http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
♈🇮🇳🌴1] *கோவையில் பட்டாசு விபத்து: கலெக்டர் நேரில் ஆய்வு*
♈🇮🇳🌴2] *மைசூரு சாமுண்டீஸ்வரி கோவிலில், விநாயகர், ஆஞ்சநேயர் விக்ரகங்களுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா, தங்க கவசம், வெள்ளி பிரபாவளியை வழங்கினார். மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் மீது மிகவும் பக்தி கொண்டவர் ஜெயலலிதா. ஜெயலலிதாவுக்காக அ.தி.மு.க., வினர், சாமுண்டீஸ்வரிக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். இந்நிலையில், ஜெயா பப்ளிகேஷனை சேர்ந்த பத்து பேர், மைசூரு சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு வந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தனர். கோவிலில் உள்ள விநாயகர், ஆஞ்சனேயர் விக்ரகங்களுக்கு, 1.6 கோடி மதிப்புள்ள தங்க முக கவசமும், வெள்ளியிலான பிரபாவளியும் வழங்கினர். இதையடுத்து விக்ரகங்களுக்கு அணிவிக்கப்பட்டது. சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. நாளை (23 ம் தேதி) ஜெயலலிதா சார்பில், அம்மனுக்கு சிறப்பு சண்டி ஹோமம் நடக்கிறது*
♈🇮🇳🌴3] *நெல்லை மாவட்டம் சங்குபட்டியில், செயல்படாத பட்டாசு குடோனில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்தன. இதில், குடோன் நொறுங்கி விழுந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணைநடத்தி வருகின்றனர்*
♈🇮🇳🌴4] *சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்புக்கு மீண்டும் பொதுத்தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் 2018 ம் ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடக்கும் என தெரிகிறது. இந்த அறிவிப்பை வரும் 25ம் தேதி மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்களை ஆல் பாஸ் ஆக்கும் திட்டம் தொடர்பான புதிய கொள்கை அறிவிக்க உள்ளார். இதன்படி ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்கள் ஆல்பாஸ் ஆக்கப்படுவார்கள். இதன் பிறகு மாணவர்களை எட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் ஆக்கும் திட்டம் குறித்து ஆலோசனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெயில் ஆகும் மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது கடந்த 2010ம் ஆண்டு நீக்கப்பட்டது. புதிய கல்வி கொள்கையை வகுக்க பரிந்துரைகள் அளிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவும், 'ஆல் பாஸ்' என்ற, எட்டாம் வகுப்பு வரையில் அனைவரும் தேர்ச்சி முறையை கைவிட வேண்டும் என, வலியுறுத்தி உள்ளது*
♈🇮🇳🌴5] *காரைக்குடியில் மனநலம் பாதிக்கப்பட்டவரிடம் இருந்து நாட்டு துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். காரைக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சாக்கு பையுடன் சுற்றிக் கொண்டிருந்த இளைஞரை விசாரித்துள்ளனர். விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்தது. அவர் சாக்கு பையை சோதனை செய்த போது அதில் நாட்டு துப்பாக்கி இருந்தது. மேலும் அவர் பெயர் செபஸ்டின் என்றும் திண்டுக்கல்லில் வசிக்கும் அவரின் சித்தப்பா செல்வராஜின் துப்பாக்கியை எடுத்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் செல்வராஜிடம் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்*
♈🇮🇳🌴6] *உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத்தில் இருந்து டெல்லி சென்ற ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் அலகாபாத்தில் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டனர்*
♈🇮🇳🌴7] *திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கடந்த வாரம் முழுவதும் வெயில் வாட்டி வந்த நிலையில் தற்போது மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைத்துள்ளனர்*
♈🇮🇳🌴8] *மத்திய அரசின் உதய் மின் திட்டத்தில் சேர தமிழக அரசு முன் வந்துள்ளது என மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். டெல்லியில் தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணியை சந்தித்த பின் பேசிய பியூஷ் கோயல் இவ்வாறு தெரிவித்துள்ளார்*
♈🇮🇳🌴9] *சமூக ஆர்வலர் ட்ராபிக் ராமசாமி தம் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்யுமாறு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். முதல்வர் ஜெயலலிதா பற்றி வதந்தி பரப்பியதாக ட்ராபிக் ராமசாமி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ட்ராபிக் ராமசாமியின் மனு மீது 24ம் தேதி நடைபெறுகிறது*
♈🇮🇳🌴10] *வேந்தர் மூவிஸ் மதன் கூட்டாளி குணாவை அக்டோபர் 26ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போலீஸ் காவல் முடிந்து குணா நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்*
♈🇮🇳🌴11] *புதுக்கோட்டை தேசிய வேலை உறுதித்திட்டத்தில் விவசாயத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளப் பாக்கியை தீபாவளிக்குள் வழங்கக்கோரி புதுக்கோட்டை மாவட்டத்தில் 8 இடங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) காத்திருக்கும் போராட்டங்களை நடத்தினர்*
♈🇮🇳🌴12] *இடைத்தேர்தலை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் 530 பேர் தங்களது துப்பாக்கிகளை ஒப்படைத்தனர். மாவட்ட ஆட்சியரின் உத்தரவை அடுத்து 530 பேரும் துப்பாக்கிகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்*
♈🇮🇳🌴13] *இந்தியாவின் தடை செய்யப்பட்ட சீனப்பட்டாசுகளை தமிழகத்தில் சட்ட விரோதமாக இறக்குமதி செய்யும் தடத்தல்காரர்கள் மீதும், விற்பனை செய்யும் வியாபாரிகள் மீதும் தேச துரோக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க நாடார் சங்கங்களின் கூட்டமைப்பினர் இன்று முதலமைச்சரின் தனிப்பிரிவில் கோரிக்கை வைத்துள்ளனர்*
♈🇮🇳🌴14] *தீ குளித்த மனைவியும் காப்பாற்ற முயன்ற கணவனும் சாவு* -தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள குருவிக்கரம்பையை அடுத்த கரம்பக்காடு அருகில் பூசாரிக்காடு கிராமத்தில்
15] *உங்களுக்கு வேறு வேட்பாளரே கிடைக்கவில்லையா.. திமுகவினருக்கு தயாநிதி அழகிரி தடாலடி கேள்வி* -மதுரை: இடைத் தேர்தல் நடைபெற உள்ள அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.அதன்படி, திருப்பரங்குன்றத்தில் டாக்டர் சரவணன், அரவக்குறிச்சியில் கே.சி.பழனிசாமி, தஞ்சாவூரில் டாக்டர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் போட்டியிட உள்ளனர்.
இதனிடையே, அழகிரியின் மகனான தயாநிதி அழகிரி, சரவணனை வேட்பாளராக அறிவித்ததை டிவிட்டரில் விமர்சனம் செய்துள்ளார். "இடைத் தேர்தலில் போட்டியிட, சரவணனைவிட நல்ல வேட்பாளர், மதுரை திமுகவில் இல்லை என்பதை அறியும்போது, கவலையாக உள்ளது. #காசுபணம்துட்டுமணிமணி" இவ்வாறு ஆங்கிலத்தில் டிவிட் செய்துள்ளார் தயாநிதி அழகிரி
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
16] *ஜியோ சிம் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மனதை கல்லாக்கிக் கொண்டு இந்த தகவலை படிக்கவும். தகவல் தொழில்நுட்ப புரட்சி செய்யப்போவதாக கூறிக்கொண்டு சந்தையில் காலடி எடுத்து வந்த உங்கள் அபிமான ஜியோ சிம்தான், இருப்பதிலேயே குறைந்த இணைய வேகம் கொண்டதாம். இதை தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெப்சைட் அதிகாரப்பூர்வமாகவே கூறியுள்ளது. இணையதள வேகத்தை கண்டறிய டிராய் அறிமுகப்படுத்திய ஸ்பீட் வெப்சைட்டில்தான் இத்தகவல் உள்ளது. ரிலையன்ஸ் ஜியோ சராசரி டவுன்லோடு வேகம் 6.2Mbps ன்ற அளவில் உள்ளது. இதனால் தேசிய அளவு நெட் ஸ்பீடில் 5வது இடம்தான் ஜியோவுக்கு. ஏரியாவுக்கு தக்கபடி ஸ்பீட் மாறுபடுகிறது. டெல்லி சர்க்கிளில் ஜியோ வேகம் 5.9Mbpsஎன்ற அளவிலுள்ளது. மும்பையில் 10.7 எனும் வகையில் வேகம் அதிகமாக உள்ளது. இருந்தாலுமே, மும்பை சர்க்கிளில் வேக அடிப்படையில், ஜியோவுக்கு 2வது இடம்தான். பெங்களூர் எனும் பெரிய மார்க்கெட்டை வைத்திருந்தாலும், கர்நாடக சர்க்கிளில் ஜியோ வேகம் 7.5Mbps என்ற அளவில்தான் உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் ஜியோவுக்கு போதிய அளவு டேட்டா தர முடியவில்லை என்பது இதில் மற்றொரு சோகம். அதேபோல அப்லோடு வேகத்திலும், ஜியோ பின்தங்கியே உள்ளது. அப்லோடு வேகம் 2.6 Mbps என்ற அளவில்தான் உள்ளது. இந்திய அளவில் இந்த பிரிவில் 6 வது இடத்துக்குத்தான் வர முடிந்துள்ளது ஜியோவால். ஜியோவைவிட குறைந்த அப்லோடு வேகம் கொண்ட நெட்வொர்க் நிறுவனம் எது தெரியுமா? அது முகேஷ் அம்பானியின் சகோதரரான அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்தான். அதன் அப்லோடு வேகம் 2.1Mbps ஜியோவின் அப்லோடு வேகம் டெல்லி மற்றும் மும்பையில் 2.3Mbps மற்றும் 3 Mbps என்ற அளவிலும், கர்நாடகாவில் 2.6Mbps என்ற அளவிலும் உள்ளது. மற்ற நிறுவனங்கள் லிமிட்டட் அளவு நெட் தருவதால் அவர்களுடைய வேகத்தோடு தங்களுடையதை ஒப்பிடுவது சரியானதாக இருக்காது என்கிறது ஜியோ தரப்பு
17] *காற்று ஒலிப்பான்கள்... கண்ணைப் பறிக்கும் விளக்குகள்... பஸ்களில் பறிமுதல் செய்த அதிகாரிகள்-ஈரோடு பகுதியில் இயங்கும் பேருந்துகள் பலவற்றில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் பயன்படுத்தப் படுவதாக அம்மாவட்ட ஆட்சியாளருக்கு புகார் வந்தது. இந்த காற்று ஒலிப்பான்களால் மக்களுக்கு செவித்திறன் குறைபாடு உள்ளிட்ட பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படுவதாகக் குற்றம் சாட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியாளர் உத்தரவின் அடிப்படையில், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பேருந்து நிலையத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் மற்றும் அதிக வெளிச்சம் தரும் விளக்குகள் போன்றவற்றை பேருந்துகளில் இருந்து அவர்கள் நீக்கினர். மீண்டும் அவைகளைப் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்*
18] *பான் பராக் விளம்பரத்தில் நடித்துள்ள முன்னாள் ஜேம்ஸ் பாண்ட் நடிகர் பியர்ஸ் பிராஸ்னன் அதுகுறித்து அளித்துள்ள விளக்கம் டிவிட்டரிலும், பேஸ்புக்கிலும் செமையாக ஓட்டப்பட்டு வருகிறது.
அவர் பான் பஹர் என்ற பான் பராக் விளம்பரத்தில் நடித்துள்ளார். இது பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் நடித்து உலகப் புகழ் பெற்ற பிராஸ்னன், புற்றுநோய்க்கு வித்திடும் பான் பராக் விளம்பரத்தில்+ நடிக்கலாமா என்று பலரும் கேட்க ஆரம்பித்தனர். இதயடுத்து இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளனர் 63 வயதான பிராஸ்னன். இந்த விவகாரம் குறித்து எனக்குத் தெரிய வந்தது. அதைக் கேள்விப்பட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். பான் பராக் விளம்பரத்தில் எனது படத்தை வைக்க அவர்களுக்கு நான் அனுமதி தரவில்லை. உடனடியாக பான் பஹர் விளம்பரத்திலிருந்து எனது படங்களை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளேன். மவுத் பிரஷ்னர், டூத் ஒயிட்னர் என்றுதான் இதை நான் நினைத்தேன். அதற்காகத்தான் ஒப்பந்தமும் போடப்பட்டது. பெண்களின் உடல் நலனுக்காக நீண்ட காலமாக நான் போராடி வருகிறேன். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக போராடி வருகிறேன். இப்படிப்பட்ட நிலையில் பான் பஹர் நிறுவனத்தின் செய்கை என்னை வருத்தமடையச் செய்துள்ளது. யாருடைய நலனுக்கும் பாதகத்தை ஏற்படுத்தும் விளம்பரத்தில் நான் நடிக்க மாட்டேன். எனது மனைவியும், மகளும் புற்றுநோயால் மரணமடைந்தனர். அப்படிப்பட்ட நிலையில் நான் இப்படிப்பட்ட விளம்பரத்தில் நடிப்பேனா என்று கேட்டுள்ளார் பிராஸ்னன். இருப்பினும் பான் பராக் என்று கூடவா தெரியாமல் நடிப்பார் "ஜேம்ஸ் பாண்ட்" என்று கேட்டு அவரை டிவிட்டரிலும், பேஸ்புக்கிலும் கிண்டலடித்து வருகின்றனர். பான் பராக்குக்கும், டூத் ஒயிட்னருக்கும் கூட வித்தியாசம் தெரியவில்லை.. அந்த லட்சணத்தில் இருக்கிறது "இங்கிலாந்து ரகசிய போலீஸ்" என்று ஒருவர் கிண்டிலடித்துள்ளார்*
♈🇮🇳🌴 ♈🇮🇳🌴
++++++++++++++++++++
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக