லண்டனில் மு..ஸ்டாலின் சிகிச்சை - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

லண்டனில் மு..ஸ்டாலின் சிகிச்சை

திமுக பொருளாளர் ஸ்டாலின், இன்று தன் குடும்பத்தினருடன் தனிப்பட்ட பயணமாக லண்டன் செல்கிறார் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. சிறுவாணி ஆற்றின் குறுக்கே, கேரள அரசு அணைக் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் நேற்று ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. அந்தப் போராட்டம் முடிவடைந்ததும் இரவு சென்னை திரும்பினார். இன்று ‘பிரிட்டிஷ் ஏர்வேஸ்’ விமானம் மூலம் லண்டன் செல்கிறார். அவருடன் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினர் செல்கின்றனர். தனிப்பட்ட பயணமாக ஸ்டாலின் லண்டன் செல்கிறார் என்றும் ஒரு வாரத்தில் அவர் சென்னை திரும்பி உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான பணிகளில் தீவிர கவனம் செலுத்துவார் என்றும் அறிவாலயத்தில் தகவல் தெரிவித்தனர்.

அந்த தனிப்பட்ட காரணம் என்ன?
‘உணவு குழாயும், இரைப்பையும் இணையும் இடத்தில் ஒரு சிறு அதாவது கண்ணுக்குப் புலப்படாதளவு கட்டி இருக்கிறது. ராமச்சந்திரா மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது இதை அறிந்தார் மு.க.ஸ்டாலின். இது கேன்சர் கட்டியாக இருக்குமோ என்று குடும்பத்தினர் பயந்தனர். கேன்சர் என்றால் அறுவை சிகிச்சை செய்யவேண்டி வரும் என்று பதறினர். அதனால் அப்போது லண்டனுக்கு சிகிச்சைக்குச் சென்றார் மு.க.ஸ்டாலின். அங்கு ‘அறுவை சிகிச்சை எதுவும் தேவையில்லை, இது கேன்சர் கட்டியாக மாற வாய்ப்புமில்லை. பயப்பட தேவையில்லை. தொடர்ந்து இங்கு வந்து சிகிச்சை எடுத்துகொண்டால் போதும்’ என்று லண்டனில் உள்ள சிறப்பு மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையொட்டியே அவ்வப்போது லண்டன் பயணம் மேற்கொண்டு அதை சரிபடுத்தி வருகிறார் மு.க.ஸ்டாலின். ‘இந்த சிகிச்சைக்காகவே தற்போது லண்டன் செல்கிறார் மு.க.ஸ்டாலின்’ என்கின்றனர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தைச் சேர்ந்த நெருங்கிய உறவுகள்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here