உமாபாரதியின் காவிரி பேச்சுக்கு கலைஞர் கண்டனம் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

உமாபாரதியின் காவிரி பேச்சுக்கு கலைஞர் கண்டனம்

காவிரிப் பிரச்சினையில் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமாபாரதி 
கர்நாடக அரசுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்திருக்கிறாரே?
மத்திய அரசிலே அங்கம் வகிக்கும் அமைச்சர்கள், “இந்திய அரசியல் சட்டப்படி நடந்து கொள்வேன்; மக்களிடத்தில் வேறுபாடு காட்ட மாட்டேன்” என்று பதவிப் பிரமாணம் எடுத்துப் பணி புரிவதால்; இதுபோன்ற பிரச்சினைகளில் இரண்டு மாநிலங்களுக்கும் பொதுவாக நடுநிலையோடு நியாயமாக நடந்துகொள்ள வேண்டும். ஆனால் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமாபாரதி, “சிவனசமுத்திரம் மற்றும் மேக்கேதாட்டுப் பகுதியில் கர்நாடகம் அணை கட்டுவதற்கு தமிழகம் எதிர்ப்புத் தெரிவிக்கக் கூடாது. 
அணை கட்டுவதால் தமிழகத்துக்கு தண்ணீர் விடமாட்டோம் என்று கர்நாடகம் கூறவில்லை. காவிரி நதி நீர்ப் பங்கீட்டு விவகாரத்தை ஆராய்ந்து பார்த்தால், 200 ஆண்டுகளாக கர்நாடகத்துக்கு அநியாயம் ஏற்பட்டுள்ளதை உணர முடியும்” என்றெல்லாம் தெரிவித்திருப்பது சரியல்ல; பாரபட்சமானவை என்பதால் கண்டனத்திற்குரிய கருத்துக்கள் முகநூல் பதிவு கலைஞர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here