மதிய செய்திகள் 13/10/2016 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

மதிய செய்திகள் 13/10/2016


http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*புதுச்சேரியில் நீக்கப்பட்ட பொதுப்பணித்துறை ஊழியர்கள்-போலீசார் இடையே வாக்குவாதம்*

*அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான , குடியரசுக் கட்சியின் வேட்பாளர், டொனால்டு டிரம்ப், தங்களிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும், முத்தமிட்டதாகவும் அல்லது மோசமாக நடந்து கொண்டதாகவும் பல பெண்கள் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளனர்* -நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையிடம் பேட்டியளித்த ஒரு பெண், டிரம்ப் 30 ஆண்டுகளுக்கு முன்பு, விமானத்தில் தனது பாவாடைக்குள் கையை வைக்க முயற்சி செய்தார் என்று கூறினார்.மற்றொரு பெண், 2005ல் தான் பத்திரிகையாளராக இருந்தபோது, ஃப்ளோரிடாவில் உள்ள டிரம்பின் இல்லத்திற்குச் சென்றபோது, அவர் தன் மீது வலுக்கட்டாயமாக நெருங்க முயற்சி செய்ததாக குற்றம் சாட்டினார்.ஞாயிறன்று ஒரு தொலைக்காட்சி விவாதத்தில், டிரம்ப், தான் பெண்களை அவர்கள் விருப்பத்துக்கு மாறாகத் தொடுவு பற்றி பேசியதாகக் காட்டும் ஒளிநாடாப் பதிவுகள் எல்லாமே சில ஆண்கள் தனிப்பட்ட நிலையில் இருக்கும்போது பேசும் பேச்சுக்கள்தான் என்று வலியுறுத்தினார்.அவரது பிரச்சார குழு எல்லாக் குற்றச்சாட்டுக்களையும் மறுத்துள்ளது

*இலங்கையின் கிழக்கே வேலையற்ற பட்டதாரிகள், தங்களுக்கு அரச துறைகளில் வேலை வாய்ப்பு கோரி புதன்கிழமை மட்டக்களப்பு நகரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்*

*டென்மார்க்கில் உள்ள தூண்டில் மீனவர்கள், சுற்றுச்சூழல் சோகமாகக்கருதப்படும் நிகழ்வு ஒன்றை தவிர்க்க, தங்கள் தூண்டில்களில் மீன்களை கவரும் பூச்சிகளை ஏற்றி, தப்பிச் சென்ற வானவில் ட்ரவுட் வகை மீன்களைப் பிடிப்பதற்கு ஆயத்தமாகி வருகின்றனர்*

*நீதிபதிகளை விட தமிழர்கள் நல்லவர்கள், சிறந்தவர்கள்,பண்பாளர்கள்* -  *ஜெயலலிதாவை காதலிப்பதாக சும்மா காமெடி பண்ணேன்: மார்கண்டேய கட்ஜூ அந்தர் பல்டி!* -தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 3 வார காலமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் உடல்நிலை சரியாகி விரைவில் பணிக்கு திரும்ப ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.ஃபேஸ்புக் பதிவில் நான் இளைஞனாக இருந்த போது, ஜெயலலிதா மிகவும் இளமையாக இருப்பார் அவரது கவர்ந்திழுக்கும் அழகால் அவரை நான் காதலித்தேன். ஆனால் அது ஜெயலலிதாவுக்கு தெரியாது. என்னுடைய காதல் என்றுமே மாறாதது.இப்பொழுதும் அவரது கவரும் அழகை பார்க்க முடிகிறது. இப்பொழுதும் அவரை நான் காதலிக்கிறேன். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என கூறியிருந்தார்.மார்கண்டேய கட்ஜூவின் இந்த கருத்துக்கு பலரும் எதிர் கருத்து தெரிவித்து, சர்ச்சையாகியது. இதனால் அவர் தனது பதிவை ஃபேஸ்புக்கில் இருந்து நீக்கிவிட்டார். இந்நிலையில் இன்று அதற்கு புதிய விளக்கம் ஒன்றை அளித்து பதிவிட்டுள்ளார். அதில், என்னுடைய முந்தைய பதிவில் என்னுடைய இளமை காலத்தில் ஜெயலலிதாவை காதலித்ததாக நகைச்சுவை குறிப்பிட்டிருந்தேன். ஆனல் அதற்கு பெரிய கூச்சல் குழப்பம் எழுந்தது.நகைச்சுவைகளை புரிந்து கொள்வதில் தமிழர்கள் பீகாரிகளை விட சிறந்தவர்கள் என நான் நினைத்தேன், ஆனால் இப்போது நான் எனது கருத்தை பரிசீலித்து வருகிறேன் என்றார் மார்கண்டேய கட்ஜூ. இப்போதைய நீதிபதிகளை விட தமிழர்கள் அன்றும் இன்றும் என்றும் நல்லவர்கள்,சிறந்தவர்கள், பண்பாளர்கள்.கே ஆர் கணேஷ் – தமிழக மக்கள் இயக்கம்

* தடை செய்த செய்தி

♈🇮🇳🌴6] *தடை செய்த செய்தி

♈🇮🇳🌴7] *ஐ.நா. சபையின் புதிய பொதுச் செயலராக இன்று போர்ச்சுகல் நாட்டு முன்னாள் பிரதமர் அன்டோனியோ குட்டெரெஸ் தேர்வு செய்யப்படயுள்ளார்*

*ஹீரோவின் மனைவி தொலைக்காட்சியில்* ........!-காதலில் விழுந்தேன் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் நகுல். இவர் கடந்த பிப்ரவரி மாதம் ஸ்ருதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், இவரின் மனைவி ஸ்ருதி, புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்கி வருகிறார். அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ’ஊரும் உணவும்’. இந்நிகழ்ச்சி ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் ஊர்களின் வரலாறு பற்றியும் உணவுகளின் மகத்துவம் பற்றியும் தெரிவிக்கப்படுகிறது

*’தல அஜித் அதிரடி’ - தன் வீட்டு பணியாளர்களுக்கு மேலும் ஒரு உதவி!* -
நடிகர் அஜித் தற்போது சிவா இயக்கத்தில் தனது 57 வது படத்தில் நடித்து வருகிறார். இரண்டாண்டுகளுக்கு முன்னர் அஜித் தன் வீட்டில் பணிபுரியும் அனைவருக்கும் சொந்தமாக வீடு கட்டி கொடுத்தார். இப்போது தனது வீட்டில் பணிபுரிபவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி தரும் விஷயம் ஒன்றையும் செய்துள்ளார். அஜித், தன் வீட்டில் வேலை செய்பவர்கள் வந்து செல்ல ஏற்கனவே வாகனம் ஒன்றை அமைத்து கொடுத்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் அஜித் வீட்டிலிருந்த நேரம் பணியாளர்கள் பணிக்கு தாமதமாக வந்துள்ளனர். தாமதமாக காரணத்தை அஜித் கேட்டுள்ளார்.அப்போது அவர்கள், நேற்று இரவு முழுக்க தங்கள் பகுதிகளில் மின்சாரம் இல்லாததால் வீடுகளில் மின்சாரம் இல்லை, இதனால் சரியாக தூங்கவில்லை என்று காரணம் சொல்லியிருக்கிறார்கள். இதைக்கேட்ட அஜித் உடனடியாக தன் பணியாளர்களின் வீடுகள் அனைத்திலும் அதுவும் தரம் வாய்ந்த நல்ல இன்வெர்ட்டர்களை அமைத்து தரும்படி உத்தரவிட்டுள்ளார்

*சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள சிம்பு!!* -நடிகர் சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் “கவலைப்படாதே சிவா. உனக்கு மட்டுமல்ல, எனக்கும் தெரியும் யார் பின்னால் இருக்கிறார்கள் என்று. அதனால் தான் அவர்கள் நன்றாக இருக்கிறார்கள். கடின உழைப்பு தான் பலன் தரும். மற்றவற்றை கடவுளிடம் விட்டுவிடு”, என்று கருத்து தெரிவித்திருக்கிறார்*

*சரக்கு மற்றும் சேவை வரி நிர்ணயம் தொடர்பாக காங்கிரஸ் முதல்–மந்திரிகளுக்கு கட்சி மேலிடம் கடிதம் அனுப்பி உள்ளது

*தனுஷின் தொடரி முதல் நான்கு நாள் வசூலுடன் அதலபாதாளத்துக்கு சென்றது. கடந்த வார இறுதியில் முக்கால் லட்சமே சென்னையில் இதனால் வசூலிக்க முடிந்துள்ளது. கடந்த ஞாயிறுவரை இதன் சென்னை வசூல் 3.18 கோடிகள். படத்தின் பட்ஜெட்டுக்கு இது ரொம்ப கம்மி.சென்ற வாரம்தான் தெலுங்கு பிரேமம் திரைக்கு வந்தது. ஆந்திராவில் படம் ஹிட் என்கிறார்கள். ஆனால், சென்னையில்? முதல் மூன்று தினங்களில் 4.72 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது. சென்னைவாசிகளை தெலுங்கு பிரேமம் கவரவில்லை.விஜய் சேதுபதியின் ஆண்டவன் கட்டளை சென்ற வார இறுதியில் 5.30 லட்சங்களை வசூலித்துள்ளது. படத்துக்கு கிடைத்த விமர்சனத்துடன் ஒப்பிடுகையில் இது குறைவுதான். சென்னையில் 2.40 கோடிகளை மட்டுமே இப்படம் வசூலித்துள்ளது.சமீபத்திய பிளாக் பஸ்டர் என்றால் அது, எம்எஸ் டோனி - தி அன் டோல்ட் ஸ்டோரி. இந்த இந்திப் படம் இந்தியாவெங்கும் சக்கைப்போடு போடுகிறது. சென்ற வார இறுதியில் 10.84 லட்சங்களை வசூலித்த படம், கடந்த ஞாயிறுவரை சென்னையில் 2 கோடிகளை வசூலித்துள்ளது. இந்திப் படங்களில் இதுவொரு சாதனை.சென்ற வாரம் வெளியான தேவி முதல் மூன்று தினங்களில் 37.50 லட்சங்களை மட்டுமே வசூலித்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. பிரபுதேவா, தமன்னா காம்பினேஷனுக்கு அதுவும் விடுமுறை நாளில் இது குறைவான வசூல். வரும் நாள்களில் அதிக வசூலை எதிர்பார்க்கலாம்.விஜய் சேதுபதி நடித்துள்ள றெக்க, தேவிக்கு மேல். முதல் மூன்று தினங்களில் 65.72 லட்சங்களை வசூலித்துள்ளது. படம் சுமார் என்று விமர்சனங்கள் சொல்வதால் வார நாள்களில் வசூல் அதிகரிக்க வாய்ப்பு குறைவாகவே உள்ளது.எதிர்பார்த்தது போல ரெமோதான் முதலிடத்தில். றெக்க படத்தைவிட 150 காட்சிகள் அதிகமாக ரெமோ சென்னையில் ஓட்டப்பட்டுள்ளது. முதல் மூன்று தினங்களில் சென்னையில் மட்டும் 1.71 கோடியை படம் வசூலித்துள்ளது. அஜித், விஜய் படங்களுக்கு நிகரான ஓபனிங் இது. திங்கள், செவ்வாய், புதன் மூன்று தினங்களும் விடுமுறை என்பதால் ரெமோ முதல் பத்து தினங்களிலேயே சென்னையில் 5 கோடிகளை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது

*நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை நவம்பர் 2வது வாரத்தில் நடத்துவது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது. நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கூட்டுவது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரக் குழு இன்று ஆலோசிக்கிறது. பட்ஜெட் கூட்டத்தொடரை பிப்ரவரி மாத தொடக்கத்திலேயே கூட்டுவது பற்றியும் ஆலோசனை நடத்தப்படவுள்ளது*

*உலக பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டனர். திருவண்ணாமலை, நாமக்கல், திருவாரூர் ஆகிய இடங்களில் நடந்த விழிப்புணர்வு பேரணியில் மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.  அறந்தாங்கியில் நடந்த பேரணியில் மாணவ, மாணவிகளுடன் அரசு அதிகாரிகளும் பங்கேற்றனர்*

*வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பெருமாள் கோயிலி்ல்  ரூ.10 லட்சம் மதிப்பிலான நகை ள்ளையடிக்கப்பட்டுள்ளது. உண்டியல் பணத்தையும் திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர்*

16] *பெட்ரோலில் எத்தனாலை கலந்து விற்பனை செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதேபோல் கிழக்கு மாநிலங்களில் சாலை திட்ட பணிகளுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ஜம்முவில் ஐஐஎம் அமைக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது*

*மாணவர்களின் கல்விக் கடன் முழுவதையும் மத்திய, மாநில அரசுகள் தள்ளுபடி செய்ய வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். தமிழக மீனவர்களின் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் வாசன் வலியுறுத்தியுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த வாசன் இவ்வாறு கூறினார்*

*மேட்டூர் அணையில் இருந்து சாகுபடிக்கு திறந்து விடும் நீரின் அளவு 18,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 16,000 கனஅடியாக திறந்து விடப்படும் நீரின் அளவு 18,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது*

*கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் மழை பெய்து வருகிறது. மேல்மலை மற்றும் கீழ்மலையில் அரைமணி நேரமாக மழை பெய்து வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்*

*கண்ணூரில் பாஜக நிர்வாகி ரமீத் கொலை செய்யப்பட்டதை கண்டித்து கேரளாவில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.  திருவனந்தபுரத்தில் உள்ள தலைமை செயலகத்திற்கு வெளியே  அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்*

*நீலகிரி: கூடலூர் அருகே தேவர்சாலை குறும்பர்பாடி கிராமத்தில் புலி தாக்கியதில் பெண் காயமடைந்துள்ளார். புலி தாக்கியதில் தலையில் காயமடைந்த பெண் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்*

*புதுச்சேரியில் நீக்கப்பட்ட பொதுப்பணித்துறை ஊழியர்கள், போலீசிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது*

*சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.2,840-க்கும், ஒரு சவரன் ரூ.22,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.45.40-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.42,435-க்கும் விற்பனை செய்யப்படுகிறது*

*கோவை : உக்கடம் புறவழிச்சாலையில் உள்ள தனியார் கொரியர் நிறுவனத்தில் இருந்த ரூ.9 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஊழியரை கட்டிப்போட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக மேலாளர் பாலாஜி போலீசில் புகார் அளித்துள்ளார்*
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

++++++++++++++++++++++++

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here