8 மணி செய்திகள் 20/09/2016 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

8 மணி செய்திகள் 20/09/2016

♈🇮🇳🌴 🌴🇮🇳♈🙏📡🙏📡

++++++++++++++++++++++++

♈🇮🇳🌴1] * மாண்டியாவில் நாளை முழு கடையடைப்பு நடத்த அழைப்பு*

+++++++++++++++

♈🇮🇳🌴2] * காஷ்மீரில் நுழைய முயன்ற 10 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை*

++++++++++++++++

♈🇮🇳🌴3] *தமிழகத்திற்கு மேலும் கூடுதல் தண்ணீர் திறக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு*

++++++++++++++++

♈🇮🇳🌴4] *காவிரி மேலாண் வாரியத்தை அமைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு*

++++++++++++++++

♈🇮🇳🌴5] *ரியில் பாகிஸ்தான் படை இன்று தாக்குதல்*

++++++++++++++++

♈🇮🇳🌴6] *ஸ்மார்ட் சிட்டி: வேலூர், மதுரை, தஞ்சாவூர், சேலம் நகரங்களுக்கு வாய்ப்பு*

++++++++++++++++

♈🇮🇳🌴7] *பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முதல்வர் சித்தராமையாவிடம் டிஜிபி விளக்கம்*

++++++++++++++++

♈🇮🇳🌴8] *இயக்குனர் பிரியதர்ஷன்- நடிகை லிசி தம்பதிக்கு நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது*
++++++++++++++++

♈🇮🇳🌴9] *தமிழ்நாட்டில் கன்னடர் மீது வன்முறை நடந்ததாக கூறிய மத்திய அமைச்சருக்கு கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் சதானந்த கவுடா இருமாநிலங்கள் பிரச்சனையில் ஒருதலைப்பட்சமாக பேசியது தவறு என்றும் சதானந்த கவுடாவின் பேச்சு அரசியல் சட்டப்படி அவர் எடுத்துக் கொண்ட உறுதி மொழிக்கு எதிரானது என்றும் அவர் கூறியுள்ளார்*

++++++++++++++++

♈🇮🇳🌴10] *காவிரி மேலாண் வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்கு இந்திய கம்யூனிஸ்ட் வரவேற்பு*
++++++++++++++++

♈🇮🇳🌴11] *கர்நாடகாவில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட வேண்டியது மாநில அரசின் பொறுப்பு: ஜி.கே வாசன்*
+++++++++++++++++++++++++++

♈🇮🇳🌴12] *மைசூர், மாண்டியா உள்ளிட்ட இடங்களில் கன்னட அமைப்பினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவிரியில் தமிழகத்துக்கு கர்நாடகா நீர் திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெங்களுருவில் பல இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 16 கம்பெனி துணை ராணுவப் படையினர், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்*

+++++++++++++++++++++++++++

♈🇮🇳🌴13] *சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் தேசிய பொதுச் செயலாளராக அமர் சிங்கை நியமித்து உத்தரவிட்டுள்ளார். இவர் சமீபத்தில் கட்சியில் இணைந்தவர் ஆவார்*

+++++++++++++++++++++++++++

♈🇮🇳🌴14] *உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நியாயத்திற்கு கிடைத்த வெற்றி என டெல்டா மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் மன்னார்குடி ரங்கநாதன் பேட்டி அளித்துள்ளார்*

+++++++++++++++++++++++++++

♈🇮🇳🌴15] *சிக்கன்குனியா காரணமாக  இந்தியா வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்  போட்டியில் இருந்து விலகியுள்ளார்+

++++++++++++++++++++++++

♈🇮🇳🌴16] *ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 63 நகரங்களை தேர்வு செய்து 3-ஆவது பட்டியலை அமைச்சர் வெங்கய்யா நாயுடு டெல்லியில் வெளியிட்டார். மேலும் தமிழகத்தில் இருந்து 4 நகரங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது*

+++++++++++++++++++++++++

♈🇮🇳🌴17] *ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரங்களில் பரவி வரும் டெங்கு காய்ச்சலுக்கு 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எம்.பி.கே.புதூர், ஆகாசம்பட்டி, மம்சாபுரத்தைச் சேர்ந்த 20 பேர் டெங்கு காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்*

++++++++++++++++++++++++

♈🇮🇳🌴18] *கேரள மாநிலம்  கருனாகப்பள்ளி ரயில் நிலையத்தின் அருகே இன்று அதிகாலை சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. கோட்டயத்துக்கு உரங்கள் ஏற்றி சென்று கொண்டிருந்த   ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டதில் தண்டவாளமும் சேதம் அடைந்தது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை*

++++++++++++++++

♈🇮🇳🌴19] *உரி பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரரின் தந்தை, “பயங்கரவாத தாக்குதலை முன்னெடுத்தவர்களுக்கு எதிராக இந்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் என்னுடைய பிற மகன்களை ராணுவத்திற்கு அனுப்பமாட்டேன்,” என்று கண்ணீர் மல்க கூறிஉள்ளார்*

++++++++++++++++

♈🇮🇳🌴20] *சிரியாவில் நிவாரண பொருட்கள் கொண்டு என்ற 18 வாகனங்கள் மீது தாக்குதல் 12 பேர் பலி*

++++++++++++++++

♈🇮🇳🌴21] *ஆஸ்திரியா மற்றும் இத்தாலிய எல்லையில் அமைந்துள்ள ஓட்ஸ்டல்  ஆல்ப்ஸ் மலையில் 5,300 ஆண்டுக்கு முந்தைய ஐரோப்பிய மனிதனின்  மம்மி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுமார் 25 வருடங்களுக்கு பின்னர் இந்த பகுதியில் மம்மி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்*

++++++++++++++++

♈🇮🇳🌴22] *சவுதி அரேபியன் ஏர் லைன்ஸ் விமானம் 872 என்ற விமானம் ஜித்தாவில் இருந்து இன்று பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா விமான நிலையத்தில் இன்று காலை தரையிறங்கியது.  அப்போது விமான பைலட் தவறுதலாக விமான கடத்தலின் போது பயன்படுத்தும் எச்சரிக்கை அலாரத்தை பயன்படுத்தி விட்டார். இதை தொடர்ந்து மணிலா விமான நிலைய அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து வந்து சோதனை செய்தனர்.பின்னர் எந்த மிரட்டலும் இல்லை என தெரியவந்தது. இதை தொடர்ந்து விமானத்தில் இருந்த பயணிகள் இறக்கபட்டனர். இந்த தவறால் 2 மணி நேரம் பயணிகள் விமானத்திலேயே இருக்க நேரிட்டது. தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. பைலட் தவறுதலாக   அவசர அழைப்பு மணியை அழுத்தி விட்டார். என மணிலா போலீஸ் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்*

++++++++++++++++

♈🇮🇳🌴23] *ஓடும் விமானத்தை ஓடுதளத்தில் அம்ர்ந்து நிறுத்த முயன்ற இளம்பெண் கைது-சீனாவின் பீஜிங் விமான நிலையத்தில் விறுவிறுவென வந்த ஜோடி ஒன்று குறிப்பிட்ட எண் விமானத்தில் செல்ல வேண்டும், தங்களை அனுமதிக்க வேண்டும் என அங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.ஆனால் குறிப்பிட்ட விமானம் புறப்பட தயாரான நிலையிலும், அவர்கள் உரிய நேரத்திற்கும் மிகவும் தாமதமாக வந்திருப்பதாலும், அந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை உள்ளே செல்ல அனுமதி மறுத்துள்ளனர்.இதனிடையே பாதுகாப்பு அதிகாரிகளை கடந்து சென்ற அந்த ஜோடி விமான ஓடுதளத்தில் இருந்த அதிகாரிகளுடன் வாதிட்டுள்ளது. மட்டுமின்றி புறப்படவிருந்த விமானத்தை உடனடியாக நிறுத்தி தங்களை அந்த விமானத்தில் செல்ல அனுமதிக்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.ஆனால் இவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.இதனிடையே அந்த இருவரும் திடீரென்று விமான ஓடுதளத்தில் பாய்ந்து விமானத்தை நிறுத்த முயன்றுள்ளனர். இதில் குறிப்பிட்ட பெண் புறப்படத்தயாரான நிலையில் இருந்த விமானத்தின் மிக அருகே சென்று விமானத்தை நிறுத்த முற்பட்டுள்ளார்.இந்த களேபரங்களுக்கு இடையே விரைந்து வந்த பொலிசார் அந்த பெண்மணியையும் அவரது கணவனையும் அங்கிருந்து அப்புறப்படுத்தி பின்னர் கைது செய்துள்ளனர்.ஷாங்காய் செல்லும் அந்த விமானம் இச்சம்பவத்தினால் 20 நிமிடங்கள் தாமதமாக பீஜிங் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது*

++++++++++++++++

♈🇮🇳🌴24] *உயர் சக்தி ராக்கெட் என்ஜின் சோதனை நடத்தி வெற்றி கண்ட வட கொரியா*

++++++++++++++++

♈🇮🇳🌴25] *செல்போனை பார்த்து கொண்டே கார் ஓட்டிய பெண் 3 சிறுவர்கள் மீது ஏற்றினார்-தென் கிழக்கு சீனாவின் ஷென்ஷின் நகரின்  பார்க்கிங் பகுதி ஒன்றில் ரோட்டில் விளையாடி கொண்டு இருந்த 3 சிறுவர்கள் மீது ஒரு பெண் தனது காரை ஏற்றி உள்ளார். இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி உள்ளது. தற்போது இந்த வீடியோ சீனாவின் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.தற்போது இந்த 3 சிறுவர்களும் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இந்த் விபத்தை நேரில் பார்த்தவர்கள் கார் ஓட்டிய பெண் செல்போனை பார்த்து கொண்டே ஓட்டியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறி உள்ளனர்.சமூக வலைதளங்களில் சிறுவர்களை விளையாட விட்டு விட்டு கவனமின்றி இருந்த பெற்றோரை சாடி உள்ளனர்

++++++++++++++++++++++++++++

♈🇮🇳🌴26] *செங்கல்பட்டில் கட்டுமான திறன் பயிற்சி நிலையம் ஜெயலலிதா அறிவிப்பு*

++++++++++++++++++++++++++++

♈🇮🇳🌴27] *விமான நிலையம்-சின்னமலை ‘மெட்ரோ’ ரெயில் சேவை ஜெயலலிதா, நாளை தொடங்கி வைக்கிறார்*

++++++++++++++++++++++++++++

♈🇮🇳🌴🌴🌴🌴🌴🇮🇳♈

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here