http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
++++++++++++++++++++++++
♈🇮🇳🌴1] *தங்களுடைய வழக்கமான காக்கி அரை கால்சட்டை சீருடையில் இல்லாமல், பளுப்பு நிறத்தில் முழு நீள கால்சட்டையோடும், முழுக்கை சட்டையோடும் அணிவகுத்து சென்ற ராஷ்டிரிய சுயம்சேவக் சங்க (ஆர்.எஸ்.எஸ்.) தன்னார்வலர்களிடம் ஏற்பட்டிருக்கும் புதிய மாற்றத்திற்கு நாக்பூரின் கிழக்கிலுள்ள தெருக்களும், பாதைகளும் தான் சாட்சிகள்*
+++++++++++++++
♈🇮🇳🌴2] *அடுத்த வாரம் பிரான்ஸூக்கு மேற்கொள்ள இருந்த பயணத்தை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ரத்து செய்திருக்கிறார்*
++++++++++++++++
♈🇮🇳🌴3] *புனித நாளில் பல கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இரான் தேசிய கால்பந்தாட்ட அணி விளையாடிய உலக கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று போட்டியில் தென்கொரியாவை 1-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது*
++++++++++++++++
♈🇮🇳🌴4] *தன்னுடைய சக குடியரசு கட்சி உறுப்பினர்கள் மீது கடும் டிவிட்டர் தாக்குதலை டொனால்ட் டிரம்ப் தொடங்கியுள்ளார்* -அவர்களை விசுவாசமில்லாதவர்கள் என்று குற்றம் சாட்டியிருக்கின்ற குடியரசு கட்சியின் அமெரிக்க அதிபர் வேட்பாளரான டிரம்ப், அவர் மீதான அவர்களின் தாக்குதல், போட்டியாளர் ஹிலரி கிளிண்டனை விட அதிக கஷ்டத்தை குடியரசு கட்சியினருக்கு உருவாக்கி இருப்பதாக கூறியிருக்கிறார்.முன்னதாக, நாடாளுமன்ற சபாநாயகர் பால் ரயானை மிகவும் பலவீனமான, செயல்திறனற்ற தலைவர் என்று டிரம்ப் கூறியிருந்தார்.குடியரசு கட்சியின் வேட்பாளருக்காக பரப்புரை மேற்கொள்ளப் போவதில்லை என்றும் மாறாக நாடாளுமன்றத்தில் கட்சியின் பெரும்பான்மையை பாதுகாப்பதற்காக உழைக்கப் போவதாகவும் திங்கள்கிழமை ரயான் தெரிவித்தார்.
++++++++++++++++
♈🇮🇳🌴5] *தென் ஆப்ரிக்காவின் நிதியமைச்சருக்கு சம்மன்: ராண்ட் மதிப்பில் சரிவு.தென் ஆப்ரிக்காவின் நிதியமைச்சர் மீதான மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது*
++++++++++++++++
♈🇮🇳🌴6] *ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அமைச்சரவைக் கூட்டங்களை ஓ. பன்னீர்செல்வமே தலைமை தாங்கி நடத்துவார் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அறிவுரையின் பேரிலேயே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.முதலமைச்சராக ஜெயலலிதாவே தொடர்வார் என்றும், அவர் நலம் பெற்று பணிகளைக் கவனிக்க ஆரம்பிக்கும்வரை இந்த ஏற்பாடு நடைமுறையில் இருக்குமென்றும் ஆளுநர் மாளிகையின் செய்திக் குறிப்பு கூறுகிறது*
++++++++++++++++
♈🇮🇳🌴7] *♈🇮🇳🌴 *மர்ம காய்ச்சல்* *உயிர் வாழ போராடும் சிறுமி, ஸ்டான்லி மருத்துவமனையில்**காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த பனிரெண்டு வயது மதிக்க சிறுமி கவிதா என்பவர் உயிருக்கு போராட்டம்.சென்னை. இருபத்தி ஐந்து நாட்களுக்கு மேலாக விட்டு, விட்டு வந்த காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார் பழைய வண்ணாரப்பேட்டை கப்பல் போலு தெருவில் வசித்து வந்த சிறுமி கவிதா. அவர் தாயும், தந்தையும் கூலி வேலை செய்து பிழைத்து வருகின்றனர். அருகிலுள்ள சில மருத்துவர்களிடம் அழைத்து சென்று காண்பித்து வந்தனர்.அவர்களும் மாத்திரைகள் கொடுத்து வந்தனர். அவைகளை உட்கொண்டு வந்த போதும் காய்ச்சல் குறையவில்லை. கை,கால்கள் வலி அதிகரித்து ஒரு கட்டத்தில் ஒரு கால் ஒத்துழைக்க மறுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். வடசென்னை தண்டையார்பேட்டை காலரா மருத்துவமைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு , இவ்வளவு மோசமான சூழ்நிலையில் கொண்டு வந்துள்ளீர்களே.எங்களிடம் சிகிச்சைக்கான வசதியில்லை.ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சொல்லுங்கள் என்று அனுப்பிவிட்டனர். ஸ்டான்லி மருத்துவமனையில் இரண்டு நாளாக சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது திடீரென கண், கழுத்து பகுதிகள் வலிப்பு போல வந்து இழுத்து கொண்டு சென்றுள்ளது. என்ன விதமான காய்ச்சல் என்று புலப்படவில்லை. அந்த சிறுமி பரிதாபத்திற்குரிய நிலையில் உள்ளார். ஸ்டான்லி மருத்துவமனை முதல் மாடி கேஸ்வாலிடி பிரிவில் உள்ளதாக தகவல்.மருத்துவர்கள் தீவிரமான சிகிச்சைக்கு மனது வைத்தால் மட்டுமே அந்த சிறுமி பிழைத்து மறு வாழ்வு வாழ்வார்*
++++++++++++++++
♈🇮🇳🌴8] *70 வயதில் 4 லட்சம் ஆபாச படங்கள்*
பிரான்சில் முதியவர் ஒருவர் தனது கணினியில் சுமார் 4 லட்சம் ஆபாச வீடியோக்கள் மற்றும், புகைப்படங்களை வைத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரான்சின் ஆம்ப்லீபியூஸ் பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவரின் கம்ப்யூட்டரில் இளம்பெண்ணின் ஆபாச புகைப்படம் இருப்பதை பார்த்த ஒருவர் காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.இதுகுறித்து காவல்துறையினர் அந்த முதியவரின் கம்ப்யூட்டர் மற்றும் உபகரணங்களை பறிமுதல் செய்து நிபுணர் குழு உதவியுடன் சோதனை செய்துள்ளனர். அதில் சுமார் 4 லட்சம் ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.முதியவரும் தான் ஆபாச படம் மற்றும் வீடியோக்கள் வைத்திருந்ததை ஒப்பு கொண்டார். மேலும் காவல்துறையினர் அவர்மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
++++++++++++++++
♈🇮🇳🌴9] *சென்னை தியாகராய நகரில் மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஆலோசனைக்கூட்டத்தில் வைகோ, திருமாவளவன், ஜி. ராமகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.மேலும், இந்த ஆலோசனைக்கூட்டத்தில் வரும் 17, 18ம் தேதிகளில் விவசாய கூட்டியக்கம் நடத்த உள்ள ரயில் மறியல் போராட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக தீவிரமாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது*
++++++++++++++++
♈🇮🇳🌴10] *வைகோதான் அடுத்த முதலமைச்சர்?* -வதந்திகளை நம்பாமலும் இருக்க முடியாது –உண்மைதான் என்று ஆணித்தரமாக அடித்தும் கூறமுடியாது – ஒரு காதுல வாங்கி இன்னொரு காதுல வெளிய தள்ளிடுங்க -சசிகலா மற்றும் நடராஜன் ஆகியோர் மீது வழக்கு உள்ளதால் வைகோவை அடுத்த முதலமைச்சராக நியமிக்க சேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் தமிழகத்துக்கு தற்காலிக முதல்வர், ஆளுனர் ஆட்சி ஆகிய ஏற்பாடு செய்ய வேண்டும் ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.ஆனால் அதிமுக கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் அதற்கு அவசியமில்லை முதல்வர் நல்ல உடல்நிலையுடன் தான் இருக்கிறார் என்று கூறி வருகின்றனர்.இன்னொரு பக்கம் சசிகலா துணை முதலமைச்சர் பதவி வகிக்கப்போவதாகவும், நடராஜன் அதிமுக கட்சியை கைப்பற்றபோவதாகவும் செய்திகள் இணையதளங்களில் பரவி வருகிறது.இந்நிலையில் வைகோவை அடுத்த முதலமைச்சராக நியமிக்கலாம் என்று பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் வதந்தி பரவி வருகிறது. சசிகலா மற்றும் நடராஜன் மீது வழக்கு உள்ளதாலும், முதலமைச்சருக்கான அனைத்து தகுதிகளும் வைகோவிடம் உள்ளது என்றும் கூறி வருகின்றனர்.மேலும் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அவரது உடல்நலம் குறித்த செய்தி மற்றும் கட்சி தொடர்பான செய்திகள் ஆகியவை அனைத்தும் அதிகாரப்பூர்வமற்ற செய்திகளாகவே பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இதை யாரும் நம்பத்தேவையில்லை.
++++++++++++++++
♈🇮🇳🌴11] *மக்களே ஜாக்கிரதை! - ஓட்ஸ் என்னும் அரக்கன்* -இன்றைய நவீன உணவு முறையில் ஓட்ஸ் என்பது அத்தியாவசிய உணவு என ஆகிவிட்டது. அதுவும் நீரிழிவு நோயாளிகள்,உடல் எடை குறைப்பு முயற்சியில் உள்ளவர்கள் ஓட்ஸ் சாப்பிடுவதை பெருமையாக நினைக்கிறார்கள். ஓட்ஸ் ஆஸ்திரேலியாவில் பெரும்பான்மையாகவும், ஐரோப்பிய நாடுகள் சிலவற்றிலும் விளையும் ஒரு பயிர். அதை அப்படியே உணவாக சாப்பிட முடியாது. சில வழிமுறைகளில் தட்டையாக மாற்றப்படுகிறது. அதையும் கூட நம்ம ஊர் உணவு போல அதிக அளவில் எடுத்துக்கொள்ள முடியாது.சில கிராம் மட்டுமே (ஸ்பூன் அளவு) எடுத்து தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிடுகிறோம். அதிலும் சத்து எதுவும் கிடையாது. பசியை கட்டுபடுத்தும் குணம் மட்டுமே இதற்கு உண்டு.அதிக விலை கொடுத்து வாங்கும் ஓட்ஸ்-ஐ விட நம் ஊர் ராகியில் பல மடங்கு சத்து உள்ளது. சுமார் ஒரு கிலோ ராகி சாப்பிடுவது 4 கிலோ ஓட்ஸ் சாப்பிடுவதற்கு சமம். ஒரு கிலோ ராகி மாவு வெறும் 35 ரூபாய் தான். 4 கிலோ ஓட்ஸ் 140*4= 560 ரூபாய். எவ்வளவு மடங்கு விலையில் வித்தியாசம் பாருங்கள். ராகி, கம்பு, சோளம், திணை, வரகு, சாமை போன்ற நம் நாட்டு தானியங்கள் எல்லாம் பலமடங்கு சத்துள்ளவை. விலையும் குறைவு!சத்துநிறைந்த நம் பாரம்பரிய உணவு இருக்க சக்கையை உண்டு நம் பணத்திற்கும் உடல்நலத்திற்கும் வேட்டு வைக்கலாமா?இதை என்றென்றும் சிந்தையில் இருத்துங்கள்! அந்நிய பொருட்களை அநியாய விலைக்கு வாங்குவதை அறவே நிறுத்துங்கள்!
+++++++++++++++++++++++++++
♈🇮🇳🌴12] *மொரதாபாத்தில் நேற்று இரவு தசரா கொண்டாட்டங்கள் நடைபெற்றது. இந்த கொண்டாட்டத்தில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்து தசரா கொண்டாட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது*
+++++++++++++++++++++++++++
♈🇮🇳🌴13] *இன்று காலை 04:01 மணியளவில் லட்சத்தீவு கடல் பகுதியில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகியுள்ளது*
+++++++++++++++++++++++++++
♈🇮🇳🌴14] *ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாம்பூரில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாம்பூர் அரசு கட்டட வளாகத்தில் மீண்டும் துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முடிந்ததாக கூறப்பட்ட நிலையில் மீண்டும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது*
+++++++++++++++++++++++++++
♈🇮🇳🌴15] *உலக கோப்பை கபடி ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு இடையிலான மூன்றாவது கபடி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்திய அணி 57-20 என்ற கணக்கில் வெற்றிப்பெற்றுள்ளது*
++++++++++++++++++++++++
♈🇮🇳🌴16] *தமிழகத்தில் பிறை தென்பட்டதை தொடர்ந்து இன்று மொகரம் கடைபிடிக்கப்படும் என மாநில தலைமை காஜி சலாஹூதீன் முஹம்மது அய்யூப் தெரிவித்துள்ளார். இஸ்லாமியர்கள் அனைவரும் சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபடுவர்*
+++++++++++++++++++++++++
♈🇮🇳🌴17] *நெல்லையில் மாமரத்தில் ஏறிய கரடியால் பொதுமக்கள் அச்சம்*
++++++++++++++++++++++++
♈🇮🇳🌴18] *நெல்லை: சங்கரன்கோவில் அருகே மரக்கடையில் தீ விபத்து*
++++++++++++++++
♈🇮🇳🌴19] *சட்டசபை தேர்தல்களை பாதிக்காத வகையில் பட்ஜெட் தாக்கல்: அருண் ஜெட்லி*
++++++++++++++++
♈🇮🇳🌴20] *பிரிட்டன் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆப்பிள் வாட்ச்சுக்குத் தடை*
++++++++++++++++
♈🇮🇳🌴21] *கடந்த 2010-ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஏற்பாடுகளில் நடைபெற்ற ஊழல் தொடர்பான வழக்கு விவரங்களை வெளியிட மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் மறுத்துள்ளது*
++++++++++++++++
♈🇮🇳🌴22] *''உ.பி., மாநில மக்களுக்கு, ஸ்மார்ட் போன்கள் தேவையில்லை; காட்டாட்சியில் இருந்து விடுதலை பெறவே அவர்கள் விரும்புகின்றனர்,'' என, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியுள்ளார்*
++++++++++++++++
♈🇮🇳🌴23] *நிர்வாகத்தை சரியாக நடத்த வேண்டும் என்றே திமுக கூறியது: பொன்முடி*
++++++++++++++++
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக