காலை செய்திகள் 14/10/2016 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

காலை செய்திகள் 14/10/2016

P.k.samy
🏹🏹🏹🏹🏹🏹🏹🏹
*சொகுசு ரயிலில் திருமணம் செய்ய ரூ.5.5 கோடி கட்டணம்* [28]
🏹1] *ஆக்ஸ்ஃபோர்ட் ஆங்கில அகராதியில் இந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் புதியதாக சேர்க்கப்பட்டுள்ள சொற்களில் 'ஐயோ' என்கிற சொல்லும் சேர்க்கப்பட்டுள்ளது*

http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*இரவு நேரத்தில் தோழியை பார்க்க சென்ற கல்லூரி மாணவர் 3-வது மாடியில் இருந்து விழுந்து பலி*
🏹2] *இராக்கில் உள்ள மொசூல் நகரை கைப்பற்றுவதற்கான போர் தொடங்கும் போது, உலகிலேயே மிகக்கடினமான மனிதாபிமான நிவாரண முயற்சி நடவடிக்கை ஒன்றில் ஈடுபட தாங்கள் தயாராகிக் கொண்டிருப்பதாக அங்குள்ள ஐக்கிய நாடுகளின் தொண்டு நிறுவன பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். தீவிரவாதிகள் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தக்கூடும் என்ற அச்சமும் நிலவி வருகிறது.அது பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்*
🏹3] *லிபியா கடற்கரைக்கு அப்பால், குடியேறிகள் சென்ற ரப்பர் படகு பிரச்சினைக்கு உள்ளானதால் குறைந்தது 17 குடியேறிகள் கடலில் மூழ்கிப் போயுள்ளதாக நம்பப்படுகிறது*

🏹4] *இந்தோனீசிய அரசாங்கம், இளைஞர்களுக்கான புதிய தூதர்கள் பதவிகளுக்கான விளம்பரத்தில், விண்ணப்பதாரர்கள், ஒரு பால் உறவுக்காரர்கள் அல்லது திருநங்கையாக இருந்தால், அவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம் எனக் கூறியது பற்றி விமர்சனங்கள் எழுந்துள்ளன*
🏹5] *சட்டமன்ற தேர்தலில் தேமுதிக படுதோல்வி அடைந்தது. விஜயகாந்தின் நடவடிக்கைகளும், தவறான கூட்டணியும்தான் காரணம் என பலராலும் விமர்சிக்கப்பட்டது.சட்டமன்ற தேர்தலில், திமுகவுடன் கூட்டணி சேர வேண்டும் என்று பெரும்பாலான தொண்டர்கள் விரும்பியதாகவும், ஆனால், மக்கள் நலக் கூட்டணியுடன் விஜயகாந்த் கூட்டணி அமைத்ததால் தேமுதிக இந்த தோல்வியை சந்தித்தாக நிர்வாகிகள் குறை கூறி வருகின்றனர்.மேலும், பல நிர்வாகிகள் திமுக மற்றும் அதிமுக போன்ற கட்சிகளுக்கு தாவி வருகின்றனர். எனவே, கட்சியில் இருக்கும் நபர்களை தக்க வைப்பதற்காகவும், பொதுமக்களின் கவனத்தை மீண்டும் தேமுதிக பெறுவதற்கும்,  திமுக பொருலாளர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட ‘நமக்கு நாமே’ பாணியில் சுற்றுப் பயணத்தை விஜயகாந்த் மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இதன்மூலம் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை நேரில் சந்திக்க அவர் முடிவெடுத்துள்ளதாகவும் தெரிகிறது*

6] *அரசியல் பிரபலங்கள், ராகுல் காந்தி, வெங்கய்யா நாய்டு, அமித்ஷா, வைகோ, முக.ஸ்டாலின்,கிருஷ்ணசாமி, திருமாவளவன், பொன்.ராதாகிருஷ்ணன், முத்தரசன், வேல்முருகன், தா.பாண்டியன், சீமான், கேரள முதலவர் மற்றும் ஆளுநர், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக துணைவேந்தர் பச்சமுத்துவின் மகன் ரவி பச்சமுத்து, தென்னிந்திய திரைப்பட சங்க தலைவர் நாசர், நடிகர் சிவக்குமார், கார்த்தி, ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கச் சென்று திரும்பி வந்தனர்.இந்நிலையில், நேற்று  மாலை, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி, அப்பல்லோ வந்துள்ளார்*

🏹7] *300 கோடி அணுகுண்டுகளின் சக்தி வாய்ந்த விண்கல் பூமியை மோதும் அபாயம்: சீன எச்சரிக்கை*-சூரிய மண்டலத்தில் ஏராளமான விண்கற்கள் சுற்றி வருகின்றன. இவை அவ்வப்போது புவி ஈர்ப்பு விசைக்குள் புகுந்து பூமியில் வந்து விழுகின்றன. ஆனால் பெரும்பாலான கற்கள் வானில் வரும்போதே காற்று மண்டலத்தில் ஊராய்வு ஏற்பட்டு தீப்பிடித்து சாம்பலாகி விடுகின்றன. இந்நிலையில் விண்ணில் சுற்றிவரும் ஒரு விண்கல் மூலம் பூமிக்கு பெரும் ஆபத்து ஏற்பட இருப்பதாக சீன விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 2009ஆம் ஆண்டு இ.எஸ். என்று பெயரிடப்பட்ட அந்த விண்கல் சூரிய மண்டலத்துக்குள் சுற்றி வருகிறது.15 கிலோ மீட்டர் அகலத்தில் இந்த விண்கல் உள்ளது. அது சுற்றுப்பாதை சிறிது, சிறிதாக மாறி பூமியின் வட்டபாதைக்குள் வரும் என்றும், அப்போது அது பூமியில் மோதும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.பூமியில் மோதும் போது அது 300 கோடி அணுகுண்டுகளின் சக்தியை வெளிப்படுத்தும். இதனால் பூமிக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆனால் இந்த விண்கல் எப்போது மோதும் என்று சரியாக கணக்கிட முடியவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்*
http:?/www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
🏹8] *ஜோதிகா நடிக்கும் புதிய படத்துக்கு மகளிர் மட்டும் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. 36 வயதினிலே படத்தில் நடித்த ஜோதிகா, அடுத்து குற்றம் கடிதல் பிரம்மா இயக்கத்தில் நடித்து வருகிறார்*

🏹 *11 வயதில் என்னை பலாத்காரம் செய்தார்கள்: பெண்ணாக மாறிய நடிகர் பேட்டி!* -பாலிவுட் நடிகர் கவுரவ் அரோரா தன்னை முழுவதும் பெண்ணாக மாற்றிக்கொண்டு கவுரி அரோராவாக வலம் வருகிறார். இவர் தன்னை சிலர் சிறு வயதில் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார். பேட்டி ஒன்றில் பேசிய கவுரி அரோரா, தானக்கு வயதாக இருக்கும் போது பெண்ணை போல உடை அணிந்திருந்தேன், அப்போது சிலர் என்னை பலாத்காரம் செய்தார்கள்.நான் டியூஷன் படிக்கும் போது அந்த வகுப்பில் உள்ள என்னை விட 7, 8 வயது பெரியவர்கள் என்னிடம் நன்றாக பேசினார்கள். அவர்கள் பாசமாக பேசியதில் ஈர்க்கப்பட்ட நானும் அவர்களுடன் நன்றாக பேசினேன். பின்னர் என்னை பலவந்தமாக அவர்கள் பலாத்காரம் செய்தார்கள்.நான் அனைத்து வலியையும் தாங்கிகொண்டு அன் அம்மாவிடம் சொன்னேன். அப்பா இது குறித்து போலீசில் கூட புகார் தெரிவித்து இருந்தார் என்றார் கவுரி

🏹10] *சம்ந்தா தன் காதலனுக்காக மதம் மாறியதாகவும் கூறப்பட்டது. நாகசைதன்யா குடும்பத்தினரும், இவர்கள் காதலை ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில் நாகசைதன்யாவுடன் பாட்மின்ட்டன் விளையாடும் புகைப்படத்தை சமந்தா வெளியிட்டுள்ளார். அதில், தான் ஜெயித்ததாகவும், நாகசைதன்யா விளையாட்டில் தோற்றுவிட்டதாகவும் புகைப்படத்தில் குறிப்பிட்டு அதனை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் சமந்தா. மேலும், ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு வெள்ளி பதக்கம் வென்று தந்த பிவி சிந்துவை முன்னுதாரணமாகக் கொண்டு பாட்மின்ட்டனில் ஜெயித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்*

11] *பிரபல தென்னிந்திய நடிகை ஸ்ரேயாவுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி அதிரடி வீரர் பிராவோ மும்பை நட்சத்திர விடுதியில் மதிய உணவு அருந்தியுள்ளார்*

🏹12] *ஜெர்மன் நாட்டில் பிறந்து 40 நாட்களான குழந்தையை விற்க, ஆன்லைனில் விளம்பரம் செய்யப்படுள்ளது* மரியா என்ற 40 நாட்களான பெண் குழந்தையை ரூ. 3 லட்சத்துக்கு விற்க அந்த குழந்தையின் போட்டோவுடன் ஈ-பேயில் விளம்பரம் கொடுக்கப்பட்டது. இந்த பதிவு சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, இதுகுறித்து, ஈ-பே நிறுவனம் உள்பட பலர் காவல்துறையில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து விளம்பரம் கொடுத்தவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்

🏹13] *சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டக்கோரி 76 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து சங்கரலிங்கனார் உயிர் இழந்தார். சங்கரலிங்கனாரின் 61–வது நினைவு தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது*
🏹14] *தமிழ்நாட்டுக்கு விரைவில் புதிய கவர்னரை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது*

🏹15] *முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டம் குளிர்கால கூட்டத் தொடருக்காக நவம்பர் 16–ல் பாராளுமன்றம் கூடுகிறது டிசம்பர் 16–ந் தேதி வரை நடைபெறும்*
🏹16] *இரவு நேரத்தில் தோழியை பார்க்க சென்ற கல்லூரி மாணவர், தோழியின் தாயார் பார்த்து விடக்கூடாது என்பதற்காக சிமெண்டு பலகையில் குதித்து மறைந்து கொள்ள முயன்ற போது 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.திருச்சி கே.கே.நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மகன் கவுதம் (வயது 21). இவர், பள்ளிக்கரணையில் நண்பர்களுடன் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி, மேற்கு தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் எம்.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரும், அதே கல்லூரில் படிக்கும் ஒரு பெண்ணும் நண்பர்களாக பழகி வந்ததாக தெரிகிறது.நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் தனது தோழியை பார்ப்பதற்காக தாம்பரம் சானடோரியம் வேதாந்தகம் காலனியில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அவரது வீட்டுக்கு கவுதம் சென்றார். இருவரும் யாருக்கும் தெரியாமல் வீட்டின் 3-வது மாடிக்கு சென்று பேசிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.அப்போது தோழியின் தாயார் அவரை கூப்பிட்டதால் அவர் கீழே இறங்கி சென்றார். தோழியின் தாயார் மாடிக்கு வந்து தன்னை பார்த்து விடுவாரோ? என்று பயந்து போன கவுதம், மாடியில் உள்ள சிமெண்டு பலகையில் (சிலாப்) குதித்து மறைந்து கொள்ள முயன்றார்.அப்போது நிலை தடுமாறிய கவுதம், 3-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த கவுதம், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்*
🏹17] *ஜப்பனீஸ் என்சிபாலிட்டிஸ் என்று கூறப்படும் நோய் கடுமையான மூளை வீக்கம் மற்றும் நரம்பியல் சம்மந்தப்பட்ட பிரச்சினைகளை உருவாக்கி பெரும்பாலான குழந்தைகளை பாதிக்கிறது. இந்த நோய் காரணமாக ஒடிசா மாநிலம் மல்காங்கிரி மாவட்டத்தில் கடந்த 34 நாட்களில் சுமார் 50 கைக்குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இதனையடுத்து மக்கள் மத்தியில் தடுப்பு நடவடிக்கைகள் ஊக்கமளிக்கப்பட்டு வருகிறது*
🏹18] *உருக்காலையை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார். உருக்காலைக்கு உரிய நிதி ஒதுக்கி, பொதுத்துறை நிறுவனமாக நீடிக்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது*
🏹19] *குஜராத் மாநிலம் வதோதராவில் மாற்றுத்திறனாளிகளால் நேற்று சிறப்பு நவராத்திரி மற்றும் கார்பா கொண்டாடப்பட்டது. இந்த பாரம்பரிய கார்பா நடனத்தில் ஊனமுற்ற பெண்கள் கலந்து கொண்டு உற்சாகமாக நடனமாடி கொண்டாடினர்.*

🏹20] *நாட்டிற்காக தங்கள் உயிரை இழந்த வீரர்களை கவுரவிக்கும் வகையில் மாநில அரசால் கட்டப்பட்ட சவுரியா ஸ்மாரக்கை பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை போபாலில் தொடங்கி வைக்கிறார். மற்றும் ஆச்சார்யாஸ்ரீ வித்யாசாகர்ஜி மஹாராஜ்-ஐ சந்திக்கவுள்ளார்*

🏹21] *சிரியா-துருக்கி எல்லையில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள சோதனைச் சாவடி அருகே கார் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்*

🏹22] *மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6,237 கனஅடியில் இருந்து 4,253 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 67.38 அடியாகவும், நீர் இருப்பு 30.49 டிஎம்சியாகவும் உள்ளது. அணையில் இருந்து சாகுபடிக்கு நீர் திறப்பு 18,000 கனஅடியாக உள்ளது*
🏹23] *கோவா பிரிக்ஸ் மாநாடு : ரஷ்ய அதிபர் இன்று இந்தியா வருகை*

🏹24] *கோவை விமானநிலையத்தில் வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்*

🏹25] *திருவள்ளூர் - மண்ணவேடு ஊராட்சி தலைவர் வெட்டிக் கொலை*

🏹26] *ஜெ., உடல் நலம் விசாரிக்க ரோசய்யா இன்று சென்னை வருகை*
🏹27] *திட்டங்கள் அமலில் உள்ளதா? : கண்காணிக்க அமைச்சகர்களுக்கு மோடி உத்தரவு*
🏹28] *கடலுக்கு அடியில் திருமணம் செய்வது, ஆகாயத்தில் பறந்து திருமணம் செய்வது உள்ளிட்ட பல்வேறு முறைகளில் உலகம் முழுவதும் பெரும்பாலோனோர் திருமணம் செய்து கொள்கின்றனர். இந்நிலையில் சுற்றுலா போல திருமணத்தை மிகவும் ஆடம்பரமாக நடத்தும் திட்டமொன்றை ஐ.ஆர்.சி.டி.சி. அறிவித்துள்ளது. அதன்படி இந்தியாவின் ஆடம்பர சொகுசு ரயிலான மகாராஜாவை 8 நாட்கள் திருமணச் சுற்றுலாவிற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த ரயிலில் மொத்தம் 88 பயணிகள் பயணிக்கலாம். 24 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் 43 விருந்தினர் அறைகள் உள்ளன. இதில் 20 டீலக்ஸ், 18 ஜூனியர் சூட்கள், 4 சூட்கள் மற்றும் ஒரு பிரசிடென்சியல் சூட் உள்ளிட்டவையும் அடங்கும். இந்த எட்டு நாட்கள் திருமண சுற்றுலாவிற்கு மொத்தம் 5.5 கோடி ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.திருமணம் தவிர பாலிவுட் சினிமா சூட்டிங், பேஷன் நிகழ்ச்சிகள், கார்ப்பரேட் நிறுவனங்களின் நிகழ்ச்சிகள் ஆகியவற்றை மகாராஜா ரயிலில் நடத்திக்கொள்ளும் வசதியையும் அறிமுகம் செய்ய ஐ.ஆர்.சி.டி.சி. முடிவு செய்துள்ளது. இந்த தகவலை ஐ.ஆர்.சி.டி.சி.யின் மேற்கு மண்டல செய்தி தொடர்பாளர் பினாகின் மோரவாலா தெரிவித்துள்ளார்*
🚊🚉🚉🚊🚉🚊🚉🚊

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here