இன்றைய செய்தித்தாள் 15/09/2016 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

இன்றைய செய்தித்தாள் 15/09/2016


    
💥 சென்னை - ஐ.ஓ.சி. வங்கி மீது தாக்குல்

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வர்த்தகப் பிரிவு அலுவலகம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். கற்கள், கட்டைகள் கொண்டு தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


💥மீண்டும் கொடூரம்! காதலிக்க மறுத்த இளம்பெண் குத்திக் கொலை!

கோவை:

மீண்டும் ஒரு, ஒருதலைக் காதல் கொலை தமிழகத்தில் அரங்கேறியுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த சோமு - சாரதா தம்பதியின் மகள் தன்யா. வயது 23. இவர்கள், அன்னூர் தென்னம்பாளையம் சாலையில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தனர்.

பிஎஸ்சி ஐடி படித்துள்ள தன்யா, திருப்பூரை அடுத்த பொங்கலூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

தன்யாவை கடந்த 6 மாதமாக கேரளாவை சேர்ந்த ஜகீர்(25) ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அவரது காதலை தன்யா ஏற்க மறுத்ததை தொடர்ந்து, அந்த வாலிபர் மீண்டும் கேரளா சென்று விட்டதாக சொல்லப்படுகிறது.

தன்யா

இந்தநிலையில் தன்யாவுக்கும், தினேஷ்(26) என்பவருக்கும் திருமணம் செய்ய பெற்றோர் முடிவெடுத்து நிச்சயத்தார்த்தம் செய்தனர்.

நேற்று ஓணம் பண்டிகையையொட்டி தன்யாவுக்கு அலுவலகம் விடுமுறை விடப்பட்டு இருந்தது. தன்யா தனது வருங்கால கணவருடன் வெளியே சென்று விட்டு மாலை ஐந்து மணியளவில் வீடு திரும்பினார்.

அவர் வந்தததும் அவரது தந்தை சோமு தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருந்ததால், மனைவி சாரதாவுடன் மருத்துவமனைக்கு செல்வதாகச் சொல்லி புறப்பட்டார். தன்யாவை வீட்டிற்குள் வைத்து வெளியே பூட்டிவிட்டு சென்றிருந்தார். மாலை 6.30 மணி அளவில் வீடு திரும்பிய பெற்றோர், வீட்டுக்குள் தன்யா ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பிணமாக..

இதுகுறித்து தகவல் அறிந்த கோவை எஸ்.பி. ரம்யாபாரதி, கருமத்தம்பட்டி டிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி மற்றும் அன்னூர் காவல் நிலைய காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தன்யாவை ஒருதலையாக காதலித்த கேரள வாலிபர் ஜகீர் நேற்று மாலை வீட்டின் பின்பக்க சுவர் ஏறிக் குதித்து வீட்டிற்குள் நுழைந்ததாகவும், தன்யாவை தலையில் பலமாக தாக்கி வயிற்றில் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பியது தெரியவந்தது.



💥சென்னை அருகே மர்ம காய்ச்சலில் பெண் உயிரிழப்பு

சென்னை அருகே மாதாவரத்தில் (திருவள்ளுர் மாவட்டம்) சுவர்ணபுஷ்பம் என்ற பெண் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருவள்ளுர் மாவட்டத்தில் இதுவரை 12 பேர் மர்ம காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்.


💥தமிழகத்தில் நாளை முழு கடையடைப்பு: எதிர்க்கட்சிகள் ஆதரவு  ஒரு லட்சம் போலீஸார் பாதுகாப்பு

கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து, விவசாய சங்கங்கள், வணிகர் சங்கங்களின் சார்பில் தமிழகத்தில் செப்டம்பர் 16-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முழு கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது. இந்தப் போராட்டத்துக்கு திமுக, பாமக, மதிமுக, கம்யூனிஸ்ட், தமாகா, விசிக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.


💥டில்லியில் சிக்குன்குனியா : பலி 10 ஆனது

புதுடில்லி : டில்லியில் சிக்குன்குனியா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோயால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 31 வயது பெண் நேற்று உயிரிழந்துள்ளார்.சிக்குன்குனியாவால் உயிரிழந்த 5 நோயாளிகளில் 2 பேர் டில்லியையும், 3 பேர் உ.பி.,யையும் சேர்ந்தவர்கள். டில்லியில் கடந்த சில நாட்களாக டெங்கு பரவி வந்த நிலையில், தற்போது சிக்குன்குனியாவும் வேகமாக பரவி வருகிறது. இதனால் உயிரிழப்புக்கள் அதிகரித்து வருகின்றன. இது குறித்து டில்லி சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், சிக்குன்குனியாவை கண்டறிய தனியான பரிசோதனைகள் ஏதும் தேவையில்லை.

அடிப்படை மருத்துவம பரிசோதனை மற்றும் அறிகுறிகளை வைத்தே சிக்குன்குனியா நோயை கண்டறிந்து விடலாம். டெங்கு தடுப்பு நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது 


💥ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க கருணாநிதி கோரிக்கை

சென்னை : பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்


💥பாக்.,ல் ரயில்கள் மோதல் : 6 பேர் பலி

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் முல்தான் பகுதியில் பயணிகள் ரயில் மற்றும் சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகின. இதில் 6 பேர் பலியாகி உள்ளனர். 150 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.விபத்து நடந்த பகுதியில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. கராச்சியில் இருந்து புறப்பட்ட அவாம் பயணிகள் எக்ஸ்பிரஸ் விபத்திற்குள்ளாகி உள்ளது. விபத்திற்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


💥அந்தமானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

போர்ட் பிளேர் : அந்தமான் தீவில் இன்று அதிகாலை முதல் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.முதல் நிலநடுக்கம் அதிகாலை 2.30 மணிக்கு உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவாகி உள்ளது. 

💥அண்ணா திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய கலைஞர்

அண்ணாவின் 108வது பிறந்த நாளையொட்டி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு திமுக தலைவர் கலைஞர் இன்று காலை மலர்தூவி மரியாதை செலுத்தினர். திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட திமுகவின் முன்னணி தலைவர்கள் மற்றும் தொண்டர்களும் மரியாதை செலுத்தினர்.


💥சென்னை
தேனாம்பேட்டையில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வர்த்தக பிரிவு அலுவலகம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்

💥அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் ஜெயலலிதா இன்று காலை அண்ணாசாலையில் உள்ள அண்ணாசிலைக்கு நேரில் சென்று மலர் அஞ்சலி செலுத்துகிறார்.

💥ரயில் மறியல் - கன்னட அமைப்பினர் கைது
கர்நாடகா:மாண்டியா ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட முயன்ற கன்னட அமைப்பினர் கைது

💥தமிழகத்தில் நாளை முழு கடையடைப்பு--எதிர்க்கட்சிகள் ஆதரவு--ஒரு லட்சம் போலீஸார் பாதுகாப்பு


💥செப்டம்பர் 16ம் தேதி முழு அடைப்பு போராட்டத்துக்கு தேமுதிக முழு ஆதரவு அளிக்கும் என விஜயகாந்த் தெரிவித்தார். கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவுலகம் முன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார்.


💥பெங்களூரில் 144 தடை உத்தரவு வரும் 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


💥காவிரி விவகாரத்தால் கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய இரு மாநில எல்லைப் பகுதிகளில் நீடித்து வரும் வன்முறையைத் தடுக்க உத்தரவிடக் கோரும் மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கவுள்ளது


💥நாடு முழுவதும், 29 லட்சம், என்.ஜி.ஓ., எனப்படும் அரசு சாரா அமைப்புகள் உள்ளனவா? இவற்றின் உண்மையான செயல்பாடு தான் என்ன? இவற்றை கட்டுப்படுத்த போதிய சட்டப் பிரிவுகள் உள்ளனவா?--சுப்ரீம் கோர்ட்


💥ஐ.நா., மனித உரிமைகள் ஆணையத்தின் ஆளுமைத் திறன் மற்றும் அதன் நிர்வாகத்தில் தெளிவில்லை என ஐ.நா., மனித உரிமைகள் ஆணைய அமர்வில் இந்தியா குற்றம் சுமத்தியுள்ளது.


💥கோவையில் காதலிக்க மறுத்ததாக கூறி தன்யா (23) என்ற இளம்பெண் கத்தியால் குத்தி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


💥199 நாடுகளின் விவரங்களை மனப்பாடமாக கூறும் சிறுவன் அனுருத் வர்ஷனுக்கு யூனிக் உலக சாதனை விருது வழங்கப்பட்டது.


💥தேர்தல்களில் குற்றவாளிகள் போட்டியிடுவதற்கு ஆயுள் முழுவதும் தடை செய்யக்கோரி தொடரப்பட்டுள்ள வழக்குக் குறித்து விளக்கம் கேட்டு, மத்திய அரசு, தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது


💥அருணாச்சல மாநிலத்தின் புதிய ஆளுநராக வி.சண்முகநாதன் நேற்று பதவியேற்றார்.


💥பிரேசில் நாட்டில் இருந்து விமானம் வாங்கியதில் ஊழல் நடந்திருப்பது குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கபிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது.


💥ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வரும் சங்கீத சிகாமணி உஸ்தாத் சாந்த் கான் நினைவு வாழ்நாள் சாதனையாளர் விருது, சந்தூர் மேஸ்ட்ரோ கலைஞர் ஷிவ் குமாருக்கு இந்த ஆண்டு வழங்கப்படுகிறது.


💥மத்திய அரசின் கல்வி உதவித் தொகைகளை பெற ஆதார் எண் கட்டாயமில்லை என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.


💥கோவை அருகே கோழிகளை ஏற்றி வந்த மினிலாரி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகினர். இந்த விபத்தில் 250க்கும் அதிகமான கோழிகளும் பலியாகின.


💥காவிரி பிரச்னை தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை திமுக ஒருங்கிணைக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறியிருப்பது அவரது விருப்பம் --மு.க.ஸ்டாலின்


💥நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் காணாமல் போனது குறித்த வெளிநாட்டு ஆவணங்களின் ரகசியங்களைக் கண்டறிந்து வெளியிடுவதற்காக உயர் நிலைக் குழு அமைக்க வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதவுள்ளதாக நேதாஜியின் குடும்பத்தினர் தெரிவித்தனர்


💥பல்வேறு உயர் நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்புவதில் எந்தவிதமான சிக்கலோ, கருத்து வேறுபாடோ இல்லை என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது

💥மேற்கு வங்க மாநிலம், சிங்கூரில் டாடா நிறுவனத்தின் நானோ கார் தொழிற்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை, விவசாயிகளிடம் அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி புதன்கிழமை திரும்ப ஒப்படைத்தார்


💥உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுவை இணையதளம் மூலம் தாக்கல் செய்வதை அனுமதிப்பது குறித்து, தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாகவே முடிவெடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது


💥பலூசிஸ்தானில் பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.நா. அலுவலகம் முன்பு பலூச் விடுதலை அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


💥தொலைத் தொடர்புத் துறையில் முன்னணியில் இருக்கும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் (ஆர்.காம்) நிறுவனமும், ஏர்செல் (மேக்சிஸ் கம்யூனிகேஷன் பெர்ஹாட்) நிறுவனமும் ஒன்றாக இணையவுள்ளன. அதன்படி, அந்த இரு நிறுவனங்களும் ஒருங்கிணைக்கப்பட்டு ரூ.65,000 கோடி மதிப்பீட்டில் புதிய நிறுவனம் ஒன்று தொடங்கப்படவுள்ளது


💥தமிழகத்தின் பண்பாடு, கலாசாரத்தை சுற்றுலா மூலம் உலக அரங்குக்கு கொண்டு செல்லவும், சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கவும் வரும் 18-ஆம் தேதி முதல் மூன்று நாள்கள் சென்னையில் முதன் முதலாக தேசிய அளவிலான கண்காட்சி, கருத்தரங்கம் நடத்தப்பட இருக்கிறது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here