http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*“வயதான பெற்றோரை கவனிக்காவிட்டால் தண்டனை கிடைக்கும்” மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை*
[21]----
*பெண் வேடமிட்டு லாரி டிரைவரிடம் வழிப்பறி: மூவர் கைது: ஒருவர் தப்பி ஓட்டம்-சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புதுக்கோட்டையில் இருந்து காலி மதுபாட்டில்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புதுச்சேரியை நோக்கி வந்தது. லாரியை பெரம்பாடியைச் சேர்ந்த முருகேசன் என்பவர் ஓட்டி வந்தார்.ஞாயிற்றுக்கிழமை இரவு விருத்தாசலம் அருகே வேப்பூரில் லாரியை ஒரு பெண் உள்பட 4 பேர் கைகாட்டி மறித்துள்ளனர். லாரி நின்றவுடன் டிரைவர் முருகேசனை அடித்து உதைத்து அவரிடம் இருந்த பணத்தை பறித்துள்ளனர். அப்போது அந்த வழியே சென்ற ஆம்புலன்ஸ் வாகன டிரைவர் ஒருவர் வேப்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அந்த 4 பேரையும் துரத்தியுள்ளனர். இதில் ஒருவர் தப்பியோடியுள்ளார். பிடிப்பட்ட 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் வேப்பூர் அருகே ஆசனூரைச் சேர்ந்த வேலு, முருகவேல், வேலூர் மாவட்டம், சோளிங்கரைச் சேர்ந்த சத்தியராஜ், சேப்பாக்கத்தை சேர்ந்த மணிகண்டன் என தெரிய வந்தது. வேலு என்பவர் தப்பியோடியுள்ளார்* ----
*ரயில் மறியலுக்கு பாதுகாப்புக்கு போன போலிஸ் வாகனம் விபத்தில் சிக்கியது: 9 போலிசார் காயம்* [18]----
**மான் கறி சாப்பிட்ட சாப்பிட்ட 4 பேருக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் அபராதம்* [20]---
*ஒடிசா தீ விபத்து: காயம் அடைந்தவர்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க பிரதமர் உத்தரவு*
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*அனைத்து கட்சியினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் கர்நாடகத்தில் நிலவி வரும் நதிநீர் பிரச்சினைகளை தீர்க்க முடியும் தேவேகவுடா சொல்கிறார்
*ஜெர்மனி நாட்டில் பிராங்க்பர்ட் அருகில் உள்ள லுட்விக்ஷாபென் என்ற இடத்தில் உலகின் மிகப்பெரிய ஆலையான ‘பி.ஏ.எஸ்.எப்.’ ரசாயன ஆலை இயங்கிவருகிறது. 10 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள இந்த ஆலையில் 39 ஆயிரம் பணியாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.இந்திய நேரப்படி நேற்று மதியம் 3 மணி அளவில் அங்கு குழாய்களில் வேலை நடந்து கொண்டிருந்தபோது திடீரென வெடித்து தீப்பிடித்தது. இதனால் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பலர் காயம் அடைந்தனர்.
மேலும் சிலர் மாயமாகி உள்ளனர். அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள வீடுகளில் இருப்பவர்கள் வெளியே வரவேண்டாம் எனவும், கதவு, ஜன்னல்களை மூடிவைக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். முன்னதாக அந்த ஆலையின் மற்றொரு யூனிட்டிலும் கியாஸ் வெடித்து 4 பேர் காயம் அடைந்தனர்*
*ஆளும் கட்சி கூட்டாவிட்டால் காவிரி பிரச்சினையில் அனைத்து கட்சி கூட்டத்தை தி.மு.க.வே கூட்டும்; மு.க.ஸ்டாலின் பேட்டி*
* உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தேர்தல் ஆணையம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. வழக்க்கில் 4 வாரத்திற்குள் பதில் தர திமுக, தமிழக அரசிற்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கான தடை மேலும் 4 வாரத்துக்கு தொடரும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்*
*காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிரான வழக்கு விசாரணை தொடங்கியது. உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதி அமர்வு வழக்கை விசாரித்து வருகிறது. தொழில்நுட்பக்குழுவின் அறிக்கை குறித்து நீதிபதிகள் விசாரணை செய்யவுள்ளனர். நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிரான வழக்கு முடிவை அறிய விவசாயிகள் ஆர்வமாக உள்ளனர்*
*மதுரை ரயில் நிலையத்தில் ரயில் மறியலில் ஈடுபட்ட திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் 500 பேர் கைது செய்யப்பட்டனர். பழனியில் ரயில் மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி ராமேஸ்வரத்தில் ரயில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் அனைத்து கட்சியினர் கைது செய்யப்பட்டனர்*
*சென்னை வால்டாக்ஸ் சாலையில் சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டு வருகின்றனர்*
*டெல்லி வந்துள்ள மியான்மர் நாட்டின் மாநில ஆலோசகர் ஆங் சான் சூ கீ க்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் பாரம்பரிய முறையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். முன்னதாக அவர் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அவர் அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது*
*திருச்சியில் ரயில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் அனைத்து கட்சியினர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் திருச்சி புல்லம்பாடி அருகே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி ரயில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் அனைத்து கட்சியினர் சுமார் ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்*
*கிரானைட் கல் எடுத்ததில் முறைகேடு தொடர்பாக மேலூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பி.ஆர்.பி, ஓம் ஸ்ரீ, குமார் கிரானைட் நிறுவனங்கள் மீது 758 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அனுமதித்ததை விட அதிகமாக கிரானைட் வெட்டி எடுத்ததால் அரசுக்கு ரூ.16.30 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது*
* தஞ்சை ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஜி.கே.வாசன் கைது செய்யப்பட்டார். மேலும் ஜி.கே.வாசன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட தமாகாவினர் 1000 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் வேலூர் அருகே காட்பாடியில் ரயிலை மறித்து போராட்டம் நடத்திய தமிழ் மாநில காங்கிரசார் கைது செய்யப்பட்டனர்*
*புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே துரையரசபுரத்தில் தனியார் பேருந்துடன் லாரி மோதியதில் 39 பேர் காயமடைந்துள்ளனர். லாரி மோதியதில் கல்லூரி மாணவர்கள் 26 பேர் உட்பட 39 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்*
*திருவள்ளூரில் ரயில் மறியலில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏ ராஜேந்திரன் உள்பட 600 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் மதுரை சோழவந்தானில் நெல்லை - ஈரோடு பயணிகள் ரயிலை மறித்த திமுகவினர் ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். மதுரை ரயில் நிலையம் முன் மறியலில் ஈடுபட முயன்ற திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தடுத்து நிறுத்தப்பட்டனர்*
*சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில் மறியலில் ஈடுபடுவதற்காக வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட மக்கள் நலக் கூட்டணியினர் ஊர்வலம் மேற்கொண்டுள்ளனர். ஊர்வலத்தில் பங்கேற்றுள்ளவர்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்*
♈🇮🇳🌴16] *இலங்கையின் புதிய அரசியல் சாசனத்தில், அதிபரின் அதிகாரம் குறைப்பு; தேர்தல் நடைமுறை மாற்றம்; மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரம் உள்ளிட்ட, பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளதாக, சிறுபான்மை தமிழர்களின் பிரதான கட்சியான, தமிழ் தேசிய கூட்டணி தெரிவித்து உள்ளது*
*சந்தைக்கு வந்தவர்களிடம் அபராதம்: போலீசாரை கண்டித்து சாலை மறியல்* -கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்த காவக்காரன்பட்டியில், திங்கட்கிழமையன்று வாரச்சந்தை நடப்பது வழக்கம். குளித்தலை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகளும், பொதுமக்களும், காய்கறிகளை விற்கவும், வாங்கவும் சந்தைக்கு வந்து செல்வர்.இந்நிலையில், நேற்று வழக்கம் போல் சந்தை நடந்துவந்தது, இதற்கிடையே, தோகைமலை போலீசார், சந்தைக்கு வந்து செல்வோரை பிடித்து வாகன தணிக்கை நடத்தினர். மாலை, 6:30 மணிக்கு மேல், 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகளை பிடித்து, போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக, 'ஸ்பாட் பைன்' போட்டு வசூலில் ஈடுபட்டனர்.சந்தைக்கு வருவோரை குறிவைத்து, 'ஸ்பாட் பைன்' போட்டதால், பல்வேறு தரப்பினரும் கடும் அதிருப்தி அடைந்தனர். அப்போது, மணப்பாறை பகுதியை சேர்ந்த ஒருவர், தன் மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் பைக்கில் வந்தார். அவரை மடக்கிய போலீசார் ஹெல்மெட் போடவில்லை, ஓட்டுனர் உரிமம் இல்லை எனக்கூறி அபராதம் வித்துள்ளனர்.“குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறேன்” என அவர் பதில் தெரிவித்தபோதிலும், சாலைவிதிகளை மீறியதாக கூறி, 3,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், மற்றும்வாகன சொதனிக்கு நின்றவர்கள் எல்லோரும் ஓன்று சேர்ந்து, சந்தைக்கு வருவோரை குறிவைத்து போலீசார் இரவு நேரங்களில், வாகன தணிக்கையில் ஈடுபட்டு, 'ஸ்பாட் பைன்' போடுவதை தவிர்க்க வேண்டும் எனக்கூறி, தோகைமலை - திருச்சி சாலையில் திடீர் சாலை மறியல் நடத்தினர்*
*காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும். வாரியம் அமைக்க முடியாது என்று சொல்லும் மத்திய பாஜக அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் திமுக, காங்கிரஸ்., மநகூ விவசாயிகள் சங்கங்கள், விவசாயிகள் 17,18 ஆகிய இரு நாட்களும் ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.இன்று புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் ரயில் நிலையத்தில் மறியல் செய்வதாக போராட்டக்குழு அறிவித்திருந்தது. போராட்டத்திற்கு பாதுகாப்புக்காக புதுக்கோட்டை ஆயுதப்படை போலிசார் வாகனங்களில் சென்றனர் அதில் ஒரு வாகனம் முத்துடையான்பட்டிக்கும் மேலூருக்கும் இடையே செல்லும் போது எதிரே சிமென்ட் ஏற்றிக் கொண்டு வந்த டாரஸ் லாரியின் ஊக்கு போலிஸ் வாகனத்தில் உரசிக் கொண்டே சென்றதால் ஜன்னல் ஓரத்தில் இருந்த சிவசங்கர் (32), ஜெயக்குமார் (43), சையது முகமது (26), ராஜா (32), ராமமூர்த்தி (27), குணசேகரன் (27), கருப்பையா (29), தனசேகரன் (26), பாண்டியராஜன் (28) ஆகிய 9 போலிசாரும் காயமடைந்தனர்*
*ரேஷன் அரிசியை அரைத்து மாவு விற்பனை செய்த கடைக்கு சீல்; 1,600 கிலோ அரிசியும், மாவும் பறிமுதல்* -கோவை மாவட்டம், கோவில்மேடு, நான்கு சாலைப் பகுதியில் உள்ள ஒரு கடையில் ரேஷன் அரிசியை அரைத்து, மாவு தயாரித்து விற்பனை செய்வதாக மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணமூர்த்திக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடையில் திங்கள்கிழமை இரவு சோதனை மேற்கொண்டனர். அப்போது, அந்தக் கடையில் 825 கிலோ ரேஷன் அரிசி, 800 கிலோ அரிசி மாவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது*
*மான் கறி சாப்பிட்ட சாப்பிட்ட 4 பேருக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் அபராதம்* -ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பவானிசாகர் வனச்சரகம், விளாமுண்டி வனப்பகுதியில் வனத்துறையினர் திங்கள்கிழமை வழக்கமான ஆய்வுப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கருப்பராயன் கோயில் என்ற இடத்தில் பதுங்கியிருந்த 4 பேரை பேரை வனத் துறையினர் பிடித்தனர்.அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின்போது, அவர்கள் யாரோ மான் வேட்டைக்கு வைத்த சுருக்குக் கம்பியில் சிக்கி உயிரிழந்த மான் ஒன்றின் இறைச்சியை சமைத்து சாப்பிட்டது தெரியவந்தது. இதையடுத்து, மான் இறைச்சி சாப்பிட்ட சௌந்தரராஜ், குமார், கருப்புசாமி, மயில்சாமி, விஜயன் ஆகிய நால்வரையும் கைது செய்த வனத்துறையினர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களை சத்தியமங்கலம் புலிகள் காப்பக இணை இயக்குநர் அருண் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.வழக்கை விசாரித்த அவர், மான் கறி உண்ட நால்வருக்கும் தலா ரூ.15 ஆயிரம் வீதம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். அபராதத் தொகையை செலுத்திய பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்*
*தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலக முதியோர் நாள் விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் விவேகாநாதன் தலைமை வகித்தார்.விழாவில் பேசிய அவர், ஒவ்வொருவரும், வயது முதிர்ந்த தங்கள் பெற்றோரை கவனிக்காதிருப்பது நல்லதல்ல. பெற்றோரை கவனிக்காதவர்களுக்கு சட்டப்படி தண்டனை கிடைக்கும். வயது முதிர்ந்த பெற்றோரை கவனிக்காத வாரிசுகள் குறித்து வருவாய்க் கோட்டாட்சியர் அல்லது சமூக நலத் துறை அதிகாரியிடம் நீங்கள் புகார் தெரிவிக்கலாம்.சட்டப்படி குடும்ப ஒருவரின் வருமானத்திலிருந்து 5-சதவிகிதம் ஜீவனாம்சமாக அக்குடும்பத்திலுள்ள மூத்தோருக்கு வழங்க வேண்டும். அவ்வாறு வழங்காதவருக்கு 4 வாரத்திலிருந்து 3 மாதம் வரை சிறைத் தண்டனை அளிக்க சட்டத்தில் இடமளிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசின் முதியோர் உதவித் தொகைத் திட்டத்தில், தருமபுரி மாவட்டத்தில் 64 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. முதியோர் தங்களது மருத்துவச் சந்தேகங்களை 104 என்ற எண்ணில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்” என்றார் விவேகானந்தன்
*சாத்தூரில் அரசுப் பேருந்தில் நடந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பட்டியில் உள்ள ஒரு ஓடையில் துப்பாக்கியை போலீசார் கண்டெடுத்துள்ளனர். மேலும் கொலையாளி அணிந்திருந்த உடையையும் இருக்கன்குடி பகுதியில் போலீசார் கண்டெடுத்தனர்*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக