப்சிபா கவனிக்கவில்லை.

இதில் துப்பட்டா மோட்டார் பகுதியில் முழுமையாக சிக்கியதும்,ஹெப்சிபா கழுத்தை துப்பட்டா இறுக்கி தூக்கி வீசியது.

இதில் பலத்த காயமடைந்த ஹெப்சிபா, சிறிது நேரத்தில் இறந்தார். இது குறித்து தகவலறிந்த அமைந்தகரை போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ஹெப்சிபா சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

🔴அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு வந்துள்ள புதிய வரவு

சென்னை: விலங்குகள் பரிமாற்ற முறையில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு நான்கு ரியா பறவைகள் (Greater Rhea) மற்றும் ஆறு வராக மான்கள் (Indian hog deer) 11.09.2016 அன்று கொணடுவரப்பட்டன. இவற்றில் 2 வெள்ளைநிற ரியா பறவைகளும் 2 பழுப்பு நிற ரியா பறவைகளும், 3 ஆண் மற்றும் 3 பெண் வராக மான்களும் அடங்கும். இவைகள் திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவிலிருந்து கொண்டுவரப்பட்டன. இவற்றிற்குப் பதிலாக இப்பூங்காவிலிருந்து 4 வெள்ளை மயில்கள் (ஆண்-2, பெண்-2), 4 கட்ட உடல் மலைப்பாம்புகள் (ஆண்-2, பெண்-2) ஆகியவை திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவிற்குக் கொடுக்கப்பட்டுள்ளன.

இப்புதிய வரவுடன் இப்பூங்காவிலுள்ள பாலூட்டிகள், பறவைகள் மற்றும் ஊர்வனங்கள் உட்பட அனைத்து உயிரினங்களின் எண்ணிக்கை 171 ஆகவும், விலங்குகளின் எண்ணிக்கை 2152 ஆகவும் உயர்ந்துள்ளன.

🔵பொறுப்புடனும் கவனமுடன் பணியாற்றுங்கள்: தொண்டர்களுக்கு ஜெயலலிதா கடிதம்

சென்னை: மக்களின் ஆதரவை அதிமுக தொடர்ந்து பெறும் வகையில் பொறுப்புடனும், கவனமுடனும் பணியாற்ற வேண்டும் என முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

🔵அறிஞர் அண்ணாவின் 108வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுங்கள் என்றும் செப்டம்பர் 15ம்தேதி முதல் 17ம்தேதி வரை 3 நாட்கள் தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

🔴வேலூர் சிறையில் பேரறிவாளனை தாக்கிய கைதி ராஜேஷ் வேறு சிறைக்கு மாற்றம்

வேலூர்: வேலூர் சிறையில் பேரறிவாளனை தாக்கிய கைதி ராஜேஷ் வேறு சிறைக்கு மாற்றப்பட்டார். சிறையில் உயர் பாதுகாப்பு பிரிவில் இருந்து ராஜேஷ் பொது சிறைக்கு மாற்றப்பட்டார். ராஜேஷ் இரும்பு கம்பியால் தாக்கியதில் பேரறிவாளன் படுகாயம் அடைந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

🔵துலீப் கோப்பை கிரிக்கெட்: இந்திய புளூ அணி சாம்பியன்

துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கவுதம் காம்பீர் தலைமையிலான இந்திய புளூ இணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இறுதிப் போட்டியில் யுவராஜ் சிங் தலைமையிலான இந்திய ரெட் அணியை வீழ்த்தி இந்திய புளூ அணி வெற்றி பெற்றது.

🔴கர்நாடக கலவரம் : உச்சநீதிமன்றத்தில் வழக்கு

மக்கள் கூட்டமைப்பு நிறுவனரும், பொதுச்செயலாளருமான நாகர்கோவிலைச் சேர்ந்த பி.சிவகுமார், கர்நாடகத்தில் போராட்டக்காரர்களை ஒடுக்கவும், கலவரக்காரர்களை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க ஜனாதிபதியிடம் மனு அளித்ததோடு, இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கும் தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

🔵பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பான மனு : 19ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை

வேலூர்: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பான மனு வரும் 19ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. காயம் அடைந்த பேரறிவாளன் மிகுந்த மனஉளைச்சலில் உள்ளதாகவும் அவரது வழக்கறிஞர் பாரி தெரிவித்தார். 

🔴பாகிஸ்தானை கண்டித்து ஐ.நா. அலுவலகத்திற்கு வெளியே பலூஜ் ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம்

நியூயார்க்: பலுசிஸ்தான் மக்களை பாகிஸ்தான் ராணுவம் துன்புறுத்தி வருவதை அடுத்து நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. அலுவலகத்திற்கு வெளியே பலூச் ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

🔵161-வது பிரிவின் கீழ் பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்ய கருணாநிதி வலியுறுத்தல்!!

சென்னை: அரசியல் சாசனத்தின் 161-வது பிரிவின் கீழ் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழரை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

🔵காலதாமத காவிரி....பெருக்கெடுக்கும் விவசாயிகள் கண்ணீர் !

காவிரியில் இருந்து ஜுன் -12 ஆம் தேதி வரை திறக்க வேண்டிய தண்ணீரை "இரும்பு மதகு இதயம் கொண்ட கர்நாடக அரசு திறந்து விடாமல் போனதால் கடந்த 3 மாதங்களில் சுமார் 2000 ஆயிரம் கோடி இழப்பு ஏற்ப்பட்டுள்ளதாக தமிழக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

🔴மே.இ. அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து ஃபில் சிம்மன்ஸ் நீக்கம்!

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ஃபில் சிம்மன்ஸ் நீக்கப்பட்டுள்ளார்.

🔵சென்னை : கர்நாடக அரசை கண்டித்து மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்!

கர்நாடக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றும், கர்நாடக மாநிலத்தில் தமிழக வாகனங்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும், காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு உரிய தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மக்கள் அதிகாரம் சார்பில் சென்னை அருகே குமணன்சாடிவயில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

🔴கிருஷ்ணகிரியில் நிறுத்தப்பட்டிருந்த லாரிகள் பாதுகாப்புடன் கர்நாடகாவிற்கு இயக்கம்

ஒசூர்: கிருஷ்ணகிரியில் நிறுத்தப்பட்டிருந்த லாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் கர்நாடகாவிற்கு இயக்கப்பட்டன.

தமிழகத்திற்கு காவிரி நீரை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் கன்னட அமைப்புகள் கடந்த 12 ந் தேதி வன்முறையில் ஈடுபட்டனர். இதில் தமிழக பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள், லாரிகள், கார்கள் என்று நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. மேலும் தமிழக பதிவெண் கொண்ட நூற்றுக்கணக்கான லாரிகளின் கண்ணாடிகளையும் வன்முறையாளர்கள் அடித்து நொறுக்கினர்.

இதனால் கிருஷ்ணகிரி வழியாக பெங்களூரு மற்றும் வட மாநிலங்களுக்கு இயக்கப்பட இருந்த ஆயிரக்கணக்கான லாரிகள் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டன.

இந்த நிலையில் கர்நாடகா மாநில முழுவதும் ஆயிரக்கணக்கான போலீஸர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். மேலும் துணை ராணுவத்தினரும் மாநிலம் முழுவதும் குவிக்கப்பட்டனர்.

இதையடுத்து அங்கு சகஜ நிலை படிப்படியாக திரும்பி வருகிறது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கர்நாடகா மற்றும் வெளி மாநில பதிவுஎண கொணட் லாரிகள் புதன்கிழமை முதல் படிப்படியாக கர்நாடகாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டன. 30 லாரிகளை ஒன்று சேர்த்து ஒரு காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீஸர் கர்நாடகா எல்லை வரை கொண்டு சென்றனர். அங்கு தயார் நிலையில் உள்ள கர்நாடகா போலீஸர் அந்த லாரிகளை அந்த மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

🔵காவிரி பிரச்னை: புதுவையில் 20000 கடைகள் மூடப்படும் வணிகர்கள் கூட்டமைப்பு

புதுச்சேரி: காவிரி பிரச்னை தொடர்பாக புதுச்சேரியில் நடைபெறவுள்ள முழு அடைப்பு போராட்டத்தையொட்டி 20 ஆயிரம் கடைகள் மூடப்படும் என வணிகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

🔵மாண்டியாவில் தருமபுரியை சேர்ந்த தமிழர் குடும்பத்தை காரோடு எரித்து கொல்ல முயற்சி!

தருமபுரி: கர்நாடகாவின் மாண்டியாவில் தருமபுரியைச் சேர்ந்த நவாஸ்பாஷா என்பவர் குடும்பத்தை காரோடு எரித்து கொல்ல முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

🔴சரக்கு' அடிப்பதற்கு பதில் 'லைட்டை ஆப் செய்து விட்டு ஜூஸ் குடித்து பாருங்கள்' : நிதிஷ்குமார்

🔵கர்நாடக வங்கி ஏ.டி.எம். மீது கல்வீச்சு

கோபி: காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு கர்நாடாகாவில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கர்நாடகாவிற்கு செல்லும் தமிழக வாகனங்கள் மீதும், தமிழர்கள் நடத்தும் வர்த்தக நிறுவனங்கள் மீதும் கன்னட அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவங்களை தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள கர்நாடக வங்கிகள் மற்றம் கன்னடர்கள் நடத்தும் நிறுவனங்களுக்கு போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். கோபி மொடச்சூர் ரோட்டில் ஸ்டேட் பாங் ஆப் மைசூர் உள்ளது. இந்த வங்கியின் அருகில் அதன் ஏ.டி.எம். மையமும் உள்ளது. இந்த ஏடிஎம் மையத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் ஏ.டி.எம். மையத்தின் கண்ணாடி மீது கல்வீசி தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்று விட்டனர். இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து, ஏ.டி.எம்.மையத்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய நபர்களை தேடி வருகின்றனர்.

🔴போக்குவரத்து கழக டீசல் சிக்கன நடவடிக்கையால் நத்தைபோல் செல்லும் மாநகர அரசு பஸ்கள்

நெல்லை: நெல்லை மாநகர பகுதியில் இயக்கப்படும் பழைய பாடாதி பஸ்கள் டீசல் சிக்கனத்தால் நத்தைபோல் நகர்ந்து செல்வதால் பின்தொடர்ந்து வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் குறுகிய சாலைகளில் விபத்திற்குள்ளாகும் நிலை தொடர்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது

🔵16-ம் தேதி போராட்டத்திற்கு பா.ஜ., ஆதரவு அளிக்காது: தமிழிசை

சென்னை: காவிரி விவகாரத்தில் தமிழர்களுக்கு பா.ஜ., துணை நிற்கும் என தமிழக பா.ஜ.,தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். இ துகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் வரும் 16-ம் தேதி நடைபெற உள்ளதாக குஅறிவிக்கப்பட்டுள்ள முழு கடையடைப்பு போராட்டத்திற்கு பா.ஜ., ஆதரவு அளிக்காது என கூறினார். 16-ம் தேதி நடைபெற உள்ள போராட்டம் மத்திய அரசுக்கு எதிராக நடந்தால் பா.ஜ., ஆதரவு அளிக்காது என கூறினார்.

🔴அருள்மிகு வேலூர் 80 கி.மீ! கல்லுச்சாமியின் 'தரிசனம்'

சாலையோரங்களில் பெரிய மரங்களுக்கு அடியில் இருக்கும் சிறு கல் கூட சாமியாகி கல்லுச்சாமி ஆகிவிடும். காஞ்சிபுரத்தில் இருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு இடத்தில், வேலூர் செல்வதற்கான மைல்கல் வைக்கப்பட்டு இருக்கிறது. பெரும்பாலும், மைல்கல்லில் போஸ்டர்களை ஒட்டி , அதை மறைப்பது தான் ஊர் வழக்கம்.

ஆனால், திடீரென 80கிமீ என குறிப்பிட்ட ஒரு மைல்கல்லில் சிறு துணி கட்டி அதை யாரோ சாமியாக்கிவிட்டு இருக்கிறார்கள்.தேங்காய், பால், பழம் வைத்து பூஜையும் செய்து இருக்கிறார்கள். அப்பகுதியில் நிறைய விபத்துக்கள் நடப்பதால், சிலர் இப்படி செய்து இருக்கலாம் என்கின்றனர் அப்பகுதி மக்கள்

🔵ஆடுகளை விற்று கழிவறை கட்டிய பாட்டிக்கு விருது

புதுடெல்லி: மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜ ஆட்சி அமைந்ததும், 'தூய்மை இந்தியா' திட்டத்தை அவர் அறிவித்தார். இத்திட்டத்திற்காக கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. இதில், வீடுகளில் கட்டாயம் கழிவறை கட்ட வேண்டுமென பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. பகுதியாக 'ஷ்யாமா பிரசாத் முகர்ஜி ரூர்பன் மிஷன்' என்ற திட்டத்தையும் தொடங்கி வைத்துள்ளார். 

இதன் மூலம் ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் கழிவறை இல்லாத வீடுகளில் மத்திய அரசின் மானியத்துடன் கழிவறை கட்டிக் கொள்ளலாம். கடந்த பிப்ரவரி மாதம் சட்டீஸ்கரில் இந்த திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது அங்கு கோத்தாபரி கிராமத்ைதச் சேர்ந்த 105 வயது பாட்டியான குன்வார்பாய் என்பவரின் காலில் விழுந்து பிரதமர் மோடி ஆசி பெற்றார்.

🔵குமரியில் ஓணம் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

நாகர்கோவில்: கேரளாவின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை இன்று (14ம்தேதி) கொண்டாடப்படுகிறது. பண்டைய காலத்தில் கேரளாவை செல்வ செழிப்புடன் ஆண்ட மகாபலி மன்னர் நினைவாக, இந்த பண்டிகையை கொண்டாடுவதாக ஐதீகம் ஆகும். ஆவணி மாதம் அஸ்தம் நட்சத்திரம் தொடங்கி பத்து நாட்கள் ஓணம் கொண்டாடப்படும். அதன்படி கடந்த 4ம் தேதி ஓணம் கொண்டாட்டங்கள் தொடங்கின.

இந்த முறையில் வழக்கத்தைவிட கூடுதலாக 11வது நாள் ஓணம் கொண்டாட்டங்கள் நடக்கின்றன. கேரளாவையொட்டி உள்ள குமரி மாவட்டத்திலும் இன்று ஓணம் பண்டிகை வெகு விமரிசையாக உற்சாகமாக கொண்டாடப்பட்டது. 

🔴ஜியோவுக்கு போட்டி: இணைகின்றன ரிலையன்ஸ் - ஏர்செல் நிறுவனங்கள்

புதுடில்லி: ரிலையன்ஸ் ஜியோவிற்கு போட்டியாக ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் மற்றும் ஏர்செல் நிறுவனங்கள் இணையபோவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.முகேஷ் அம்பானி அறிவித்துள்ள ரிலையன்ஸ் ஜியோ திட்டம் தொலை தொடர்பு துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளது. இது வோடோபோன், ஏர்டெல், ஏர்செல் உள்ளிட்ட பிற தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு மிகப்பெரிய சவாலாக உருவாகி உள்ளது.இந்நிலையில் இந்த சவாலை எதிர்கொள்ளும் விதமாக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனமும் ஏர்செல் நிறுவனமும் இணைய போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய அளவில் ஏர்செல் நிறுவனம் முன்னிலையில் உள்ளது. ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனம் ஏர்செல் நிறுவனத்துடன் இணைவதன் மூலம் அந்நிறுவனங்களின் மொத்த மதிப்பு சுமார் 35 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும் என கருதப்படுகிறது.

அதேசமயம், இரு நிறுவனங்களுக்கும் சுமார் 28 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.இரு நிறுவனங்கள் இணைந்தால் இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட நிறுவனமாக மாறும். இது இந்திய தொலைதொடர்பு துறையில் மிகப்பெரிய ஒருங்கிணைப்பாகும்.தற்போது வோடோபோன் நிறுவனத்திற்கு 20 கோடி வாடிக்கையாளர்களும் ஐடியா நிறுவனத்திற்கு 17.5 கோடி வாடிக்கையாளர்களும் உள்ளனர். ஐடியா நிறுவனமும் வருங்காலத்தில் வேறு ஒரு நிறுவனத்துடன் இணைய போவதாகவும் சொல்லப்படுகிறது.

🔵முழு அடைப்பு போராட்டத்துக்கு எஸ்.டி.பி.ஐ கட்சி ஆதரவு! தமிழர்கள் மீதான கன்னட அமைப்பினரின் தாக்குதலைக் கண்டித்து நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு எஸ்.டி.பி.ஐ கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

🔴ரிலையன்ஸ் மற்றும் ஏர்செல் நிறுவனங்கள் இணைவதாக அறிவிப்பு

புதுடெல்லி: ரிலையன்ஸ் மற்றும் ஏர்செல் நிறுவனங்கள் இணைவதாக அறிவித்துள்ளன. இந்திய தொலைத்தொடர்புத் துறையில் இது மிகப்பெரிய இணைப்பாகும்.

🔵திருச்செந்தூர் ரயிலில் தொடரும் துர்நாற்றம் : தண்ணீர் இல்லாமல் இயக்கப்படுவதாக பயணிகள் புகார்

நெல்லை: நெல்லை - திருச்செந்தூர் பாசஞ்சர் ரயில்கள் தண்ணீரின்றி இயக்கப்படுவதால் துர்நாற்றம் வீசுவதாக பயணிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். நெல்லை- திருச்செந்தூர் மார்க்கத்தில் தினமும் 7 பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கும் 7 பயணிகள் ரயில் வந்து செல்கின்றன. இம்மார்க்கத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் ரயில்களில் பயணித்து வருகின்றனர். இந்த ரயில்களில் பெரும்பாலும் தண்ணீர் இருப்பதில்லை. 

செந்தூர் எக்ஸ்பிரசின் பாசஞ்சர் டிரிப்பை தவிர, பிற ரயில்களின் பராமரிப்பும் படுமோசமாக உள்ளது. நெல்லை- திருச்செந்தூர் பாசஞ்சர் ரயில்களில் தண்ணீர் பற்றாக்குறை அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.

இதனால் கழிவறைகளில் துர்நாற்றம் வீசுகிறது. பயணிகள் கழிப்பறைக்கு செல்வதற்கே தயங்குகின்றனர். மேலும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக ரயில்களில் உணவருந்துவோர் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here