பள்ளிகளில் ஆதார் அக்டோபர் 30 வரை கெடு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

பள்ளிகளில் ஆதார் அக்டோபர் 30 வரை கெடு



மாணவர்களின் ஆதார் எண் பதிவை, வரும், 30க்குள் முடிக்கும்படி, பள்ளிகளுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். அனைத்து மாணவர்களுக்கும், இலவச நலத்திட்ட உதவி வழங்குதல், உதவி தொகை வழங்குதல் போன்றவற்றை முறைப்படுத்த, மாணவர்களின் பெயர் பட்டியல் தயார் செய்யப்படுகிறது.

இதில், போலிகள் இடம் பெறாமல் தடுக்க, மாணவர்களின் ஆதார் எண், பெயர் பட்டியலில் சேர்க்கப்படுகிறது. இதன்படி, ஆதார் பதிவை, செப்., 30க்குள் முடிக்க, அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

ஆனால், ஆதார் எண் இல்லாத மாணவர்களுக்கு, சிறப்பு முகாம் நடத்தி, பெயர்களை பதிவு செய்ய வேண்டியிருந்ததால், அந்த காலக்கெடுவுக்குள், பள்ளிகளால் பதிவை முடிக்க முடியவில்லை.

இந்நிலையில், வரும், 30க்குள் ஆதார் எண் பதிவை கட்டாயம் முடிக்க, பள்ளிகளுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here