@@@@@@@@@@@@@@@
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
@@@@@@@@@@@@@@@@
*பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன்?*
*திருச்சி அரசு மருத்துவமனை குழந்தைகள் வார்டில் கான்கிரீட் விழுந்தது*
*புதுச்சேரியில் சீனப்பட்டாசுகளுக்கு தடை*
*தாய்லாந்து மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் ( வயது- 88) உடல்நலக்குறைவால் காலமானார்*
*3 மாணவிகள் பலி: செல்லம்மாள் கல்லூரிக்கு நாளை விடுமுறை. லாரி டிரைவர் கைது.chennai*
*அதிர்ச்சி* - *ராணுவ வீரரை ஷு போட்டுவிட வைத்த மத்திய அமைச்சர்* மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனக்கு shoe போட்டுவிட ராணுவ வீரர்களை பயன்படுத்திய காட்சி வெளியாகியுள்ளது.அதில் ராணுவ வீரர்களை ஷூ போட்டுவிட வைக்கும் காட்சி பலரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.தலையை கவிழ்த்து கொள்கிறார்.அந்த நபர் மத்திய அமைச்சர் தானா???
*அசாம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 2 குழந்தைகள் உள்ளிட்ட வங்காளதேசத்தினை சேர்ந்த ஊடுருவல்காரர்கள் 10 பேர் கரீம்கஞ்ச் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தோ-வங்காளதேச எல்லை பகுதி வழியே அவர்களது நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்*
*மர்மமான பெர்முடா பகுதியில் பிரமிட் வடிவிலான புதிரான படிகம் விஞ்ஞானி தகவல்* - *பஹாமாவில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் மாநாட்டில் டாக்டர் வெர்லேக் கூறியதாவது, பெர்முடா பகுதியில் பிரமிட் வடிவிலான புதிரான படிகம் உள்ளது. அதன் அகலம் 300 மீட்டர். அதன் உயரம் 200 மீட்டர்.
அது ஏற்படுத்தும் நீர்சுழற்சி மற்றும் ஈர்ப்பினால்தான் கப்பல் மற்றும் விமானங்கள் அழிகின்றன. அதிலிருந்து வெளிப்படும் சக்தி எத்தன்மையுடையது என்பது ஆராயப்பட வேண்டியது என்கிறார்.
ஆனால், அது இருப்பதற்கான சாட்சியோ ஆதாரமோ இல்லை. இது வேற்றுக்கிரகவாசிகளின் வேலையாகவும் இருக்கலாம் என்றும் பேசப்படுகிறது.
இந்த சம்பவங்கள் பெர்முடா மர்ம பகுதியை ஆராய வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியிருக்கிறது*
*நோபல் பரிசு வென்ற இத்தாலிய திரைப்பட கதாசிரியர் டேரியோ போ மரணம்*
*தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் தலைதூக்குகிறது தமிழக அரசு துரித நடவடிக்கை எடுத்திட வேண்டும் விஜயகாந்த்*
*தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருப்பதற்கு சாத்தூர் துப்பாக்கிச் சூடே எடுத்துக்காட்டு என்று சென்னை கொளத்தூரில் நூலகங்களை ஆய்வு செய்தபின் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்தார்*
*மும்பையில் பெஹ்ராம்படா என்ற இடத்தில் 5 மாடி கட்டிடம் இடிந்து விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் ஆம்புலன்ஸ் வண்டியுடன் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்து இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன*
*உடல்நலம் குன்றியுள்ள பேரறிவாளனை பரோலில் விடுவிக்க வேண்டும் என தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார். வேலூர் மத்திய சிறையில் பேரறிவாளனை சந்தித்த பின் பேட்டியளித்த அவரது தாயார் அற்புதம்மாள் அவரை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்*
*வேலூர்: அன்வர்த்திக்கான்ப்பேட்டையில் காவேரி ரயிலில் கொண்டு வரப்பட்ட 1500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தி வரப்பட்ட 1500 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து நெமிலி வட்ட வழங்கல் அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்*
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*விருதுநகர், திருப்பூர், சிவகாசி சாத்தூர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. இருக்கண்குடி, படந்தால் உள்ளிட்ட ஊர்களிலும் 1 மணி நேரமாக பலத்த மழை பெய்கிறது. சிவகாசியில் ஒருமாத காலமாக கடும் வெயில் வாட்டிவந்த நிலையில் மழை காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் *
*68 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த சிறுமி மரணம்: அறிக்கை தாக்கல் செய்ய லோக் ஆயுக்தா உத்தரவு*
*சென்னை கிண்டியில் செல்லம்மாள் கல்லூரி ஆசிரியைகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். கல்லூரி ஆசிரியைகள் சாலை மறியலால் அண்ணா சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது*
*குஜராத்தில் இணைய தள சேவை முடக்கம்*
*தஞ்சை பெரிய கோயிலில் தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ்*
*சேலத்தில் பெட்ரோல் குண்டு வீசிய 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது*
*பயங்கரவாதிகள் ஹபீஸ் சயீத் மற்றும் மசூத் அசார் மீது நடவடிக்கை எடுத்தால், தேசிய பாதுகாப்புக்கு எப்படி அச்சுறுத்தல் ஏற்படும் என பாகிஸ்தான் பத்திரிகைகள் கேள்வி எழுப்பியுள்ளன.இது தொடர்பாக பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் தி நேஷனல் பத்திரிகையில் எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில், ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத் மற்றும் ஜமாத் உத் தவா அமைப்பின் தலைவர் மசூர் அசாத் மீது எடுக்கப்படும் நடவடிக்கை எப்படி தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். பத்திரிகையாளர்கள் எப்படி செயல்பட வேண்டும் என அரசும் ராணுவமும் பாடம் எடுக்க ஆரம்பித்தால், அது இடையூறாகத் தான் அமையும். பத்திரிகையாளர்களுக்கு பாடம் சொல்லி கொடுக்க அரசுக்கும், ராணுவத்திற்கும் எப்படி தைரியம் வந்தது. பத்திரிகையாளரை எப்படி அவர்கள் கிரிமினல்கள் போல் நடத்தலாம். அரசும் ராணுவமும் பத்திரிகைக்கு பாடம் சொல்லித்தருவதை விட்டுவிட்டு, ஹபீஸ் சயீத் மற்றும் மசூர் அசாத் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி சிந்திக்க வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக