மதிய செய்திகள் 21/09/2016 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

மதிய செய்திகள் 21/09/2016

♈🇮🇳🌴 🌴🇮🇳♈🙏📡🙏📡

++++++++++++++++++++++++

♈🇮🇳🌴1] *விஜயகாந்த மீதான அவதூறு வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய ஜெயலலிதாவுக்கு 2 வாரம் அவகாசம் அளிக்கப்பட்டது. ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை அடுத்து உச்சநீதிமன்றம் அவகாசம் அளித்தது*

+++++++++++++++

♈🇮🇳🌴2] *பொது நிதிநிலை அறிக்கையுடன் ரயில்வே பட்ஜெட்டை இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. பிப்ரவரி இறுதி தேதிக்கு முன்பாக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது*

++++++++++++++++

♈🇮🇳🌴3] *பிசிசிஐயின் புதிய செயலாளராக அஜய் ஷிர்கே போட்டியின்றி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மும்பையில் நடைபெற்ற பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் அஜய் ஷிர்கேவை ஒருமனதாக தேர்வு செய்துள்ளனர்*

++++++++++++++++

♈🇮🇳🌴4] *வேந்தர் மூவிஸ் மதனை இன்னும் ஏன் கைது செய்யவில்லை என போலீசுக்கு உய்ரநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை காவல்துறை ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர நேரிடும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் 21ம் தேதிக்குள் மதனை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் கெடு  விதித்திருந்தது. உயர்நீதிமன்றத்தின் கெடுவுக்குள் மதனை கைது செய்யாததால் கண்டனத்துக்கு போலீஸ் உள்ளாகியது*

++++++++++++++++

♈🇮🇳🌴5] *முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு டிசம்பர் 5 முதல் டிசம்பர் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. 86 மையங்களில் மருத்துவ பொது நுழைவுத் தேர்வு நடைபெறும் என மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. செப்டம்பர் 26 முதல் செப்டம்பர் 31-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது*

++++++++++++++++

♈🇮🇳🌴6] *சென்னை விமானநிலையம் - சின்னமலை இடையேயான மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா காணொலிக்காட்சி மூலம் இன்று துவக்கி வைத்தார் *

++++++++++++++++

♈🇮🇳🌴7] * 2ம் கட்ட மெட்ரோ சேவையை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி என்று வெங்கையா நாயுடு கூறினார். மெட்ரோ சேவை மூலம் சாலையில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்றும் சென்னை விமான நிலையம் முதல் சின்னமலை வரையிலான மெட்ரோ ரயில் தொடக்க விழாவில்  மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்*

++++++++++++++++

♈🇮🇳🌴8] *தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் முதல் பிரிவில் மின்மாற்றி பழுதால் 210 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அனல்மின் நிலையத்தில் 2-வது பிரிவில் 210 மெகாவாட் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது*

++++++++++++++++

♈🇮🇳🌴9] *காவிரி வழக்கில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க கர்நாடக அமைச்சரவை கூடியது. முதல்வர் சித்தராமையா தலைமையில் கர்நாடக அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. மாலை 5 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டத்துக்கும் முதல்வர் சித்தராமையா  அழைப்பு விடுத்துள்ளார்*

++++++++++++++++

♈🇮🇳🌴10] *டெல்லியில் சிக்குன்குனியாவை கட்டுப்படுத்த உத்தரவிடக்கோரிய மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது. பொதுநல மனுவை திங்கள்கிழமை விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. சிக்குன்குனியாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தவிடக்கோரிய பொதுநல வழக்கு தொடரப்பட்டது. டெல்லியில் சிக்குன்குனியாவுக்கு 19 பேர் இறந்த நிலையில் பாதிக்கப்பட்டோர் 1,300-ஆக உயர்ந்துள்ளது எனவும் மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது*

++++++++++++++++

♈🇮🇳🌴11]  *உச்சநீதிமன்ற உத்தரவுபடி காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்*

+++++++++++++++++++++++++++

♈🇮🇳🌴12] *ராம்குமார் பிரேத பரிசோதனை வழக்கில் 3வது நீதிபதியாக கிருபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் அமர்வு முன் விஜேந்திரன் முறையீடு செய்ததையடுத்து 3வது நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார். நீதிபதி கிருபாகரன் இன்று பிற்பகலில் வழக்கை விசாரிப்பார் என்று தலைமை நீதிபதி தகவல் கூறியுள்ளார்*

+++++++++++++++++++++++++++

♈🇮🇳🌴13] *சிறப்பு போலீஸ் அதிகாரிகள் பணிக்கு ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். புல்வாமாவில் உடற்பயிற்சி சோதனைகள் அவர்களுக்கு நடைபெற்றது*

+++++++++++++++++++++++++++

♈🇮🇳🌴14] *கடந்த 2003ல் நான் முதல்வராக இருந்த போது தான் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான முழு அறிக்கை தயார் செய்யப்பட்டதாக முதல்வர் ஜெயலலிதா கூறினார்*

+++++++++++++++++++++++++++

♈🇮🇳🌴15] *பெண்கள் பணியாற்ற சிறந்த டாப் 10 மாநிலங்களில் சிக்கிம் முதலிடத்திலும், தமிழகம் 9வது இடத்திலும் உள்ளன. தலைநகர் டில்லி டாப் 10 பட்டியலில் இடம்பெறவில்லை.பெண்கள் பணியாற்ற சிறந்த இந்திய மாநிலங்கள் பற்றிய ஆய்வை சிஎஸ்ஐஎஸ் அமைப்பு நடத்தியது. இதில் அதிகபட்சமாக சிக்கிம் மாநிலம் 40 புள்ளிகளையும், குறைந்தபட்சமாக டில்லி 8.5 புள்ளிகளையும் பெற்றுள்ளன. பெண்கள் தொழிற்சாலைகளில் பணியாற்றுவதற்கு நேரம் தொடர்பான சட்ட ரீதியிலான கட்டுப்பாடுகள், ஐடி துறை, பிற துறைகள், பணியிடத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள், பணி செய்யும் பெண்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது இதில் டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் சிக்கிம் - 40 புள்ளிகள், தெலுங்கானா - 28.5 புள்ளிகள், புதுச்சேரி - 25.6 புள்ளிகள், கர்நாடகா - 24.7 புள்ளிகள், இமாச்சல பிரதேசம் - 24.2 புள்ளிகள், ஆந்திரா - 24 புள்ளிகள், கேரளா - 22.2 புள்ளிகள், மகாராஷ்டிரா - 21.4 புள்ளிகள், தமிழகம் - 21.1 புள்ளிகள், சட்டீஸ்கர் - 21.1 புள்ளிகள் பெற்றுள்ளன. இவற்றில் சிக்கிம், கர்நாடகா, ஆந்திரா, தமிழகம் ஆகிய 4 மாநிலங்களில் கோர்ட் உத்தரவுப்படி தொழிற்சாலைகளில் பெண்கள் இரவு நேரங்களில் பணியாற்றுவது உள்ளிட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பெண்கள், எந்த துறையிலும் இரவு நேர பணி செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை. பணிகளில் பெண்களுக்கு பங்களிக்கும் நாடுகளில் இந்தியா மிகவும் பின்தங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் 24 சதவீதம் மட்டுமே பெண்களுக்கு வேலையில் பங்களிப்பு அளிக்கப்படுகிறது*
++++++++++++++++++++++++

♈🇮🇳🌴16] *அரசியலாக்கப்படும் காவிரி பிரச்னை : இன்று சித்தராமைய்யா ராஜினாமா ?-சுப்ரீம் கோர்ட் உத்தரவை நடைமுறைப்படுத்துவது கடினம் எனவும், இது அமல்படுத்த முடியாது உத்தரவு எனவும் சித்தராமைய்யா நேற்று கூறி உள்ளது, தமிழகத்திற்கு எந்த காரணத்திற்காகவும் தண்ணீர் திறந்து விடக்கூடாது என்ற அவரது முடிவை காட்டுவதாகவும், ராஜினாமா குறித்து வெளியான தகவல் உண்மை என்பதை உறுதி செய்வதாகவும் உள்ளது*

+++++++++++++++++++++++++

♈🇮🇳🌴17] *பாகிஸ்தானை பயங்கரவாத ஆதரவு நாடாக அறிவிக்கும் தீர்மானத்தை அமெரிக்க எம்.பி.,க்கள் இருவர் கொண்டு வந்துள்ளனர்*

++++++++++++++++++++++++

♈🇮🇳🌴18] *தெலுங்கானா மாநிலம் மெகபூப்நகர் பகுதியில் ஸ்ரீனிவாசுலு( வயது 38) என்பவர்  அருகில் உள்ள பஸ் நிறுத்தத்திற்கு செல்ல ரோட்டை கடந்தார். அப்போது கர்னூல் நோக்கி வேகமாக வந்த செவ்ரோலெட் கார் ஒன்று அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் அதே காரின் மேல்  கூரையில் ஸ்ரீனிவாசுலு விழுந்தார். அப்போதே அவர் மரணமடைந்தும் விட்டார். இருந்தாலும் கார் டிரைவர் வாகனத்தை நிறுத்தாமல் ஓட்டி சென்றார். ஸ்ரீனிவாசலு  உடலில் இருந்து வடிந்த ரத்த காரின் கண்ணாடி ஜன்னல்களில் வழிந்து ஓடியது.போலீசாரும் உள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர்களும் காரை விரட்டி சென்றனர். 3 கிலோமீட்டர் தூரம் வரை சென்ற கார் ஒரிடத்தில் நின்றது. அதில் இருந்த கார் டிரைவர் இறங்கி ஓடி விட்டார்*

++++++++++++++++

♈🇮🇳🌴19] *மேற்கு டெல்லியின் புறநகர் பகுதியில் உள்ள நிஹால் விகார் என்ற பகுதியில் பண்ணை வீடு ஒன்று உள்ளது. இங்கு 3 நாட்களுக்கு முன்பு 2 பெண் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த போது பண்ணை வீட்டின் பணியாளர் தவறுதலாக வீட்டை பூட்டிச் சென்றுள்ளார்.சிறுமிகள் காணாமல் போனது குறித்து தந்தை புகார் அளித்த நிலையில் 3 நாட்கள் கழித்தே பணியாளர் பண்ணையை திறந்துள்ளார். அப்போது 2 சிறுமிகள் மயங்கிய நிலையில் கிடப்பது கண்டு பொலிசாருக்கு தகவல் கொடுத்தார்.
உடனடியாக அங்கு வந்த போலீசார் சிறுமிகளை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் 3 நாட்களாக பட்டினியில் இருந்ததால் வினிதா என்ற 1 வயது குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்*

++++++++++++++++

♈🇮🇳🌴20] *ஒடிசாவில் கணவர் ஒருவர் கர்ப்பிணயாக இருக்கும் மனைவியை சிகிச்சைக்காக தோள்பட்டையில் சுமந்து சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாவட்டம் கன்ஷாரிகால கிராமத்தை சேர்நதவர் பங்காரி பிரஷ்க என்ற பெண்*

++++++++++++++++

♈🇮🇳🌴21] *தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவதை நிறுத்தக்கூறி மண்டியாவில் இன்று முழுஅடைப்பு போராட்டம்*

++++++++++++++++

♈🇮🇳🌴22] *குஜராத் மாநிலம் சூரத் அருகே உள்ள கிம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் தொழிற்சாலை உள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை தொழிற்சாலையின் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் தீ அணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தீயை அணைக்க 15 தீயணைப்பு வண்டிகள் விரைந்துள்ளன. இந்த தீவிபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது*

++++++++++++++++

♈🇮🇳🌴23] *அண்டை நாடுகள் மீது மறைமுக போரில் ஈடுபடும் நாடுகள் அதை கண்டிப்பாக நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்*

++++++++++++++++

♈🇮🇳🌴24] *வடகொரியா ராக்கெட் என்ஜின் சோதனை செயற்கை கோள் ஏவ நடவடிக்கை*

++++++++++++++++++++++++++++

♈🇮🇳🌴25] *தமிழ்நாட்டில் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என 4 வகையான உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன.

இந்த உள்ளாட்சி அமைப்பு களுக்கு கடந்த 2011-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 மற்றும் 19-ந்தேதிகளில் இருகட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது.
தற்போது இந்த அமைப்பு களின் 5 ஆண்டு பதவி காலம் அடுத்த மாதம் (அக்டோபர்) 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் உள்ளாட்சி தேர்தலை திட்டமிட்டபடி நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தேர்தல் செலவுக்கான நிதி பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகளில் மாநில தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த தேர்தலில் பெண் களுக்கு 50 சதவீதம் இடஒதுக் கீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி பெண்களுக்கு ஒதுக்கப்படும் உள்ளாட்சி அமைப்புகளை கண்டறியும் பணி தீவிரமாக நடந்தது.

இந்தப் பணிகள் அனைத் தும் முடிந்ததை தொடர்ந்து பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் பட்டியல் அரசிதழில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தலுக்காக வரும் 26-ந்தேதிக்குள் வாக்காளர் திருத்தப்பட்டியல் தயார் செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நாளை உள்ளாட்சி தேர்தல் தேதி பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

ஒவ்வொரு பிரிவினருக் கும் ஒதுக்கப்பட்ட நகராட்சி கள் பட்டியல் விவரம் வருமாறு:-

எஸ்.சி. (பொது):-நெல்லிக் குப்பம், அரக்கோணம், நெல்லியாலம், ஆத்தூர், திருவேற்காடு, நரசிங்கபுரம், கூத்தாநல்லூர், மறைமலை நகர்.
எஸ்.சி. பெண்கள்:-ராணிப்பேட்டை, சீர்காழி, திருத்துறைப்பூண்டி, வால் பாறை, ஊட்டி, சங்கரன் கோவில், பேரணாம்பட்டு, குன்னூர், பெரம்பலூர்.

எஸ்.டி. பெண்கள்:-கூடலூர்.

பெண்கள் (பொது):-ஆம்பூர், குடியாத்தம், திருவத்தி புரம், வந்தவாசி, கும்ப கோணம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேதாரண் யம், அறந்தாங்கி, ஜெயங் கொண்டம், தேவக்கோட்டை, காரைக்குடி, கீழக்கரை, தாராபுரம், உடுமலை பேட்டை, கடையநல்லூர், தென்காசி, அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், கோவில்பட்டி, காயல் பட்டினம், குழித்துறை, நாகர்கோவில், பத்மநாப புரம், சாத்தூர், விருதுநகர், திருத்தங்கல், ராசிபுரம், திருவாரூர், செங்கோட்டை, துறையூர். வாலாஜாபேட்டை, கடலூர், பழனி, வாணியம் பாடி, மேட்டுப்பாளையம், செங்கல்பட்டு, மதுராந்தகம், போடிநாயக்கனூர், குளித் தலை, மேட்டூர், கிருஷ்ணகிரி, அரியலூர், ராஜபாளையம், ஆற்காடு, அருப்புக்கோட்டை, திருமங்கலம், பெரியகுளம், தர்மபுரி, பொள்ளாச்சி, விழுப்புரம், கம்பம்.

பொது பட்டியல்

பொது:-தாம்பரம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், செம்பாக்கம், காஞ்சீபுரம்.
பெண்கள்:-செங்கல் பட்டு, மதுராந்தகம்.
எஸ்.சி. பொது:-மறை மலைநகர்.

மாவட்ட பஞ்சாயத்து

பொது:-திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், வேலூர், திருவாரூர், திருச்சி, கரூர், பெரம்பலூர், சிவகங்கை, கன்னியாகுமரி.

எஸ்.டி. பெண்கள்:-நாமக்கல், திருப்பூர், விருதுநகர், திருநெல்வேலி.
எஸ்.டி. (பொது):-நீலகிரி, தஞ்சாவூர், அரியலூர், திண்டுக்கல், ராமநாதபுரம்.
பெண்கள் (பொது):-காஞ்சீபுரம், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், நாகப்பட்டினம், புதுக் கோட்டை, மதுரை, தேனி, தூத்துக்குடி.

+++++++++++++++++++++++

♈🇮🇳🌴🌴🌴🌴🌴🇮🇳♈

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here