http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
ரிலையன்ஸ் ஜியோ அறிவித்திருந்த இலவச சேவைகளுக்கு டிசம்பர் 3ம் தேதி வரை மட்டுமே அனுமதி - தொலைத் தொடர்பு ஆணையம் அறிவிப்பு.
-- தீபாவளிக்கு முன்னாடியே அனுகுண்டா
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை பற்றி வதந்தி பரப்பியதாக டிராபிக் ராமசாமி மீது காவல்துறையினர் வழக்கு பதிவு.
:-- ரெட் சிக்னல் விழுந்துருச்சா
புதுவை நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக முக.ஸ்டாலின் பிரச்சாரம் செய்வார் - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.
:--நெல்லித்தோப்புல நெல்லிக்கனி இனிக்குமா? கசக்குமா?
ஜியோ 4G இணைய வேகம்தான் இந்தியாவிலேயே மிக குறைவு - ட்ராய்.
:-- இதுக்குப்பேர்தான் ட்ரயல் பார்க்குரதோ.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
பிசிசிஐ - மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு இடையேயான பண பரிவர்த்தனைகள் முடக்கம் - பிசிசிஐ தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு. ::- அப்டியே கர்நாடவுக்கும் என்னன்னு சொன்னா நல்லயிருக்கும்
இடைத்தேர்தல் திமுக வேட்பாளர்கள் : அரவக்குறிச்சி கே.சி.பழனிச்சாமி , தஞ்சை டாக்டர் அஞ்சுகம் , திருப்பரங்குன்றம் டாக்டர் சரவணன்.
:---அப்பாட புறக்கணிப்பு இல்ல
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை குறித்து மருத்துவ அறிக்கை வெளியிட கோரி சமுக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மேல் முறையீடு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.
:-- ரோடு புள்ளா டிராபிக்.
கிளியராக ஒரு வருடமாகலாம்
இடைத்தேர்தல் திமுக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் : அரவக்குறிச்சி கேஎன்.நேரு , திருப்பரங்குன்றம் ஐ.பெரியசாமி , தஞ்சாவூர் துரை சந்திரசேகர்.
:-- அஞ்சாநெஞ்சன்டா
புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நெல்லித்தோப்பு இடைத்தேர்தலை ஒட்டி 144 தடை உத்தரவை ஆட்சியர் சத்தியேந்திர சிங் துர்சாவத் பிறப்பித்துள்ளார்.
:--- புதுச்சேரி சரக்குக்கு பொருந்துமா
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு ஏன் முன்வரவில்லை என பிரணாப் அனுதாபத்தோடு கேட்டார் - வைகோ.
:---அப்டினா எல்லாம் முடிஞ்சதா
திமுக தலைவர் கருணாநிதி என்னை அரசியல் வாரிசு என்று சொன்னது குறித்து நான் ஏதும் நினைக்கவில்லை - முக.ஸ்டாலின்.
:---நமக்கு நாமே போகும்போதே தமிழ்நாட்டுக்கே தெரியுமே நீங்கதான் அடுத்தவாரிசு
விளை நிலத்தை வீட்டு மனையாக பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடை தொடரும் - உயர்நீதிமன்றம் உத்தரவு.
:--அப்பாட கால்நடைகளூக்கு புல்லாவது கிடைக்கும்டா
சிவகாசி பட்டாசுக்கடை தீ விபத்து தொடர்பாக மேலும் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
:--பட்டாசு கடைய குடியிருப்பு பகுதியால நடத்த அனுமதி கிடையாதுனு சொல்லுவீங்கனு எதிர்பார்த்தா?
அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்பாலாஜி போட்டியிடுவதை எதிர்த்து வழக்கு உயர்நீதிமன்றத்தில் திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது.
:-- எலக்சன் முடிஞ்சதும்தானே தீர்ப்பூ ...
நாகையில் நாட்டின் பாதுகாப்பு பணியின் போது உயிர் நீத்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் விதமாக நாகை ஆயுதப்படை மைதானத்தில் 21 குண்டுகள் முழங்க போலீசார் அஞ்சலி.
:---சபாஷ்
ஜப்பானின் மேற்கு பகுதியான டொட்டோரி எனும் இடத்தை மையமாக கொண்டு
நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 புள்ளிகளாக பதிவு.
:------
பாம்பனில் புயல் எச்சரிக்கை கூண்டு எண் 1 ஏற்றம்.
:-- அடுத்தது 2
கோவை காந்தி பூங்கா பகுதியில் உள்ள பட்டாசு குடோனில் தீ விபத்து இதுவரை 3 பேர் மீட்கப்பட்டனர்.
:-- பிஜேபி நண்பர்கள்ட்ட சொல்லுங்க விபத்துன்னு
3 தொகுதிகளில் போட்டியிடும் திமுகவிற்கு மனிதநேய மக்கள் கட்சித்தலைவர் ஆதரவு அளிக்கும் - தலைவர் ஜவாஹிருல்லா.
:--மனிதநேய கட்சினு ஒத்துக்கிறோம்
ஈரோடு தந்தி தொலைக்காட்சி செய்தியாளர் மக்பூல் அஹமது மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக
கைது செய்ய வேண்டும் - பத்திரிக்கையாளர் சங்கங்கள் கண்டனம்.
:-- தந்தி டீவி செய்தியாளர்னு தெளிவா போலிஸ்ட சொன்னீங்களா நண்பர்களே
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களுடன் மக்கள் நலக் கூட்டு இயக்கத் தலைவர்கள் சந்திப்பு மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட ஏற்பாடு செய்யக் கோரிக்கை.
:---அடுத்த இலக்கு டெல்லியா?
நெல்லை கந்துவட்டி கும்பலின் மிரட்டல் : விஷம் அருந்தி பலியான சொர்ணலதாவின் கணவர் நல்லகண்ணுவும் இன்று சிகிச்சை பலனின்றி பலி.
:---கந்துவட்டி சட்டம் யாருக்கோ
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக