மதிய செய்திகள் 20/09/2016 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

மதிய செய்திகள் 20/09/2016


📡📡📡📡📡📡📡📡📡📡📡

📡💥📡💥📡💥📡💥📡💥📡

💥💥💥💥💥💥💥💥💥💥💥

📡ஜெயலலிதா பிறந்த நாள் பரிசு வழக்கு : உச்சநீதிமன்றத்தில் நவம்பர் 17-ம் தேதி இறுதி விசாரணை

டெல்லி: பிறந்தநாள் பரிசாக ஜெயலலிதா ரூ. 1.5 கோடி பெற்றது குறித்த சிபிஐ வழக்கு நவம்பர் 17ல் இறுதி விசாரணை நடைபெற உள்ளது.


💥மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: வட மற்றும் தென் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


📡பெங்களூருக்கு 15-வது நாளாக தமிழக அரசு பேருந்துகள் செல்லவில்லை

ஒசூர்: ஒசூர்-பெங்களூரு இடையே தமிழக அரசுப் போக்குவரத்து 15-வது நாளாக நிறுத்தப்பட்டுள்ளது. காவிரி நீரை தமிழகத்துக்கு வழங்கக் கூடாது என்று வலியுறுத்தி கர்நாடகத்தில் கடந்த 5-ஆம் தேதி முதல் கன்னட அமைப்புகள், விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக 5-ஆம் தேதி முதல் தமிழக அரசுப் பேருந்துகள் பெங்களூருக்குச் செல்லவில்லை. 


💥வனப்பகுதியில் புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு : மகிழ்ச்சியில் வன ஆர்வலர்கள்

மேட்டுப்பாளையம் : கோவை மாவட்டத்தின் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் எப்போதும் இல்லாத வகையில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது காட்டின் உயிர்சூழல் மேம்பட்டிருப்பதை காட்டுவதாக வன ஆர்வலர்கள் கூறுகின்றனர்.


📡பிளாஸ்டிக் பையில் பெண்ணின் சடலம்

பிளாஸ்டிக் பையில் பெண்ணின் சடலம்

பெரம்பலூர் மாவட்டம், சத்திரமனைவேலூர் - செட்டிக்குளம் சாலையில் உள்ள சுடுகாட்டில் பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்டு சிதைந்து போன பெண் சடலம் கிடப்பதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

வி.ஏ.ஓ. சந்திரமோகன் புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்குப்பதிவு செய்தார். 



💥R.D.O. கார் மீது கல்வீச்சு: 35 ஆண்கள் கைது: பெண்கள் மறியல்: 3 DSPக்கள் தலைமையில் போலீசார் குவிப்பு

விருத்தாசலம் - ஜெயங்கொண்டம் சாலையில் கடந்த சனிக்கிழமை பெரியவடவாடி கிராமத்தைச் சேர்ந்த மருது, செந்தில்குமார் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது ராஜேந்திரபட்டிணம் கிராமத்தில் செல்லும்போது சீனிவாசன் என்பவர் மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில் சீனிவாசன் உயிரிழந்தார்.

இதனை கண்டித்து சீனிவாசனின் உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் சாலை மறியல் நடத்தியதுடன், அந்த வழியே சென்ற பேருந்துகள், வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். சம்பவத்தை அறிந்து விருத்தாசலம் ஆர்.டி.ஒ. செந்தில்குமார் பேச்சுவார்த்தை நடத்த சென்றார். அவரது கார் கண்ணாடியையும் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

இந்த நிலையில் திங்கள்கிழமை இரவு விருத்தாசலம் டி.எஸ்.பி. கார்த்திகேயன், நெல்வேலி டி.எஸ்.பி. கலைச்செல்வன், சேத்தியாதோப்பு டி.எஸ்.பி.குத்தாலலிங்கம் ஆகியோர் தலைமையில் சுமார் 500 போலீசார் ராஜேந்திரபட்டிணம் கிராமத்திற்கு சென்றுள்ளனர். அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. கல்வீச்சு மற்றும் சாலை மறியலில் ஈடுபட்ட 35 பேரை கைது செய்து போலீசார் அழைத்துச் சென்றனர். இந்த கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் மறியல் செய்தனர். இதனால் பெரும் பதட்டம் நிலவியது.




📡குஜராத்தில் மீண்டும் பாஜக ஆட்சிதான்... 'காங்கிரஸ்' சர்வேயால் ராகுல் ஷாக்

அகமதாபாத்: குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சியைக் கைப்பற்றும் வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் கட்சியினர் அனுப்பி வைத்த கருத்து கணிப்பால் காங்கிரஸ் மேலிடம் அதிர்ந்து போயுள்ளதாக கூறப்படுகிறது.


💥கருப்புப்பணம் குறித்த ரகசியம் பாதுகாக்கப்படும்: வருமான வரித்துறை எஸ்.எம்.எஸ்.

கருப்புப்பணம் குறித்த ரகசியம் பாதுகாக்கப்படும்: வருமான வரித்துறை எஸ்.எம்.எஸ்.

கருப்புப் பணம் குறித்து தாமாகவே முன்வந்து தகவல் தெரிவிக்கும் திட்டத்திற்கு 11 நாட்களே அவகாசம் இருக்கும் நிலையில், கருப்புப்பணம் குறித்த ரகசியம் காக்கப்படும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது


📡ராம்குமார் உடல் இன்று பிரேத பரிசோதனை... ராயப்பேட்டை மருத்துவமனை அருகில் பதற்றம்!

சென்னை: மருத்துவக் குழு மற்றும் நீதிபதி முன்னிலையில் இன்று ராம்குமாரின் உடல் கூறு பரிசோதனை ராயப்பேட்டை மருத்தவமனையில் நடைபெறுகிறது.

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் மின்கம்பியை வாயால் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரித்தனர். இதனையடுத்து ராம்குமாரின் உடல் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனை உடற்கூறு பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக அரசியல் கட்சித் தலைவர்களும் பெற்றோர்களும் ஆட்சேபம் தெரிவித்தனர்.

மேலும் ராயப்பேட்டை மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டங்களையும் செய்தனர்.

இதனிடையே , ராம்குமாரின் உடற்கூறு பரிசோதனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மருத்துவ குழு முன்னிலையில் உடற்கூறு பரிசோதனை செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து நேற்று நடைபெறுவதாக இருந்த ராம்குமாரின் உடற்கூறு பரிசோதனை இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று 4 மருத்துவர்கள் கொண்ட குழு மற்றும் நீதிபதி தமிழ்செல்வி முன்னிலையில் உடற்கூறு பரிசோதனை செய்யப்பட உள்ளது. இந்த உடற்கூறு பரிசோதனை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட உள்ளது.

இதனையடுத்து ராயப்பேட்டை மருத்துவமனை அருகில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.





💥பிரேத பரிசோதனை முடிந்தாலும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டால்தான் உடலை வாங்குவேன்- ராம்குமார் பெற்றோர்

சென்னை: புழல் சிறையில் மின்வயரைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் ராம்குமார் உடலுக்கு இன்று நீதிபதி முன்னிலையில் பிரேதப் பரிசோதனை நடைபெறவுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது. மகனின் உடலுக்கு பிரேத பரிசோதனை நடந்தாலும் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடாமல் உடலை பெறப்போவதில்லை என்று ராம்குமாரின் பெற்றோர் உறுதியாக கூறியுள்ளனர்.


📡6 கூட்டுறவு நூற்பாலைகளில் சுமார் ரூ.14 கோடியில் நவீன இயந்திரங்கள்: முதலமைச்சர் ஆணை

சென்னை: 6 கூட்டுறவு நூற்பாலைகளில் சுமார் ரூ.14 கோடியில் நவீன இயந்திரங்களை நிறுவ முதலமைச்சர் ஆணை வெளியிட்டுள்ளார். மேலும் நெசவாளர்களுக்கான ஆண்டு காப்பீட்டுக் கட்டணத் தொகையில் 50% மானியம் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.


💥சாரதா சிட் பண்ட் மோசடி: அமலாக்கத்துறை சம்மனுக்கு எதிராக நளினி சிதம்பரம் வழக்கு!

சென்னை: சாரதா சிட் பண்ட் மோசடி வழக்கில் தம்மை நேரில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்ட அமலாக்கத்துறை சம்மனுக்கு தடை கோரி மூத்த வழக்கறிஞரும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவியுமான நளினி சிதம்பரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.



📡ராணுவத்தில் சேர்ந்து தீவிரவாதிகளை வேரறுப்பேன்!'' - 10 வயது சிறுவன் சபதம்

காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான ராணுவ வீரரின் 10 வயது மகன் ராணுவத்தில் சேர்ந்து தீவிரவாதிகளை வேரறுப்பேன் என சபதமிட்டுள்ளான்.


💥இந்தியா-இஸ்ரேல் கூட்டாக உருவாக்கிய ஏவுகணை சோதனை வெற்றி

ஒடிசா: இந்தியா இஸ்ரேல் கூட்டாக உருவாக்கப்பட்ட நீண்ட தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். 


📡35 ஊராட்சி ஒன்றியங்களில் இருசக்கர வாகன பழுது பார்ப்பு மையங்கள்: முதல்வர் ஆணை

சென்னை: 35 ஊராட்சி ஒன்றியங்களில் இருசக்கர வாகன பழுது பார்ப்பு மையங்களில் 30 பேருக்கு பயிற்சி வழங்கப்படும். மேலும் 3 மாத பயிற்சி காலத்தில் பயிற்சியாளர்களுக்கு உதவி தொகையாக ரூ.3000 வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். 


💥பீகாரில் ஹவில்தார் அசோக் குமார் சிங்கின் உடலுக்கு இறுதி சடங்கு செய்த மகன்

போஜ்பூர்: உரி தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் ஹவில்தார் அசோக் குமார் சிங்கின் உடலுக்கு பீகார் போஜ்பூரில் அவரது மகன் இறுதி சடங்குகள் செய்தார். 


📡சேத்துப்பட்டில் ஆர்எஸ்எஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டு தமிழ் அமைப்புகள் போராட்டம்

சென்னை: சேத்துப்பட்டில் ஆர்எஸ்எஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டு பல்வேறு தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்திவருகின்றனர். மே 17 இயக்கம், திராவிடர் விடுதலை இயக்கம் உட்பட தமிழ் அமைப்புகளை சேர்ந்தோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 


💥உரி தீவிரவாதிகள் தாக்குதல் சம்பவம்: தேசிய புலானய்வு அமைப்பு வழக்கு பதிவு

டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரி என்ற தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இந்த தாக்குதல் குறித்து தேசிய புலானய்வு அமைப்பு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. மேலும் சம்பவம் நடந்த உரிக்கு சென்று தடயங்கள் சேகரிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

📡ரூ. 546.84 கோடி மதிப்பீட்டில் 5 தொழில்நுட்ப திறன் வளர்ச்சி மையங்கள்: முதல்வர் ஆணை

சென்னை: ரூ. 546.84 கோடி மதிப்பீட்டில் 5 தொழில்நுட்ப திறன் வளர்ச்சி மையங்கள் அமைக்கப்படும். மேலும் ரூ.18 கோடி செலவில் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம் மூலம் 20,000 இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். 


💥பச்சமுத்து வழக்கு ஒத்திவைப்பு

சென்னை: ஜாமீன் நிபந்தனையை தளர்த்துமாறு பச்சமுத்து தாக்கல் செய்த மனு மீது செப்டம்பர் 26ல் விசாரணை நடத்தப்பட உள்ளது. குற்றப்பிரிவு போலீசில் தினமும் கையெழுத்திடும் நிபந்தனையை தளர்த்துமாறு பச்சமுத்து கோரிக்கை விடுத்தார். 



📡தமிழர்கள் மீதான தாக்குதலில் ஆர்.எஸ்.எஸ்-க்கு தொடர்பு: சென்னையில் தமிழ் அமைப்புகள் போராட்டம்!

சென்னை: கர்நாடகாவில் தமிழர்கள் மீதான தாக்குதலை ஆர்.எஸ்.எஸ். இயக்கம்தான் கட்டவிழ்த்துவிட்டதாக குற்றம்சாட்டி அந்த அமைப்பின் சென்னை தலைமையகத்தை பெரியார் அமைப்புகள், தமிழர் இயக்கங்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தின.



💥தொடரும் அவலம்: இறந்த பெண் உடலை டிராலி-ரிக்ஷாவில் கொண்டு செல்லும் அவலம்

புவனேசுவரம்: அரசு மருத்துவமனையில் சிகிச்சையின்போது உயிரிழந்த பழங்குடியினப் பெண்ணின் உடலை இறுதிச் சடங்கு வாகனம் கிடைக்காததால் உறவினர்கள் சொந்த ஊருக்கு டிராலி-ரிக்ஷா மூலம் கொண்டு வந்த சம்பவம் ஒடிஸாவில் நடந்துள்ளது.


💥பாக்., செயலாளர் கூட்டத்தில் இந்திய பத்திரிகையாளர் வெளியேற்றம்

நியூயார்க்: பாக்., வெளியுறவு செயலாளர் கலந்து கொண்ட பத்திரிகையாளர் சந்திப்பில், இந்திய பத்திரிகையாளர் வெளியேற்றப்பட்டார். இந்தியாவை சேர்ந்த பத்திரிகையாளர் யாரும் அனுமதிக்கப்படவில்லை.


📡ராம்குமார் மரணம் தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும்: திருமாவளவன்

சென்னை: ராம்குமார் மரணம் தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளனர்.


💥சவுந்தர்யா ரஜினிகாந்தின் உருவ படம் எரிப்பு : விலங்குகள் நலவாரிய தூதர் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தல்

திருச்சி: விலங்குகள் நல வாரியத்தின் தூதராக ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா நியமிக்கப்பட்டதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. விலங்குகள் நலவாரிய நல்லெண்ண தூதர் பதவியை ரஜினி மகள் சவுந்தர்யா உடனடியாக ராஜினாமா செய்ய தமிழர் வீர விளையாட்டு மீட்பு கழகத்தினர் வலியுறுத்தியுள்ளனர். மேலும் அவருக்கு எதிராக கண்டன ஆர்பாட்டங்களையும், உருவபடத்தையும் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை தடை செய்ய காரணம் விலங்குகள் நல வாரியம் என வீர விளையாட்டு மீட்பு கழகம் குற்றம் சாட்டியுள்ளது. 

இந்த அமைப்புகள் தமிழ் கலாச்சாரத்தை அழிப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஜல்லிக்கட்டை கடுமையாக எதிர்க்கும் விலங்குகள் நல வாரியத்துக்கு தூதராக உள்நோக்கத்துடன் செளந்தர்யா நியமிக்கப்பட்டதாக தமிழர் வீர விளையாட்டுப் பேரவையின் குற்றச்சாட்டியுள்ளது.

இந்நிலையில் இன்று திருச்சியில் சவுந்தர்யாவின் உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



📡கோபிச்
செட்டிபாளையத்தில் தொழிலதிபர் கடையில் வருமான வரி சோதனை

கோபி: கோபிச்செட்டிபாளையத்தில் தொழிலதிபர் ஜெகநாதன் என்பவர் கடைகளில் வருமான வரிச் சோதனை நடத்தப்பட்டது. வரி ஏய்ப்புச் செய்துள்ளதாக வந்த புகாரை அடுத்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். ஜெகநாதனின் அலுமினிய பாத்திர தொழிற்சாலை மற்றும் விற்பனை நிலையங்களில் ரெய்டு மேற்கொள்ளப்பட்டது. 

💥காவிரி விவகாரம்: மண்ணை தின்று போராட்டத்தில் ஈடுபட்ட கன்னட அமைப்பினர்

மாண்டியா: காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினர் மாண்டியாவில் மண்ணை தின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 



📡டெல்லியில் மர்மநபரால் 28 முறை கத்தியால் குத்தப்பட்ட பெண் உயிரிழப்பு

புராரி: டெல்லியில் புராரி என்ற இடத்தில் 21 வயது பெண்ணை அடையாளம் தெரியாத நபர் 28 முறை கத்தியால் குத்தினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். 

💥ஒப்பனை கலைஞர் உயிரிழந்த விவகாரம் : நடிகர் ஜிம் கேரி மீது வழக்கு

லாஸ்ஏஞ்சல்ஸ்: ஒப்பனை கலைஞர் கத்ரியோனா வயிட் உயிரிழப்பு குறித்த சர்ச்சையில் அவரது முன்னாள் காதலரும், நடிகருமான ஜிம் கேரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது


📡ஏர் இந்தியா விமானத்திற்கு வெடி குண்டு மிரட்டல்: மர்ம பெண் கைது?

கொல்கத்தா: ஏர் இந்தியா ஏஐ-729 விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு இன்று காலை கொல்கத்தா நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் விமான நிலையத்திற்கு வந்தது.
இதையடுத்து கொல்கத்தாவில் இருந்து கவுகாத்திக்கு செல்ல இருந்த ஏர் இந்தியா விமானத்தை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் விமானத்தில் இருந்த பயணிகளை உடனடியாக வெளியேற்றினர். பின்னர் விமானத்தில் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் முடிவில் விமானத்தில் வெடி குண்டுகள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பிதாநகர் நகர போலீஸார் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொலைபேசியில் வெடி குண்டு விடுத்தவர் ஒரு பெண் என்றும் அவர் ராஜர்ஹர்ட் பகுதியை சேர்ந்தவர் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


💥கோதையாறு பாசனத்திட்ட அனைகளில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு: முதல்வர்

சென்னை: கோதையாறு பாசனத்திட்ட அனைகளில் இருந்து நாளை முதல் நீர் திறக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

📡பயங்கரவாத முகாம்களை குண்டுவீசி அழிக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி காட்டம்

புது தில்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குண்டுகளை வீசி அழிக்க வேண்டுமென்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

💥2000 மண்பாண்ட தொழிலாளர்களுக்கு ரூ.4 கோடி செலவில் விலையில்லா மின்சக்கரம்: முதல்வர் ஆணை

சென்னை: 2000 மண்பாண்ட தொழிலாளர்களுக்கு ரூ.4 கோடி செலவில் விலையில்லா மின்சக்கரம் வழங்கப்படும். மேலும் 10000 கைவினைஞர்களுக்கு தலா ரூ.5000 மதிப்புள்ள விலையில்லா உபகாரணப்பெட்டி வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

📡செங்கல்பட்டில் ரூ.28 கோடி செலவில் கட்டுமானத் திறன் பயிற்சி நிலையம் அமைக்கப்படும்: முதல்வர் ஆணை

சென்னை: செங்கல்பட்டில் ரூ.28 கோடி செலவில் கட்டுமானத் திறன் பயிற்சி நிலையம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். 


💥துபாயில் நவம்பர் 25ல் நடைபெற உள்ள அபிராமி விருதுகள் மற்றும் நட்சத்திர கலைவிழா 2016 அறிமுக நிகழ்ச்சி

துபாய்: துபாயில் வரும் நவ 25ல் அபிராமி மெகா மால் மற்றும் துபாய் எஸ் ஈவெண்ட்ஸ் இணைந்து நடத்தும் அபிராபி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் பிரம்மாண்ட நட்சத்திர கலை விழாவிற்கான அறிமுகம் மற்றும் டிக்கெட் வெளியீடு நிகழ்ச்சி துபாய் லூலூ வில்லேஜ் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அபிராமி தியேட்டர்ஸ் மேனேஜிங் டைரக்டர் அபிராமி ராமநாதன் மற்றும் எக்சிகியுடிவ் டைரக்டர் திருமதி நல்லம்மை ராமநாதன், நடிகர் ஜீவா, இயக்குனர் வெங்கட் பிரபு, நடிகர் சுப்பு பஞ்சு, பிரபல பாடலாசிரியர் மதன் கார்கி மற்றும் நடிகை மாயா உள்ளிட்ட சினிமாத்துறையை சேர்ந்த பலர் பங்கேற்றனர்.


📡காவிரி வழக்கு: முன்கூட்டியே பள்ளிகளை மூடி குழந்தைகளை வீட்டுக்கு அனுப்பிய பெங்களூர் பள்ளிகள்

பெங்களூர்: காவிரி வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வர உள்ளதால் பெங்களூர் பள்ளி நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கையாக, குழந்தைகளை முன்கூட்டியே வீட்டுக்கு அழைத்துச் செல்ல பெற்றோருக்கு தகவல் கொடுத்து வருகின்றன.


💥காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா உதவ வேண்டும்: பாகிஸ்தான் பிரதமர் வேண்டுகோள்

நியூயார்க்: காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா உதவ வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். 




📡குலசேகரா கைதாகி விடுதலை

கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குலசேகரா, சாலை விபத்து வழக்கில் கைதாகி ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.


💥தமிழகத்தில் 5 இடங்களில் தொழில்நுட்ப திறன் வளர்ச்சி மையங்கள் : முதல்வர் ஜெ., அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் 5 இடங்களில் தொழில்நுட்ப திறன் வளர்ச்சி மையங்கள் அமைக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். சென்னை தரமணி, காஞ்சிபுரம், விழுப்புரம், ஆவடி மற்றும் வேலூர் உள்ளிட்ட இடங்களில் இந்த மையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


📡நீதிபதியை தேர்வுசெய்ய நீதித்துறை சாராத அமைப்பை உருவாக்கக்கோரிய மனு தள்ளுபடி

டெல்லி: நீதிபதியை தேர்வுசெய்ய நீதித்துறை சாராத அமைப்பை உருவாக்கக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் உச்சநீதிமன்றத்திற்கு சட்டத்திருத்தம் செய்ய அதிகாரம் இல்லை எனக்கூறி மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 


💥மாண்டியாவில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம்: 144 தடை உத்தரவு நீட்டிப்பு

மாண்டியா: காவிரி வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில் மாண்டியாவில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கக்கூடாது என்றும் காவிரி மேற்பார்வைக் குழுவின் உத்தரவை ஏற்கக்கூடாது என்றும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழங்கங்களை எழுப்பினர். மாண்டியாவில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 


📡தீவிரவாதத்தின் தலைமையிடமாக மாறிவிட்டது பாக்., : மத்திய அமைச்சர் கருத்து

டெல்லி: ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் பெரும் பதற்றம் நிலவுகிறது. கடந்த ஞாயிறு அன்று ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 வீரர்கள் உயிரிழந்தனர். அடுத்த 24 மணி நேரத்திற்குள் காவல்நிலையம் ஒன்றின் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். 

தீவிரவாதிகளின் இந்த அட்டகாசம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், தீவிரவாதத்தின் தலைமையிடமாக பாகிஸ்தான் மாறிவிட்டதை இச்சம்பவங்கள் உறுதிப்படுத்துவதாக சாடியுள்ளார். மேலும் இந்தியாவுடன் நேரடியாகப் போர் செய்து வெல்ல முடியாது என்று தெரிந்த காரணத்தால் தான் பாகிஸ்தான் இவ்வாறு தீவிரவாதிகளை ஊக்குவித்து மறைமுக போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.


💥சவுந்தர்யா தன் கணவரை பிரிய காரணம் இது தானாம்!

சென்னை: ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா தனது கணவரை பிரிந்து வாழ்வதற்கான காரணம் தெரிய வந்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளையமகள் சவுந்தர்யா தனது காதல் கணவர் அஷ்வினை பிரிந்து வாழ்கிறார். கடந்த ஓராண்டாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக சவுந்தர்யா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அவர்கள் பிரிந்ததற்கான காரணத்தை அவர்களுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், சவுந்தர்யா, அஷ்வின் இடையே காதல் இல்லாமல் போனது. இதனால் அவர்கள் ஒருவருக்கொருவர் முகம் கொடுத்துக்கூட பேசாமல் இருந்தனர். இனியும் சேர்ந்து வாழ முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டதால் பிரிந்துவிட்டனர்.

அவர்கள் நான்கு ஆண்டுகள் காதலித்தபோதிலும் ஏதோ கல்யாணம் செய்ய வேண்டுமே என்பதற்காக செய்தனர் என்றார்.


📡கட்சி நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை

தேமுதிக தலைவர் விஜயகாந்த், கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலளார்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 


💥சென்னையில் ராம்குமார் பிரேதப் பரிசோதனை.. சொந்த ஊரில் போலீஸ் குவிப்பு

செங்கோட்டை: நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள ராம்குமாரின் சொந்த ஊரில் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். ராம்குமாரின் உடல் பிரேதப் பரிசோதனை இன்று நடைபெறும் நிலையில் போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.


📡💥📡💥📡💥📡💥📡💥📡

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here