டீலர் மார்ஜினை உயர்த்தி தராவிட்டால் வேலை நேரத்தை குறைக்க பெட்ரோல் உரிமையாளர்கள் முடிவு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

டீலர் மார்ஜினை உயர்த்தி தராவிட்டால் வேலை நேரத்தை குறைக்க பெட்ரோல் உரிமையாளர்கள் முடிவு

http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

'டீலர் மார்ஜினை' உயர்த்தி தராவிட்டால், பெட்ரோல் பங்க் வேலை நேரத்தை குறைக்க,

உரிமையாளர்கள் முடிவு செய்து உள்ளனர்.

இது குறித்து, தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர்ஸ் கூட்டமைப்பு தலைவர், முரளி கூறியதாவது:

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், 1 லிட்டர் பெட்ரோலுக்கு, 2.24 ரூபாய்; டீசலுக்கு, 1.40 ரூபாய், 'டீலர் மார்ஜின்' வழங்குகின்றன. ஒரு பங்கில், சராசரியாக, 1.70 லட்சம் லிட்டர் விற்பதன் மூலம், 16 ஆயிரத்து, 500 ரூபாய் மட்டுமே கிடைக்கும். அந்த பணத்தில், ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாது. எனவே, மார்ஜின் தொகையை உயர்த்த வலியுறுத்தினோம். இதற்காக, மத்திய அரசு அமைத்த கமிட்டியும், பரிந்துரைகள் அளித்துள்ளது. அந்த பரிந்துரைகள் இன்னும் அமலாகவில்லை. எனவே, எங்கள் செலவை குறைக்கும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள, 4,600 பெட்ரோல் பங்க்குகளின், வேலை நேரத்தை குறைக்க உள்ளோம்.

அக்., 19, 26ல், இரவு, 7:00 மணி முதல், 7:15 வரை, பெட்ரோல் பங்க் மூடப்படும்

நவ., 3, 4ல், பெட்ரோல், டீசல் கொள்முதல் நிறுத்தப்படும்; நவ., 5 முதல், காலை, 9:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை மட்டும், பெட்ரோல் பங்க் இயங்கும்; இரவு நேரத்தில், பெட்ரோல் போட முடியாது

அதன் பிறகும், எண்ணெய் நிறுவனங்கள், எங்கள் கோரிக்கைகளை ஏற்காவிட்டால், வங்கிகள் போல், பெட்ரோல் பங்க்குகளுக்கு வார விடுமுறை விடப்படும். இவ்வாறு அவர் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here